Archive for கட்டுரை

அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்

1947 அக்டோபர் 26 அன்று  பாரதத்துடன் மற்ற சமஸ்தானங்கள் எப்படி இணைந்ததோ அது போன்றே ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானமும் பாரதத்துடன் முழுமையாக இணைந்தது.

மன்னர் ஹரி சிங் பாரதத்துடன் இணைத்த ஜம்மு காஷ்மீர்

பல்வேறு காரணங்களால் நமது நாட்டின் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவில்லை, அச்சமயத்தில் அது நமது நாட்டுடன் இணையாமல் தனியான சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தது. அந்நாட்டினை டோக்ரா பரம்பரையைச் சார்ந்த ஹிந்து மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வாழ்ந்து வந்தனர். டோக்ரா ஹிந்து மன்னர் பரம்பரையினர் மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பெருமதிப்பு வைத்திருந்தனர். நமது நாட்டில் வேறெங்கும் காண முடியாத காட்சி அது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன் அவர்களுக்கு 1947 ஆம் வருடம் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பாரதத்துடன் எவ்வித நிபந்தையும் இன்றி தனது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மற்ற சமஸ்தானங்கள் எப்படி ஒன்றினைந்ததோ அதேபோன்று  தானும் இணைப்பதாக எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவைத்தார். அக்டோபர் 27, 1947 அன்று அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து கைச்சாத்து இட்டதுடன் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் கூட எவரும் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை. மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த பிறகும் கூட அம்முடிவை எந்த ஒரு முஸ்லிமும் எதிர்க்க வில்லை. தனி உரிமைகள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கூட  அவர்கள் கேட்டிடவில்லை.  அப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 எதற்காக உருவாக்கப்பட்டது. தற்காலிகமானது வெறும் 10 வருடங்களுக்கு மட்டுமே இது அமுலில் இருக்கும் பின்னர் அகற்றிக் கொள்ளப்படும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 62 வருடங்கள் சென்ற பிறகும் அந்த அரசியல் சாசன சட்டம் 370 வது பிரிவு நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

1947ஆம் வருடம் மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீர் இன்று நம்முடன் உள்ளதா? ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன? பாரத ராணுவம் வெற்றிகரமாக பாகிஸ்தான் கூலிப்படையினரை விரட்டி அடித்துக் கொண்டிருந்த போது திடீர் என போரை நிறுத்திட வேண்டியதன் காரணம் என்ன? இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் என்றைக்காவது அது நடுநிலையாக நடந்து கொண்டதுண்டா?  பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து முற்றிலுமாக தனது ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் இன்று வரை அதற்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரும் இன்று நம்மிடம் இல்லை.

1947இல் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் நம்முடம் இணையும்போது ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கித் மற்றும் பால்டிஸ்தான் என ஐந்து வகைப் பகுதிகளாக இருந்தது. சுதந்திர பாரதத்துடன் இணைந்த சமஸ்தானங்களிலேயே நிலப்பரப்பில் மிகப் பெரியது ஜம்மு காஷ்மீர். இணையும்போது மொத்தம் 2,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒருபக்கம் பாகிஸ்தானும் மற்றொருபக்கம் சீனாவும் ஆக்கிரமித்துள்ளது. மன்னர் ஹரி சிங் இணைத்த ஜம்மு காஷ்மீரில் தற்போது 45% மட்டுமே இன்று நம் வசம் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை.

ஜம்மு பகுதி 36,315 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் வெறும் 26,000 ச.கி.மீ.மட்டுமே உள்ளது. இதன் தெற்கே பீர்பாஞ்சால் என்கிற எவராலும் எட்ட முடியாத மிக உயர்ந்த மலைத்தொடர் உள்ளது. அங்குதான் தாவி, சீனாப், ரவி, போன்ற  வற்றாத ஜீவா நதிகள் உற்பத்தியாகி ஜம்மு காஷ்மீரை வளப்படுத்துகின்றன. தற்போது நம் வசம் இருக்கின்ற ஜம்மு பகுதியில் 67% சதவிகிதம் பேர் இந்துக்கள். இவர்கள் பேசுகின்ற மொழி டோக்ரா மற்றும் பஹாடி ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மொத்தம் 22,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் இருப்பது வெறும் 16,000 ச.கி.மீ.மட்டுமே. தற்சமயம் இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு காலங்காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள் 4 லக்ஷம் பேர்கள் வெளியேற்றப்பட்டு ஜம்மு உட்பட நாட்டின் பல இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஜீலம் மற்றும் கிஷன் கங்கா நதிகள் பாய்ந்தோடுவதால் அழகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. ஒன்று ஜீலம் பள்ளத்தாக்கு மற்றொன்று லோலாப் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு மக்கள் பேசுகின்ற மொழி கஷ்மீரி. ஆனால் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாபி-பஹாடி மொழி பேசுகின்றனர்.

லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய பகுதியாகும். மொத்தம் 1,64,748 ச.கி.மீ.பரப்பளவு கொண்டது. அதில் மிகக் குறைந்த பரப்பளவே அதாவது வெறும் 59,000 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே இன்று நம்வசம் உள்ளது.

இயற்கை தனது அத்தனை வளங்களையும் இங்கு கொட்டிவிட்டதோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகிய அற்புதமான பகுதி. எண்ணற்ற புத்த மடாலயங்கள், விஹார்கள் உள்ளன. அமைதி தவழும் பகுதியாகும். கார்கில் போன்ற மிக உயரமான மலைத் தொடர்கள் உள்ள பகுதி லடாக். ஆறுகள் எப்போதும் பனி உறைந்தே காணப்படும். வருடத்தில் மிக மிகக் குறைவாக மழை பொழிகின்ற இடம் இதுதான். காரகோரம் நெடுஞ்சாலை இங்குதான் செல்கிறது. லே, மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றம் 4 சட்டமன்றத் தொகுதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

கார்கில் பகுதியில் வாழ்ந்து வருகின்ற “ஷியா” பிரிவு முஸ்லிம்கள் தீவிரமான தேச பக்தர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. லடாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது. லடாக்கினை தெற்கு திபெத் என்று சீனா அழைக்கிறது. லே, சன்ஸ்கார், சங்தங், நுப்ரா, பள்ளத்தாக்குகளில் முழுக்க முழுக்க பௌத்தர்கள் வாழ்கின்றனர். சுரு பள்ளத்தாக்கில்  முஸ்லிம்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் லடாக்கி, பால்ட்டி அல்லது பாலி மொழிகளில் பேசுகின்றனர்.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி முழுவதும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை நாம் இன்று வரை மீட்காமல் இருந்து வருகிறோம். அப்பகுதியை விடுதலை செய்யப்பட்ட அதாவது “ஆசாத் காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்கிறது. நாம் அதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறோம். ஆக்கிரமித்த அப்பகுதிகளை பாகிஸ்தான் தனது முழுமை யான அரசு நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டு, அதை நேரிடையாக நிர்வாகம் செய்து வருகிறது.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி மொத்தம் 63,000 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட தாகும். அதில் கில்கித் மட்டும் 42,000ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பால்டிஸ்தான் 20,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கில்கித் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமான பகுதியாகும். அங்கு சர்வதேச எல்லைக்கோடு உள்ளது. 6 நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்ற மிக முக்கியமான இடமாகும். ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, திபெத் மற்றும்  பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகள் அங்கு சங்கமமாகின்றது. இப்பகுதி யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆசியப் பிராந்தியத்தில் இராணுவரீதியில் மற்றும் பல வகைகளில் ஆதிக்கம் செய்யமுடியும்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்த அமெரிக்கா மற்றும்  சோவியத் ரஷ்யா கூட இப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திட முயன்றன. கில்கித்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக சோவியத் ரஷ்யா அவ்வப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்துள்ளது. தற்போது அங்கு11,000 சீனத் துருப்புகள் இருந்து வருகின்றனர். சீனா ஒரு லக்ஷம் கோடிக்குமேல் அங்கு முதலீடு செய்துள்ளது. மேலும் சீனக் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக பல ஆயிரம் சீனர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், பஞ்சாபி மட்டும் பஹாடி மொழி பேசுகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் சுமார் 10 ௦ லக்ஷத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஹிந்துக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில்  36,500 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேறு தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவற்றிலிருந்து சுமார் 5,500 ச.கி.மீ.பரப்பளவு இடத்தை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. அதில் இப்போது பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் சாலை போடப்பட்டுள்ளது. அங்குதான் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது.

நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994 ஆம் வருடம் நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அம்மாதிரி ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே நாட்டு மக்கள் பலருக்குத் தெரியாது.

மன்னர் ஹரி சிங் 1947 ஆம் வருடம் பாரதத்துடன் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரை என்று காண்போம். நமது  நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிடுவோம். இருக்கின்ற ஜம்மு காஷ்மீரைக் காத்திடுவோம். 

கூடங்குளம் கூத்து

முடியட்டும் கூடன்குளம் கூத்து 

கூடன்குளம் அணுமின்நிலையம்

அமெரிக்காவில் 65 அணு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்காக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு, அணுமின் நிலை யங்களுக்கு பத்து கிலோ மீட்டரை விட அருகில் வசித்து வருகிற மக்களின் எண்ணிக்கை 30௦ லட்சம்.

சரி, அமெரிக்கா என்றாலே நம் நாட்டவருக்கு ஒரு அலர்ஜி: அதனால் அந்நாட்டுக் கணக்கை விடுவோம். உலகிலேயே அதிக அளவில் அணுமின் உற்பத்தியைப் பயன்படுத்துகிற நாடு பிரான்ஸ்: அந்நாட்டின் மின்சாரத் தேவையில் 77 சதவிகிதத்தை அணுமின் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. பெல்ஜியத்தில் 54 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. ஸ்வீடனில் 40௦ சதவிகிதம்: சுவிட்சர்லாந்தில் 41 சதவிகிதம். இவையெல்லாம் சுற்றுச்சூழல் முதற்கொண்டு, மனித உரிமை வரை பல அடிப்படை விஷயங்களில் மிகவும் அக்கறை செலுத்துகிற நாடுகள். தென் கொரியாவில் 34 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி, இவை எல்லாமே மேற்கத்திய நாடுகள்: அதனால் நல்ல எண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக் கொண்டு, நம் நாட்டின் மீது மிகவும் நல்லெண்ணம் கொண்ட சீனாவைப் பார்ப்போம். அங்கே 40 அணுமின் நிலையங்களுக்குத் திட்டமிடப் பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போது 19 அணுமின் உயர்ப்பத்தி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தானில் 6, மகாராஷ்ட்ராவில் 4, குஜராத்தில் 2, கர்நாடகத்தில் 3, தமிழ் நாட்டில் கல்பாக்கம் 2, உத்திரப் பிரதேசம் 2.

இது தவிர, இந்தியாவில் இப்போது கர்நாடகத்தில் ஒன்றும், ராஜஸ்தானில் இரண்டும், குஜராத்தில் இரண்டும், மகாராஷ்ட்ரத்தில் நான்கும் நிறுவப்பட இருக்கின்றன. இவற்றுடன்  கூடன்குளமும் ஒன்று.

உண்மை நிலைமை இப்படி இருக்க, கூடன்குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஏன்? கல்பாக்கம் அணுமின் நிலையம் கிட்டத்தட்ட 30௦ ஆண்டுகளாக இயங்கி வருகிறதே? அதனால் மீனோ, மானோ, மனிதனோ பாதிக்கப்படவில்லையே! பல லட்சம் மக்களைக் கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் இருப்பதால், சென்னைக்கு என்ன கேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள் கூட அங்கேயே இருந்து பள்ளிக்குச் செல்கின்றனவே?

அணுஉலையை எதிர்த்துப் போராட்டம்

அங்கு ஏற்படாத ஆபத்து, கூடங்குளத்தில் மட்டும் ஏற்படுமா? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகவும் திறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடங்குளத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினார்களே?

இப்படியெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றால் – அதற்கு எதோ ஒரு கேட்ட நோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்றுதான் அர்த்தம். பற்பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவதுதான் சத்தியம் என்று சில ஆயிரம் மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும்முரமாகிறபோது, மாதா கோவில் மணி ஓயாமல் ஒலிப்பது ஏன்?

கடலில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம்

இதில் எதோ சதி இருக்கிறது. இதை முறியடித்து, அணுமின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஆவன செய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது போலீசார் அராஜகம் பண்ணியதாகக் கூறியிருப்பது பொய். போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, பொலிசாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அது ஆர்ப்பாட்டத் தலைமையின் பொறுப்பே தவிர, அரசின் தவறு அல்ல.

‘பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை’ என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய ‘அச்சங்களை’யும் ‘கவலைகளை’யும் போக்குவதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகி விட்டது. பல முயற்சிகளை எடுத்தாகிவிட்டது. இனி அவரும் பொறுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

உதயகுமார்

ஆர்ப்பாட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நாட்டு வெடி குண்டை வீசினால் கூட பேராபத்து விளையலாம். அதைத்தான் ஆர்ப்பாட்டத் தலைமை விரும்புகிறது. அதன் பிறகு பழியை ‘விஷமிகள்’ மீதோ, ‘அணுமின் நிலைய ஆதரவாளர்கள்’ மீதோ போட்டுவிட்டு, இந்த ஆர்ப்பாட்டத் தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்குப் போய்விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்கு முன், அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடுகிறார்கள். ‘சமுத்திர ஸ்நானம்’ புண்ணியத்தை தரும். ‘ஸாகரம் ஸர்வ பாப ஹரம்’ – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம் செய்யும் – என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த பாப நாசத்தை, அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்.

முடியட்டும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடங்குளம் கூத்து. 

மேற்கண்ட கட்டுரை 26/09/2012 தேதியிடப்பட்ட துக்ளக் இதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் ஆகும். 

 

 

முஸ்லிம்கள் முதலாவது என்னும் கொள்கை!

“சரித்திரம் சொல்லும் பாடத்தை” கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

ஆங்கிலத்தில்: காஞ்சன் குப்தா

தமிழாக்கம்: இல.ரோகிணி

நீதிமன்றம் ஷரியா சட்டத்தை மேற்கோள் காட்டி “மைனர் முஸ்லிம் பெண்ணின்  திருமணத்தை” நியாயப்படுத்துகிறது. சிறுபான்மையோர் கமிஷன் “இஸ்லாமிய வங்கிகளை” விரும்புகிறது.  காங்கிரஸ் கட்சி முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் போலிஸ்காரர்களை நியமிக்க விரும்புகிறது. நாமும், நமது நாடும் எங்கு, எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம்?

ஒரு பிரசத்திபெற்ற வங்காள நாடகம் அந்த காலத்தில் நடந்தது. அதில் அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதி செல்யுகசிடம் இவ்வாறு ஒரு காட்சியில் சொல்வதாக வருகிறது. “செல்யுகஸ், இந்த நாடு எவ்வளவு விசித்திரமாக உள்ளது? இந்த நாட்டின் மக்கள் எவ்வளவு விசித்திரமாக உள்ளனர்?” இதுதான் அலெக்சாண்டர் சொன்னதுதான். பார்த்ததை வைத்துக் கொண்டு உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டு அலெக்சாண்டர் இதை சொன்னாரா என்பது விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கலாம். இந்த நாடகத்தை எழுதியவர் தன்னை சுற்றி உள்ள நிதர்சனத்தை பார்த்தபிறகு தன்னுடைய கற்பனை வளத்தை பயன்படுத்தி அலெக்சாண்டர் வாயில் நாடகத்தில் இந்த வார்த்தைகளை வரவழைத்து இருக்கலாம். இது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. இந்த நாடகம் அரங்கேறி இன்று பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அலெக்சாண்டர் பார்த்ததற்கும், இன்றுள்ள நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. காலத்திற்கு அப்பாற்பட்ட  இந்தியா அன்று இருந்தமாதிரியே  இன்றும் விசித்திரமாகத்தான் உள்ளது. இந்தியா ஒருபோதும் வியப்பை தரத் தவறுவதே இல்லை.

இந்த வாரம் காலை பத்திரிக்கைகளை படித்துக் கொண்டு இருந்தபோது அலக்சாண்டர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வந்தன. முதுகெலும்பு அற்ற ஒரு அரசியல் தலைமை, என்ன செய்யவேண்டும் என்று விளங்காத நிர்வாக வர்க்கம், தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி, அரசாங்கம் தொடர்ந்து மரணப் படுக்கையில் இருந்த போதும் அதன் பயங்கர விளைவுகளை சிறிதும் நினைத்துப் பார்க்காமல்  இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கும் மக்கள் இவை அனைத்தும் நம்முடைய ஆச்சர்யமான நாட்டில் வியப்பைத்தான் உண்டாக்கும்.

தள்ளாடிக்கொண்டு இருக்கும் பொருளாதாரம், அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலைமை, ஆட்டம் காணும் சூழ்நிலை இவை அனைத்தும் ஒரு விசனத்துக்கு உரிய நிலையை தெரிவிக்கின்றன. யீட்ஸ் என்னும் ஒரு புகழ் வாய்ந்த கவிஞர் சொன்னது இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது. அவர் சொன்னார், “எங்கும் பொருட்கள் சிதறி விழுந்து கொண்டுள்ளன, மத்தியிலோ பிடிப்பு இல்லை. உலகத்தின் மேல் அழிவு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ரத்தவெள்ளம் ஓடுகிறது. எங்கும் ஓடுகிறது. அப்பாவிகளின் நடைமுறைகள் முழுகிப் போகின்றன. மிகச் சிறப்பாக உள்ளவர்களுக்கு எந்த “கொள்கைகளும்” கிடையாது. ஆனால் மிகவும் கீழ்தரமாக இருப்பவர்களோ ‘நினைத்ததை சாதிக்க உச்ச பட்சத்  துடிப்போடு உள்ளனர்”.

நம்மிடையே மிக மோசமானவர்கள் உள்ளனர். அதிலும் நம்மிடையே எந்த பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இன்றி, அதே சமயத்தில் அதிகாரத்தையும், ஆளுமையையும் கொண்டு இருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் மிகத் துடிப்போடு செயல்படுகின்றனர். விஷயங்கள் சடசடவென்று சரிந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி, மத்தியில் எதையும் தட்டிக் கேட்க இயலாத, எதற்கும் லாயக்கற்ற அரசாங்கம் இருப்பதை சாதகமாக்கி, தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள பலர் நம் நாட்டில் செயல்பட்டு வருகின்றனர். இதை மூன்று விஷயங்கள் நன்கு விளக்கிடும்.

டில்லி உயர் நீதி மன்றம் சமீபத்தில் திகைப்புக்கு உரிய அதிர்ச்சி ,அளிக்கும் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது. 15 வயதே ஆன ஒரு முஸ்லிம் பெண்ணின் திருமணம் செல்லுபடியாகும் என்று அது சமீபத்தில் தீர்ப்புக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஒரு மைனர் பெண்ணின் உரிமைகளையும், கௌரவத்தையும் காற்றில் பறக்கவிட ஷரியத் சட்டம் அனுமதிக்கிறது என்று தனது தீர்ப்பை டில்லி உயர் ,நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அந்த பெண் வயதிற்கு வந்து விட்டால் அவளுக்கு 18 வயது ஆகவில்லை என்றாலும் கூட, அவள் தன் கணவனுடன் குடும்பம் நடத்தலாம், வாழலாம் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஷரியத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு  தீர்ப்பை தங்கள் அறிவுக்கு ஏற்ப மேதாவித்தனமாக நீதிபதிகள் கொடுத்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் இந்தியாவின் முஸ்லிம்களுக்கு தான்தான் ஒரே பிரதிநிதி என்று பறைசாற்றிக் கொள்கிறது. இவ்வாறு உரிமை கொண்டாட அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் கூட அந்த அமைப்பு இவ்வாறு செயல்படுகிறது. அந்த முஸ்லிம் சட்ட அமைப்பு டில்லி உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எக்களிப்புடன் வரவேற்றுள்ளது. இந்த விஷயம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. அடிமைப்படுத்தும், அடக்கி ஆளும் எந்த ஒரு விஷயத்தையும் முல்லாக்கள், மௌலவிகள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆதரிப்போர் ஆவலுடன் வரவேற்பார்கள்.

தேசிய சிறுபான்மையோர் ஆணையம் (உண்மையில் இது  தேசிய முஸ்லிம்கள் ஆணையம்) இஸ்லாமிய வங்கித் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளது. வாஜஹத் அபிபுல்லாதான் இந்த தேசிய சிறுபான்மையோர் கமிஷனின் தலைவர். அவர் இவ்வாறு சொல்லி உள்ளார்,

“தற்போதுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், இஸ்லாமிய வங்கியை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதால் சட்டத்தை திருத்தி வட்டி இல்லாத வகையில் வங்கிகளை இயக்க  வழி காணவேண்டும்”. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இது கொல்லைபுற வழியாக இஸ்லாமிய வங்கியை கொண்டு வர முயல்வதாகும்.

இந்த  அணுகுமுறை கடந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சமீபத்தில் அதாவது மார்ச் 2012இல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நிதித்துறை துணை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “இப்போது உள்ள சட்டங்கள், விதிமுறைகளின் அடிப்படையில், இந்தியாவில் இயங்கும் வங்கிகள் “இஸ்லாமிய வங்கிகளை, சட்ட பூர்வமாக ஏற்படுத்த முடியாது”. இந்தியாவிலும் இந்திய வங்கிகளால் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்திய வங்கிகளின் கிளைகளால், அயல் நாடுகளிலும், இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது”. இவ்வாறு ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதாக நிதித்துறை துணை அமைச்சர் சொன்னார். ஆனால் இதன் பிறகு நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் தன்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், சட்டங்களை திருத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதிரி கோரிக்கை வைக்கப்படவேண்டும் என்பதற்காகவே   ஜமியத் இ இஸ்லாமி காத்துக் கொண்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்த்து “சிறுபான்மை இசத்தை” வளர்ப்பதில் ஊக்குவிப்பதுபோல் ஜமியத் இ இஸ்லாமியும் கருத்து கொண்டுள்ளது. அது இப்போது “இஸ்லாமிய வங்கியின் அமைப்பு வந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி “முஸ்லிம்களுக்கு விளக்க “பயிற்சி வகுப்புகளை” நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அது மாதிரி பயிற்சி வகுப்பு ஒன்று அசாம்கர் (உத்திரப் பிரதேசம்) நகரில் நடைபெற்றது. அதில் ஷரியாவை நன்கு அறிந்த மௌலானாக்கள் கலந்து கொண்டு வழி காட்டினர்.

மூன்றாவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பெருக்க அக்கட்சி முயற்சிக்கிறது. அதனால் ஏதாவது செய்வது போன்ற ஒரு தோற்றத்தை, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்வது போன்ற தோற்றத்தை அக்கட்சி உருவாக்க முயற்சிக்கிறது. இப்படி செய்தால் விரைவில் தேர்தல்கள் வரும்போது கொழுத்த முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் கணக்கு போடுகிறது. உண்மையில் சொல்வது என்றால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையோருக்கு அளவற்ற சலுகைகள் உள்ளன. அவர்கள் சிரமத்துக்கு  உள்ளாகி இருக்கிறார்கள் என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், முஸ்லிம் வாக்குகளை பெற மத்திய காங்கிரஸ் அரசு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. என்ன தெரியுமா? முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ்காரர்களை நியமிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மாநிலத் தலைமை செயலாளர்களுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .

முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு விதத்தில் இந்த கடிதம் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கிறது. ஏன் என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் அத்தகைய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த கவலையும் படவில்லை. கூட்டாச்சி என்பது ஒரு இழிந்த சொல் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு கருதுகிறது. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வாடிக்கை ஆக்கிக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு பல சமயங்களில் அவ்வாறு செய்து அது தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டது. இருந்தும் முஸ்லிம் வோட்டுகளுக்காக மீண்டும் ஒருமுறை இவ்வாறு மாநிலங்களின் உரிமைகளில் மூக்கை நுழைக்க மத்திய உள்துறை அமைச்சரகம் முயன்றுள்ளது. இதை எல்லாம் பார்த்தால் “சில பழக்கங்களை கைவிட முடியாது ” என்பது நினைவுக்கு வருகிறது.

முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பவில்லையா? ஹிந்து போலீஸ்காரர்கள் தங்கள் பகுதிகளை காவல் செய்வது முஸ்லிம்களுக்கு சிரமமாக உள்ளதா? இந்த கேள்விகள் எழுகின்றன அல்லவா? அப்படி என்றால் ஹிந்துக்கள் தாங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஹிந்து போலீஸ்காரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கேட்கலாம் அல்லவா? அல்லது இன்னும் பச்சையாகக் கேட்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பமுடியாது என்றால், ஹிந்துக்கள் மட்டும் எப்படி ஏன் முஸ்லிம் போலீஸ்காரர்களை நம்ப இயலும்?

இந்த இரண்டுமே ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். சமூகங்கள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை விருப்பு வெறுப்பு அற்று நேர்மையாக செய்யும் போலீஸ்காரர்கள் அல்லது பெண் போலீசாரை நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை. அத்தகைய போலீஸ்காரர்களை எல்லா சமூகங்களும் விருப்பமானவர்களாகவே  பார்க்கின்றனர். ஆனால் வோட்டு வங்கிகளை மனதில் வைத்து செயல்படும் குள்ளநரித்தனமான  அரசியல்வாதிகள்தான் விஷயத்தை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். அவர்கள்தான் சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப் படுபவர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு போலீஸ்காரர்களின் சமய அடையாளத்தைப் பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் குற்றங்களை, குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டுகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று உதாரணங்களை வைத்துக் கொண்டு நம்நாடு அபாய வளையத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது என்று சொல்ல முடியாது என்று ஒரு வாதம் வைக்கப் படலாம். இதில் இருந்து மீளமுடியாது என்று சொல்வது தவறு என்றும் வாதிக்கலாம். இந்த மூன்று உதாரணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு உலகத்தின் மேல் அழிவும், நாசமும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது என்று சொல்ல முடியாதுதான். ரத்த அலைகள் எழும்பிவிட்டன என்றும் சொல்ல முடியாதுதான். எங்கும் அப்பாவிகள் அழிந்து போகின்றனர் என்றும் சொல்ல முடியாதுதான். ஆனால் இவற்றை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று உதறித்தள்ள முயல்வது ஹிமாலய முட்டாள்தனமாகும்.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் நாம் விட்டபோதெல்லாம், அவற்றை விட கொடுமையான பல நிகழ்வுகளை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. இதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்மாதிரி தாக்குதல்களை தாங்கிக் கொள்ள நம்முடைய குடியரசுக்கு உள்ளார்ந்த வலிமை உள்ளது என்று நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்ட போதெல்லாம், நம்முடைய குடியரசு நாடு பலவீனம் அடைந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இங்கே ஒரு சமாதானம் செய்துகொள்வது, அங்கே ஒரு விட்டுக் கொடுப்பது என்னும் நிலை “பலகீனமான சமரசம் ” செய்து கொள்வதை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய தாஜா செய்வதால் நாம் என்னவெல்லாம் விலை கொடுக்க நேர்ந்தது, எத்தனை முறை பயங்கர விலைகள் கொடுத்துள்ளோம்  என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

ஆனால் விசித்திரமான நம் நாட்டில் விசித்திரமாக உள்ள மக்களாகிய நாம் “சரித்திரம் சொல்லும் பாடத்தை” கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

தி பயோனீர் ஆங்கில நாளிதழில் ஜூன் 9 அன்று காஞ்சன் குப்தா அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்திட இங்கே சொடுக்கவும்.

http://www.dailypioneer.com/columnists/item/51770-in-times-of-trouble-it%E2%80%99s-muslims-first-policy.html

ஆழமான நம்பிக்கை

ஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா

தமிழாக்கம்: லா.ரோஹிணி

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான  சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான் கவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும்  குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமான பகுதிகளைக்   கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.

விஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட  யாத்திரையோ அல்லது வைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எல்லா இடங்களிலும் “நம்பிக்கைதான் உச்ச பட்சமாக” உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ  நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

அமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய  இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400  வருடங்களுக்கு  முன்பு “பச்சை பையன்” பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார  இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு  முன்பிருந்தே இந்த  உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின்  மணிமுடி) ஹிமாலய  மலைத்  தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை  வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. அமர்நாத் யாத்திரை  இரண்டு மாதங்கள்  நடந்து வந்தது. இப்போது  காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24  மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின்  முக்கியத்துவம் அன்றும் இன்றும் “கைலாஷ் யாத்திரை” மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை “அம்புர்நாத்” என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய “ராஜ தரங்கணியில்” இந்த யாத்திரை “அமரேஷ்வர் யாத்திரை ” என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ்  தரங்கனி 7 -183).

பகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு “அமிர்தம்” கொடுத்ததாக  சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும்  கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் “அமர்நாத்” (என்றும் உள்ளது) என்றும்  அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட  யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான்  அமர்நாத் யாத்திரைக்கும்  இந்த மாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில்  அங்கு சிவன் “பனி லிங்க வடிவில்” காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில்  “ஸ்தான் பூஜா” (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.

அமர்நாத்துக்கு போகும்  வழியில் ஒரு பெரிய  ஏரி இருந்தது. பார்க்கடல்  போன்று வெண்மை  என்ற பொருளில் அந்த ஏரி “டுக்தாப்தி தவல்” என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை “சேஷ்நாக் ஏரி” என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம்  ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16  அடி வரை உயரமாக   வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று  சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய  இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள்  காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும்  அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா? குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக  உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் “கல்லைப் போன்று” அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.

இந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான  இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால்  பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம்  பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்சி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.

காஷ்மீரை “ஆனந்த்” என்ற அரசர் ஆண்டார். அவருடைய மனைவி “சூர்யமதி” என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய  பண்டைய, இடைக்கால  அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை  உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.

இன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51  சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள்  விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு  வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.

ஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக்  குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள்,  பக்தர்கள்  மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத்  தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வாதங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.

ஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள்  மட்டுமே,

வேண்டப்படாத பாதிரி!

தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை

ஆங்கில விமர்சனம்: பிரான்சிஸ் ——-—-தமிழாக்கம்: லா.ரோஹிணி 

கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு தலித்துகளும் வனவாசிகளும்படும் துயரமும் துன்பமும்.

எந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள்  துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பல கடிதங்களை தன்னுடைய சுயசரிதையான “வேண்டப்படாத பாதிரியார்” என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார். கத்தோலி சர்ச்சில் பாரபட்சம் மிக அதிகமாக உள்ளது. தீண்டாமை பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இருட்டு பக்கங்களை தலித் பாதிரியாரின் கடிதங்கள் வெளிச்சத்திற்கு  கொண்டு வந்துள்ளன. சர்ச் பற்றி உள்ள பல, அபிப்ராயங்களை அந்த கடிதங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

தன்னுடைய “வேண்டப்படாத பாதிரி” என்னும் சுயசரிதையில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்கள் பிரச்சனைகளை நேரடியாக அணுகி உள்ளார். அவருடைய எழுத்துக்கள் அவருக்கு  என உள்ள தனிப்பாணியை வெளிப்படுத்து கின்றன. இதுவரை பல மக்களுக்கும் தெரியாத உண்மைகளை, உதாரணமாக  சர்சுகளில் பாதிரியார்கள் வாழ்க்கை, சர்ச் வாழ்க்கை- என பல விஷயங்களை தலித் பாதிரியார் வில்லியம் அவர்கள் விவரித்துள்ளார். இந்த தலித்பாதிரியார் பேனாவை கையில் எடுத்தால் அவர் வார்த்தை ஜாலம் செய்வது இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று உண்மையை போட்டு உடைப்பதுதான் அவர் அணுகு முறை ஆகும். மிகுந்த உணர்ச்சியோடு  அவர் நீண்ட தூரம் சென்று சர்சுகளில் நடக்கும் கேவலங்களை தோல் உரித்துக் காட்டுகின்றார்.

டில்லி ஆர்ச்பிஷப் தலித்பாதிரியார் வில்லியம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதற்கு பதில் எழுதும்போது “சர்ச்சின் நன்கு சுவர்களுக்குள் நடக்கும் மிகப் பெரிய” ஜாதி பாரபட்சம் குறித்து தலித்பாதிரியார் வில்லியம் அவர்கள் விரிவாக குறிப்பிடு கிறார். அவர் பின்வருமாறு ஆர்ச் பிஷப்புக்கு பதில் அனுப்பி உள்ளார்.

“நான் ஒரு தலித் பாதிரியார். பிச்சைக்காரன் அல்ல. சர்ச் சபையில் இடம் கொடுங்கள் என்று நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. மங்களூரில் இருந்து வரும் உயர் ஜாதி பாதிரியாராக நான் இல்லை. அப்படி இருந்து இருந்தால் நீங்கள் என்னை கௌரவமாக நடத்தி இருப்பீர்கள். பைபிளை பிரச்சாரம் செய்ய எனக்கு உங்களுடைய அனுமதியோ அல்லது நீங்கள் கொடுக்கும் பதவியோ தேவை இல்லை. என்னுடைய எஜமானர் ஏசுதான். நீங்கள் அல்ல. நான் இயேசுவின் அடிமை. உங்கள் அடிமை அல்ல. சர்ச் சபையில் பதவி வகிக்காமல் இருந்தாலும் கூட இதுவரை நான் செய்த சாதனைகள் எனக்கு முற்றிலும் திருப்தி அளிக்கிறது. நான் ஒரு தலித்பாதிரியார் எனவே கத்தோலிக் தலித்துகளின் கௌரவத்தை காப்பாற்றுவது எனது கடமை ஆகும்.”

இவ்வளவும் பிட்டுவைத்துவிட்டு தலித்பாதிரியார் வில்லியம் தனது கடிதத்தில் மேலும் தொடர்கிறார்.

உள்ளூரில் தலித்பாதிரியராக இருக்கும் எனக்கு தொடர்ந்து நான்கு வருடங்களாக ஏன் சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை? ஆனால் இந்த மாதிரி பதவிகளை டெல்லி கத்தோலிக் சபையில் “மற்ற பாதிரிகளுக்கு” நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எவருமே இந்த பதவிகளுக்கு தேவையான தகுதிகளை பெற்று இருக்க வில்லை. என்னுடைய திறமைகள் குறைவாக இருப்பதால் எனக்கு சர்ச்சபையில் பதவி கொடுக்கப்படவில்லை என்று உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்லி உள்ளீர்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டு இட்டுக் கட்டப்பட்டதாகும். என்னுடைய குறைகள் என்ன என்றும் நீங்கள் சொல்லவில்லை, அவைகளை நீங்கள் நிரூபிக்கவும் இல்லை.

வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் இந்த சுய சரிதை “சர்ச்சுக்குள் நடக்கும் மர்மங்களை”  நீ பெரியவனா நான் பெரியவனா என்று நடக்கும்  தனி மனிதப் போராட்டங்களை அம்பலப்படுத்துகின்றன. சர்சுகள் நடத்தப்படும் விஷயம் குறித்து அந்த புத்தகம் பல அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. தலித் பாதிரியார்களுக்கு தலித் மக்களுக்கு சர்சுகளில் இழைக்கப்படும் கொடுமைகளை அவருடைய சுயசரிதை புத்தகம் பட்டியல் இடுகிறது. இந்த சுயசரிதை புத்தகம் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சுர்சுகளைப் பற்றி  மக்கள் கொண்டுள்ள உயர்ந்த எண்ணங்கள், கருத்துகள் எவ்வளவு தவறானவை, யதார்த்தத்திற்கு மாறானவை என்பதை வெளி கொணர்கிறது. சர்சுகளில் உள்ள செல்வாக்கு பெற்ற சிலர் எவ்வாறு “நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் ” என்பதையும் தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் வெளிப்படுத்துகிறது .”

டொமினக் இமானுவேல் என்னும் மற்றொரு பாதிரியைப் பற்றி எழுதும்போது தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

பிற மொழிகளில் டப்  செய்ய அந்த படத்தை டொமினிக் தயாரித்தார். இதற்கான வரவு செலவுகள் அவரிடம் உள்ளன. அதை டில்லி கத்தோலிக்  அசோசியேஷன்  வலைதளத்தில் அவரை போட சொல்லுங்கள். வரவு செலவு கணக்குகளை அவர் வலைதளத்தில் பிரசுரித்துதான் தீரவேண்டும். இந்த படத்தை தயாரிக்கும் போது “சத்பாவனா” என்ற இயக்கத்தின் பேரும் அதில் சேர்க்கப்பட்டது ஏன் இப்படி செய்யப்பட்டது? இந்த படத்தை டொமினிக் “சேதநாலயா” என்ற அமைப்புக்காக மட்டும்தானே தயாரித்தார்? சத்பாவன  இயக்கம் இந்த படத்தை தயாரிக்க பணம்  கொடுத்ததால் அதன் பெயர் சேர்க்கப்பட்டது என்று டொமினக்  சிலரிடம் கூறியுள்ளார். இது எனக்கு தெரிய வந்துள்ளது.

இதில் இருந்தெல்லாம் என்ன தெரிகிறது? சர்ச்சுக்கு வரும் வரவு செலவுகளுக்கு சரியான கணக்கு இருக்க வேண்டும். இதற்க்கான பெரிய தேவை உள்ளது. இது முற்றிலும் உண்மையான கோரிக்கை ஆகும். இம்மாதிரியே தான் எழுதிய சுச சரிதையில் ஒரு இடத்தில் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பாதிரியார் ஒரு சுவாரஸ்யமான  சம்பவத்தை குறிப்பிடுகின்றார். அந்த சம்பவத்தால்தான் அவரது சுயசரிதைக்கே “வேண்டப்படாத பாதிரியார்” என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சம்பவம் என்ன தெரியுமா?

“நான் ஒரு வேண்டப்படாத, விரும்பப்படாத பாதிரியார். ஏன் என்றால் நான் ஒரு உள்ளூர் தலித்பாதிரியார். ஒரு நாள் நான் வேறு ஒரு பாதிரியருடன் மிகவும் சூடாக விவாதித்துக் கொண்டு இருந்தேன். விவாதம் மிகவும் உச்ச கட்டத்திற்கு போனது. அப்போது அந்த பாதிரியார் என்னைப் பார்த்து “நீங்கள் வேண்டப்படாத பாதிரியார் ” என்று சொன்னார். அதையே தன் சுயசரிதைக்கு தலைப்பாக வைத்து விட்டார்.

தலித்பாதிரியாரின் இந்த புத்தகம் தலித்சகோதரர்களைக் குறித்து சிந்திக்குமாறு ஹிந்து சமூகத்தையும் தூண்டுகிறது. தலித்துகள் சமூக மரியாதையை, சமமான நடத்தையை எதிர்பார்த்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறுகின்றனர் என்று சொல்லப் படுகிறது. கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகு தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக தலித்துகள் நம்புகின்றனர். ஆனால் சர்ச் அமைப்பில் “பாரபட்சம் காட்டுவது” என்பது மிகவும் நாசூக்காக நடக்கிறது. எனவே கிறிஸ்துவர்களாக மாறிய பிறகும் கூட தலித்துகளுக்கு  நிவாரணம் எதுவும் கிடைப்பதில்லை. இந்த நிலை காரணமாக வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி போன்ற தலித்கிறிஸ்துவ பாதிரியார்களின் நிலைமை இன்னும் மோசமாக பரிதாபமாக போகிறது. அவரைப் போன்றவர்களுக்கு பாதிரியார்களாக தொடர்வது அனேகமாக இயலாது என்ற நிலைமை உருவாகிறது.

தலித் பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  பலர் கனவில் கூட சொல்ல பயப்படும் அல்லது ஒப்புக் கொள்ள அஞ்சும் பல விஷயங்களை துணிச்சலாக தன்னுடைய சுயசரிதையில் எழுதி உள்ளார். மதமாற்றம் என்னும் கொடுமையான எதார்த்தம் உள்ளதை அவர் ஒப்புக் கொள்கிறார். அவர் எழுதுகிறார்.

“தலித் ஹிந்துக்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தனர். ஏழைகளாக இருக்கின்றனர். ஏன் என்றால் உயர்ஜாதி ஹிந்துக்களால் அவர்கள் சுரண்டப் பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான வேலைகளை, பணிகளை செய்து கொண்டு இருந்தனர். இப்போதும் செய்து கொண்டு உள்ளனர். அவர்கள் கிறிஸ்துவர்களாக  மதம்மாறிய பிறகும் தலித் கிறிஸ்துவர்கள் கத்தோலிக் சர்ச்சின் அதிகாரிகளால் சுரண்டப்பட்டனர். இப்போதும் சுரண்டப்படுகின்றனர். கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பிறகும்  ஹிந்து   தலித்துகளின்  நிலைமை மேன்மை அடையவில்லை. முன் இருந்த மாதிரியேதான் மோசமாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் இருந்த போது தலித் ஹிந்துக்கள் உயர்ந்த நிலைக்கு வர உயர்ஜாதி ஹிந்துக்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. தலித்கத்தோலிக்கர்களின் பொருளாதார நிலைமை மேம்பாடு அடைந்த தாக இருக்கவில்லை. இப்போதும் மேம்பாடு அடையவில்லை. தலித் கத்தோலிக்கர்களின் வாழ்க்கைத்தரம், சர்ச்சிலோ, வட இந்தியாவிலோ, கிறிஸ்தவர் களாக மதம்மாறிய பிறகு கூட மோசமாகத்தான் இருந்தது. இப்போதும் மோச மாகத்தான் இருக்கிறது.

மேலும் தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் புத்தகம் சர்சுகளில் இருக்கும் இன்னும் சில பாரபட்சங்களைக் குறித்தும்  விவரம் தருகிறது. சர்சுகளில் “தென்னிந்தியர்கள் ஆதிக்கம்” அதிகமாக இருப்பதாக அவர் சொல்கிறார். டில்லி ஆர்ச் டியோசாஸ்  தென்னிந்தியர்கள் குறித்தே அதிக கவனம் மற்றும் அக்கறை காட்டுவதாக தலித்பாதிரியார் குறிப்பிடுகிறார். கத்தோலிக் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் தென்னிந்தியர்கள்தான்  இருக்கின்றனர் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதே சமயத்தில் உள்ளூர் வாசிகளுக்கும், தலித்துகளுக்கும் சர்ச்களில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்படுவ தில்லை. தங்களுடைய கத்தோலிக்க எஜமானர்களுக்கு அவர்கள் ஏறக் குறைய அடிமைகள் மாதிரிதான் உள்ளனர்.

பிரச்சனைகள் பல மட்டங்களில் உள்ளன. சர்ச்சின் வலிமை, யேசுவிடம் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ள மிக அதிகமான தலித்துகள் மற்றும் வனவாசி மக்களையே சார்ந்து உள்ளது. ஆனால் சர்ச்சின் கட்டமைப்பு உயர் ஜாதி, பணக் காரர்களை சார்ந்ததாக உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். இது மாற்றப் படாத தால்தான்  “போராட்ட அலைகள்” எழும்பத் தொடங்கி உள்ளன. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரியின் புத்தகம் “ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கம்” குறித்து பேசுகிறது. இந்த அமைப்பு தலித் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகள் குறித்து வலிமையாக அணுகுகிறது. தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி  அவர்கள் தன்னைக் குறித்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு  விடை அளிக்க சரியான இடத்தைத்தான் தெரிவு செய்துள்ளார்.

தலித்துகளும் வனவாசிகளும் “வெள்ளை அங்கிகளுக்கு பின்னால்” பல “கருப்பு பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு உள்ளனர்”. இதை எல்லாம் சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நிறுவனங்கள், அரசாங்கம், அதிகாரவர்க்கம், நீதித்துறை, எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்களில் பணி செய்வோர் ஆகியோர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தலித்பாதிரியார் வில்லியம் பிரேமதாஸ் சௌத்திரி அவர்களின் சுயசரிதை புத்தகம் “வேண்டப்படாத பாதிரியார்” மிகவும் உபயோகமாக இருக்கும். “மதமாற்ற அரசியல்” பற்றி தெரிந்து கொள்ள புரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் உதவும். தலித்துகளும், வனவாசிகளும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே இந்தியாவில் சமூக மாற்றம் வரும், சாத்தியமாகும். வெறும் மதமாற்றம் அவர்களின் நிலையை எந்த விதத்திலும் உயர்த்தாது. இந்த எதார்த்தத்தை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்.http://organiser.org//CAT/In%20Focus_82918.aspx? NB=&lang=4&m1=&m2=&p1=&p2=&p3=&p4=&PageType=N

 

திராவிட மாயை.

முதல்வர் அலுவலகத்தில் நடந்த தேர்வு. 

தமிழக அரசியல் தலைவர்களில் சரியாகப் புரிந்து கொள்ளப் படாதவரும் அதிகமாகத் தூற்றப்பட்டவரும் யாரென்று பார்த்தால் அது ராஜாஜிதான். திராவிட இயக்கங்கள் எடுத்தெரிந்த ஆயுதங்களில் ராஜாஜியைப் பற்றிய குற்றச்சாட்டுகள் தான் அதிகம். ஜாதி அபிமானம் இல்லாத ராஜாஜியை ஜாதி வெறியராகக் காட்டி னார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்தை ராஜாஜி தடுத்தார் என்று எழுதினார்கள்.

ராஜாஜி தமிழக முதல்வராக இருந்தபோது (1952), காவல் துறையில் துணை கண் காணிப்பாளர் பதவிக்கான தேர்வு நடந்தது. தாழ்த்தப்பட்டவர் எவரும் விண்ணப் பிக்கவில்லை என்று ராஜாஜியிடம் சொல்லப்பட்டது. ராஜாஜி அதை ஒப்புக் கொள்ளவில்லை. சபாநாயகராக இருந்த சிவசண்முகம் பிள்ளையிடம் சொல்லி, தகுதியானவரை அழைத்து வரச் செய்தார். ஒரு இளைஞர் அழைத்து வரப்பட்டார். முதல்வர் அலுவலகத்திலேயே தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்த அதிகாரி, இந்த இளைஞர் உடல் மெலிந்து இருக்கிறார். போலீஸ் வேலைக்குத் தகுதியான உடல்கட்டு இல்லை. என்று சொல்லி விட்டார்.

ஆனால் ராஜாஜி, “இவர் ஏழை சரியான சாப்பாடு கிடைத்திருக்காது. வேலை கொடுத்தால் மகிழ்ச்சியில் உடல் பெருத்துவிடும்” என்று அடித்துப் பேசினார். இளைஞருக்கு வேலை கொடுக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குள் இளைஞர் பலசாலியாக மாறிவிட்டார். பின்னாளில் சென்னை நகரில் போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய சிங்காரவேலுதான் அந்த இளைஞர்.

ராஜாஜி பற்றிய தப்பபிப்ராயம் உள்ள இன்னொரு விஷயத்தையும் பார்க்கலாம். இது ஈ.வே.ரா.-மணியம்மை திருமணம். ஆனால் இது பற்றிய உண்மை, காலம் கடந்து வெளிவந்துள்ளது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள “அன்னை மணியம்மையாரின் தொண்டறம்” என்ற புத்தகத்தில் ராஜாஜி ஈ.வே.ரா.வுக்கு 21.02.1949 இல் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு வரிகளை மட்டும் இங்கே தருகிறேன்.

“தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்ராயம்”.

ராஜாஜியின் காலத்துக்குப் பிறகுதான், இந்த கடிதம் பொதுமக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ஈ.வே.ரா.-மணியம்மை திருமணத்திற்கு உதவினார் என்ற பழி இருந்தது.

தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது என்பது ராஜாஜியின் ஜாதகக் காரணமாக இருக்கலாம். அவருடைய ஜாதகம் பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவரின் ஜாதகம் பற்றிய விவரத்தை இப்போது பார்க்கலாம்.

1950ஆம் வருடம் திருவாரூரில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி “ஒரு கதை வசனகர்த்தாவின் கதை” என்ற புஸ்தகத்தில் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் எழுதுகிறார்.

“சோமசுந்தரம் பிள்ளை சாதாரண ஜோதிடர் அல்ல. அக்காலத்திலேயே அதிக வருமானமுள்ள நாடி ஜோதிடர். ஒரு நாள் ஒரு பெண்மணி வந்து சோமசுந்தரம் பிள்ளையிடம் நோட்டுப் புத்தகமொன்றைக் கொடுத்து, ‘இதைப் படித்து வையுங்க. அப்புரமாவரேன்’ என்று சொல்லிப் போய்விட்டார்.

பிள்ளை, இது நான் ஏற்கனவே பார்த்த ஜாதகம்தான். இது அவங்க தம்பியோட ஜாதகம். இப்போ அந்தத் தம்பிக்கு குரு தசையில் ராகுபுத்தி நடக்குது. அதற்கப்புறம் சனி தசை. அந்தத் தம்பிக்கு வாக்கு ஸ்தானத்திலே புதன் இருக்கான். அதனாலதான் நல்லா பேசுது. சனி தசை மொத்தம் பத்தொன்பது வருஷம். அது முடியறதுக்குள்ளே தம்பி உன்னதமான இடத்தைப் பிடிச்சிடும்’ என்று சொன்னார்.

“தமிழக முதலமைச்சராக கோலோச்சிய கலைஞர் மு.கருணாநிதிதான் அந்த ஜாதக்காரர்”- என்று எழுதுகிறார் ஆரூர்தாஸ்.

தி.மு.க.காரரின் ஜாதகத்தைச் சொல்லிவிட்டு தி.க.பிரமுகரின் ஜாதகத்தைச் சொல்லாவிட்டால் அது பாரபட்சமாகி விடும். அது அடுத்த பகுதியில்

 சுப்பு 

மேற்கண்ட கட்டுரை 16/05/2012 தேதியிட்ட துக்ளக் இதழில் பிரசுரம் செய்யப் பட்டுள்ளது.

ஹிந்துக்களுக்கு போக்கிடமும் இல்லை புகலிடமும் இல்லை.

ஹிந்துக்களுக்கு போக்கிடமும் இல்லை-பாரத நாட்டில் புகலிடமும் இல்லை

ஆங்கிலத்தில்: டாக்டர்.பிரவீன் பாய் தொகாடியா

தமிழாக்கம்: லா.ரோஹிணி 

ஒசாமா பின் லேடன் சவூதி அரேபியாவில் இருந்து துரத்தப்பட்ட பிறகு அவன் சோமாலியாவுக்கு சென்றான். அபுசலீம் மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவன். தாக்குதல்கள் நடந்து முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு அவன் இந்தியாவை விட்டு தப்பி போர்ச்சுகலுக்கு சென்றான். பயங்கரவாதிகள் பல நாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து பாரத நாட்டுக்கு வருகின்றனர் அல்லது அவர்கள் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுகளுக்கு செல்கின்றனர். தாக்குதல்கள் நடத்தி தங்கள் “பணியை” அவர்கள் முடித்துக் கொள்கின்றனர். பிறகு பல்வேறு நாடுகளுக்கு திட்டமிட்ட ரீதியில் அவர்கள் தப்பிச்  சென்று விடுகின்றனர். இதை பாரத நாட்டின் போலீசும், ராணுவமும் கண்டறிந்துள்ளன. 100கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளும் சில கிறிஸ்துவ நாடுகளும் பாரத நாட்டில் தாக்குதல் நடத்தும் இந்த பயங்கரவாதிகளை  இருகரம் கொண்டு வரவேற்கின்றனர். ஆரத்தழுவிக் கொள்கின்றனர். டேவிட் ஹெட்லீ முன்னாள் முஸ்லிம். அவன் பாரதம் மற்றும் பாகிஸ்தானுக்குப்  பலமுறை வந்துபோய் உள்ளான். பாரத நாட்டைத் தாக்கவே அவன் இத்தகைய பயணங்களை மேற்கொண்டுள்ளான். ஆனால் இதெல்லாம் பற்றி தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று “ஆற்றலும் வல்லமையும் பொருந்திய” அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் சி.ஐ.ஏ.வும், எப்.பி.ஐ.யும்  பாசாங்கு செய்கின்றன. சில ஈரானியர்கள் பாரத நாட்டுக்கு வருகின்றனர். உள்ளூர்வாசிகள் உதவியோடு இஸ்ரேல் தூதரக அதிகாரியின் குடும்பத்தை மக்கள் நெருக்கடி நிறைந்த டில்லி தெருவில் பட்டப்பகலில் தாக்குகின்றனர். தாவூத் இப்ராஹிமும் அவனுடைய கூட்டாளி களும் பாகிஸ்தானிலோ, துபாயிலோ அல்லது அது போன்ற வேறு ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டிலோதான் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். அசர் மசூத்  பாரத நாட்டில் மிகப் பெரும் ஜிஹாதி தாக்குதலை திட்டமிட்டான். அதற்காக அவனை ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அவனை விடுவிக்க கூட்டாக திட்டம் போட்டு செயலாற்றின. அவனுக்காக ஒரு பயணிகள் விமானம்  கடத்தப்பட்டது. இறுதியில் மசூத் ஆப்கானிஸ்தானில்  தரை இறக்கப்பட்டான், விடுவிக்கப்பட்டான்.

இன்னொரு புறம் அப்பாவி ஹிந்துக்கள் பங்களதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து பாரத நாட்டுக்கு துரத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு எங்கும் போக்கிடம் இல்லை. அவர்களுக்கு நெருங்கிய சொந்த பந்தங்களை அவர்கள் பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஏற்கனவே இழந்துவிட்டனர். ஹிந்து பெண்கள் அங்கு கற்பழிக்கப்படுகிறார்கள். ஹிந்து ஆண்களை கொலை செய்கின்றனர். அவர்களது சொத்துக்களை  கொள்ளை அடிக்கின்றனர். அவர்களுடைய செல்வத்தைப்  பறித்துக் கொள்கின்றனர். இதன் பிறகு ஒன்று அவர்கள்  சாகவேண்டும் அல்லது பாரத நாட்டுக்கு ஓடி வரவேண்டும். பாரத அரசாங்கமோ அவர்கள் இந்த நாட்டுக் குடிமக்கள் இல்லை. எனவே அவர்களுக்கு எந்த வோட்டுரிமையோ அல்லது சொத்து உரிமையோ கிடையாது என்று சொல்கிறது. ஆனால் இதே அரசாங்கம் தினமும் அஸ்ஸாம், திரிபுரா, வங்காளம் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக குடி ஏறிக்கொண்டு இருக்கும் பங்களாதேஷி ஊடுருவல் காரர்களுக்காக எல்லா விதிகளையும் வளைக்கிறது. எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விடுகிறது. ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள், மலேஷிய ஹிந்துக்கள், இந்தோனேஷிய ஹிந்துக்கள் ஆகியோர் அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு இழைக்கும் மிருகத்தனமான, அதிகாரபூர்வ கொடுமைகளைப் பற்றி கூரை ஏறி கூப்பாடு போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் இத்தகைய மிருகத்தனமான மனித உரிமைகள் மீறல் குறித்து பாரத அரசாங்கம் கண்ணை மூடிக்கொள்கிறது. ஹிந்துக்களுக்கு எங்கு போகவும் போக்கிடம் இல்லை. அவர்கள் பாரதம் வந்தாலும் அவர்களுக்கு புகலிடம் இல்லை. ஜிஹாதி பயங்கரவாதிகள் எல்லா இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஒரு சில கிறிஸ்துவ நாடுகள் தரும் தஞ்சத்தை உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் செய்த பாதக செயல்களுக்கு பாரத நாட்டின் கிரிமினல் சட்டப்படி மரண தண்டனைதான் கிடைக்கும். ஆனால் இந்த ஜிஹாதி பயங்கரவாதிகள் தங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாட்டின் சட்ட விதிகளைப் பயன்படுத்தி மரண தண்டணையில் இருந்து கூட விலக்கு பெற்று விடுகின்றனர். அதன் பிறகு நிம்மதியாக சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஹிந்துக்கள் எங்கு போவார்கள்?

குற்றங்களை விடுங்கள். அப்பாவி ஹிந்துக்கள் கூட பாரத நாட்டுக்கு வந்து தங்கள் கலாச்சார  வேர்களைக்  கண்டு கொண்டு வாழ பாரத அரசாங்கம் வழிவிடுவது இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபாள், மலேசியா, இந்தோனேசியா, இன்னும் இது போன்ற பலநாடுகளில்  ஹிந்துக்களுக்கு  எதிராக இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள் அயோக்யத்  தனங்களைக்  கண்டித்து பாரத நாட்டின் வெட்கமற்ற அரசாங்கம் எழ வேண்டும்.

ஆனால் பாரத அரசாங்கமோ வோட்டுகளுக்காக பாரத நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு “இட ஒதுக்கீடு” கொடுப்பதில் மும்மரமாக உள்ளது. ஆஸ்ரேலியாவில் உள்ள ஏதோ ஒரு ஹனிபை விடுவிக்க, இங்கிருந்து  சட்ட நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை பாரத அரசாங்கம் அனுப்புகிறது. மத்திய கிழக்கு நாட்டில் உள்ள ஏதோ ஒரு நௌஷாத் விஷயத்திலும்  பாரத அரசாங்கம் இவ்வாறுதான் நடந்து கொண்டது.

ஸ்ரீலங்காவில் தமிழர்களின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதைப் பற்றி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது பாரத அரசுக்கு அவமானம் நிரம்பிய கறையாகும். பாரத அரசின் தூதரக மற்றும் மனித தோல்விகளை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இத்தகைய தீர்மானத்தை பாரத அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கவேண்டும்.

சர்வதேச  சக்திகள் அத்தகைய விஷயங்களை கையாள்வதில் “தங்களுடைய சொந்த நலன்களை” கணக்கில் எடுத்துக் கொண்டே அணுகுவார்கள். பாரத அரசாங்கம் ஸ்ரீலங்கா அரசை நேரத்தில் வரம்புக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும். ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பாரத அரசு எடுத்து இருக்க வேண்டும். அப்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இம்மாதிரி தன் மூக்கை நுழைக்க சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது. ஆனால் பாரத அரசோ முஸ்லிம்களையும் கிருஸ்துவர்களையும் வோட்டுகளுக்காக அவர்களை தாஜா செய்வதிலேயே எப்போதும் குறியாக இருக்கிறது. எனவே ஸ்ரீலங்கா தமிழர்கள் விஷயத்தை கவனிக்கவோ அந்த பிரச்சனையின் தீவிரத்தை உணரவோ பாரத அரசால் இயலவில்லை. மேலும் இப்படியும் சொல்லலாம். அதுதான் உண்மையும் கூட. ஸ்ரீலங்கா தமிழர்கள் ஹிந்துக்கள் என்பதால் பாரத அரசாங்கம் அவர்களைப் பற்றி கவலையே படவில்லை. வேண்டும் என்றே அவர்களின் நிலையை பாரத அரசு புறக்கணித்துவிட்டது.

இது அரசியல் மற்றும் ராஜீய உறவுகள் சம்பந்தப்பட்ட விசித்திரமாகும். எந்த அரசாங்கமும் தன்னுடைய சொந்த மக்களையோ அல்லது தன்னுடன் சம்பந்தமுள்ள மக்களையோ நிர்கதியாக விடக்கூடாது. ஆனால் இதைத்தான் இந்திய அரசாங்கம் வருடக் கணக்காக ஹிந்துக்களுக்கு செய்து கொண்டுள்ளது. ஜிஹாதி பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் இன்னும் இவர்கள் போன்றவர்கள் எல்லாம் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் அடைக்கலம் பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஹிந்துக்கள் மட்டும் தங்களைத்  தாங்களே கவனித்துக் கொண்டாக வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்ட ஹிந்துக்களுக்கு தங்கள் உணவு, உடை, இருப்பிடம்  ஆகியவைகளை  ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஆனால் இந்த விஷயத்தில் பாரத அரசாங்கம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. மாறாக பல ஹிந்துக்களிடம் கேள்விக் கணைகள் தொடுத்தனர். ஆனால் பிற தேசங்களில் இருந்து வரும் ஹிந்துக்களுக்குத்தான் இந்த நிலை என்று நினைக்க வேண்டாம். இங்குள்ள ஹிந்துக்களுக்கும் அதே கதிதான். பாரத நாட்டில் உள்ள ஹிந்துக்களையும் மத்திய மாநில அரசுகள் அவர்களுடைய சொந்த கதிக்கே விட்டுவிட்டன.

1990௦ஆம்  ஆண்டில் இருந்து காஷ்மீர் பண்டிதர்களும், சீக்கியர்களும் தங்களுடைய நிலம், சொத்து, வோட்டளிக்கும் உரிமை ஏன் தங்களுடைய கெளரவம் ஆகியவை தங்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் பாரத அரசாங்கம் அவர்களை புழு பூச்சிகளாக கருதுகிறது. ஆனால் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்தும் காஷ்மீரில் இருந்தும் சரண் அடைந்த ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு பாரத அரசாங்கம் போலீஸ் வேலைகளை அள்ளிக் கொடுக்கிறது. இதுமாதிரி உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காது. பெரும்பான்மை சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடமை பொறுப்பில் இருப்பவர்கள், சிறுபான்மையினரின் சந்தோஷத்திற்காக, அவர்களின் வோட்டுகளுக்காக பெரும்பான்மையோரின் நலன்களைத்  தியாகம் செய்கிறார்கள்.

குரூரமாக, பச்சையாக சொல்வது என்றால் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், அவர்கள் பாரத நாட்டு குடிமக்களோ அல்லது வேறுநாட்டு குடிமக்களோ என்ன குற்றத்தை வேண்டுமானாலும் செய்யலாம். பாரத நாட்டை காயப்படுத்தலாம். ஹிந்துக்களை வேட்டையாடலாம். அதன் பிறகு நிம்மதியாக, சந்தோஷமாக, வேறு எந்த ஒரு நாட்டிற்கும் சென்று வாழலாம். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டால் கூட, பாரத நாட்டு சட்டங்களுக்கு அவர்கள் உட்படுவதில்லை.  உட்படுத்தப்படுவதும் இல்லை. அவர்கள் வைத்ததே சட்டம். இந்த பாரத அரசாங்கம் கடைந்து எடுத்த கோழைத்தனமான  அரசாங்கம் ஆகும். ஹிந்துக்கள், சாதுக்கள், துறவிகள், ஆகியோரைக் கைது செய்து அவர்களை சிறைக்கு அனுப்பி, அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்த அரசாங்கம் தன்னுடைய “வீரத்தை” வெளிப்படுத்திக் கொள்கிறது. இது மாதிரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களை விசாரணைக்கு கூட உட்படுத்தாமல் இதே மத்திய அரசுதான் அவர்களை விடுதலையும் செய்கிறது. இந்த பாரத அரசாங்கம் பாகிஸ்தான் நீதி விசாரணைக்  கமிஷனை நம் நாட்டுக்கு வர அனுமதிக்கிறது. அஜ்மல் கசாப் வழக்கில் சம்பந்தப்பட்ட நம் நாட்டின் துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் விசாரிக்க பாகிஸ்தான் நீதி விசாரணை கமிஷனை பாரத அரசாங்கம் அனுமதிக்கிறது. முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் தாஜா செய்ய இன்னும் எந்த அளவுக்கு பாரத அரசு கீழே குனியும்? மண்டி போடும்?

பாரதப்  பிரதமர் 2 அப்பாவி குழந்தைகளை தங்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து கொள்ள அனுமதிக்குமாறு நார்வே நாட்டு பிரதமரைக் கேட்கிறார். உடனே நார்வே நாட்டு பிரதமர் “2  ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நார்வே கம்பெனி “டெலினோர்” விஷயமாக பாரதப் பிரதமரிடம் கேட்கிறார்.  இது என்ன பண்ட மாற்று வியாபாரமா? கோபத்துக்கே இந்த நிலையைப் பார்த்தால் கோபம்வரும்.

கந்தமால் ஓடிசாவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதி அது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்து சன்யாசி சுவாமி லக்ஷ்மணாநந்த மகராஜை அங்கு படுகொலை செய்தனர். இப்போது சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் மாவோயிஸ்டுகள் 2 இத்தாலிய சுற்றுலா பயணிகளை கடத்தி சென்றனர். சுவாமி லக்ஷ்மணாநந்த மகாராஜின் முயற்சியால் 3000 கிறிஸ்துவர்கள் தாய் மதம் திரும்பிய சில நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். கிறிஸ்துவ சர்ச்சுதான் இக்கொலையை செய்யத் தூண்டி உள்ளது என்பது வெளிப்படை. மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றதாகக்  கூறப்படும் இத்தாலிய சுற்றுலா பயணி அவர்கள் மத்தியில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் பத்திரிக்கைகளில்  வெளியானது. இந்த இரு இத்தாலிய சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் புரி நகரில் 15 வருடங்களாக தங்கி உள்ளார். இவ்வளவு காலம் அவர் சுற்றுலா சென்று பார்த்துக் கொண்டு இருந்தாரா? அல்லது அப்பாவி ஹிந்துக்களை பணம் கொடுத்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றிக் கொண்டு இருந்தாரா?

இக்கேள்விகளை பாரத அரசு கேட்க வேண்டும். ஒவ்வொரு அந்நிய நாட்டினரின் விசா மற்றும் அது காலாவதியாகாமல்  உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். ஆனால் வனவாசிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவர்கள் உரிமைகளை நசுக்கிய சர்ச்சை எதிர்த்து ஒரு வனவாசி எம்.எல்.ஏ.யே போராடினார். அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச்  சென்றனர். அதை நம் பாரத அரசு வேடிக்கை பார்த்தது. இதில் இருந்தெல்லாம் தெரிவது என்ன? வெளியாட்கள் பாரத நாட்டுக்குள் வருகின்றனர். குற்றங்களை செய்கின்றனர். பாரத அரசாங்கம் ஹிந்துக்களை காப்பாற்ற எதுவும் செய்யாது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய எண்ணம் எதுவும் பாரத அரசுக்கு இல்லவே இல்லை. மாறாக வெளிநாட்டவர்க்கு சாதகமாக எல்லா சட்டங்களையும் அது வளைத்துப் போடும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

பிற நாடுகளில் இருந்து வரும் ஹிந்துக்கள், அவர்கள் குடி உரிமை பெற்றுள்ள பாரத நாட்டிலேயே பாதுகாப்பின்றி உள்ளனர். பாரத நாட்டில் உள்ள ஹிந்துக்கள் அவர்களின் சொந்த பாரத நாட்டில் பாதுகாப்பின்றி உள்ளனர். இன்று மத்தியிலும்,  மாநிலத்திலும் ஆளும் அரசியல்வாதிகளின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஹிந்துக்களுக்கு எங்கு  போகவும் போக்கிடம் இல்லை. சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், மற்றும் இது போன்ற இதர சில ஸ்தாபனங்கள் இத்தகைய கொடுமையான நிலையின் அபாயத்தை பாரத நாட்டுக்கும், உலகத்துக்கும் உணர்த்த, தங்களால் ஆன அனைத்து  முயற்சிகளையும் அனைத்து வழிகளிலும் செய்து வருகின்றனர்.

ஹிந்துக்கள் தங்கள் கண்களை திறந்து கொள்ள வேண்டும். போலி மதசார்பின்மை மற்றும் போலி மதசார்பற்றவாதிகள் ஹிந்துக்களை கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். “எல்லோருக்கும் வளர்ச்சி” என்பது உண்மையில் ஹிந்துக்களை ஒதுக்கிவிட்டு, முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதே என்பதே நடைமுறையாக உள்ளது. அரசாங்கம் தானாகவே முன்வந்து ஹிந்துக்களுக்கு என எதுவும் செய்யாது. ஹிந்துக்கள் மிகவும் காலம் கடந்து விடுவதற்கு முன்னால் உறக்கம் கலைந்து விழித்து எழ வேண்டும்.

மதசார்பின்மைவாதிகளின் தத்துப்பிள்ளை

ஆங்கிலத்தில். எஸ்.குருமூர்திஜி 

தமிழாக்கம்      .ரோஹிணி 

சையத் ஷராபுதின் தன்னுடைய மனைவியுடன் வெறுக்கத்தக்க ஒரு போலி என்கௌண்டரில் குஜராத்தில் கொல்லப்பட்டார். பல காலமாக இவர் இந்திய மதசார்பின்மைவாதிகளின்  தத்துப் பிள்ளையாக இருந்து வருகிறார். 2007 குஜராத் சட்டசபை தேர்தல்களில் சோனியாகாந்திதான்  முதலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஷராபுதீனை கொண்டு வந்தார். நரேந்திர மோடியை “மரண வியாபாரி” என சோனியா வர்ணித்தார். ஆனால் இதனால் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வோட்டுகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷராபுதீன் ஒரு முஸ்லிம் என்பதும் அவரை மோடியின் போலீஸ் கொன்றதும், தேசிய அளவில் அவரை மதசார்பின்மையின் தத்துப்பிள்ளையாக சித்தரிக்க ஏதுவாக அமைந்தன. இது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.

தேசிய மனித உரிமைகள் கமிஷன் 2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 440 போலி என்கௌண்டர்களில் கொல்லப்பட்டவர்களைக்  குறித்து  கண்ணில் விளக் கெண்ணை  இட்டுக் கொண்டு ஆராய்ந்தது. இதில் குஜராத்தில் வெறும் 4 போலி என்கௌண்டர் கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. உத்திரபிரதேசத்தில் 231, ஆந்திராவில் 22, மகாராஷ்ட்ராவில் 33, அஸ்ஸாமில் 12 என போலி என்கௌண்டர் கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், ஷஹபுதீனின் கொலைக்கு “மதசார்பின்மை லேபிள்” ஒட்டப்பட்டு இருந்ததால், குஜராத்தின் 4 போலி என்கௌண்டர் கொலைகள் மட்டுமே முன்னணிக்கு கொண்டு வரப்பட்டன. சி.பி.ஐ.தான் ஷராபுதீனின் வழக்கை விசாரித்துக் கொண்டு இருந்தது. அதுவும் தன் பங்கிற்கு இந்த மதசார்பின்மை லேபில் “நன்கு பசை போட்ட மாதிரி ஒட்டிக் கொள்வதற்கு ஆவன செய்தது. குஜராத் பி.ஜே.பி. அரசாங்கம் (வகுப்புவாத அரசாங்கம் என்று பொருள் கொள்ள வேண்டும்), ஆந்திரா மற்றும் ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசாங்கங்கள் (மதசார்பின்மை அரசாங்கங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்) ஆகிய மூன்று அரசுகளும் ஷராபுதீனின் கொலையில் “பங்குதாரர்களாக ” இணைந்து செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த முழு உண்மையை சி.பி.ஐ. மறைத்துவிட்டு குஜராத் அரசாங்கம் மட்டுமே ஷராபுதீனின் கொலையை முன் நின்று நடத்தியதாக சித்தரித்தது. மத்திய புலனாய்வு அமைப்பின் வழிகாட்டுதலும், அனுமதியும் இல்லாமல் இந்த மூன்று அரசுகளும் இவ்வாறு செயல்பட்டு இருக்க முடியுமா? ஆனால் ஷராபுத்தீனை ஏன் “இலக்காக ” தேர்ந்தெடுத்தார்கள்?

மும்பையில் 1993 ஆம் ஆண்டில் தாவூத் இப்ராகிம் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த ஆயுதங்களை அனுப்பி வைத்தான். இதில் 300கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அப்துல்லத்திப் குஜராத்தில் இருந்த ஒரு ரவுடி. இவன் தாவூத் இப்ராகிம் அனுப்பிய ஆயுதங்களில் 24 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 27 கிறேனேடுகள், 5250 ட்ரிட்ஜுகள், 81 மகசின்கள் என ஒரு ஆயுதக் கிடங்கையே பதுக்கிவைத்து இருந்தான். எங்கு தெரியுமா? மத்தியப் பிரதேசத்தில் ஜார்நிய கிராமத்தில் இருக்கும் ஷஹபுதீன் வீட்டின் கொல்லையில். ஷஹபுதீன்  பயங்கரவாதத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு இருந்ததற்கு இதை விட சாட்சி தேவையா? இது மட்டும் அல்ல. ஷராபுதின் மீது 21  கடுமையான கிரிமினல் வழக்குகளும் பதிவாகி இருந்தன. இந்த உண்மைகள் அனைத்தும் நிருபிக்கப்பட்டவை.

இந்த சூழ்நிலையில் மோடியை குறிவைக்க  ஷராபுத்தீனை விட இன்னும் சிறந்த ஒரு மதசார்பின்மை வாதியை தேடி கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சஞ்சய் பட் என்னும் குஜராத் போலீஸ் அதிகாரிக்கு அந்த மதசார்பற்ற தொப்பி  பொருந்தியது. மோடியின் மீது ஒரு கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் மதசார்பற்ற வாதிகளின் குறிக்கோள். எனவே 2011ஆம் ஆண்டில் சஞ்சய் பட் மூலமாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது என்ன தெரியுமா? கோத்ரா படுகொலைக்குப் பிறகு “தங்களுடைய கோபத்தை வெளிப் படுத்த ஹிந்துக்களுக்கு அனுமதி அளிக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்” என்று 9 வருடங்களுக்கு முன்னால் மோடி போலீஸ் அதிகாரிகளிடம் சொன்னாராம். இதுதான் சஞ்சய் பட் சொன்ன குற்றச்சாட்டு.

உச்ச நீதி மன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக்  குழுவை அமைத்து சஞ்சய் பட்டின் குற்றச்சாட்டு உண்மையா என்று ஆராய கேட்டுக் கொண்டது. சஞ்சய் பட்டின் குற்றச்சாட்டு கடைந்து எடுத்த பொய் என்று இந்த புலனாய்வுக் குழு தெரிந்து கொண்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் ர.கே.ராகவன் என்பவர். அவர் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி. அப்பழுக்கு அற்ற நேர்மையாளர். தன்னுடைய குற்றச்சாட்டு பொய் என்று சிறப்பு புலனாய்வுக் குழு கூறியதால் அதன் தலைவர் மோடியை காப்பாற்ற முயற்சிப்பதாக சஞ்சய் பட் குற்றம் சாட்டினார். மேலும், அப்போது குஜராத் அரசில் பணி புரிந்து கொண்டு இருந்த சஞ்சய் பட் முதல்வர் நரேந்திர மோடியை “கிரிமினல்” என்று வர்ணித்தார். மத சார்பற்ற வாதிகள் ஏங்கிக் கொண்டு இருந்த ஆள் இந்த சஞ்சய் பட் தான் என்பது சொல்லியா தெரிய வேண்டும்? அவர்களது எதிர்பார்ப்புக்கு சஞ்சய் பட் எவ்வளவு சரியாக பொருந்துகிறார்?

சஞ்சய் பட்  என்னும் மதசார்பற்ற அவதாரத்தின் கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் பார்ப்போம். 1996 ஆம் ஆண்டில் இந்த சஞ்சய் பட் என்ன செய்தார் தெரியுமா 1988ஆம்  ஆண்டில்தான் இந்த பட் இந்தியன் போலீஸ் சர்வீசில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பலன்பூர் நகரில் ஒரு ஹோட்டல் அறையில் 1 கிலோ போதை மருந்துகளை பதுக்கி வைக்க சஞ்சய் பட் ஏற்பாடு செய்தார். ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்த சுமர் சிங் ராஜ் ப்ரோஹித் என்பவர் அந்த ஹோட்டல் அறையில் தங்கி இருந்தது போல் சஞ்சய் பட் போலி ஆவணங்களை தயார் செய்தார். சுமார் சிங் ஒரு வழக்கறிஞர். சுமர் சிங்கை போதை மருந்து கடத்தலில் மாட்டிவிடவே சஞ்சய் பட் இவ்வாறு அனைத்து மோசடி களையும் செய்தார். எதற்காக  பட்  இவ்வாறு செய்தார்? இதன் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் படித்தால் உங்களுக்குப் புரியும்.

சஞ்சய் பட்,  சுமன்சிங்கை நடு இரவில் கடத்தி வர ஏற்பாடு செய்தார். அவரை அந்த மேலே சொன்ன ஹோட்டல் அறையில் தள்ளினார். அங்கு ஏற்கனவே போதை மருந்துகள் இருக்குமாறு செய்யப் பட்டதை  ஏற்கனவே சொல்லி உள்ளோம். இதன் மூலம் சுமன் சிங்கை குற்றவாளி ஆக்கி அவரை கைது செய்வதுதான் சஞ்சய் பட் போட்ட திட்டம். எதற்காக இதெல்லாம்? ஆர்.ஆர்.ஜெயின் என்பவர் அப்போது குஜராத் உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவருடைய உறவினர் ஒருவரின் சொத்தை சுமன் சிங் குத்தகைக்கு எடுத்து இருந்தார். உடனே சுமன் சிங் அந்த சொத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக சஞ்சய் பட்  இவ்வளவு மோசடி வேலைகளிலும்  ஈடுபட்டார்.

சஞ்சய் பட்டின் அசகாய சூரத்தனமான மோசடி வேலைகளைக் கண்டு சுமன் சிங் நடுநடுங்கிப் போனார். சஞ்சய் பட் சொன்னபடி அவர் செய்தார். உடனே சஞ்சய் பட் சுமன் சிங்கை விடுதலை செய்தார். ஆளை அடையாளம் காட்டுவதற்காக நடத்தப்பட்ட அணி வகுப்பில் ஒருவரும் சுமன் சிங்கை அடையாளம் காட்டவில்லை என்று நீதிமன்றத்தில் சஞ்சய் பட் பொய் சொல்லி சுமன் சிங் விடுதலை ஆக வழி செய்தார். சுமன் சிங் ராஜஸ்தானுக்கு சென்று சஞ்சய் பட்  மற்றும் ஆர்.ஆர்.ஜெயின் மீது கிரிமினல் வழக்குகளைத்  தொடுத்தார். உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கை ராஜஸ்தானுக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று சஞ்சய்பட்டும், ஜெயினும் மனு செய்தனர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு குஜராத் அரசாங்கம் ராஜஸ்தான் உயர் நீதி மன்றத்தில் மனு செய்தது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பிறகு அந்த  வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு சென்றது. இந்த கிரிமினல் வழக்கை உச்ச நீதி மன்றம் இப்போது நிறுத்தி வைத்துள்ளது. இதன் பிறகு குஜராத்  விஜிலன்ஸ் கமிஷன்  ஜூலை 2002 மற்றும் அக்டோபர் 2006 இல் சஞ்சய் பட் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை என்பதால் அவரை பதவியில் இருந்து தற்காலிக வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று எழுதியது, இருந்தும் குஜராத் அரசாங்கம் பட்டை பதவி நீக்கம் செய்யவில்லை. ஆமாம், பதவி நீக்கம் செய்யவில்லை. இதோடு கதை முடிந்துவிடவில்லை. இன்னும் தொடர்கிறது ஜூன் 1996லேயே ராஜஸ்தானில் உள்ள பாலி நகர வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு சஞ்சய்பட்டின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து புகார் அனுப்பினார். 14 வருடங்கள் கழித்து செப்டம்பர் 2010இல் இந்த புகாரில் உண்மை இருக்கிறது என்று தேசிய மனித உரிமைகள் கமிஷன்  கண்டுபிடித்தது. சுமன் சிங் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட வேண்டும் என்று அந்த கமிஷன்  தீர்ப்பு அளித்தது. குஜராத் அரசாங்கம் அந்த தொகையை கொடுத்துவிட்டு சஞ்சய்பட்டை அந்த தொகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டது. ஆனால் சஞ்சய் பட்டின் திருவிளையாடல்கள் இதோடு நின்று விடவில்லை.

இந்திய போலீஸ் சர்வீஸில் சேர்ந்த இரண்டே வருடங்களில் சஞ்சய்பட் தன் சுயரூபத்தைக்  காண்பிக்க ஆரம்பித்தார். 1990இல் பாரத் பந்த் நடந்தது. அப்போது பட் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமல் செய்தார். தடா சட்டத்தை அளவுக்கு அதிகமாக பிரயோகம் செய்தார். அளவுக்கு அதிகமான பலத்தை பிரயோகம் செய்தார். இதனால் இரண்டு பேருடைய சிறு நீரகங்கள் நொறுங்கிப் போயின. அதில் ஒருவர் பிறகு இறந்து போனார். இதன் காரணமாக சஞ்சய்பட்டின் மேல் கொலை வழக்கு குற்றச்சாட்டு எழுந்தது. இது இன்னும் நிலுவையில் உள்ளது. அது மட்டுமல்ல 22 போலீஸ்காரர்களை தன்னுடைய வீட்டில் தன்னுடைய சொந்த பணிகளை செய்ய சஞ்சய் பட் அமர்த்தி இருந்தார். 1997 இல் ராஜ்கோட்டில் உள்ள சஞ்சய் பட்டின் வீட்டில் இந்த போலீஸ்காரர்கள் பட்டின் சொந்த வேலைகளை கவனித்து வந்தனர்.

இவ்வளவு பேர் தனக்கு பணி செய்வது போதாது என்று சஞ்சய் பட் 1999 இல் கருதினார். எனவே பனஸ்கந்தாவில் இருந்த தனது வீட்டில் தனது சொந்த வேலைகளை கவனிக்க 36  ஆர்டர்லிகளை சஞ்சய்பட் நியமித்தார். இதில் 11 போலீஸ்காரர்கள் அவரது வீட்டுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை கவனித்துக் கொண்டனர். 3 பேர் பாதுகாப்பை கவனித்துக் கொண்டனர். 4 பேர் காவல் வேலைகளையும் 12 பேர் தாக்குதல் தொடுக்கவும் 3 பேர் தோட்ட வேலைகளையும் கவனித்துக் கொண்டனர். இன்னும் இருக்கிறது. நிலப்பறிப்பு வழக்கு ஒன்றில் ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்ள இன்னொருவரை பட் மது அருந்தும் குற்றங்களில் சிக்க வைத்தார். இன்னும் கூட இருக்கிறது. மே 1996 ஆம் ஆண்டில் போலீஸ்காரர்களை தேர்ந்து எடுப்பதில் தன்னுடைய பதவியைப்  பயன்படுத்தி  முறைகேடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சஞ்சய் பட் மீது விசாரணைகள் இன்றும் நடைபெற்று வருகின்றன. அவருக்கு கொடுக்கப் பட்ட அதிகாரத்தைக் காட்டிலும் வரம்பு மீறி அதிக ஆயுத லைசென்சுகளை வழங்கியதாக பட் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. போலீஸ் ஆயுதங்களை கணக்கில் காட்டாமல் எடுத்து சென்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் சஞ்சய் பட் என்னும் மதசார்பற்ற  தேவதையின் இந்த எல்லா கிரிமினல் விஷயங்களும் ரகசியமாக இன்னும் மறைத்து வைக்கப்பட்டே உள்ளன. ஏன்?

2011இல் குஜராத் கலவரங்கள் நடந்து 9 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி வீட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் தான் இருந்ததாகவும் அதில் ஹிந்துக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று மோடி தங்களுக்கு உத்தரவு இட்டதாகவும் சஞ்சய் பட் சொன்னார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் ஏகமனதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் சஞ்சய் பட் அந்த கூட்டத்தில் இருக்கவில்லை என்று சொன்னார்கள்.

இருந்தும் சஞ்சய் பட் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை  பிடித்து தான் அந்த கூட்டத்தில் இருந்ததாக  ஒரு அபிடவிட் தயார் செய்தார். அதில் அவரின் கையெழுத்தை வாங்கினர். ஆனால் அந்த நாளில் அந்த கான்ஸ்டபில் தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் இருந்தார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. இந்த “இன்றியமையாத உண்மையை” இவ்வளவு காலம் கழித்து சொல்வது ஏன் என்று எவருமே அந்த கான்ஸ்டபிளை  கேள்வி கேட்கவில்லை.

நரேந்திர மோடியின் குரல் வளையை பிடித்து நொறுக்க வேலை செய்து கொண்டு இருக்கும் ஏராளமான தன்னார்வு தொண்டு குழுக்களுடனும், காங்கிரஸ் தலைவர்களுடனும் சஞ்சய் பட் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பது ஏன் என்றும் எவரும் கேள்வி எழுப்பவில்லை. “மதசார்பற்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடனும்” காங்கிரஸ் தலைவர்களுடனும் பட் பல மின் அஞ்சல்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளை வைத்துள்ளார். இதையெல்லாம் இப்போது பரிசீலனை செய்துள்ளனர். அதன் பிறகு உச்ச நீதி மன்றம் நியமித்த சிறப்பு புலன் ஆய்வுக் குழு “பித்தலாட்ட எண்ணம் கொண்ட குழுக்கள்” அதாவது சஞ்சய் பட் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் காங்கிரஸ்காரர்கள் ஆகியோர் உச்ச நீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு ஆகிய அமைப்புகளை தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளும்  நோக்கத்துடன் உபயோகித்துக் கொள்ள முயன்று வருவதாக சொன்னது.

இறுதியில் உச்ச நீதி மன்றம் தன்னுடைய புலன் ஆய்வு அறிக்கையில் இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது, அந்த அறிக்கை சொல்கிறது ; “சஞ்சய் பட் பித்தலாட்ட குழுக்களுடன்  இணைந்து கொண்டு, நரேந்திர மோடி மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்து விடப்படவேண்டும் என்னும் எண்ணத்தோடு செயல்பட்டுள்ளார். இந்த காரணத்துக்காகத் தானே சஞ்சய் பட் இன்று மத சார்பின்மை வாதிகளின் வளர்ப்புப் பிள்ளையாக திகழ்கிறார்.

மேற்கண்ட கட்டுரை தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ் நாளிதழில் மே 22 அன்று   பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதைப் படித்திட இங்கே சொடுக்கவும்.

http://expressbuzz.com/biography/The-seculars%E2%80%99-poster-boy/393912.html

 

 

 

 

தியாகி துக்காராம் ஓம்பளேயும்-துரோகி அஜ்மல் கசாப்பும்

ஆங்கிலத்தில்: தருண் விஜய்

தமிழாக்கம்: ல. ரோஹிணி 

அஜ்மல் அமீர் கசாப் மறுபடியும் செய்திகளில் வருகிறார். மும்பை போலீசார், கசாப்புக்கு சமைத்து போடுவதற்காக ஆறு சமையல் காரர்களை நியமித்துள்ளனர். அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக கசாப்புக்கு சமைத்துப் போட்டுக் கொண்டு வருகின்றனர். இதை பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் குற்றவாளி  கசாப்புக்கு வகை வகையான உணவு வேளாவேளைக்கு தவறாமல் கிடைத்து வருகிறது. மும்பையில் உள்ள போலீஸ், மருத்துவ மனையிலும் 24 மணி நேர கண்காணிப்பு, போலீஸ் அலுவலகத்திலும் சமைத்துப் போட சமையல் ஆட்கள் பற்றாக் குறை உள்ளது. ஆனால் கசாப்புக்கு மட்டும் இவ்வாறு ராஜ உபசாரம் நடக்கிறது. குறைவான ஞாபக சக்தி உள்ளவர்களுக்காக சில விஷயங்களை மறுபடியும் நினைவுறுத்த வேண்டி உள்ளது.

நவம்பர் 26, 2008 இல் மும்பை நகரில் அஜ்மல் கசாப்பும் இன்னும் இதர ஒன்பது பயங்கரவாதிகளும் 166 அப்பாவிகளை சுட்டுக் கொன்றனர். இந்த படுகொலைகள் வெளிப்படையாக நடந்தன. இந்த படுகொலைகள் நடத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்பட்டது. கசாப் பிறரைக் கொன்று குவித்துக் கொண்டு இருந்த போது கையும் களவுமாக பிடிபட்டான். இதுவும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதற்கு மேல் அவன் செய்த கொடூரமான படுகொலை களுக்கு வேறு சான்று எதுவுமே தேவையில்லை. 18 மாதங்கள் விசாரணைக்குப் பிறகு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 2010இல் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பெப்ரவரி 2011இல்  மும்பை  உயர்நீதி மன்றம் கசாப்புக்கு தூக்கு தண்டனை அளித்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது. இதை அடுத்து ஜூலை 2011இல் கசாப் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தான்.

உச்ச நீதி மன்றம் சட்டப்படி செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் தான் உருவாக்கியுள்ள சட்டங்களே உச்ச நீதி மன்றத்தைக் கட்டிப் போட்டுள்ளன. எனவே கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்னும் உத்தரவை உச்ச நீதி மன்றம் நிறுத்தி வைத்தது. சட்டம் முறைப்படி செயல் படுத்தப்பட வேண்டும் என்பதின் பொருள் என்ன? கசாப்பின் குற்றம் இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே இன்றுள்ள ஒரே கேள்வி அவன் தூக்கில் இடப்பட வேண்டுமா என்பது மட்டும்தான்.

உச்ச நீதி மன்றம், 1983இல் ஒரு வழக்கில் “கொன்றவனின் உயிரை அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிரைக் காட்டிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு  அணுகியது. அந்த சமயத்தில் மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை  கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்பின் காரணமாக மரண தண்டனை அளிக்கப்பட்டு இருந்த  பல குற்றவாளிகள் சாகாமல் தப்பித்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்த நிலை இந்தியாவை ஒரு “நாகரீகம் நிறைந்த நாடாக ஆக்கிவிட்டது” என்று மனித உரிமைவாதிகள் எக்காளமிட்டனர்.

ஒரு அறிக்கையின்படி 300 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இதில் ராஜீவ் காந்தியை கொன்றவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் தூக்குக் கையிற்றை எதிர் பார்த்துக் கொண்டு உள்ளனர். ஆனால் மிக மிக அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை வழங்கப் பட வேண்டும், நிறைவேற்றப்பட வேண்டும்  என்னும் உச்ச நீதி மன்ற தீர்ப்பால் இந்த கொலைகாரர்கள் அனைவரும் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். கடந்த 17 வருடங்களில் தனஞ்சய் சட்டர்ஜி என்ற ஒரே ஒருவர் மட்டுமே தூக்கில் இடப்பட்டுள்ளான். ஒரு பள்ளி சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றம் காரணமாக அவன் தூக்கில் போடப்பட்டான். மரண தண்டனை கூடாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு மிக மிக அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்னும் கருணை அடிப்படையில் அமைந்த உச்ச நீதி மன்ற தீர்ப்பு எப்படி அஜ்மல் கசாப் போன்ற கடைந்து எடுத்த கொலைகார பாவிகளுக்கும் உதவியாக உள்ளது என்பதைப் பாருங்கள்.

1983இல் தான் கொடுத்த தீர்ப்பில் உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை ரத்து செய்வதில் கொலைகாரனின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், அதே சமயத்தில் மரண தண்டனை கொடுக்காமல் இருக்க வயது ஒன்று மட்டுமே தீர்மானிக்கும் அம்சமாக இருக்க கூடாது என்று கூறியுள்ளது. கசாப் படு கொலைகளில் ஈடுபட்டபோது அவனுக்கு வெறும் 21 வயது மட்டும்தானே ஆகி இருந்தது? கசாப்புக்கு அதரவாக வாதட உச்ச நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்து இருந்தது. அவர் உச்ச நீதி மன்றம் கொடுத்த மேற்படி தீர்ப்பின்படி கசாப்புக்கு வயது மிகவும் குறைவாக இருப்பதால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்துவிட வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தை மேற்க்கோள் காட்டியே வாதாடுகின்றார்.

அஜ்மல் கசாப் தானாக செயல்படவில்லை, திரிக்கப்பட்ட சமய நம்பிக்கை மற்றும் பொய்யான சித்தாந்தத்தின் தாக்கம் காரண மாகவே அவன் அவ்வாறு கொலை வெறியில் ஈடுபட்டுள்ளான் என்று அந்த வழக்கறிஞர் மேலும் வாதாடியுள்ளார். திரிக்கப்பட்ட சமய நம்பிக்கையே குற்றவாளி, கசாப் அல்ல என்பது அவரது வாதம். இந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கசாபை விடுவித்து விட இயலுமா என்பதுதான் நீதிமன்றத்தின் முன் உள்ள பிரச்சனை ஆகும். விளைவு என்ன தெரியுமா? நீதிமன்றம் ஏராளமான வழக்குகளை விசாரித்துக் கொண்டு இருக்கிறது.  இதில் ஏற்ப்படும் தாமதம் கசாப்புக்கு சாதகமாக உள்ளது. அவன் தூக்கில் தொங்குவதற்கு பதிலாக அவன் வழக்கு ஊசலாடிக் கொண்டு உள்ளது. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அஜ்மல் கசாப் ஒரு அரசு விருந்தாளி போல் வாழ்ந்து வருகிறான். அவன் கூப்பிட்ட குரலுக்கு ஏன், அவன் மெய்க் காப்பாளன் கூப்பிட்ட குரலுக்கு கூட ஓடி வர ஆறு சமையல்காரர்கள் தயாராக காத்து நிற்கின்றனர். அஜ்மல் கசாப்பை சிறையில் பத்திரமாக பார்த்துக் கொள்ள இது வரை 26 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்போது மறுபக்கத்தை பாருங்கள்.

கசாபுடன் கூட பாகிஸ்தானில் இருந்து வந்த ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அந்த பயங்கரவாதிகள் பல அப்பாவிகளை கொன்று குவித்தனர். பயங்கரவாதி கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். கசாபும் மற்ற பயங்கரவாதிகளைப் போல் கொல்லப்பட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்? பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் லஷ்கர் ஈ தொயிபா   இவைகள்தான் நவம்பர் 26இல் மும்பையில் தாக்குதல் நடத்தியதற்கான ஒரே ஒரு சான்றும் நம் நாட்டுக்கு கிடைக்காமல் போய் இருக்கும். அந்த சான்று முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டு இருக்கும். துகாராம் ஓம்பளே என்னும் அஞ்சா நெஞ்சம் வாய்ந்த போலீஸ் அதிகாரிதான் கசாப் தன்னுடைய எ.கே.47 துப்பாக்கியில் இருந்து அவர் மீது குண்டு மாறி பொழிந்த போதும் அதைத் தாங்கிக் கொண்டு கசாபை உயிரோடு  பிடிக்க உடன் வந்த போலீசாருக்கு உதவினார். ஆனால் துகாராம் ஓம்பளே அவர்களின் தியாகத்தை அக்டோபர் 6, 2010லேயே மறந்து விட்டார்கள். இது உள்துறை மந்திரி சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்ட கேள்வியில் இருந்து நன்கு புலனாகிறது.”

துகாராம் ஓம்பளே கசாபின் துப்பாக்கி முனையை பிடித்துக் கொண்டு அதில் இருந்த வந்த குண்டுகளை தனது மார்பில் தாங்கினார். அஜ்மல் அமீர் கசாபை தன்னுடன் வந்த போலீசார் உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற் காகவே அவர் இவ்வாறு உயிர்த் தியாகம் செய்தார். அந்த துகாராம் ஓம்பளே உங்களில் எவ்வளவு பேர் இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்கள் என்று சிதம்பரம் கேட்டார். ஓம்பளேயை பற்றி நினைப்பவர்கள் எவரும் இல்லை என்பதற்கு, கசாபை தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட வேண்டும் என்று கேட்கும் “இளகிய மனம் படைத்த” அறிவு ஜீவிகள் மற்றொரு சான்றாகத் திகழ்கின்றனர்.

இப்போது 26/11 நள்ளிரவுக்கு செல்வோம். கசாப் பல அப்பாவிகளை கொன்று குவித்த பிறகு இன்னொரு பயங்கரவாதியுடன் சேர்ந்து கொண்டு ஒரு ஸ்கோடா காரை கடத்தினான். அதை மும்பையின் மரின் டிரைவ் பகுதியில் அவன் ஒட்டி சென்றான். ஓம்பளே மரின்டிரைவ் பகுதியில் உஷாராக இருக்குமாறு பணிக்கப் பட்டார். ஸ்கோடா கார் கடத்திக் கொண்டு வரப்படுவது அவருக்கு இரவு 12-45 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு ஒரு சில நிமிடங்களில் கடத்தப்பட்ட ஸ்கோடா கார் சீறிப் பாய்ந்து போவதை ஓம்பளே பார்த்தார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறி அந்த ஸ்கோடா காரை துரத்தத் துவங்கினார். ஸ்கோடா காரில் இருந்த கசாபும் இன்னொரு பயங்கரவாதியும் சகட்டு மேனிக்கு நாலா பக்கமும் எல்லா திசைகளிலும் சரமாரியாக சுட்டுக் கொண்டே வந்தனர். அந்த ஸ்கோடா கார் சவுபாத்தி பகுதிக்கு வந்தவுடன் மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஏன் என்றால் அங்கு “தடுப்புகள்” இருந்தன. ஓம்பளேவிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை. அவர் ஸ்கோடா காரை சுற்றி வளைத்தார். ஸ்கோடா கார் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுமாறு அவரது செயல் செய்து விட்டது. ஓம்பளே கசாபின் மீது பாய்ந்தார். அவனுடைய ஏ.கே.47 துப்பாக்கியின் பேரலை தன்னுடைய இரு கைகளாலும் அவர் பிடித்துக் கொண்டார். பேரல் ஒம்ளேயைப் பார்த்து இருந்ததால் கசாப் அவர் மீது குண்டு மழை பொழிந்தான். ஆனால் ஓம்பளே தன்னுடைய இறுதி மூச்சுவரை கசாபை விடவில்லை. இதற்குள் அவருடன் வந்த மற்ற போலீசார் இன்னொரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். அவர்கள் ஓம்பளேயின் பிடியில் இருந்த கசாபின் மீது பாய்ந்து அவனை உயிருடன் பிடித்து விட்டனர். ஓம்பளே பலிதானம் ஆகிவிட்டார்.  ஆனால் தன்னுடைய நாட்டுக்கு கசாப் என்னும்  மிக முக்கிய மனித சாட்சியை அவர் உயிருடன்  பிடித்துக் கொடுத்துவிட்டார். இதன் மூலம் இன்னும் எத்தனையோ பேரை கசாப் சுட முடியாமல் செய்து அவர்களை காப்பாற்றி உள்ளார்.

ஓம்பளே தன்னுடைய மனைவியையும் 4 மகள்களையும் விட்டுவிட்டு நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார். அந்த நால்வரில் இரண்டு மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் ஓம்பளே உயிர் நீத்த போது கல்லூரிகளுக்கு சென்று கொண்டு இருந்தனர். ஓம்பளேவுக்கு அரசாங்கம் உடனே அசோக் சக்ரா விருது அளித்தது. ஆனால் அத்தோடு ஓம்பளேவையும் அவருடைய குடும்பத்தையும் மறந்து விட்டனர். இப்போது மனித உரிமைவாதிகள் கசாபுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரும் கால கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் உறவுகளில் கசாப் ஒரு பிரச்சனையாக உருவாவதை கற்பனை செய்து பாருங்கள். ரைமாண்ட்  டேவிஸ் என்னும் அமெரிக்க சி.ஐ.ஏ. உளவாளி அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் இப்படித்தான் பிரச்சனையாக இருந்தான். அவன் பாகிஸ்தானிகளை கொன்ற குற்றத்திற்கு ஆளானவன். இது சென்ற வருடம் நடந்தது. இந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் பிரச்சனையாக உருவெடுத்த டேவிஸ் விஷயம் ஷரியா கொள்கைப்படி தீர்க்கப்பட்டது. “தியத்’ என்பது ஷரியாவின் கொள்கை. அதாவது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். டேவிஸ் விடுதலை ஆவதற்காக 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்க கொடுத்தது. காந்தகார் என்னும் இடத்தில் அமெரிக்க துருப்புகள் சில ஆப்கானியர்களை கொன்றனர். இதற்கும் அமெரிக்கா பணம் கொடுத்து தன்னுடைய துருப்புகளுக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தது. அமெரிக்க துருப்புகள் 17 ஆப்கானியர்களை கொன்று இருந்தனர். இந்த 17 குடும்பங்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 46,000 அமெரிக்க டாலர்களை அமெரிக்கா கொடுத்தது. அமெரிக்கா துருப்புகளால் காயம் ஏற்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த தொகையில் கால் பங்கு  கொடுக்கப் பட்டது.

சவூதி அராபியதான் இத்தகைய இஸ்லாமிய நீதியின் படி அமைந்த பிணயத் தொகையை உலக அளவில் தீர்மானிக்கிறது. இது வரை ஒரு இஸ்லாமியர் கொல்லப்பட்டால் அவரது குடும்பத்திற்கு 29, 330 அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று அந்த நாடு நிர்ணயம் செய்து இருந்தது. இப்போது 1,06,654 அமெரிக்க டாலர்கள் கொல்லப்பட்ட ஒரு முஸ்லீமின் குடும்பத் திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சவூதி அராபிய நிர்ணயம் செய்துள்ளது. செப்டம்பர் 2011 இல் இருந்து “இந்த விலை உயர்வு “அமலுக்கு வந்துள்ளது. ஒட்டகங்களின் விலை அதிகமாகி விட்டதால் இந்த விலை உயர்வாம். ஒட்டகங்களுக்கும் இந்த விலை உயர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. “தியத்”பிணயத் தொகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? ஒரு இஸ்லாமியனின் உயிர் 100 ஒட்டகங்களின் விலைக்கு சமம். ஒரு இஸ்லாமியப் பெண்ணின் உயிர் இதில் பாதி விலைக்கு சமம் 26/11 மும்பை தாக்குதல்களில் படுகொலை செய்யப் பட்டவர்களுக்கு இந்த “விகிதத்தைப்”போட்டுப் பாருங்கள்.

மும்பை மீது பாகிஸ்தான் கட்டளைப்படி பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய ஆக்ரமிப்புகளில் 166 மும்பைவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில்தான் ஒம்ப்லேயும் உள்ளார். இவர்கள் அனைவரும் 16,600 ஒட்டகங்களுக்கு சமம். சவூதி அராபிய நாட்டுக் கணக்கின்படி கொல்லப்பட்ட இவர்களின் குடும்பங்களுக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்தது போல் பாகிஸ்தானும் கசாபின் விடுதலைக்காக 18 மில்லியன் அமெரிக்கா டாலர்களை கொடுக்க முன் வந்தால், நம் நாட்டில் உள்ள மனித உரிமைவாதிகள் என்ன சொல்வார்கள்? கசாப்பால் கொல்லப்பட்ட ஒவ்வொரு மும்பைவாசியின் குடும்பத்துக்கும் 100 ஒட்டகங்களுக்கு சமமான பணம் கிடைக்கும்.  .ஆனால் இங்குள்ள மனித உரிமைவாதிகள் கசாபை எந்த தொகையும் வாங்கிக் கொள்ளாமலே, விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பிவிடுவார்கள். நம் நாட்டு மனித உரிமைவாதிகள் “தியத்” சட்டத்தை விட தாராள மனப்பான்மை கொண்டவர்கள் அல்லவா!

இத்தாலிய சம்மந்தத்தின் சக்தி – குருமூர்த்தி

அந்த இரண்டு சம்பவங்களுமே ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. முதலாவது சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த இரண்டு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் கொல்லப்பட்டனர். இதற்காக இரண்டு கப்பல் ஊழியர்கள் கைது செய்யப் பட்டனர். இரண்டாவது சம்பவத்தில் ஒடிஷா மாநிலத்தில் நக்சல்கள் இரண்டு அந்நிய சுற்றுலா பயணிகளை கடத்தி சென்றனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா? இந்திய மீனவர்களைக் கொன்றவர்களும் இத்தாலியர்கள். நக்சல்களால்  கடத்தப்படவர்களும் இத்தாலியர்கள். கடத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இரக்கம் காட்டப்படவேண்டியவர்கள். ஏன் என்றால் அவர்கள் ஒரு குற்றமும் செய்யாமல் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டனர். ஆனால் இந்திய மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் கொன்றவர்களுக்கு எந்த இரக்கமும் காட்ட தேவை இல்லை.

மீனவர்களை கொன்ற இத்தாலிக்காரர்கள்

இந்திய அரசாங்கம் இத்தாலியர்கள் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு சம்பவங்களையும்  எவ்வாறு கையாளப் போகிறது என்பதை விஷயம் தெரிந்த இந்தியர்கள் கடந்த இரு மாதங்களாக எதிர்பார்ப்போடு கவனித்து கொண்டு இருந்தனர். இதற்கான காரணங்கள் வெளிப்படைதான். இந்த இரண்டு விசயத்திலும் சம்மந்தப்பட்டவர்கள் ஆளும்  ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கும் தேசிய ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் சோனியாகாந்தியின் இத்தாலிய நாட்டில் சேர்ந்தவர்கள்.

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலியர்

எந்த விலை கொடுத்தாவது இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை விடுவித்து விடுவார்கள், இந்திய மீனவர்களைக் கொன்றவர்களும் சுதந்திரப் பறவைகளாக சென்று விடுவார்கள் என்று அனைவருக்குள்ளும் சந்தேகம் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது. இந்த சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்ப்பது போல் இத்தாலிய அரசாங்கம் இந்திய மீனவர்கள் கொலை செய்யப் பட்ட விஷயத்தில் வெளிப்படையாகவே இந்திய நீதி துறையின் செயல்பாட்டில்  குறுக்கிட்டது. ஆனால் கேரளாவின் முதல் மந்திரி ஊமன் சண்டி சரியாக செயல்பட்டார். இந்திய மீனவர்களைக் கொன்ற இத்தாலிய கப்பல் என்ரிக்க லெகசியை அவர் சிறை பிடித்தார். இந்திய மீனவர்களைக் கொன்ற அந்த கப்பலில் இருந்த இரண்டு இத்தாலியர்களை அவருடைய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலியர்களால் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் இத்தாலிய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை இந்திய மீனவர்களை கொள்ளைக்காரர்கள் என பட்டம் சூட்டியது. இந்திய மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது. இந்திய கொள்ளைக்காரர்கள் ஆயுதங்களுடன் இருந்ததை தொலைவில் உற்றுப் பார்க்கும் கருவிகள் மூலம் உறுதிப் படுத்திக் கொண்டதாகவும் அறிக்கை கூறியது. இதன் பிறகு இத்தாலிய கடற்படை ஆட்கள் எச்சரிக்கை அளிக்கும் முறையில் சுட்டதாகவும், அதை அடுத்து இந்திய கடல் கொள்ளையர்கள் திரும்பி சென்று விட்டதாகவும் இத்தாலிய தூதரக அறிக்கை தெரிவித்தது. இது முற்றிலும் பொய் அறிக்கை ஆகும். இந்திய படகில் ஒன்பது மீனவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அதில் விழித்து கொண்டு இருந்த இரு மீனவர்களை தான் இத்தாலிய கப்பல் ஆட்கள் சுட்டு கொன்று உள்ளனர். இது அப்பட்டமான கொலை ஆகும். ஆனால் இத்தாலியர்கள் இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைகளுக்கு அப்பால் நடந்ததாகவும், எனவே இந்திய இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிக்க ஆரம்பித்தனர்.

பாதிரி அல்லன்சேரி

ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் அப்போது இந்த விஷயத்தில் பிரவேசித்தது. ரோம் நாட்டில் உள்ள போப் ஜார்ஜ் அல்லன்செர்ரி (கேரளாக்காரர்!) என்பவரை புதிதாக கார்டினல் ஆக நியமித்து இருந்தார். இந்த கார்டினல் ரோமில் உள்ள பிதேஸ் என்னும் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தான் கேரளாவில் உள்ள கத்தோலிக்க பாதிரிகளை உடனடியாக தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் மூலம் கேரளா அரசாங்கம் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் ஜார்ஜ் அல்லன்செர்ரி தெரிவித்தார்.

இதனிடையில் இந்திய மீனவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உள்ள உரிமையை இத்தாலிய நாடு திமிர்த்தனமாக நிராகரித்தது. ஆனால் இந்த திமிர்த்தனத்திற்கு எதிராக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கடும் நடவடிக்கை எடுத்தது. இத்தாலிய நாடு தன்னுடைய குடிமக்கள் அப்பாவிகள் என்று வருணித்த அதே நாளில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி (இவர் கேரளாவை சேர்ந்தவர்) குற்றவாளிகள் இந்திய சட்டத்தின் கீழ் தண்டிக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்.

ரோம் முதலில் ஒரு அமைச்சரை அனுப்பியது. பிறகு அதன் அயல் நாட்டு மந்திரியை அனுப்பியது. இதன் மூலம் புது டில்லிக்கு நெருக்கடி கொடுக்க இத்தாலிய நாடு நினைத்தது. இந்தியா இரண்டு இத்தாலிய கொலைகாரர்களும் இந்தியாவில் விசாரிக்கப்படுவார்கள் இத்தாலியில் அல்ல என்று உறுதியாக தெரிவித்தது.

கொலைகார துப்பாக்கி சூடு இத்தாலிய கப்பலில் இருந்துதான் மேற்கொள்ளப் பட்டது. இந்த கொலை இந்தியா நீர் வழி ,கடல் வழி எல்லைக்குள்தான் நடந்துள்ளது. கேரளா கடற்கரையில் இருந்து 22 கிலோமீட்டர் பரப்பு இந்திய எல்லைக்குள் உள்ளது என்று இந்திய அரசாங்கம் உறுதியாகவும் இறுதியாகவும் தெரிவித்தது. இத்தாலிய கப்பல் இந்திய நீர் வழி எல்லைக்குள் இருந்தபோது இக்கொலை நடந்துள்ளதால் இந்த குற்றம் இந்தியாவில் மட்டுமே விசாரிக்கப் படவேண்டும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்தது. இதன் பொருட்டு முழு விசாரணை அவசியம் என்றும் இந்திய அரசு தெரிவித்தது.

இத்தாலிய கப்பலை விடுவிக்க கோரி கப்பல் நிறுவனத்தின் மூலம் தொடரப்பட்ட வழக்கில் கேரளா உயர் நீதி மன்றம் வங்கி உறுதியை பெற்றுக்கொண்டு இத்தாலியக் கப்பலை விடுவிக்கலாம், தேவைப்படும்போது இத்தாலியக் கப்பலும் அதில் பணி செய்பவர்களும் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை   செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்க்கு இடையில் நக்சலைட்டுகளால் கடத்தி செல்லப் பட்ட இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் சிக்கலான இந்தியா இத்தாலிய உறவுகளில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தைஏற்படுத்தினர். நக்சல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ஒடிஷா  போலீசார் அவர்களை எச்சரித்து இருந்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை இத்தாலிய சுற்றுலா பயணிகள் பொருட்படுத்தவில்லை.

அவர்களுடைய தான் தோன்றித்   தனத்துக்காக ஒடிஷா அரசு  மிகப்பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்தது. இந்தியாவுக்கு ஊறு விளைவித்து பண்டமாற்று முறையில் இத்தாலிய சுற்றுலா பயணிகளை விடுவிக்க நேர்ந்தது.

ஒன்றல்ல இரண்டல்ல 27 கொடுமையான குற்றவாளிகளை ஒடிஷா அரசு விடுவித்து, ஒரே ஒரு இத்தாலிய சுற்றுலா பயணியை நக்ஸல்களிடம் இருந்து மீட்டது. இந்த 27  பேரில் 15 நக்சல்களும் அடங்குவர் .இன்னொரு இத்தாலிய சுற்றுலா பயணியை நக்சல்கள் ஏற்கனவே விடுவித்து விட்டனர் .இந்த விஷயத்தை இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே கையாண்டு வந்தார். இந்த பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகள் இத்தாலியர்களாக இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்தான் இவ்வளவு அலங்கோலமும் அரங்கேறியது.  அந்த சுற்றுலாப் பயணிகள் கானா அல்லது உகண்டா அல்லது  கென்யாவை சேர்ந்தவர்களாக இருந்து இருந்தால் அவர்களை விடுவிக்க இவ்வளவு பெரிய விலையை இந்திய அரசு கொடுத்துஇருக்குமா? இந்த கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்றது.இருந்தும் இந்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிவு இல்லை. எடுத்ததெற்கெல்லாம் சவடால் விடும் ஊடகங்கள் கூட இந்த விஷயத்தில் மௌனம் சாதித்தன. சோனியா காந்தியின் நாடு ஆயிற்றே மூச்சு விடுவார்களா? மூச்சு விட்டால்தான் பிழைத்து இருக்க இயலுமா? அவ்வளவு தான் அவர்கள் துணிச்சல்.

இத்தாலியர்கள் கடத்தப்படுவது அவர்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருக்கிறது. 2004 இல் இருந்து 2007 வரை ஒவ்வொரு வருடமும் ஒரு இத்தாலியரை தலிபான்கள் கடத்தியுள்ளனர். அவர்களில் நால்வர் பத்திரிக்கையாளர்கள். இந்த அவரில் இரண்டு இத்தாலியர்கள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் விடுவிக்கப் பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட மூன்று இத்தாலியர்களில் ஒருவரை பணம் கொடுத்து மீட்டனர். இன்னொரு இத்தாலியரை விடுவிக்க ஆப்கான் அரசு தான் பிடித்து வைத்து இருந்த 5  தலிபான்களை சிறையில் இருந்துவிடுதலை செய்தது. இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை நக்சல்கள்இடம் இருந்து விடுவிக்க ஒடிஷா அரசு மிகப் பேரும் விலையைகொடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இது நடந்த ஒருவாரத்திற்குப் பிறகு ஒரு செய்தி வந்தது .என்ன தெரியுமா? 14மாதங்களுக்கு முன்பு அல் கைதா ஆட்கள் ஒரு இத்தாலியப்பெண்மணியை கடத்தி சென்று இருந்தனர். ஓடிஷாவில் இத்தாலியசுற்றுலாப் பயணிகள் பெரும் விலை கொடுத்து மீட்கப்பட்டதற்கு 4 நாட்கள் முன்புதான் அல் கைதாவினர் அந்த இத்தாலிய பெண்மணியைவிடுதலை செய்தனர். இவ்வளவு நீண்ட காலத்திற்கு அல் கைதாவினர்அந்த இத்தாலிய பெண்மணியை எங்கு வைத்து இருந்தனர் என்பதுகுறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.ஒருவரும் தெரிந்துகொள்ளவும் அக்கரைப் படவில்லை. இதனால் எந்த குடியும் முழுகியும்விடவில்லை,அல் கைதா விஷயம் போல் இந்தியாவும் சில மாதங்கள் பொருத்து இருக்கலாம் அல்லவா? 14மாதங்கள் இல்லை என்றாலும்சில மாதங்களாவது பொருத்துஇருக்கலாம் அல்லவா ? தாலிபான்பிடியில் இருந்து ஒரு இத்தாலியரை மீட்க ஆப்கான் அரசு கொடுத்த விலையைப் போல் ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்து நக்சல்கள்பிடியில் இருந்து இத்தாலிய சுற்றுலா பயணியை இந்திய அரசுமீட்டுள்ளது. இவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்னஇருந்தது? இது வியப்பாக இல்லையா?

இதற்க்கு இடையில் நக்சலைட்டுகளால் கடத்தி செல்லப்பட்ட இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் சிக்கலான இந்தியா இத்தாலிய உறவுகளில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினர்.

நக்சல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என ஒடிஷா போலீசார் அவர்களை  எச்சரித்து இருந்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை இத்தாலிய சுற்றுலா  பயணிகள் பொருட்படுத்தவில்லை.அவர்களுடைய  தான்தோன்றித்  தனத்துக்காக ஒடிஷா அரசு மிகப்பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்தது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பண்டமாற்று முறையில் இத்தாலிய சுற்றுலா பயணிகளை விடுவிக்க நேர்ந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 27 கொடுமையான குற்றவாளிகளை ஒடிஷா அரசு விடுவித்து, ஒரே ஒரு இத்தாலிய சுற்றுலா பயணியை நக்ஸல்களிடம் இருந்து மீட்டது. இந்த 27 பேரில் 15 நக்சல்களும் அடங்குவர். இன்னொரு இத்தாலிய சுற்றுலா பயணியை நக்சல்கள் ஏற்கனவே விடுவித்து விட்டனர். இந்த விஷயத்தை இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே கையாண்டு வந்தார். இந்த பொறுப்பற்ற சுற்றுலாப் பயணிகள் இத்தாலியர்களாக இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்தான் இவ்வளவு அலங்கோலமும்அரங்கேறியது. அந்தசுற்றுலாப் பயணிகள் கானா அல்லது

உகண்டா அல்லது கென்யாவைசேர்ந்தவர்களாக இருந்து இருந்தால்  அவர்களை விடுவிக்க இவ்வளவு பெரிய  விலையை  இந்திய அரசு கொடுத்து இருக்குமா? இந்த கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்றது.இருந்தும் இந்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிவு இல்லை. எடுத்ததெற்கெல்லாம் சவடால் விடும் ஊடகங்கள் கூட இந்த விஷயத்தில் மௌனம் சாதித்தன. சோனியா காந்தியின் நாடு ஆயிற்றே! மூச்சு விடுவார்களா ? மூச்சு விட்டால்தான் பிழைத்து இருக்க இயலுமா? அவ்வளவு தான் அவர்கள் துணிச்சல்.

இத்தாலியர்கள் கடத்தப்படுவது அவர்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருக்கிறது. 2004 இல் இருந்து 2007 வரை ஒவ்வொரு வருடமும் ஒரு இத்தாலியரை தலிபான்கள் கடத்தியுள்ளனர். அவர்களில் நால்வர் பத்திரிக்கையாளர்கள். இந்த அவரில் இரண்டு இத்தாலியர்கள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் விடுவிக்கப் பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட மூன்று இத்தாலியர்களில் ஒருவரை பணம் கொடுத்து மீட்டனர். இன்னொரு இத்தாலியரை விடுவிக்க ஆப்கான் அரசு தான் பிடித்து வைத்து இருந்த 5  தலிபான்களை சிறையில் இருந்து விடுதலை செய்தது.

இத்தாலிய சுற்றுலாப் பயணிகளை நக்சல்கள் இடம் இருந்து விடுவிக்க ஒடிஷா அரசு மிகப் பெரும் விலையை கொடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இது நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு செய்தி வந்தது என்ன தெரியுமா ?14 மாதங்களுக்கு முன்பு அல் கைதா ஆட்கள் ஒரு இத்தாலியப் பெண்மணியை கடத்தி சென்று இருந்தனர். ஓடிஷாவில்  இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் விலை கொடுத்து மீட்கப்பட்டதற்கு 4  நாட்கள் முன்புதான் அல் கைதாவினர் அந்த இத்தாலிய பெண்மணியை விடுதலை செய்தனர். இவ்வளவு நீண்ட காலத்திற்கு அல் கைதாவினர் அந்த இத்தாலிய பெண்மணியை எங்கு வைத்து இருந்தனர் என்பது குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.ஒருவரும் தெரிந்து கொள்ளவும் அக்கரைப் படவில்லை. இதனால் எந்த குடியும் முழுகியும் விடவில்லை, அல் கைதா விஷயம் போல் இந்தியாவும் சில மாதங்கள் பொருத்து இருக்கலாம் அல்லவா? 14  மாதங்கள் இல்லை என்றாலும் சில மாதங்களாவது பொருத்துஇருக்கலாம் அல்லவா ? தாலிபான் பிடியில் இருந்து ஒரு இத்தாலியரை மீட்க ஆப்கான் அரசு கொடுத்த விலையைப் போல் ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்து நக்சல்கள் பிடியில் இருந்து இத்தாலிய சுற்றுலா பயணியை இந்திய அரசு மீட்டுள்ளது. இவ்வளவு அவசரம் காட்டவேண்டிய அவசியம் என்ன இருந்தது? இது வியப்பாக இல்லையா ?

இப்போது இந்திய மீனவர்களை இத்தாலிய கப்பல் ஆட்கள் கொலை செய்த விஷயத்திற்கு வருவோம். உச்ச நீதி மன்றத்தின் முன் இருந்த கேள்வி சிறை பிடிக்கப்பட்ட இத்தாலிய கப்பலை கடல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கலாமா என்பது தான்.  ஹரின் ராவல் இந்தியாவின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆக உள்ளார். இத்தாலிய கப்பல் ஆட்கள் இந்திய மீனவர்களைக் கொன்ற போது இத்தாலியக கப்பல் இந்திய கடல் நீர் எல்லைக்குள் பயணம் செய்து கொண்டு இருக்கவில்லை என்று அவர் உச்ச நீதி மன்றத்திடம் கூறினார். இதன் மூலம் உச்ச நீதி மன்றத்தையும் நாட்டையும் ஹரின் ராவல் அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். இத்தாலிய நாடு சொல்வதும் இதுதான். அது இந்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் வாயில் இருந்து வருகிறது. சுருங்கக் கூறுவது என்றால் இந்தியாவின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் இத்தாலிய நாட்டின் ஊது குழலாக செயல் பட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் வெளியுறவுத் துறை, இந்திய கப்பல் அமைச்சர், கேரளா முதல்வர் எல்லோருமே பொய்யர்கள் என்று ராவல் மறைமுகமாக கூறுகின்றார். ஆனால் மத்தியானம் ராவல் உச்ச நீதி மன்றத்தில் பேசும்போது தான் காலையில் தெரிவித்தது அரசாங்க நிலைப்பாடு அல்ல அது தன்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.

இத்தாலிய கப்பல் இந்திய கடல் நீர் எல்லைக்குள் இருந்ததா,இல்லையா என்பது  எப்படி ஒருவரின் அபிப்ராயம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்க முடியும்? நம் நாட்டு வெளியுரவு துறையும், கேரளா முதல்வரும் ஹரின் ராவல் சொல்வது தவறு என்று சொன்னார்கள். கேரளா முதல்வர் ஹரின் ராவலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னார். கப்பல் அமைச்சகம் ராவல் அதிகப் பிரசங்கித் தனமாக செயல் பட்டுள்ளார் என்று கூறியது. ஆனால் சேதம் என்னவோ ஏற்பட்டுவிட்டது. அந்த ஒரு வார்த்தையில் கேரளா அரசாங்கம் இத்தாலிய கப்பல் கொலைகாரர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கை கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஒன்றும் இல்லாததாக ஆக்கி விட்டார். இத்தாலிய கப்பல் இந்திய கடல் நீர் எல்லைக்குள் இருக்கவில்லை என்று இந்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் சொன்னதை மேற்கோள் காட்டியே இத்தாலிய கொலைகாரர்கள் தப்பித்துவிடுவார்கள். தான் அப்படி சொல்லவில்லை என்று ராவல் உச்ச நீதி மன்றத்தில் மறுக்க முடியுமா? இத்தாலிய கப்பல் கொலைகாரர்களுக்கு எதிரான வழக்கு அனேகமாக முடிந்துபோன ஒரு விஷயம் ஆகிவிடும்.

சோனியா

கூடுதல் சொலிசிடர் ஜெனரல் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த விஷயத்தை நீர்த்துப் போக செய்துள்ளார். யார் அவரை இவ்வாறு செய்ய தூண்டியுள்ளனர்? இதுதான் மண்டையைக் குடையும் கேள்வி. விஷயம் தெரிந்த இந்தியர்கள் இத்தாலிய கப்பல் கொலைகாரர்கள் எப்படியும் சுதந்திரப் பறவைகளாக வெளியே வந்து விடுவார்கள் என்று அச்சப் பட்டுக் கொண்டு இருந்தனர். கூடுதல் சொலிசிடர் ஜெனரல் செய்த துரோகம் அவர்கள் அச்சத்தை உண்மையாக்கிவிட்டது. கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கேரளா முதல்வர், கப்பல் அமைச்சகம், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு அமைச்சகம் என அனைவரையும் துச்சமாகக் கருதி செயல் பட்டுள்ளார். இந்த அளவுக்கு அவருக்கு யார் தைரியம் கொடுத்து இருக்க முடியும்? விடை எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான ஒன்று தான். விடை வேறென்ன? சோனியா தான்.

-  மொழி பெயர்ப்பாளர் ரோஹிணி