Archive for ஆன்மீகம்

இந்து மதம் ஒரு வாழ்வு முறை

இந்து மதம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்வு முறை. சகலத்தையும் அரவணைத்துச் செல்வதில்தான் இந்து தர்மத்தின் அழகு.  தத்தமது நம்பிக்கைக்கும் தர்மத்திற்கும் உகந்தபடி கடவுளை வழிபடச் சொல்லுகிறதுஇந்து தர்மம். ஆகவே மற்ற அனைத்து மதங்களுடனும் ஒத்திசைந்து செல்கிறது.

அகிம்சை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதே எனினும் அது இந்து தர்மத்தில் அருமையான வெளிப்பாட்டைப் பெற்றுள்ளது. இந்து தர்மம் காலங்காலமாய் வளர்ந்து வருவது இந்து தர்மம் தேக்கமற்றது.

மகாத்மா காந்தி     

வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசானை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே  நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவையருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடு தனிப்பரம் பொருளே!
மகாகவி பாரதி     

கேரளாவில் புட்டோவின் பேத்தி

கேரளாவில் புட்டோவின் பேத்தி
 
 
 
 
 
 
 
 
 

கேரளா: திருவனந்தபுரத்தில் கோவளம் இலக்கியக் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மறைந்த புட்டோவின்  பேத்தி பாத்திமா புட்டோ கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். அந்நிகழ்ச்சியின் போது அவர் சேலை அணிந்து நெற்றியில் அழகாக பெரிய குங்குமப் பொட்டும் வைத்திருந்தார். கேரளாவில் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளின் பத்வாவிற்கு பயந்து முஸ்லிம்கள் எவரும் எந்த நிகழ்ச்சியிலும் குத்துவிளக்கு ஏற்ற முன்வருவது கிடையாது. முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணியமுடியாது. சமீபத்தில் கேரளாவில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்த பெண் ஒருவருக்கு பத்வா கொடுக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பாத்திமா புட்டோ கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியினை இஸ்லாமியர்கள் நடத்தி வருகின்ற நாளிதழ்கள் வெளியிடவில்லை.