விஜயபாரதம் வெளியீடுகள்
புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் திரு.எஸ்.எல்.பைரப்பா அவர்கள் எழுதி 2007 ஆம் வருடம் வெளிவந்த நூல் “ஆவரணா”. இதுவரை 30 பதிப்புகள் வந்துள்ளன. கன்னடத்தில் எழுத்துலகில் மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கிய நூல்.
இந்நாட்டின் மீது படையெடுத்து போரில் வெற்றி பெற்று நாட்டினைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த துருக்கியர்கள், முஹலாயர்கள் காலத்தில் நடந்த சம்பவங்களையும், தற்போது நமது நாட்டில் மதசார்பற்ற தன்மை என்கிற போர்வையில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது இந்நாவல்.
கன்னடத்தில் வந்த இந்நூல் மராட்டி, ஹிந்தி, சம்ஸ்க்ருத மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரு.ஜெயா வெங்கட்ராமன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தமிழில் இதற்கு திரை என்று பெயரிடப்பட்டுள்ளது. சம்ஸ்க்ருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆவரணா நூலிற்கு 2010௦ ஆம் வருடத்திற்கான சாகித்தய அகடமி விருது வழங்கப் பட்டுள்ளது. இந்நூல் விஜயபாரதம் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. 470௦ பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.250 ஆகும்.
ஆரியராவது திராவிடராவது
ஆரியராவது திராவிடராவதுஎன்கிற நூலை எழுதியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. மிக எளிமையான நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளார். ஆரியர் திராவிட என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத் துள்ளார். இந்நூல் மறுபதிப்பாக விஜயபாரதம் பதிப்பகத்தினரால் வெளியிடப் பட்டுள்ளது. விலை ரூ. 20.00. *******************************************************************
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்கிற இந்நூல் அவரின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஈ.வே.ரா. குரல் கொடுத்ததே கிடையாது என்பதை தகுந்த ஆதரங்களுடன் முன்வைத்துள்ளார் இந்நூலாசிரியர் ம. வெங்கடேசன். ஈ.வே.ரா.அவர்கள் தமிழைப் பற்றி, தமிழ் இலக்கியங்களைப் பற்றி கொண்டிருந்த எண்ணங்களையும் நயம்பட எடுத்துரைத்துள்ளார். ஈ.வே.ரா.என்றாலே அவரை எவரும் விமரிசிக்கக் கூடாது. அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்றிருந்த சூழலில் அவரைப் பற்றிய விமரிசனத்தை துணிச்சலுடன் தகுந்த ஆதரங்களுடன் எழுதியுள்ளார் இந்நூலாசிரியர். விஜயபாரதம் பதிப்பகம் சார்பில் இந்நூலின் 3 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்கங்கள் 200 விலை ரூ.100.00
பீஷ்மர்
மகாபாரதத்தில் வருகின்ற பிதாமகர் பீஷ்மர் பற்றிய ஒரு சிறு அறிமுக நூல் இது. அவரது பிறப்பின் ரகசியம். அவர் ஏற்றுக் கொண்ட சபதம். அம்புப் படுக்கையில் இருந்து கொண்டு அவர் கூறிய நல்லுரைகள் போன்றவைகளை எடுத்துக் கூறுகிறது இந்நூல். விலை.ரூ.20.00௦.௦௦