Archive for நிகழ்வு

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

திரு.கே.எஸ்.சுதர்சன் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

16/09/2012 - இறுதி யாத்திரை - நாக்பூர்

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அவர்கள் 15/09/2012 காலை சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் காலமானார். அங்கு அவரது உடலுக்கு மரியாதை செலுத்திட காலையில் இருந்து மாலை வரை நூற்றுக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு நூற்றுக்கணக்கில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அவரது உடலை நாகபுரிக்கு அனுப்பிவைப்பதற்காக வந்திருந்தனர்.  ராய்ப்பூரில் இருந்து அவரது உடல் சிறப்பு விமானத்தின் வாயிலாக நாகபுரிக்கு நேற்று மாலை வந்தடைந்தது. 

ராய்ப்பூர் ஆர்.எஸ்.எஸ்.காரியாலயத்தில்

விமான நிலையத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களின்  அமைதிப் பேரணி முன்னே செல்ல அவரது உடல் டாக்டர் ஹெட்கேவார் நினைவு மண்டபம் இருக்கின்ற ரேஷிம்பாக் ஸ்ம்ருதி மந்திருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக வைக்கப்பட்டது.

பிரார்த்தனா

ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள், பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செய்தனர்.  அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது இரண்டு கண்களும் மாதவ கண்தானக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.பிரமுகர்கள்

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களும் கே.எஸ்.சுதர்சன் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றிட நாகபுரிக்கு வருகை புரிந்தனர். தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, இணை பொதுச் செயலாளர்களான சுரேஷ் சோனி மற்றும் ஹெச்.தத்தாத்ரேயா, செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், மதன்தாஸ் தேவி, மற்றும் ந.கிருஷ்ணப்பா ஆகியோர் முன்னின்று இறுதி அஞ்சலி செலுத்திட வருபவர்களை வரவேற்றனர்.

எல்.கே அத்வானி & நிதின் கட்கரி

கே.எஸ்.சுதர்சன் அவர்களின் உடலுக்கு குஜராத், மத்திய பிரதேசம்  மற்றும் கர்நாடக முதல்வர்களான நரேந்திர மோதி, சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் ஜகதீஷ் ஷெட்டார், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி, எல்.கே.அத்வானி, அருண் ஜெயிட்லி, திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இராணி உட்பட மேலும் பல  பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் சார்பில் அப்பாஸ் அலி போரா, ராஷ்டிர சேவிகா சமிதியின் அகில பாரத பிரமுக் ருக்மினி அக்கா, மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எம்.சி.ஜெயதேவ், பீ.வீ.கிருஷ்ண பட், எம்.எல்.சி. ,உட்பட நூற்றுக்கணக் கானவர்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல துறைகளில் உள்ள பிரபலமானவர்கள், கல்வி யாளர்கள், தொழிலதிபர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலர் திரளாக வந்திருந்தனர்.

மறைந்த கே.எஸ்.சுதர்சன் அவர்கள் பல்வேறு மதத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு நட்புடன் பழகி வந்ததால் அவரது உடலுக்கு பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும்  பௌத்த மதத் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். ஜமாத்தே உலேமா ஹிந்த் தலைவர் மௌலானா ஷோஹிப் கஸ்மி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்  சித்திக் நாகபுரி ரேஷிம்பாக் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்திற்கு வந்து  மலரஞ்சலி செய்துள்ளார்.

திரு. சுதர்சன் அவர்கள் திபெத் மக்களின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். நமது நாட்டிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற திபெத்திய அரசின் பிரதிநிதி நாகபுரிக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்ரீ.அசோக் சிங்கல், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன்பாய் தொகாடியா மறைந்த சுதர்சன் அவர்களின் உடலுக்கு மரியாதை செய்தனர்.

ஸ்ரீ.அசோக் சிங்கால்

திரைப்படத் தயாரிப்பாளரும் சம்ஸ்கார் பாரதியின் தேசியத் தலைவருமான ராஜ் தத், நாகபுரியைச் சார்ந்த மூத்த ஸ்வயம் சேவகர் மா.கோ. வைத்தய, பாரதீய மஸ்தூர் சங்கத்தைச் சார்ந்த உதய் பட்வர்த்தன், பாரதீய கிசான்  சங்கத்தின் தலைவர் அண்ணாசாஹிப் முர்குடே, ராஷ்ட்ர சேவிகாசமிதியின் பொறுப்பாளர் கள் மற்றும் பல்வேறு சங்கப் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் மறைந்த தலைவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மறைந்த தலைவரது உடல்  ரேஷிம்பாக் காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக  நாகபுரி நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற கங்காபாய் படித்துறைக்கு  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தகனம்

இறுதி சடங்குகளை அவரது உடன் பிறந்த சகோதரர் கே.ரமேஷ் அவர்கள் செய்தார்.  வேத மந்திரங்கள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ராஷ்டிரா சேவிகா சமிதியினர்

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடெங்கிலும் ஆங்காங்கே பல இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. புதுதில்லி ஜண்டேவால் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் தலைவர் திருமதி.நஜ்மா ஹப்துல்லா, கிரிக்கெட் வீரர் சேட்டன் சௌஹான், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், புதுதில்லியில் இருக்கின்ற 3 மாநாகராட்சிகளின் மேயர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய ஸ்ரீராமச்சந்திரபுர மடத்தைச் சார்ந்த ஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் தனது உரையில் சுதர்சன்ஜி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானர், கட்டுப்பாடு மிக்கவர் ஆனால் மிகச் சிறந்த சிந்தனாவாதி, புத்திசாலி எனக் குறிப்பிட்டார்.  சங்கத்தின் வாயிலாக அவர் தனது வாழ்க்கையையே சமுதாயத்திற்காக அர்ப்பணம் செய்து கொண்டவர்.  ஸ்வதேசி சிந்தனைகள் நிரம்பப் பெற்றவர் என மேலும் அவரது பல நற்குணங்களை நினைவு கூர்ந்தார்.

ஸ்ரீ.கு.சி.சுதர்சன் காலமானார்

ஆர்.எஸ்.எஸ்.முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன் காலமானார்.

ஸ்ரீ.கு.சி.சுதர்சன்

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவரும் சங்கத்தின் மூத்த பிரச்சாரகருமான ஸ்ரீ.கு.சி.சுதர்சன் அவர்கள் ராய்ப்பூரில் 15/09/2012 காலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது.81. வழக்கம் போல் காலையில் தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சர் சங்கசாலக் பொறுப்பில் இருந்த போது மங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

மார்ச் 2000 முதல் மார்ச் 2009 வரை 9 வருடங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவர்) இருந்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகி அப்பொறுப்பினை டாக்டர் மோகன் பாகவத் அவர்களிடம் ஒப்படைத்தார்.

1931 ஜூன் 18 ஆம் தேதியன்று ராய்ப்பூரில் பிறந்தவர். மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற சாகர் பலகலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் பி.ஈ.ஹானர்ஸ் (B.E. Honours in Electronics & Communication) பட்டம் பெற்றவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு தேசத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1953 முதல் சங்கப் ப்ரச்சாரக்காக (முழு நேரத் தொண்டர்) தனது பணியைத் துவங்கினார்.

கிறிஸ்துவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது

தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1954 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ப்ரசாரக்காக (முழு நேரத்தொண்டராக) தனது வேலையைத் துவக்கினார். துவக்கத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்கட், சாகர் மாவட்டங்களின் ஜில்லா ப்ரச்சாரக்காக பணிபுரிந்துள்ளார். 1964 ஆம் வருடம் மத்தியபாரதத்தின்  ப்ராந்த ப்ரசாரக்காக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார்.

1977 முதல் கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சங்கத்தின் ஷாரீரிக் பிரமுகராகவும் (உடற்பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளர்) அதைத் தொடர்ந்து சங்கத்தின் அகில பாரத பௌத்திக் பிரமுக்காகவும் (சிந்தனைக் குழுவின் பொறுப்பாளர்) இருந்துள்ளார். 1990 முதல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத சஹ சர்கார்யவாஹ் ஆக (அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார். இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 5 வது சர் சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உட்பட மேலும் பல  நாடுகளில்  சுற்றுப்பயணம் செய்துள்ளார். சர்சங்க சாலக் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும் கூட நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.

ஈரோடு பூஜாரிகள் மாநாட்டில்

மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார். சாதாரண பிரச்சனையில் இருந்து நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் பற்றி ஆழமான, தெளிந்த கருத்தும் சிந்தனையும் கொண்டவர். நாட்டின் அனைத்துப் பிரச்சனை களுக்கும் ஸ்வதேசி அணுகுமுறை மற்றும் சிந்தனையே தீர்வாகும் எனத் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்தவர்.  மிகத் தீவிரமாக சங்கத்தின் அன்றாட ஷாகா வேளையில் அதிக ஆர்வம் கொண்டவர். அதில் அதிக கவனம் செலுத்தி ஷாகா வருகின்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தவர்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட் என்கிற இடத்தில் இவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். ஆனாலும் இவரது மூதாதையர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஆகும்.

ராய்ப்பூரில் காலமான கே.எஸ்.சுதர்சன் அவர்களின் உடல் மாலையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை இடமாகிய நாக்பூருக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டு பின்னர் 16/09/2012 அன்று மாலை 3 மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. மறைந்த கே.எஸ்.சுதர்சன் அவர்களின்  இளைய சகோதரர் மைசூரில் வசித்து வருகிறார்.   

1975 ஜூன் 25-ஐ மறக்க முடியுமா?

இந்த 21 மாதங்களில் பல குடும்பங்களுக்கு மகத்தான நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அதை அவர்கள் நாட்டுக்காக செய்த கைங்கர்யமாக கருதினார்கள். இப்படி ஆகிவிட்டதே என்ற ஏக்கமோ பாதிப்போ அடையவில்லை.

இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். அனால் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறோம். சேலம் ராம்நாத்தின் வணிகம் கடுமையாக பாதிக்கப் பட்டது. பிரம்மபுரம் குமாரசுவாமியின் சீட்டு நிதித் தொழில் தகர்ந்தது. நாகர்கோவில் சங்கசாலக் முத்துசுவாமி தமது வியாபாரத்தையே கைவிடும்படி நேர்ந்தது. வழக்குரைஞர்களான நெல்லை எஸ்.ஜி.சுப்பிரமணியம், மதுரை கே.விஸ்வநாதன், திருச்சி.டி.என்.ஹரிஹரன், திருச்சியில் வியாபாரம் செய்து வந்த ஸ்ரீ.கங்காதரனுக்கும், ஏற்பட்ட இழப்பு அற்ப சொற்பமல்ல. சென்னை மாவட்ட சங்கசாலக் வழக்கறிஞர் ஸ்ரீ.சம்பத்குமார் ஜூலை 5 ஆம் தேதி கைதானார். அவர் கைதானதும் அவரது குடும்பத்தில் ஒரு துயர நிகழ்ச்சி நடந்தது. அவரது மகள் கடும் நோய்வாய்ப்பட்டார். ஒரு சில நாட்களில் அவர் வெளி வந்ததும் மகள் இறந்தே போனார். 

கோவை ஸ்ரீ.நாராயணன் வேலையை இழந்து மீண்டும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். மதுரை பாலிடெக்னிக்கில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ.கிருஷ்ணா சூர்யாவுக்கு இன்று வரை வேலை திரும்பக் கிடைக்கவில்லை. கும்பகோணம் ரமணி இன்னும் வேலையின்றி வாடுகிறார். அரியலூர் ஸ்ரீ.ஜனார்த்தனத்தின் ஹோட்டல் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது மகம் ஹரிஹரன் காவல் நிலையத்தில் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளானார். பேரணாம்பட்டு பத்மநாபன் இழந்த வேலையை இன்னமும் பெறவில்லை. இதுபோலக் கூறிக் கொண்டே போகலாம். இடமின்மையால் நிறுத்துக் கொள்கிறோம். இவ்வளவு இருப்பினும் இவர்களது உற்ச்சாகமும், ஊக்கமும் கின்றவில்லை. லட்சியப் பிடிப்பு ஒரு சிறிதும் தளரவில்லை.

பத்திரிகை ஆசிரியர் 

சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகம்.அதன் ஆசிரியர் தேசபக்தர். அவரது அலுவலகத்தில் ஒரு நாள் ஸ்ரீ.ராமகோபாலன் (அப்போது அவர் தலைமறைவு ஊழியர்) உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆசிரியருக்கு ஏராளமான நண்பர்கள். பல துறைகளில் இருப்பவர்களும் சந்திக்கும் இடமாக, கருத்துப் பரிமாறிக்கொள்ளும் இடமாக அந்த அலுவலகம் அமைந்திருந்தது. மூன்று நான்கு பேர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம். ஆசிரியரின் நண்பர் உள்ளே நுழைந்தார். எனது நண்பர் மத்திய போலீஸ் புலனாய்வுத் துறையில் அதிகாரி. அவர் உங்களைக் காண வந்துள்ளார், அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். ஆசிரியர் அமைதியாக எழுந்து வெளியே சென்றார். காரில் அமர்ந்திருந்த அந்த அதிகாரியைச் சந்தித்தார். உபசார மொழிகளை எல்லாம் பரிமாறிக் கொண்ட பிறகு அந்த அதிகாரியிடம் தெளிவாக ஒன்றைக் கூறினார். நீங்கள் தயவு செய்து உள்ளே வரவேண்டாம். அங்கே ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமறைவு ஊழியர் ஒருவர் உட்கார்ந் திருக்கிறார். “நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் இருவருக்குமே சங்கடமாக இருக்கும். மன்னிக்க வேண்டும். மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தார். அந்த ஆசிரியரின் நேர்மையையும், கள்ளங்கபடமற்ற பாங்கையும் கண்ட அந்த அதிகாரி புன்முறுவலுடன் சென்று விட்டார். “நான் கைது செய்வதானால் உங்கள் இருவரையுமே கைதுசெய்ய வேண்டியிருக்கும். நான் அதை விரும்பவில்லை”  என்று கூறினார். கைது செய்திருந்தால் அவருக்கு வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைத்திருக்கும். அதையும் அவர் இழக்கத் தயாரானார் என்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியாது.

திடீர் செவிடர். 

தலைமறைவு ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்ப்ரசில் நாகர்கோவில் செல்கிறார். வேறு பெயரில் அவருக்குத் தூங்கும் பெட்டியில் ரிசர்வேஷன் ஆகியிருக்கிறது. வண்டி கிளம்பச் சில நிமிடங்களுக்கு முன்னர் அவ்வூழியர் வண்டியில் ஏறித் தமது இடத்தில் அமர்ந்தார். உடனேயே அதே பெட்டியில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் ஏறினர். அவ்வூழியருக்கு நெஞ்சு படபடத்தது. ஆனால் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. வண்டி புறப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ரயில் வண்டியில் நடக்கும் சாதாரணப் பழக்கத்திற்கு ஒப்ப எல்லோரையும் “நீங்கள் எங்கே போகிறீர்கள்”? எந்த ஊர் ? என்ன வேலை? இன்னாரைத் தெரியுமா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் மற்றவர்களை எல்லாம் கேட்டாகிவிட்டது. அடுத்தது தலைமறைவுக்காரரின் முறை. “நீங்கள் எந்த ஊருக்கு? என்று ஒரு அதிகாரி நம்மவரைக் கேட்டார். ‘திருநெல்வேலிக்கு இந்த வண்டி சுமார் எட்டரை மணிக்குப் போகும்’ என்று அசட்டுச் சிரிப்புடன் ஊழியர் பதில் அளித்தார். அதைக் கேட்கவில்லை. நீங்கள் எந்த ஊருக்கு என்று கேட்டேன் என்று அந்த அதிகாரி சற்று உரத்த குரலில் விளக்கினார். ‘சாதரணமாக இந்த வண்டி தாமதமாவதில்லை. எட்டரைக்குப் போய்விடும்’ என்றார் ஊழியர். அதிகாரி மேலும் உரத்த குரலில் ‘ நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுதான் கேட்டேன்’ என்றார். திருநெல்வேலி போனவுடன் நாகர்கோவில் போக உடனேயே பஸ் இருக்கிறது. ‘கஷ்டமே இல்லை’ என்றார் ஊழியர். எதிரில் உட்கார்ந்திருந்த ஒருவர் அடே ஏனய்யா இந்த ஆளோட வம்பு? நல்ல பாறைச் செவிடு போலிருக்கு. இவரோட பேசினா தொண்டைத் தண்ணீர்தான் வற்றும், என்று கூறினார். எல்லோரும் சிரித்தனர். ஊழியரும் ஒன்றும் புரியாதவர் போல எல்லோரது முகத்தையும் பார்த்தார். தானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார். பிறகு தூங்கும் இடத்திற்கு ஏறி புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நிம்மதி அடைந்தார். (இந்தத் தலைமறைவு ஊழியர் வேறு யாருமல்ல ஸ்ரீ.இராம.கோபாலன்தான்.)

“1942 தான் 1976 ம் கூட” 

பெரம்பூர் ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார். எண்பது வயது நிரம்பப் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். மீது முகுந்த ஈடுபாடு கொண்டவர். தேசிய வார இதழ் ‘தியாக பூமி’யை வெளியிட்டு வருகிற பாரதியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.

நெருக்கடி அட்டூழியக்காரர்கள் இந்த முதுபெரும் அன்பரையும் விட்டுவைக்க வில்லை. 1976 ஆகஸ்டில் ‘தியாக பூமி’யை மூடிய கையேடு போலீஸ் படை இவரது வீட்டையும் சோதனையிட்டது. “வஜ்ராயுதம்” “போராட்டம்” ஆகிய ரகசிய பிரசுரங்களின் சில இதழ்களை அங்கு கைப்பற்றியது. போலீசார் ஸ்ரீ சிவக்கொழுந்து முதலியாரைச் செம்பியம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதலில் அவரது மனதில் பீதி ஏற்படுத்த ஏற்கெனவே பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருந்தவர்களைக் கடுமையாக அடித்தார்கள். அவர்களது அலறல், அவர்கள் படும் அடி இவற்றை இவர் பார்க்க வேண்டும் எண்பது போலீசின் நோக்கம்.

பிறகு “வஜ்ராயுதம்” “போராட்டம்” இதழ்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று இவரை வினவினர். ஜனவரி 26 ஆம் தேதி கடற்கரைக்குச் சென்றிருந்தேன், அங்கு சத்யாக்ரகம் செய்தோர் கொடுத்தனர்” என்றார். இதெல்லாம் எங்கே அச்சாகிறது? இந்த விவரத்தை நீங்கள் கூறத்தான் வேண்டும்” என்று போலீசார் கடுமையாகக் கேட்டனர். “எனக்குத் தெரியாது” என்று அவர் உறுதியாக பதிலளித்தார். “நீங்கள் கூறாவிடில், இந்த எமர்ஜென்சியில் உங்களது முதுமைக் காலத்தில் சிறையிடப்படுவீர்கள், கொடுமைக்கு ஆளாவீர்கள் என்று போலீசார் ஆக்ரோஷத்தோடு கூறினார். ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார் மிக அமைதியாக “நான் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ எனக் கூறிச் சிறை சென்றவன். 1976  இலும் சர்வாதிகாரியை வெளியேற்றத் தயங்காமல் சிறைசெல்வேன் என்று கூறினார்.

இரண்டாவது திங்கரா 

ஒருநாள் காலை நேரம் 10 மணி இருக்கும். சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடு வதில் 24 மணி நேரமும் ஈடுபட்டிருந்த ஒரு இளைஞர் குழாம், பெரம்பூரில் ஒரு அறையில் கூடியது.

எங்கு பார்த்தாலும் போலீஸ் துரத்துகிறது. திடீர் கைதுகள். காவல் நிலையத்தில் கேள்வி கேட்டுக் கேட்டுக் விஷயங்களை வரவழைக்கச் சித்திரவதைகள், சிறையில் தனிக் கொட்டடியில் அடைத்தல். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீர இளைஞர் களின் மனம் எப்படி மாதலால் திங்கரா தனது கையில் ஆணி குத்தப் பட்ட நேரத்திலும் இமை கொட்டாமல், மனம் நடுங்காமல் நின்று வீர சாவர்க்கரின் சோதனையில் வெற்றி பெற்ற சம்பவம் அனைவருக்கும் நினவு வந்தது.

உடனே வீரராகவன் என்ற பட்டதாரி இளைஞர், “நம்மில்யாரும் அப்படிப்பட்டவர் இருக்கிறாரா”? என்றார். ஒரு வினாடி அமைதி. மறுவினாடி, முருகேசன் என்ற இளைஞர் தன் வலது கையை முன்னே நீட்டினார். “நான் எதற்கும் தயார்” என்று உறுதியாகக் கூறினார். அவரது முகத்தில் ஒரு கயிறு (நாலைந்து காசிக் கயிறு பருமனுக்கு) கட்டியிருந்தார். சட்டென ராஜ்குமார் என்ற மற்றொரு இளைஞர் அதைக் கொளுத்திவிட்டார். 3 நிமிட நேரம் அது எரிந்தது. வலது கை மணிக்கட்டு ரணமாகியது. முருகேசனின் முகத்தில் தொடர்ந்து நிலவிய அதே உறுதியையும் அமைதியையும் கண்டு கூடியிருந்தோர் மனதிலும் முகத்திலும் மிகப் பெரிய உத்வேகமும் வீராவேச உறுதியும் தாண்டவமாடின. இம்முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் எத்தகைய உணர்ச்சிகளால் எத்துனை தூரம் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

காத்திருக்கிறேன். 

கரூர் ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் இனிய சுபாவமுள்ளவர். எல்லோருமே அவருக்கு நண்பர்கள். மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு எதிரில் அவரது ஓட்டல் உள்ளது. ஆகவே நீதிபதிகளும், காவல்துறை அதிகாரிகளும் அனைவருமே அவருக்கு அறிமுகம் ஆனவர்கள். சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் உண்மையான பற்றுள்ள ஒரு உள்ளம். அவை பறிக்கப்பட்டதால் எப்படித் தவிக்கும் என்பதற்கு ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் மிகச் சிறந்த உதாரணம். நெருக்கடி காலம் முழுவதிலும் அவர் போராட்டத்தில் மிகுந்த துணிச்சலோடு ஈடுபட்டார். சுவரில் எழுதுவது, பிரசுரங்களை விநியோகிப்பது போன்ற காரியங்களை அவர் தாமே செய்தார். விற்பனைக்குள்ள பிரசுரங்கள் பலவற்றை அவர் தமது கடையில் மேசைக்கு அடியில் வைத்திருப்பார். சிற்றுண்டி அருந்த வரும் நபர்களில் நாட்டுப் பற்றும் பொதுநல அக்கறையும் உள்ளவர்களுக்கு அவற்றை விற்பார். போலீஸ் கெடுபிடிகள் பயங்கரமாக இருந்த அந்த நேரத்திலும் அவரது போக்கில் சிறிதும் மாறுதல் இல்லை.

1976 பிப்ரவரி 1 ஆம் தேதி அவரைக் கைது செய்ய அவ்வூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசாருடன் வந்தார். ஸ்ரீ.சுப்பிரமணியம் தமது ஓட்டலில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நேரம். அவர்கள் உள்ளே நுழைவதைக் கண்டவுடன் “நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக் கிறேன், வாருங்கள், முதலில் சிற்றுண்டி சாப்பிடுவோம். அதன் பிறகு பேசுவோம்” என்றார். அவர்கள் தயங்கினர். இவர் விடவில்லை.வற்ப்புறுத்தி அவர்களைச் சிற்றுண்டி அருந்தச் செய்தார்.அதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் தாம் வந்த காரியத்தைச் சொல்ல வாயெடுத்த போது ” நீங்கள் சிறிது கூட  கவலைப்பட வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். எத்தனையோ நாட்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். பிறகு எல்லோருமாக ஒரு டாக்சியில் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே அவரது பன்னிரண்டு வயது மகள் “அப்பா, நீங்கள் இன்னும் கைதாகவில்லையா?” என்று கேட்டால். “நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அழைத்திருக் கிறார்கள்” என்று கூறிக்கொண்டே உடைகளை மாற்றிக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.

சோஷலிஸ்ட்களின் பங்கு.

தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் லோக சங்கர்ஷ சமிதியின் சார்பில் ஜனசங்கத்துக்கு அடுத்தபடியாக முழு மனதுடன் தீவிரத்துடன் கலந்து கொண்ட தமிழ் நாடு சோஷலிஸ்ட் கட்சியின் பங்கினை மறக்க முடியாது. அக்கட்சியின் ஊழியர்களும் உறுப்பினர்களும் ரகசியப் பிரசுரங்களை விநியோகிப்பதில் காட்டிய ஆர்வம், தலை மறைவு ஊழியர்களுக்கு அளித்த பாதுகாப்பு, பல்வேறு விதமான உதவிகள், சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட விதம் ஆகியவை மிகுந்த பாராட்டுக்குரியவை ஆகும்.

இந்த செய்திகள் “நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்” என்கிற நூலிலிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1977 ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்ற தலைமறைவு இயக்க வேலைகளையும், துணிச்சல், தைரியம் மிக்க தேச பக்தர்கள் புரிந்த போராட்டத்தினை விவரிக்கும் இந்த நூல் விரைவில் மீண்டும் விஜயபாரதம் பதிப்பகத்தின் சார்பில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

 

 

 

 

வெற்றிச் செய்திகள்

திருக்கழுகுன்றம் ஆக்கிரமிப்பு அகற்றம் 

கடந்த 25 ஆண்டுகாலமாக திருக்கழுக்குன்றம் கிரிவலப் பாதையில் முதல் அதிகார நந்தி சன்னதியை மறைத்து ஆலய நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணி கடந்த 25 ஆண்டுகாலமாக ஆர்ப்பாட்டம் போராட்டம் எனப் பலவும் நடத்தி தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.

இந்து முன்னணியின் 25 ஆண்டு கால போராட்டத்திற்குச் சென்ற வாரம் நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைத்தது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடிக்க உத்திரவிட்டதன் பேரில் அவை அகற்றப்பட்டு முதல் நந்தியம் பெருமாள் வெளிவந்துள்ளார்.

சிவன் ஆலய வழிபாட்டு முறையில் நந்தியம் பெருமாள் சிவனை நோக்கி இருக்க வேண்டும் என்பது மரபு. நந்திக்கும் சிவனாருக்கும் இடையில் கூட போகக் கூடாது என்பது நாம் அறிந்ததே. சுயநலவாதிகளின் பேராசை நந்தியைச் சுற்றி கடைகள் பரப்பி, வெளியிலேயே தெரியாமல் சிறை வைக்கப்பட்டிருந்த நந்தி தேவர் மீட்கப்பட்டுள்ளார். நந்தி தேவரின் பார்வையால் திருக்கழுகுன்றம் சிறப்புடன் விளங்கும். இது இந்து முன்னணி இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தற்போது கிரிவலத்தில் உள்ள அசைவ ஓட்டல்களை அகற்றப் போராடி வருகிறது. வருங்காலத்தில் இறையருளாலும், மக்கள் ஆதரவாலும் அதுவும் வெற்றி பெற்றே தீரும்.

இம்மாத சித்ரா பௌர்ணமிக்குத் திருக்கழுகுன்றம் வாருங்கள், வெற்றியைக் கொண்டாடுவோம் என இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

கோவில்குளம் மீட்பு  

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி ஒன்றியத்திலுள்ள சிற்றூர் சடையமான்குளம். இந்த ஊரில் உள்ள விக்னவிநாயகர் கோவிலுக்குச் சொந்தமான சடையமான்குளம் வில்ராயன்குளம் என இரண்டு குளங்கள் இருந்தன.

சுமார் 97 வருடங்களுக்கு முன்பு அதை நிர்வகித்து வந்த பண்ணையார், குளங்களை அங்கு பெரும்பான்மையாக வசித்து வந்த கிறிஸ்துவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டார்.

அந்த ஊரில் இந்து முன்னணி கிளை துவங்கப்பட்டது. கிளைத் தலைவர் பெருமாள் மற்றும் பொறுப்பாளர்கள் கோயில் சான்றுகளைத் தேடி எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் குளங்களைப் பெருமாள் மற்றும் ௧௮ பேர்கள் பெயரில் உரிமை வழங்கி உத்தரவிட்டது.

கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ஒரு குளம் தரவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

பெருமாள் மதுரை உயர் நீதிமன்றத்தின் மூலம் அதற்குத் தடையாணை பெற்றுள்ளார்.

தற்போது குளத்தின் மீன் குத்தகையை ஏலம் விட்டு அதனால் ஊர் பயன் அடைந்து வருகிறது. நீதி வென்றது. இந்து முன்னணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

பெரும்பான்மை இருந்தால் எதையும் சாதித்திடலாம்

மண்டைக்காட்டில் பா.ஜ.க. வின் சாதனை 

கன்யாகுமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் புண்ய ஸ்தலமாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10  நாட்கள் திருவிழா நடக்கும். அதில் பல லட்சக்கணக்கான கேரளா, தமிழ்நாட்டு பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்வார்கள்.

திருவிழா வந்தால் கடற்கரை பகுதிகளில் திருவிழா சிறப்புக் கடைகள் அமைப்பதற்கான குத்தகையை ஆர்.சி.சர்ச்சை சேர்ந்தவர்கள் ஏலம் விட்டு லட்சக்கணக்கில் பணம் சேர்த்து பஞ்சாயத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி செயல்பட்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு முன்பு சமாதானக் கூட்டம் நடத்துவதாகக் கூறும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக முடிவுகள் எடுப்பதற்கு சமாதானக் கூட்டத்தை பயன்படுத்தியது வேதனைக்குரியது.

இந்து சமுதாயம் திடமாக முடிவு எடுத்தது. அதுதான் 2011 இல் நடந்த உள்ளாட்சி தேர்தல். நமது குறைகளை களைய மண்டைக்காடு பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதகள் வேண்டும் என்று முடிவெடுத்தது. நமது பாரதிய ஜனதா கட்சி சார்பில் அன்பு சகோதரி மகேஸ்வரி முருகேசனை வேட்பாளராக தேர்தலில் களம் இறக்கியது. மற்றும் 10 வார்டுகளிலும் போட்டியிட்டது. வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்றார்கள்.

இந்த வருடம் கொடைவிழா ௦04.03.2012 அன்று தொடங்கியது. கொடைவிழா ௦ தொடங்குவதற்கு முன்பே பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குத்தகை வசூலிப்பது என்றால் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசூலிக்க வேண்டும், இல்லையென்றால் எங்கும் வசூலிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பஞ்சாயத்திற்கான ஏடி பேரூராட்சி தலைவிக்கு பதில் அனுப்பியிருந்தார்.

பஞ்சாயத்திற்கான கணக்கு தணிக்கை செய்யும் போது பஞ்சாயத்திற்கு நிதி இழப்பு ஏற்படின் செயல் அலுவலர், மன்ற தலைவர், மன்ற உறுப்பினர்களிடம் நகராட்சி சட்டம் (1920, 353) விதிகளின் படி பணம் வசூல் செய்யப்படும் என பதில் அனுப்பி யிருந்தார்.

திருவிழா ஆரம்பமான 2-ஆம் நாளன்று கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கப்பட்டது. அதையும் மீறி 4-ஆம் திருவிழா அன்று செயல் அலுவலர் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 7 கடைகளில் 50  ரூபாய்க்கு ரசீது கொடுத்து ஆயிரம் ரூபாய் வசூலித்தனர். இதனை அறிந்த நமது பா.ஜ.க. துணைத் தலைவர் ஜெகன் சந்திரகுமார், தலைவி மகேஸ்வரி முருகேசன் மற்றும் 8 வார்டு உறுப்பினர்களும் தடுத்து நிறுத்தினர். பின்னர் பத்மனாபபுரம் ஆர்.டி.ஒ. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த ஒரு தடவையும் விட்டுக் கொடுங்கள், அடுத்த வருடம் பேசி தீர்மானிக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்.

நமது மன்ற உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர், மாவட்டத் தலைவர் தர்மராஜ் மாவட்ட பொது செயலாளர் குமரி ப.ரமேஷ்,  வக்கீல் ரவிகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மிசா சோமன் ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே குரலில் முடியாது. குத்தகை பிரிக்கக் கூடாது. கடற்கரையில் பிரித்தால் மட்டுமே மற்ற பகுதிகளிலும் பிரிக்க வேண்டும் என்றனர். அடுத்து ஏ.எஸ்.பி. இதற்கு முன்னாள் 2001 முதல் 2006 வரை உங்கள் பாரதீய ஜனதா கட்சிதானே மண்டைக்காடு பேரூராட்சியை ஆண்டது. அப்போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.

அப்போது நமக்கு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் மட்டும் உண்டு என்றும் ஆகையால் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை என்றும், இப்போது எங்களுக்கு தனிப் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபட பதில் அளித்தனர். இதை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். 

இந்த வருடம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. உள்ளாட்சியில் மட்டுமல்ல பாரத தேசத்திலும் நம்மவர்கள் அதிக பட்ச இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறுபான்மையினரை தாஜா செய்பவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படும். நம்மவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் களையப்படும்.

டி ராஜரெத்தினம் மண்டைக்காட்டிலிருந்து.    

ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபை கூட்டம்

ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபா துவக்க விழாவில் 

மங்கள விளக்கேற்றும் ப.பூ.சர்சங்கசாலக் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர்மட்டக் குழுவான அகில பாரத பிரதிநிதி சபைக்  கூட்டம் நாகபுரியில் ரேஷிம்பாக்கில் இருக்கின்ற டாக்டர் ஹெட்கேவார் ஸ்ம்ருதி மந்திரில் மார்ச் 16,17&18 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் இருந்து தேர்வு  செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள், மாநிலப் பொறுப்பாளர்கள், அகில பாரதப் பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய அளவில் செயல்பட்டு வருகின்ற 40கும் மேற்பட்ட சங்கக் குடும்ப அமைப்புகளின் அகில பாரதப் பொறுப்பாளர்கள் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைத்து வருகின்ற ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 1,200கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதிநிதிகளில் ஒருபகுதியினர்.

மார்ச் 16 காலை சரியாக 8.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் திரு.சுரேஷ் ஜோஷி ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர். ஹெட்கேவார் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செய்து விட்டு கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர். பின்னர் மங்கள விளக்கேற்றி கூட்டத்தினைத் துவக்கி வைத்தனர்.  துவக்கத்தில் கடந்த வருடத்தில் தேசிய அளவில் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி மறைந்த  பல பிரமுகர்களின் மறைவிற்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் திரு.சுரேஷ் ஜோஷி அவர்கள் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்.

மானனீய சர்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குடும்ப அமைப்புகளான ஏ.பி.வி.பி (மாணவர் இயக்கம்), பி.எம்.எஸ்.(தொழிற்சங்கம்), வி.ஹெச்.பி. வித்யா பாரதி (கல்வி நிறுவனங்கள் அமைப்பு), பாரதீய கிசான் சங்கம் (விவசாயிகள் சங்கம்), சம்ஸ்க்ருத பாரதி, சம்ஸ்கார் பாரதி (நுண் கலை அமைப்பு), க்ரீடா பாரதி (விளையாட்டு அமைப்பு) லகு உத்யோக் பாரதி (சிறுதொழில்கள் அமைப்பு), ராஷ்டிரா சேவிகா சமிதி (பெண்கள் அமைப்பு), ஸ்வதேஷி ஜாகரண் மன்ச் (ஸ்வதேஷி விழிப்புணர்வு), அதிவக்த பரிஷத் (வழக்கறிஞர்கள் அமைப்பு), தீனதயாள் ஆராய்ச்சிக் கழகம், விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு) , வனவாசி கல்யான் ஆஸ்ரம்,  தர்ம ஜாகரண், சீமா சுரக்ஷா(எல்லைப்புற பாதுகாவல்), பூர்வ சைனிக் சேவா பரிஷத் (முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு), சமரசதா மன்ச் (சமுதாய சமத்துவ), பாரதீய ஜனதா கட்சி, சஹகார் பாரதி (கூட்டுறவுத் துறை), சாஹித்ய பரிஷத் (இலக்கியம்),  விஸ்வ விபாக் (சர்வதேச அளவில் ஹிந்து ஒற்றுமைப் பணி), பாரத் விகாஸ் பரிஷத், சிக்ஷா பச்சாவ் அந்தோலன், சைக்ஷிக் மகாசங், ஆரோக்ய பாரதி, க்ராஹக் பஞ்சாயத் (நுகர்வோர் அமைப்பு), மகிளா சமன்வய, சக்ஷம் (மாற்றுத் திறனாளிகள்), விவேகானந்த கேந்திர உட்பட மேலும் சில அமைப்பினர் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி சபா கூட்டத்தில் கலந்து கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள், இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் துறையில் செய்துள்ள சாதனைகள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், மேற் கொண்ட முயற்சிகள் பற்றி பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர். இம்மூன்று நாள் கூட்டத்தில் நீண்ட விரிவான விவாதத்திற்குப் பிறகு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் சமர்ப்பித்த ஆண்டறிக்கையிலிருந்து சில துளிகள்….

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் திரு.சுரேஷ் ஜோஷி அவர்கள்

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் நாடெங்கிலும் நடைபெற்ற (சங்க சிக்ஷா வர்க) சங்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார்.

நாடெங்கிலும் மொத்தம் 69 இடங்களில் முதலாமாண்டு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. அதில் மொத்தம் 11,507 பேர் கலந்து கொண்டு பயிற்சி முடித்துள்ளனர். 2,781 பேர் இரண்டாமாண்டு பயிற்சி முகாம் முடித்துள்ளனர். நாகபுரியில் ஆண்டு தோறும் 31 நாட்கள் நடைபெற்று வருகின்ற மூன்றாமாண்டு பயிற்சி முகாமில் மொத்தம் 732 பேர் கலந்து கொண்டனர். இத்துடன் கடந்த ஆண்டு சிறப்புப் பயிற்சி (40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக) முகாமில் மொத்தம் 474 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.

(முதலாமாண்டு பயிற்சி முகாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இரண்டாமாண்டு பயிற்சி முகாம் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்காக நடைபெற்று வருகிறது. இவைகள் 20 நாட்கள் நடைபெற்று வருகின்றன. மூன்றாமாண்டு பயிற்சி முகாம் ஆண்டு தோறும் நாகபுரியில் 31 நாட்கள் நடைபெற்று வருகிறது).

கடந்த வருட 3 ஆம் ஆண்டு பயிற்சி முகாமிற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ.ஜகத்குரு.ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கினார். விஜயவாடாவைச் சார்ந்த ஸ்ரீ.கன.ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஷத்திரிய மகா சங்கத்தின் தலைவர் ஜெய்ப்பூரைச்  சார்ந்த பகவான் சிங், மற்றும் பரமபூஜனீய சர்சங்கசலாக் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாடெங்கிலும் 27,978 இடங்களில் மொத்தம் 40,891 ஷாகா (தினசரிக் கூடுதல்) நடைபெற்று வருகிறது. வாராந்திரக் கூடுதலான மிலன் மொத்தம் 8,508 இடங்களில் நடைபெற்று வருகிறது. மாதாந்திரக் கூட்டமான சங்க மண்டலி மொத்தம் 6,445 இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டினைக் காட்டிலும் ஷாகா, மிலன் மற்றும் மண்டலி அதிகரித்துள்ளது.

சங்கத்தின் அகில பாரதத் தலைவர் கடந்த ஆண்டு நாட்டிலுள்ள 19 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து இயக்க வளர்ச்சிக்கும், தொண்டர்களின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியுள்ளார். சர்சங்கசாலக் அவர்கள் நமது நாட்டின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலமாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு  மக்களால் வழங்கப் பட்டது.

வழக்கறிஞர்கள் சமுதாயக் கடமைகளை மறக்கக் கூடாது-ஆர்.எஸ்.எஸ்.தலைவர்

சமுதாயக் கடமைகளை நினைவில் கொள்ளுங்கள்- மோகன் பாகவத் 

கர்நாடக மாநிலம் தாவனகரேயில் மார்ச் 4 அன்று நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டினைத் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் “வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தர்மத்தையும், சமுதாயக் கடமைகளையும் மறந்திடக் கூடாது” என்று வலியுறுத்தினார்.  “Advocates for Hindhuthva” என்கிற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டில் கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 1,400 ௦௦ வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அம்மாநிலத்தில் ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்ற “ஹிந்து ஐக்கிய வேதிக” அமைப்பு துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் (வெள்ளி விழா) ஆவதையொட்டி இந்நிகழ்ச்சியினை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

துவக்க விழாவில்  ஹரிஹராவைச் சார்ந்த ஸ்ரீ சித்தலிங்க சுவாமிஜி, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆஸாம் மாநிலங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து பணி நிறைவு பெற்றுள்ள  நீதிபதி எம். ராமகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

துவக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற முதல் அமர்வில் “ராஜேந்திரா சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகளினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு  ஏற்பட்டுள்ள அபாயங்கள்” பற்றி

இந்திரேஷ் குமார்

ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.இந்திரேஷ் குமார் அவர்கள் பேசினார். இந்த அமர்விற்கு லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) வி.எம்.பாட்டில் அவர்கள் தலைமை வகித்தார்.

நீதிபதி பர்வத ராவ்

மதிய உணவுவிற்குப் பிறகு நடைபெற்ற அமர்வு “கர்நாடகாவில் நிலவி வருகிற  சமுதாய சவால்கள்”  என்கிற தலைப்பில் நடைபெற்றது. மைசூரைச் சார்ந்த மூத்த வழக்கறிஞர் சி.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரை உரையாற்றினார். வழக்கறிஞர் அசோக் சாஹு தலைமை வகித்தார். அகில பாரத அதிவக்த பரிஷத்தின் தேசியத் தலைவர் நீதிபதி (ஓய்வு) பர்வத ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நீதிபதி ராமா ஜோய்ஸ்

மாலையில் நடைபெற்ற இறுதி அமர்வில் நீதிபதி (ஓய்வு) நீதிபதி ராமா ஜோய்ஸ், எல்லைப் பாதுகாப்பு படை (Ex. BSF Director) தலைமை இயக்குனர் (ஓய்வு) பி.சி.டோக்ரா  மற்றும் ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியசுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.

நீதித்துறையின் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நின்று வாதாடி நீதியை பெற்றுத் தருவதற்காக  வழக்கில் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாதிட்டு நீதியை பெற்றுத் தருவது என்பது வழக்கறிஞர்களின் கடமையாகும். உலகில் நிலவி வருகின்ற அனைத்து வித அநீதிகளையும் அகற்றி நீதியை வழங்கிட வேண்டும் என்பதே “ஹிந்துத்வா”வின் ஒரே நோக்கமாகும். “ஹிந்துத்வா” பற்றி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இந்த மாநாட்டின் தலைப்பே “ஹிந்துத்வா” பெயரில் அமைந்துள்ளது என்று மோகன் பாகவத் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார்.

நமது நாட்டின் தேசிய அடையாளம் ”ஹிந்துத்வா”. ஹிந்துத்வா நமது நாட்டின் தேசியம். “ஹிந்து ராஷ்ட்ரம்” இது என்பதை நாம் நன்கு அறிவோம். ஹிந்துத்வா என்பது நமது நாட்டின் வாழ்க்கைமுறை என்று உச்ச நீதி மன்றமே தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது, என்று அவர் பேசினார். வன்முறையும் அநீதியும் நிறைந்து காணப்படுகிற இவ்வுலகில் அமைதியையும், ஒற்றுமை உணர்வையும் ஏற்படுத்திட ஹிந்துத்வா மிகத் தேவையானது என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் துவக்கவுரையில் குறிப்பிட்டார். பாரதத்தின் நிலையான உயர்ந்த பண்பாட்டு விழுமியங்கள் உலகிற்கு என்று தேவைப் படுகிறது. நமது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்துள்ள உயர்ந்த பண்பாடுகளே ஹிந்துத்வா என்று அழைக்கப்படுகிறது என்றார்.

மாநாட்டில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள்

“எல்லோரும் இன்புற்றிருப்பதுவே யன்றி வேரொன்றறியேன் பராபரமே” என்கிற உயர்ந்த சிந்தனை உலகில் வேறு எங்கும் காண முடியாதது. நீதியை நிலை நாட்டுவது,  தவறுகளைக் கண்டிப்பது உண்மைக்குக் குரல் கொடுப்பது என்பது ஹிந்துத்துவமாகும். தர்மத்தின் படி வாழ்க்கை நடத்துவது, பொருள் ஈட்டுவதையும் இன்பம் சுவைப்பதையும் ஒரு கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்வது, ஆன்ம விடுதலையை வேண்டுவது என்பது ஹிந்து வாழ்க்கை முறையாகும்.

ஹிந்துத்துவா நமது நாட்டின் அடையாளம். ஹிந்துத்துவா என்பது நமது தேசியமாகும். ஹிந்துத்துவா என்பது நமது நாட்டின் வாழ்க்கை முறைக்குப் பெயராகும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. இதன்படி நமது நாட்டில் இருக்கின்ற அனைவரும் ஹிந்துக்கள்தான். நமது நாட்டில் இருக்கின்ற முஸ்லிம்களின் முன்னோர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தான்.

கலாசார அடிப்படையில் இந்நாட்டில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களும் ஹிந்துக்களே ஆவர். துரதிர்ஷ்டவசமாக வாக்கு வங்கி அரசியல் காரணமாக அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர். சில அடிப்படை வாதிகள் சச்சார் கமிட்டி அறிக்கையினை அமுல் படுத்திட வேண்டும் என்று கோருகின்றனர். அது தேசிய ஒருமைப்பாடிற்கு கேடு விளைத்திடும் என்று  கருதுவதால் நாம் அதை எதிர்க்கின்றோம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் அப்போது குறிப்பிட்டார்.எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதுவே வழக்கறிஞர்களின் கடமையாகும். ஹிந்து வாழ்க்கை முறையை குலைத்திட நடைபெற்று வருகின்ற பல கலாசாரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி ஹிந்து வாழ்க்கை முறையினைக் காக்க வேண்டிய இக்கால கட்டத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக அத்தியாவசியமானதாகும். (உதாரணதிற்கு ஓரினச் சேர்க்கை பற்றி நாட்டில் நடைபெற்று வருகின்ற சட்ட விவாதங்கள்).

எனவே நீதிக்காக வழக்கறிஞர்கள் என்று கூறுவதை ஹிந்துத்வாவிற்காக வழக்கறிஞர்கள் என்று இம்மாநாட்டினை அழைக்கலாம் என்று அவர் தனது துவக்க உரையின் நிறைவில் குறிப்பிட்டார்.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் விழா

இலங்கையில் சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா 

சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் சுவாமிஜி அவர்கள் ஹிந்து வேதாந்தக் கருத்துக்களை சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததுடன் ஒரே நாளில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அதை தொடர்ந்து 4 வருடங்கள் அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஹிந்து தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய போது அவர் முதலில் காலடி வைத்தது இலங்கை கொழும்பு நகரத்தில்தான். 

ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் 150௦ வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கின்ற ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள், ஹிந்து ஆன்மீக இயக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திடத் துவங்கியுள்ளன. இந்நிகழ்ச்சிகள் இவ்வருடம் முழுவதும் நடைபெற இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகின்ற 2013-14 ஆம் ஆண்டில் சுவாமிஜியின் 150 வது  ஜெயந்தியை மிகப் பிரம்மாண்டமான அளவில் நடத்திடத்திட்டமிட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிற இயக்கமாகும். இலங்கையில் கடந்த 10௦ ஆண்டுகளாக ஹிந்துஸ்வயம் சேவக இயக்கம் அந்நாட்டு ஹிந்துக்களிடையே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150௦வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடிட  அகில இலங்கை விழாக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் தலைவராக இருக்கின்றார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அக்குழுவில் இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஹிந்து சமுதாயப் பெரியோர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இலங்கை முழுவதிலுமிருந்து இக்குழுவில் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இலங்கை முழுவதும் அக்குழுவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த வருடத்தினை மிக சிறப்பாகக் கொண்டாடித் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொழும்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கொழும்பு நகரில் இருக்கின்ற புகழ்பெற்ற சரஸ்வதி திருமண மண்டபத்தில் இவ்விழா பிப்ரவரி 26 அன்று மாலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 500௦௦க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் தவிர மீதமுள்ள 24 மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இலங்கை முழுவதிலிமிருந்து இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டது பலருக்கு பெரும் மகிழ்ச்சியை மட்டுமல்ல பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. பலர் இதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி மாலை 5.30 ௦க்கு சரியாகத் துவங்கி இரவு 7.30 க்கு நிறைவு பெற்றது. இதுவும் கூட பலருக்கு வியப்பை அளித்தது.

விழாவினை கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவி சுவாமி ஸ்வருபானந்த மகராஜ் மங்கள விளக்கு ஏற்றி வைத்தார். பிறகு அதை தொடர்ந்து சுமார் 125 சிறுவர்கள் சிறுமியர்கள் பங்கேற்ற யோகசாப்  நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் துவங்கிய நிகழ்ச்சியில் இலங்கை ஹிந்து சேவா சங்கத்தின் சேவைப் பணிகளின் பொறுப்பாளர் கொழும்பு நகரைச் சார்ந்த திரு.திருச்செல்வன் அனைவரையும் வரவேற்று, விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். அடுத்து சுவாமி சர்வரூபானந்த அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார்கள்.

அவர்தனது உரையில் ஏழ்மையில் இருக்கின்ற மனிதனுக்கு கடவுளைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும். எனவே முதலில் பசிப்பிணியை அகற்றிட நாம் முனைந்திட வேண்டும். சுவாமி விவேகானந்தரும் இதைத் தான் வலியுறுத்தி இருக்கின்றார் என்று கூறினார் சுவாமி சர்வரூபானந்தா.

விழாக்குழுவின் தலைவர் திரு.டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது தலைமை உரையில் சுவாமிஜி அவர்கள் சிகாகோவிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பி வந்தபோது முதலில் அவர் காலடி எடுத்து வைத்தது கொழும்பு நகரில்தான் என்பதை நினைவுபடுத்தினார். அப்போது மாபெரும் வரவேற்பு ஒன்று கொழும்பு நகர் ஹிந்துக்களால் சுவாமிஜி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டினார். இலங்கை அரசின் ஹிந்து சமய தினைக்களத்தின் செயலாளர் திரு சாந்தி திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியர் திரு.நா.சடகோபன் அவர்கள் சிறப்புரையில் “சுவாமி விவேகானதருக்கும் தமிழகத்திற்கும், தமிழக இளைஞர்களுக்கும் இருத்த நெருக்கத்தினையும் தொடர்பினையும் எடுத்துக் கூறினார். 

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மட்டுமின்றி அவர் சிகாகோ செல்வதற்கான நிதியை சேகரித்துக் கொடுத்ததில் சென்னை நகரின் இளைஞர்கள் மாபெரும் தொண்டாற்றியுள்ளனர்.

சுவாமி மீது அபாரமான  பக்தி செலுத்தி வந்த அளசிங்கப் பெருமாள் என்கிற
இளைஞருடன் சுவாமி விவேகானந்தர் மிக நெருக்கமாக இருந்தார். அத்துடன் அந்த இளைஞர் குழுவில் இருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், ரங்காச்சாரி, பிலிகிரி ஐயங்கார், என அனைவருடனும் சுவாமிஜி அவர்கள் நெருங்கிய தொடர்பும்,  நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

சுவாமி விவேகானந்தரையும் தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சுவாமிஜி பிறந்த வங்கத்தைக் காட்டிலும் அதிகமான பெயரும் புகழும் தமிழகத்தில் காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற சீடர்கள் மற்றும் பக்தர்களால் நூற்றுக்கணக்கான தொண்டுக் காரியங்கள் இன்றும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

நாட்டினைப் பற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும்  முழு அக்கறை கொண்டிருந்தவர் சுவாமி விவேகானந்தர், எனவே சுவாமிஜின் 150 வது பிறந்த வருடத்தினை முன்னிட்டு அவரது கருத்துக்களை இலங்கை முழுவதும் இருக்கின்ற ஹிந்துக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது நோக்கமாக இருக்கவேண்டும்” என்று பேசினார்.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணப்பாளர் திரு.சௌமித்ர கோகலே அவர்கள் தனது சிறப்புரையில் உலக அளவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகின்ற பல பணிகளைப் பற்றி பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் காணொளி வாயிலாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். மேற்கத்திய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஹிந்து பண்பாட்டின் தாக்கம் எப்படி இருந்து வருகிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் வேத மந்திரங்களை துல்லியமான உச்சரிப்புடன் மிக அழகாக சொல்லும் இங்கிலாந்து நாட்டு சிறுவர், சிறுமியர்கள், மற்றும் ஆப்ரிக்க நாட்டு சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் இருகரம் கூப்பி நமஸ்தே என்று சொல்வதின் உள் அர்த்தத்தையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்துரைப்பதும் அதைத் தொடர்ந்து சர்ச்சுக்கு வந்திருந்த அனைவரும் கைகூப்பி ஒரே குரலில் நமஸ்தே என்று சொல்லும் காட்சி உட்பட,  காணொளிக் காட்சிகள் அனைத்தும் விழாவிற்கு வந்திருந்த அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

சர்வதேச அளவில் சுவாமிஜி அவர்களின் 150 வது பிறந்த வருடத்தினை நடைபெற இருக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும் சௌமித்ர கோகலே தனது உரையில் எடுத்துரைத்தார்.

அகில இலங்கை ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு.எஸ்.கே.தேவன் அவர்கள் நன்றி கூற, இறைவணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இலங்கையில் சுவாமி விவேகானந்தரது 150வது பிறந்த வருடத்தில் நாடெங்கிலும் குறைந்தது 150 நிகழ்ச்சிகளாவது நடத்திட வேண்டுமென ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர்.

தேசத்தின் எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்.

பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீமோகன்ஜீ பாகவத் அவர்கள் தமது சிறப்புரையில், 

சர்சங்கசாலக்குடன் ஸ்தாணுமாலயன்

பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றி்ருக்கிற நீதியரசர் ராமலிங்கம்ஜி அவர்களே. இந்த நிகழ்ச்சியின் வரவேற்புக் குழுவின் தலைவர் விவிடி ரவீந்திரன்ஜி அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் துறவியர் பெருமக்களே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ப்ராந்த, க்ஷேத்ர, அகில பாரத அதிகாரிகளே, இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவில் கூடியிருக்கும்  தாய்மார்களே, பெரியோர்களே, ஸ்வயம்சேவக சகோதரர்களே அனைவருக்கும் வணக்கம்.

பாரதத்தாயின் பாதப் பகுதியாக இருக்கக் கூடிய இந்தப் பகுதியில் அமர்ந்து கொண்டு, சுவாமி விவேகானந்தரது 150 வது பிறந்த நாள் நிகழ்ச்சியைப் பற்றி சிந்தனை செய்வதற்காக, நாம் இங்கு கூடி இருக்கிறோம்.  அந்த நிகழ்ச்சியை வரவேற்பதற்கான ஒரு வரவேற்பு நிகழ்ச்சியாகக் கூட இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  சுவாமி விவேகானந்தருடைய இந்த 150 ஆவது பிறந்த விழாவை நாடு முழுவதும் ஏன் நடத்துகிறோம்? எதற்காக இந்த நிகழ்ச்சியினை சிந்தனை செய்கிறோம்? எதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம் என்றெல்லாம் சிந்தனை செய்யும் பொழுது, சுவாமி விவேகானந்தரது இந்த 150 ஆவது பிறந்த விழா நாம் நடத்துவது, ஏதோ ஒரு விழா எடுப்பதற்காக அல்ல.  சிலர் விழா எடுப்பது என்றால் அலங்காரத்திற்காக விழா எடுப்பார்கள், சிலர் சுயநலத்திற்காக விழா எடுப்பார்கள்.  ஆனால் உண்மையாகவே அந்த விழா எதற்காக என்றால்  யாருடைய பெயருக்காக அந்த விழாவை நடத்துகிறோமோ அவரது வாழ்க்கையை நாம் மீண்டும் சிந்தனை செய்து,  அதை நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக இருக்கக்கூடிய ஒரு நினைவு நிகழ்ச்சியாகத்தான் அந்த நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம்.

இன்று உலக வாழ்க்கையானது உலகியல் இன்பங்களை  நுகரும்  ஒரு பௌதீக வாழ்க்கையை பின்பற்றி சென்றுக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  நமது நாடானது ஆன்மீக வாழ்க்கையை பின்பற்றும் நாடு.  ஆன்மீகத்தில் சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முக்கிய சீடர்.  ஆனால் அவரது ஆன்மீக வாழ்க்கை முழுவதும்  தேசியத்திற்காகவும், இந்த நாட்டில் வாழும் அத்தனை மக்களின் நலனுக்காகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்க்கையாக இருந்தது.

அதற்கு எடுத்துக்காட்டு, அவர் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு அவர் பேசிய முதல் சொற்பொழிவின் முதல் வார்த்தையே அப்படிப்பட்ட விஷயத்தைச் சார்ந்ததாக இருந்ததால் அந்த முதல் வார்த்தையிலேயே அவர் அமெரிக்காவை வெற்றி கொண்டார்.  அமெரிக்காவில் இருக்கும் உலகியல் இன்பங்களை  நுகரும் பௌதீக சுகங்களை எல்லாம் பார்த்து, அவர் பாரத நாட்டைக் குறித்து எண்ணிக் கொண்டே இருந்தார்.  ஓர் இரவு அவருக்கு ஒரு செல்வந்தருடைய  வீட்டில் விருந்து அளித்தனர். அந்த செல்வந்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.  அமெரிக்காவின் மிகப்பெரும் செல்வந்தரான அவரது வீட்டில் சுவாமிஜிக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இரவு நடுநிசியில் சத்தம் கேட்டு விழித்து எழுந்த அந்த செல்வந்தர், சுவாமிஜியின் அறைக்குள் கீழே படுத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். ஏன் சுவாமிஜி? ஏன் அழுகிறீர்கள்? எனது உபசரிப்பில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா?  என்று கேட்டார்.  அதற்கு சுவாமிஜி, நான் என் நாட்டில் வாழும் மக்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  என் தேசத்தில் வாழும் கோடானு கோடி மக்களின் நிலைமையை நினைத்து, இங்கு இருக்கும் சுகபோகங்கள் இருக்கக்கூடிய நிலைமை எனது நாட்டிற்கு எப்போது வரும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக வாழ்க்கை முழுவதுமே இந்த தேசத்தைப் பற்றி, இந்த தேசத்தில் வாழும் மக்களைப் பற்றி நினைத்தாரே தவிர, தனது சொந்த முக்தியைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.  தமது வாழ்க்கை இந்த உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டும், நிரந்தர வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி சிந்தனை செய்து, தனது முக்திக்கான ஆன்மீக வாழ்க்கையைக் குறித்து சிந்திக்காத வாழ்க்கைதான் சுவாமி விவேகானந்தரது வாழ்க்கை.

பாரதம் எந்த நாட்டையும் பார்த்து, அவற்றின் நகலாக நடக்க வேண்டாம், பாரதம் பாரதமாகவே இருக்க வேண்டும்.  உலகம்தான் பாரதத்தினைப் பார்த்து நடக்க வேண்டும் என்றார் சுவாமிஜி.  இதற்காக சுவாமிஜி எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையினை சொல்லி இருக்கிறார்.

காட்டில் ஒரு சிங்கம் இருந்தது.  அந்த காடு வழியாக ஓர் இடையன் தனது ஆட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.  அந்த மந்தையில் வேட்டையாடுவதற்காக சிங்கம் மந்தைக்குள் பாய்ந்தது.  அவ்வாறு அது வேட்டையாடும் போது அந்த ஆட்டு மந்தையில் ஒரு குட்டியினை பெற்று விட்டு இறந்து விட்டது.  அந்த சிங்கக் குட்டியானது இந்த ஆட்டு மந்தையுடன் சேர்ந்தே நடக்க ஆரம்பித்தது.  ஆடுகளைப் போன்று உண்டு, உறங்கி, சத்தமிட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தது. ஆட்டு இடையரிடம் இருந்த ஆடுகளை ஒழுங்குப்படுத்தும் நாயினைக் கண்டு பயந்து, ஆட்டு மந்தையில் சேர்ந்து, ஆட்டினைப் போன்று சத்தமிட்டுக் கொண்டு, ஆட்டிடையனின் கையில் இருந்த தடியினைப் பார்த்து பயந்து மந்தைக்குள் சென்று கொண்டிருக்கிறது.  இப்படியே தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தது.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த காட்டில் மற்றொரு சிங்கம் இருந்தது.  அந்த காட்டு சிங்கம் ஒரு நாள் வேட்டையாடுவதற்காக இந்த ஆட்டு மந்தையை நோக்கிப் பாய்ந்தது.  அப்போது அந்த ஆட்டு மந்தையில் ஓர் ஆச்சரியமான காட்சியினை அந்த காட்டு சிங்கம் கண்டது.  அந்த ஆட்டு மந்தையின் மத்தியில் ஒரு சிங்கக் குட்டி உலவிக் கொண்டிருக்கிறது.  நாயைப் பார்த்து பயந்து மந்தையின் நடுவில் ஓடி ஒளிந்து கொண்டு, ஆட்டிடையனைப் பார்த்து பயந்து கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு ஆச்சரியம் அடைந்தது. அந்த சிங்கக் குட்டியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து கர்ஜனை இட்டுக் கொண்டு ஆட்டு மந்தைக்குள் குதித்தது.  குதித்து அந்த சிங்கக் குட்டியைப் பிடிக்கிறது.  உடனே சிங்கக் குட்டி சொல்கிறது.  என்னை விட்டுவிடு, நான் தப்பு செய்து விட்டேன். நான் இனி இந்த காட்டிற்குள் வரவே மாட்டேன். என்னைக் கொல்லாதே என்று கெஞ்சியது.

நீ ஆட்டுக் குட்டி அல்ல, என்னையும் உன்னையும் பார் என்றது. என்று காட்டுச் சிங்கம் சொன்னது.  ஆனால் சிங்கக் குட்டியால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. உடனடியாக அருகிலிருந்த  நீர் நிறைந்திருந்த குளத்தின் கரைக்கு அந்த சிங்கக் குட்டியை அழைத்துச் சென்று தண்ணீரில் அதன் வடிவத்தினைப் பார்த்தது.  நீர் நிலைக்குள்ளே இருந்த காட்டு சிங்கத்தின் வடிவத்தையும், தனது வடிவத்தையும் ஆட்டு மந்தைக்குள்ளே இருந்த சிங்கக் குட்டி பார்த்தபோது, ஓஹோ, நான் ஒரு சாதாரண ஆடு அல்ல, நான் ஒரு சிங்கம் என்று புரிந்தது.  உடனே காட்டு சிங்கம் கர்ஜனை போட சொன்னது.  கர்ஜனை அதற்கு வரவில்லை.  ஆனால் வெறும் சத்தம்தான் வந்தது.  கர்ஜனை வரவில்லை. பல முறை அது சத்தமிட்ட போது அதற்கு கர்ஜனை வந்தது. காட்டுச் சிங்கமாக மாறிவிட்டது.

இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது.  நாம் யாரையும் பார்த்து வாழ வேண்டாம். நாம் நாமாகவே வாழவேண்டும்.  பாரதம் பாரதத்தின் தனித்தன்மையோடு வாழ வேண்டும்.  ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் கூட நமது நாட்டில் நமது சொந்த வாழ்க்கை முறையையோ, நமது தத்துவத்தையோ பின்பற்றாமல், நம்முடைய உண்மையான விஷயத்தையோ, நம்முடைய ஆட்சியில் இருப்பவர்களே, ஆட்சியாளர்களோ பின்பற்றாமல், நாம் மற்ற நாடுகளைப் பின்பற்றும் நிலைமை உருவாகி இருப்பதால் உண்மையான பாரதத்தை மக்களுக்கு புரிய வைக்க முடியவில்லை.  ஆதலால் நாம் நம்முடைய சுயத் தன்மையோடு வாழவேண்டும்.  யாரையும் நாம் பின்பற்ற வேண்டிய தேவை இல்லை என்று சுவாமிஜி சொல்கிறார்.

இன்றைக்கு இந்த நாட்டிற்குள் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சனையானது வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பிரச்சனைகளோ, வேறு பிரச்சனைகளோ அல்ல. எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு நாம்தான்.

இந்த பாரத தேசமானது இமய மலை முதல் கடல் வரை இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரமாண்டமான இந்த தேசமானது, இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, இந்த தேசத்தின் உண்மையான தனித்தன்மை என்பதை நாம் ஹிந்துத்வம் என்று சொல்கிறோம்.  இந்த தேசம் மிகப் பிரமாண்டமான தேசம்.  நாமெல்லாம் பாரதத்தாயின் புதல்வர்கள். இந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றக்கூடிய, இந்த பண்பாட்டை வழி நடத்தக்கூடிய, இந்த ஹிந்து பண்பாட்டைப் பின்பற்றி இந்த தேசத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு செல்வதற்காக எவரெல்லாம் இந்த தேசத்திற்காக வாழ்ந்து ரத்தம் சிந்தி, வேர்வை சிந்தி, இந்த தேசத்தை அவர்களுடைய பராக்கிரமத்தால், வேர்வையால், உழைப்பால் உலகத்தின் முன்னால் ஒரு பிரமாண்டமான வாழ்க்கை வாழ்ந்தது,  வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஆகையால்  இந்த தேசத்தினை காப்பாற்ற வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கைப் பரம்பரை.  அத்தகைய மக்கள்தான் இந்த தேசத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் பாரத நாடு முழுவதும் கால் நடையாகவே நடந்து, பாரத பரிக்ரமா செய்தார்.  அன்று அவருக்கு பாரத தேசத்தினுடைய எல்லா பிரச்சனைகளும் அருகில் இருந்து பார்த்த காரணத்தினால். அவரது மனதில் இருந்த எல்லா விஷயங்களுக்கும் தெளிவு கிடைத்தது இந்த தேசம் உயர வேண்டுமானால் நற்குணங்களுடைய, நற்பண்புகளுடைய நல்ல ஒரு இயக்கம் தேவை.  இந்த தேசத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல், கலவரம் இல்லாமல் இந்த நாடு வாழவேண்டுமானால் உலகத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு இயக்கம் தேவை.  அது மட்டுமல்லாமல், உலகத்தில் எந்த மூலையில் வாழக் கூடிய ஹிந்துவாக இருந்தாலும் அவன் என்னுடைய ரத்தம், என்னுடைய சதை அவனுடைய துக்கம் எனது துக்கம், அவனுடைய வாழ்க்கையும், அவனது துக்கமும் எனது வாழ்க்கை என்று சொல்லக் கூடிய  நம்பிக்கை உருவாக்கக்கூடிய மக்கள் தேவை என்கின்ற எண்ணம் உருவானது.

அதற்காக அவர் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டார்.  இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு அடிப்படையாக இருக்கக்கூடிய தேவை அதற்காக ஒரு இயக்கமும், மக்கள் சக்தியும். இந்த தேசத்திற்காக வாழக்கூடிய மக்கள்சக்தி தேவை என்று உணர்ந்தார். டாக்டர்ஜி இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டுதான் சங்கத்தை ஆரம்பித்தார்.  டாக்டர்ஜி மருத்துவ பட்டம் படிப்பதற்காக வங்காளம் சென்றார்.

வங்காளத்தில் மருத்துவப் பட்டத்தைப் படித்துக் கொண்டிருக்கும் காலக் கட்டத்திலேயே ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சேவா காரியங்களைச் செய்தார்.  ஆகவே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நன்கு உணர்ந்தவர் டாக்டர்.ஹெட்கேவார்.

தன்னுடைய வாழ்க்கையில் இந்த தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டுமானால், சுவாமிஜி சொன்னது போன்று எப்படிப்பட்ட இளைஞர்கள் தேவை, கார்யகர்த்தர்கள் தேவை என்பதை அவர் உணர்ந்தார்.  நம்பிக்கை உள்ளவர்கள், நல்ல உடல் பலம் உள்ளவர்கள், எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்கள், ஒரே திசையில் சிந்தனை செய்து, நேர் கோட்டில் செல்லக்கூடிய, நன்கு ஒருங்கிணைங்கப்பட்ட மக்கள் சக்தி தேவை என்று உணர்ந்தார்.  அப்படி உணர்ந்த டாக்டர். ஹெட்கேவார் அவரது காலகட்டத்தில் வாழ்ந்த சுதந்திரத்திற்காக பாடுபட்டு வந்த பல்வேறு தேசியத் தலைவர்களுடன் அவர் கலந்து பேசினார். மகாத்மா காந்திஜி, சுபாஷ் சந்திர போஸ், வீரசாவர்க்கர், மதன்மோகன் மாளவியா என்கின்ற அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த தேசபக்தர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் அவர் பேசியிருக்கிறார்.

காங்கிரஸில் இருந்து வேலை செய்து வந்த போது இரு முறை அவர் சிறைக்குச் சென்று வந்தார். சங்கம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முறை,  சங்கம் ஆரம்பித்ததற்குப் பின்னர் ஒரு முறை சிறைவாசம். அது மட்டுமல்லாமல் அவர் சுதேசி பொருட்களை விற்பதற்காக கடைகள் நடத்தினார். பத்திரிக்கை நடத்தினார்.  தேசத்தின் சக்திக்காக இருக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சுவாமி விவேகானந்தரால் சொல்லப்பட்ட அந்த மனிதசக்தி என்கின்ற விஷயத்தை நன்கு உணர்ந்து, அதற்காக இருக்கக்கூடிய சிந்தனையுடன் சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட அதே விஷயத்தை அடிப்படையாக வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை டாக்டர்ஜி நிறுவினார்.

ஆகையினால் இன்றிருக்கக்கூடிய இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நல்ல ஹிந்து சக்தி, ஹிந்து தர்மத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் பக்தி உள்ள கார்யகர்த்தர்களை உருவாக்கக் கூடிய அந்த வேலையை அவர் 1925 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவரது வாழ்க்கையில் பதினைந்து ஆண்டுகளில் 1940 களிலேயே தன்னுடைய கனவு எந்த திசையில், சென்று கொண்டிருக்கின்ற ஒரு நிலைமையை அவர் கண்ணால் பார்த்தார்.  ஆகையால் இந்த தேசத்தினுடைய அடையாளம், இந்த தேசத்தின் தன்மை ஹிந்துத்வம்.

அந்த ஹிந்துத்வம் என்று சொல்லக் கூடியது யாரையும் கஷ்டப்படுத்துவது அல்ல. மெக்ஸிகோ முதல் சைபீரியா வரை எல்லா பகுதிகளுக்கும் சென்ற நமது முன்னோர்கள் அங்கு வாழ்ந்தவர்களை ரத்தம் சிந்த வைக்கவில்லை.  அங்கு வாழ்ந்தவர்களை மதம் மாற்ற வில்லை. அங்கிருக்கக்கூடிய அரசினை மாற்றவில்லை.  அவர்களுக்கு ஞானம், வீரம், கணிதம் நல்ல தன்மைகள், ஆன்மீகம் இப்படிப்பட்ட பாரதீய பண்புகளாக இருக்கக்கூடிய, எல்லா உயிரினங்களிலும் கடவுளைப் பார்க்கக் கூடிய இந்த ஹிந்து தன்மையையும், ஹிந்துத்வத்தை அவர்களுக்கு உணர வைத்தனர். அப்படி பாரதம் இன்று உலகத்திற்கு வழிகாட்ட வேண்டுமானால் இந்த ஹிந்துத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.  அது இன்றைக்கு உலகத்திற்கு மிக தேவையானதொரு கால கட்டம்.

பாரதம் எழுந்து நிற்க வேண்டும்.  அதற்காக ஹிந்து தன்மையோடு இருக்கக்கூடிய புத்துணர்வு பெற்ற, ஹிந்து வாழ்க்கை முறையை பின்பற்றக்கூடிய நமது தர்மத்தைப் பின்பற்றக்கூடிய, சுயநலமற்று,    மற்றவர்களுக்காக வாழக்கூடிய பரோபகாரம் கொண்ட ஒரு மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  இது எப்பொழுது உருவாகுமோ, அப்பொழுது பாரதம் எழுந்து நிற்கும். உலகை வழி நடத்தும்.  தலைவர்களை மாற்றுவதாலோ, கோஷத்தை மாற்றுவதாலோ, சட்டத்தை மாற்றுவதாலோ இந்த நாடு எழுந்து நிற்காது.  முழு சமுதாயத்தையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும்.  சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்தை உருவாக்கக்கூடிய நன்னம்பிக்கை கொண்ட மக்களை கிராமந்தோறும், தெருக்கள்தோறும் உருவாக்க வேண்டும். நாம் சமுதாயத்தினைப் பற்றி சிந்தனை செய்து அவர்களுடன் தினசரி தொடர்பு வைக்கக்கூடிய ஒரு மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  இப்படி ஒழுக்கமான வாழ்க்கை வாழக்கூடிய மக்கள் சக்தியை கிராமந்தோறும், பேட்டைதோறும் உருவாக்குவதற்காகத்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் முயற்சி செய்து வருகிறது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் கிராமந்தோறும், பேட்டை தோறும் தினசரி நடக்கும் ஷாகாக்கள் அங்கு வரக்கூடிய மக்களுக்கு புத்தி, மனம், உடல் ரீதியாக பயிற்சிகள் கொடுக்கக்கூடிய களமாகவே இருந்து வருகிறது.  அங்கு நடக்கும் ஒரு மணி நேரம் ஷாகா என்று சொல்லக்கூடிய அந்நிகழ்ச்சியின் வாயிலாக எல்லா விதமான பயிற்சிகளும் அங்கு கிடைக்கிறது.  நமது தேசபக்தி பாடல்கள் தேசம் ஒன்று, நாம் ஒருதாய் மக்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது.  சங்கஸ்தானத்தில் மௌன குருவாக காட்சியளிக்கக்கூடிய பகவா த்வஜமானது, ஹிந்து தர்மத்தின் தத்துவத்தைக் காண்பிக்கக் கூடிய ஹிந்து வாழ்க்கை முறையை காண்பிக்கும் விஷயங்கள், ஆதலால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரு மணி நேர ஷாகாவில் வரக் கூடிய மக்களுக்கு உடல், மனம், புத்தி – என அனைத்து வகையிலும் இருக்கும் பயிற்சிகளும் அதன் மூலமாக சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும், தூய்மையான சமுதாய வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக தினசரி பயிற்சி கொடுக்கும் ஒரு பயிற்சிக் களம். கடந்த 87 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது இப்படி தேசம் முழுவதும் ஏராளமான தொண்டர்களை தயார் செய்து கொண்டிருக்கும் பணியினை ஷாகாக்கள் மூலம் செய்து கொண்டிருக்கிறது.

ஆகையால் இயற்கை சீற்றங்களாலோ, மனிதர்களால் உருவாகும் பேரிடர்கள் வந்தாலும் கூட முதல் ஆளாக அங்கு சென்று சேரக் கூடியவர்கள் ஸ்வயம்சேவகர்கள்தான்.  ராணுவமோ, காவல் துறையினரோ வந்து சேருவதற்கு முன்பே, ஸ்வயம்சேவகர்கள் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் கூடிய இடங்களுக்குச் செல்கிறார்கள்.  நிலநடுக்கம் வரும் நேரத்தில், புயல் வெள்ளம் வரும் நேரத்தில்.  உங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வருகிறதா என்று பலரும் கேட்கின்றனர்.  இல்லை.  காரணம் என்ன?  இந்த சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அன்பு, பற்று, பாசம், உண்மை. அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற பவித்ரமான அந்த சமுதாய பக்தியின் காரணமாக.  எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது சங்கத்தின் ஷாகா.

இன்று தேசம் முழுவதும் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமாக  பகுதிகளில் அரசாங்கத்தின் எந்த விதமான நிதியுதவியையும் பெறாமல், தன்னுடைய சொந்தப் பையில் இருந்து காசைப் செலவு செய்து மக்களுக்கு சேவைப் பணிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சேவை இயக்கங்கள் மூலமாக மட்டுமல்லாது, இன்று தேசிய மாற்றத்திற்காக பல்வேறு இயக்கங்கள் மூலமாக,  தேசபக்தியை உருவாக்குவதற்காக தேசத்தின் எல்லா விதமான வேலை முறைகளிலும், எல்லாத் துறைகளிலும் முன்வரிசையில் நின்று, தேசத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஸ்வயம்சேவகர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும், இப்படிப்பட்ட மக்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தர் கண்ட கனவு. பாரத தேசம் எழுந்து நின்றால்தான்  பாரதத்தின் ஆன்மீக சக்தி எழுந்து நின்றால்தான் உலகை வழி நடத்த முடியும்.  ஆகவே சுவாமிஜி கண்ட அந்த கனவினை நனவாக்கிடத்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் பணி செய்து வருகிறது.

ஹிந்து சமுதாயம், ஹிந்து கலாச்சாரம், ஹிந்து பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றி, இந்த தேசத்தின் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு உரிய சூழ்நிலையை, ஹிந்து ஒற்றுமை சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். பாரதம் இருக்க வேண்டுமானால் ஹிந்து தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். ஹிந்து சமுதாயம் எழுந்து நின்றால் பாரதம் எழுந்து நிற்கும். பாரதம் எழுந்து நின்றால்தான் இன்றைய உலகமே வாழ முடியும் என்ற ஒரு நிலைமைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஹிந்துத்வமே தீர்வு சொல்லக் கூடிய நிலையில் ஒரு பண்பாக இருப்பதால், பாரதத்தைக் காப்பாற்றக் கூடிய பொறுப்பானது நமக்கு இருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு ஹிந்து ஒற்றுமையை உருவாக்க வேண்டியது  இன்று எல்லா மக்களின் மனதில் இருக்கக்கூடிய பலவீனத்தினைப் போக்கக்கூடிய  மாற்றத்தினை உருவாக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் பலவீனத்தினை ஹிந்து சமுதாயம் போக்க வேண்டும்.  இது நமது கைகளில்தான் இருக்கின்றது.  நான் பலவீனமானவன் என்றுச் நினைத்துக் கொண்டால் இந்த தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.  பலம் வாய்ந்தவர்களாக நாம் ஆகவேண்டும். இந்த தேசத்தில் இருக்கக்கூடிய எல்லா விதமான பிரச்சனைகளையும் தீர்க்க ஹிந்து சமுதாயத்தை எழுந்து நிற்க செய்ய, ஹிந்துக்களுடைய பயிற்சியானது தினசரி நடக்கக் கூடிய ஷாகாவானது கிராமம் கிராமமாக நடக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஹிந்துத் தன்மையை காப்பாற்றிட முன்வரும் நல்லவர்களுடைய வாழ்க்கை சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ள வாழ்க்கை உருவாக வேண்டும்.

இதன் மூலமாக ஒரு கட்டுப்பாடான ஒரு ஒன்றுபட்ட ஒரு சமுதாய சித்தாந்தத்தின் அடிப்படையில் உள்ள ஷாகா எல்லா கிராமங்களிலும் வர வேண்டும்.  அதன் மூலமாக அந்த கிராமங்களில் ஒன்றுபட்ட சமுதாய மாற்றம் உருவாக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக அமைய முடியும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுயநலமற்ற தன்மையோடு, மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வாழக்கூடிய மக்கள் சக்தி ஒவ்வொரு இடத்திலும் நாம் உருவாக்க வேண்டும். இங்கு கூட நாம் காண முடியும்.

இப்படிப்பட்ட பிரமாண்டமான கூட்டம், எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்கிறது என்றால் கட்டுபாடாக இருக்கக்கூடிய ஸ்வயம்சேவகர்களின் சக்தி இங்கு இருப்பதால்தான்.

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டின் செய்தியை எல்லா கிராமங்களுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.  எல்லா கிராமங்களிலும் சங்கத்தின் ஷாகாக்கள், நகரத்தின் வார்டுகளிலும் ஒன்றாகக்கூடக்கூடிய ஷாகாக்கள் நடக்க வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் செய்தி செல்லாத ஒரு கிராமம்கூட இருக்கக்கூடாது.  அப்படி சுவாமிஜியால் சொல்லப்பட்ட ஹிந்து சமுதாயம், ஹிந்து பண்பாடு, ஹிந்துத்வத்தோடு வாழக்கூடிய நாமெல்லாம் ஒரே ஜாதி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம், ஒரே வாழ்க்கை முறையை சேர்ந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கையை இன்றைய ஹிந்து சமுதாயம் உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவானது நம்முடைய வாழ்க்கையில் ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட சமுதாய நிலையை சமுதாயத்திற்குள் கொண்டு வரக்கூடிய ஒரு செயலை எல்லா கிராமங்களுக்கும் கொண்டு சென்று, ஒருங்கிணைந்த ஒரு ஹிந்து சக்தியை உருவாக்க வேண்டிய அந்த  கடமை, அந்த  பொறுப்பு வரக் கூடிய இந்த சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஆண்டு விழாவிற்கு நமக்கு முன்னால் இருக்கக் கூடிய ஒரு வேலையானது, எல்லா கிராமங்களுக்கும் சங்கம் சொல்லக் கூடிய ஒன்றுபட்ட ஹிந்து சக்தியை உருவாக்க வேண்டும்.  அனைத்து கிராமங்களிலும், அனைத்து பஸ்தி பகுதிகளிலும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும், அவரது சிந்தனையையும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

இங்கு இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருக்கிறோம். சுவாமி விவேகானந்தரது 150 ஆவது பிறந்த ஆண்டு விழாவானது நாம் அனைத்து மக்கள் மத்தியிலும் எல்லா கிராமங்களுக்கும் அவரது செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பது இங்கு கூடியிருக்கக் கூடிய அனைவரது வேலை.

சுவாமி விவேகானந்தரின் இந்த 150 பிறந்த ஆண்டு விழா துவக்கமானது தேச வாழ்க்கைக்காக உடல், மனம், பொருள் ஆகிய அனைத்தையும் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தன்னுடைய பெயருக்காகவோ, புகழுக்காகவோ வேலை செய்பவர்களாக அல்லாமல்  தேசத்திற்கும் சமுதாயத்திற்குமாக வேலை செய்பவர்களாக ஆக வேண்டும்.  ஆகையால் இங்கு கூடியிருக்கும் பொதுமக்களுக்கும், அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாமெல்லாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் இந்த தேசத்தின் நலனுக்காக வேலை செய்பவர்களாக ஆக வேண்டும். தேசத்தினுடைய நலனைக் காப்பது ஏதோ ஒரு இயக்கத்தினுடையதோ, அரசியல் கட்சியினுடையதோ, ஏதோ ஒரு தலைவருடைய பொறுப்போ அல்ல.  முன்காலங்களில் கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். கடவுள் வரவில்லை என்று நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாட்டின் ஆட்சியை  நாம் பலர் கைகளில் கொடுக்கிறோம்.  ஆனால் என்ன மாற்றம் கண்டு விட்டோம்?

இந்த தேசம் மாறவேண்டுமானால், இந்த தேசம் ஒரு ஒருங்கிணைந்த முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  மக்களது மனங்களில் தேசத்தினுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்த வேண்டும்.  அது ஏதோ ஒரு கருத்தோ, கற்பனையோ அல்ல.  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தினசரி வழிமுறை என்று சொல்லக்கூடிய, மக்களைத் தயார் படுத்தக்கூடிய, தேச நலனுக்காக வாழக்கூடிய, இந்த தேசத்திற்காக வாழ்ந்த எண்ணற்ற தியாகிகளையும், மகான்களையும் நினைவிற் கொண்டு பயிற்சி கொடுத்து இந்த தேசத்தினை ஒருங்கிணைக்கிறோம்.

இங்கிருக்கும் ஸ்வயம்சேவகர்களும், ஏனையோரும் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தாய்மார்களுக்கும் ராஷ்ட்ர சேவிகா சமிதியில் அனுப்பி பயிற்சி கொடுக்க வேண்டும்.  நாம் நமது வாழ்க்கையில் சம்பாதிக்கும் பொருள், நமது நேரம் இவற்றினை சமுதாயத்திற்குக் கொடுக்கக்கூடிய அந்த மனப்பான்மையை உருவாக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும்  இப்படி உறுதி கொண்ட மக்களால் மட்டுமே, இந்த தேசத்தை வழிநடத்த முடியுமே தவிர, தேசத்தை எழுந்து நிற்கச் செய்ய முடியுமே தவிர, இது தலைவர்களாலேயோ, பேச்சினாலோ முடியாது.  சமுதாயம் எழுந்தால், தேசம் எழுந்து நிற்கும்.  ஆகையால் தேசத்தினை எழுந்து நிற்கச் செய்வதற்காக, சமுதாயத்தினை தயார் படுத்தக்கூடிய கார்யகர்த்தர்களாக நாம் மாறவேண்டும்.  வேலை செய்யக்கூடிய ஊழியர்களாக நாம் மாற வேண்டும்.

சுவாமி விவேகானந்தரது 150 ஆண்டு பிறந்த ஆண்டு துவக்க விழாவானது தேசத்தில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும்,  அந்த மாற்றமானது உலகத்தினை வழி நடத்தும் ஒரு மாற்றமாக உருவாகும் நிலையை நாம் பார்க்கலாம்.  சுவாமி விவேகானந்தர் அவரது மனக்கண்ணில் தோன்றிய எழுந்து நிற்கக்கூடிய இரு கரங்களாலும் உலகத்திற்கு  அருளாசி வழங்கக் கூடிய ராஜசிம்மாசனத்தில் வீற்றிருக்கக் கூடிய பாரதத்தாய் எழுந்து நிற்கக்கூடிய அந்த காட்சியை நம் கண்ணாலேயே பார்க்க முடியும்.

சுவாமி விவேகானந்தரது கனவு இந்த தேசத்தினை ஒருங்கிணைக்கக் கூடிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும்.  எந்த விதமானதொரு விருப்பு வெறுப்பும் இல்லாமல், தேசத்தின் எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்.  அதுதான் இந்த சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த ஆண்டின் விழாவில் நமது செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி என்னுடைய இந்த சொற்பொழிவினை  நிறைவு செய்கிறேன்.

குமாரபுரத்தில் நடைபெற்ற தென் தமிழக சாங்கிக்கில் பரமபூஜனீய சர்சங்கசாலக் மோகன் பாகவத் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் முழு விவரங்கள்.

தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி

குமரிமுனைக்கு அருகில் ஒன்றுதிரண்ட சங்க சக்தி. 

நிகழ்ச்சிக்கான மேடை

சுவாமி விவேகானந்தர் அவர்கள் 110௦ ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிகாகோ மாநாடு செல்வதற்குத் தீர்மானித்தார்.

சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150௦ ஆவது பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜியின் 150௦ ஆவது பிறந்த ஆண்டினை நாட்டிலுள்ள அனைத்து தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், துறவியர்கள், பல வகையில் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் கூட சுவாமிஜியின் 150௦ வருடத்தினைக் கொண்டாடத் துவங்கியுள்ளன.

சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் சென்று அவர்கண்ட கனவினை நினைவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவங்கிய நாள் முதல் பாடுபட்டு வருகிறது.  சுவாமிஜியின் 150௦ வருடத்தினை வருகின்ற 2013-14 ஆம் வருடங்களில்  மிகச் சிறப்பாகக் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளது. அதன் துவக்கமாக சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.

கூட்டுப் பயிற்சி செய்யும் ஸ்வயம் சேவகர்கள்

நெல்லை மாவட்டத்தின் எல்லையும் குமரி மாவட்டத்தின் எல்லையும் சந்திக்கும் இடமான காவல்கிணறு சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் இந்த பிரம்மாண்டமான ஆர்.எஸ்.எஸ்.சாங்கிக் வெற்றிகரமாக நடந்தது. குமாரபுரத்தில் இருக்கின்ற ராம்கோ நிறுவனத்தின் காற்றாலைப் பண்ணையில் (சுமார் 50௦ ஏக்கர் பரப்பில்) இந்நிகழ்ச்சி நடந்தது.

பிரமாண்டமான காற்றாலைகளுக்கு நடுவே குமரிக் கடலுக்கும் மகேந்த்ரகிரி என்னும் பெயருடன் புகழ் பெற்றுத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் அழகிய பிரம்மாண்டமான மைதானத்தில் தென்தமிழக சங்க சாங்கிக் (கூடுதல்) நடந்தது. பொட்டல் காடாக இருந்த அவ்விடத்தை பெரும் தன்மையுடன் ராம்கோ நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சி நடத்திடத் தந்து உதவியதுடன் அந்த பிரம்மாண்டமான மைதானத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றி மைதானத்தை சமன் செய்தும் கொடுத்து உதவினர்.

இந்நிகழ்ச்சியில் தென் தமிழகத்திலிருந்து மட்டும் சங்க சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,906 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதில்  துறவியர்கள், சான்றோர்கள், சங்க ஆதரவாளர்கள் மற்றும் தாய்மார்கள், சகோதரிகள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 51, 699 பேர் கலந்து கொண்டனர். ஆகமொத்தம் சுமார் 70,000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் ஸ்வயம் சேவகர்கள்

இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக எவ்விதமான விளம்பரமும் கிடையாது. சுவர் எழுத்து கிடையாது. பிரமாண்டமான  சுவரொட்டிகள் இல்லை.  துண்டுப் பிரசுரங்கள் கூடக் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் கூட எங்கும் காணப்படவில்லை. கட் அவுட், ப்ளெக்ஸ் போர்டு எதுவும் எந்தத் தொண்டராலும் வைக்கப்படவில்லை. வழக்கம் போல் தமிழக தினசரிகள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிப் பற்றி மாநில அளவில் எந்த செய்தியையும் பிரசுரம் செய்திடவில்லை. குமரி நெல்லை தூத்துக்குடிப் பகுதிகளில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பது பற்றி சில செய்திகள் நாளிதழ்களில் இடம் பெற்றன. இருந்த போதிலும் ஹிந்து சக்தி ஓங்கி வருவதை,  ஹிந்துக்கள் திராவிட மாயையிலிருந்து விடுபட்டு வருவதையும் நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரம்மாண்டமான சாங்கிக் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பொதுமக்கள்

இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பருந்துகள் 1,930 வேன்கள் 320 கார்கள் 396 இரு சக்கர வாகனங்கள்.

சங்கசீருடை அணிந்து வந்துள்ள மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகள் 21 பேர் சங்க சீருடை அணிந்து கொண்டு 18 வாகனங்களில் 3 சக்கர வாகனங்களில் 20 கி.மீ. தூரம் பயணம் செய்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கோவை மதுரை பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களும் சங்க சீருடை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.

ப. பூ.சர்சங்க சாலக் திறந்த ஜீப்பில் வரும் காட்சி

அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த படி சரியாக மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள் விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அவர் மைதானத்தின் கடைசிப் பகுதியில் இருந்து திறந்த ஜீப் ஒன்றில் வருகை புரிந்தார். அவருடன் ஜீப்பில் தலைமை வகித்த நீதிபதி அரு.ராமலிங்கம் ஆர்.எஸ்.எஸ்.தென் தமிழகத் தலைவர் ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

சங்கத்தின் மூத்த பொறுப்பாளர்கள்

மாநாட்டு மேடை 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மிகப் பிரம்மாண்ட மேடையில் ஒரு பக்கம் துறைவியர்கள் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். அருகில் வரவேற்புக் குழுவினருக்காக  தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் பலர் அமர்ந்திருந்தனர்.

தலைவர் நீதிபதி அரு.ராமலிங்கம், ப.பூ.சர்சங்க சாலக் மோகன் பாகவத் , தென் பாரத இணை அமைப்பாளர் கோ.ஸ்தாணுமாலயன்,

மேடை 15 அடி உயரம் 105 அடி நீளம் 25 அடி அகலம் கொண்டிருந்தது. மேடைக்கு முன்பு அழகிய வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது. அதை சங்க ஸ்வயம்சேவகர்கள் வீட்டுத் தாய்மார்கள் போட்டிருந்தனர்.

சங்கத்தின் மூத்த பிரசாரக் திரு.கே.சூரியநாராயண ராவ், தென் பாரத பிரசாரக் திரு.சேது மாதவன், கர்நாடக ஆந்திர மாநில பிரசாரக் திரு.ஜெயதேவ், அகில பாரத சேவா பிரமுக் திரு.சீதாராம் கேடிலய, சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத இணை அமைப்பாளர் திரு.பா.ரா.கிருஷ்ணமுர்த்தி, பா.ஜ.க.தேசிய இணை அமைப்பாளர் திரு.வீ.சதீஷ், தமிழக பா.ஜ.க.பிரமுகர் திரு.இல.கணேசன் ,பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன், உட்பட சங்கத்தின் மற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பரமபூஜனீய சர் சங்க சாலக் மோகன் பாகவத் அவர்கள் ஹிந்தியில்  ஆற்றிய சொற்பொழிவினை தென் பாரத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை அமைப்பாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன் அவர்கள் தமிழாக்கம் செய்தார்.

துவக்கத்தில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் இணைந்து இந்த யுகம் இந்து யுகம் இணையில்லா சங்க யுகம் எனும் பாடலைப் பாடினர். அப்பாடலை அனைவரும் இணைந்து பாடியத்தை கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

வரவேற்பு உரையாற்றும் டாக்டர் ஸ்ரீனிவாச கண்ணன்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய சங்கப் ப்ரௌப்பளர்கள் வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சமுதாயத் தலைவர்கள் துறவியர்கள் உட்பட விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்.செயலாளர் திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். வரவேற்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசக் கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.

கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற ஒரு ஷாகாவில் இருந்து மட்டும் (சங்கக் கிளை) 60 பேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 

திருச்சி மாநகரில் இருக்கின்ற 81 பஸ்திகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர். 

618 கிராமங்களில் இருந்து சங்க ஸ்வயம் சேவகர்கள் வந்திருந்தனர்.   

மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர்.  

3,469 புதிய ஸ்வயம் சேவகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். 

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர். 

காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர். 

1,50,000 சதுர அடி நிலப்பரப்பில் சங்கஸ்தான் அமைந்திருந்தது. 

நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. 

அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். 

அருகில் டாஸ்மாக் கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட  அந்தப் பக்கம்  எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச் ராஜா, அவருடைய தந்தை யோகா மாஸ்டர் திரு.ஹரிஹரன், ஹெச் ராஜாவின் மகள்   மற்றும் அவரது பேத்தி என 4 தலைமுறையினர் பங்கேற்றிருந்தனர்.

தமிழக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாகும். இதன் காரணமாக தமிழகத்தில்  மேலும் சங்க சக்தி வலுப்பெறும்.