Archive for சுதேசி

அமெரிக்காவை அழித்துக் கொண்டிருக்கும் வால்மார்ட்

ஒரு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், மன்மோகன் சிங், சோனியா, மக்கள் விரோத அரசு சில்லறை வணிகத்தில் 51 சதவீத பல்முனை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. ஒரு  கிழக்கிந்திய கம்பனி இந்தியாவை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆண்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்தியாவை சூரிய சந்திரர்கள் உள்ளவரை அந்நியர்கள் ஆளத் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மீர்ஜபார்களும் ,ஜெயச்சந்திரன்களும் இன்னும் நம் நாட்டில் காங்கிரஸ் வடிவில் உயிரோடுதான் இருந்து வருகின்றனர். 
 
வால் மார்ட் நம் நாட்டுக்குள் வந்தால் இங்கு தேனும் பாலும் ஓடும் என்று அமெரிக்க அடிமைகள் ஓலம் இடுகின்றனர். ஆனால் வால்மார்ட் அமெரிக்காவிற்கே என்ன செய்து கொண்டு உள்ளது? அமெரிக்காவை அமெரிக்கர்களை, அமெரிக்க வேலைகளை, திட்டமிட்டு அழித்து வருகிறது. அமெரிக்காவை ஓட்டாண்டியாக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வால்மார்ட் இந்தியாவை சொர்க்க புரியாக்குமா? ஆக்கும் என்று சொல்பவர்களை நம்பி நாம் மோசம் போகவேண்டுமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்டைப் பற்றி அமெரிக்க அறிவு ஜீவிகள், அமெரிக்கர்கள், அமெரிக்க  செய்தி தாள்கள் கூறிவருவதைப் பற்றி கீழ்காணும் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகாவது நம் நாட்டில் உள்ள அமெரிக்க அடிமைகள் திருந்துவார்களா? 
 
மொழி பெயர்ப்பாளர்: லா.ரோஹிணி
Is Wal-Mart DestroyingAmerica? Facts About Wal-Mart That Will Absolutely Shock You 
 
வால்மார்ட் அமெரிக்காவை அழித்துக்கொண்டு இருக்கிறதா? வால்மார்டைப் பற்றிய உண்மைகள்! இவை உங்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.

அமெரிக்கா வால்மார்டை முற்றிலும் நேசிக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் 100 மில்லியன் (10கோடி) வாடிக்கையாளர்கள் வால்மார்ட் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் வால்மார்ட் அமெரிக்காவுக்கு நல்லதா? நன்மையா? பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்பதில்லை. நம்மில் பெரும்பாலோர் பெரிய, சுத்தமாக உள்ள கடைகளில் பொருட்களை வாங்கவே விரும்புகின்றோம். அந்த கடைகளில் மிக மலிவாக பொருட்கள் கிடைப்பது நமக்கெல்லாம் மிகவும் பிடிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வால்மார்ட் அமெரிக்காவை பல வழிகளில் நாசமாக்கிக் கொண்டுள்ளது.

வால்மார்ட் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான சிறு வணிகங்களை, எண்ணிக்கையில் அடங்காத வேலை வாய்ப்புகளை கடந்த பல வருடங்களில் அழித்து துடைத்து எறிந்து விட்டது. வால்மார்ட் ஒரு மிகப்பெரிய சிறு வணிக பஸ்மாசுரனாக வளர்ந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள வேறு எந்த சிறு வணிக நிறுவனத்தைக் காட்டிலும் வால்மார்ட் ஐந்து பங்கு அதிக பொருட்களை விற்பனை செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக வால்மார்ட் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் மிக அதிக சதவீதப் பொருட்கள் “வெளிநாடுகளில் தயாரிக்கப் பட்டவை”. இதன் காரணமாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களிட மிருந்து பறிக்கப்பட்டுள்ளன, அமெரிக்க பொருளாதாரத்திற்கு  எவ்வளவு ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கோடிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இவை எல்லாவற்றின் காரணமாகவும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்பதை கணக்கிடவே முடியாது. நம்முடைய பொருளாதார நிலைமை எங்கு போய்க் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வால்மார்ட்டின் உதாரணத்தைப்  பார்த்தாலே போதும். மிகவும் அதிகமாக எல்லா அதிகாரங்களை யும் தங்களிடம் குவித்து வைத்துக் கொண்டுள்ள பகாசுர கம்பனிகள் “நம்முடைய பொருளாதாரத்தை முழுவதுமாக, முற்றிலுமாக ஆட்டிப் படைத்து வருகின்றன. இத்தகைய  கம்பனிகள் எவ்வித இரக்கமும் இன்றி எல்லா விதமான வர்த்தகப் போட்டிகளையும் நசுக்குகின்றன. இந்த கம்பனிகள் செலவைக் குறைப்பதற்காக எதையும் செய்ய, எந்த கீழ்த்தரமான நிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளன. இத்தகைய வகுப்புவாத, பகாசுர கம்பனிகளுக் காகத்தான்  நாம் எல்லோரும் எதிர்காலத்தில் வேலை செய்யப் போகிறோமா? ஒரு மிக சிறிய குழுவிடம் எல்லா பொருளாதார செல்வ வளங்களையும் கொண்டு குவிக்கும் இத்தகைய கம்பனிகளுக்காகதான்  நம்முடைய உழைப்பு செலவாகப் போகிறதா? இம்மாதிரித்தான்  கம்முனிஸ்டு சீனாவில் நடக்கிறது. அமெரிக்காவில் “சுதந்திரப் பொருளாதாரம்” என்று பறைசாற்றப்படுகிறது. அமெரிக்காவை “போட்டிகள் மூலம்” “இணைந்து செயல்படுவதன்  மூலம்” முன்னேற்றப் போவதாக சொல் கின்றனர். ஆனால் வால்மார்ட் இவை அனைத்தையும்தான் அழித்து நாசமாக்கி வருகிறது.

வால் மார்ட் பற்றிய கீழ்காணும் 20 உண்மைகள் உங்களை முற்றிலும் அதிர்ச்சி அடையச் செய்யும்.

1) வால்மார்ட்டில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க குடும்பம் சராசரியாக 4,000 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறது.

2) 2010௦ ஆம் ஆண்டில் வால்மார்டின் வருமானம் 421பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 170,வெவ்வேறு நாடுகளின் ஒட்டு மொத்த வருமானத்தைக் காட்டிலும் வால்மார்டின் இந்த வருமானம் அதிகம். இந்த 170 நாடுகளில் நார்வே, வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் போன்ற நாடுகளும் அடங்கும்.

3) வால்மார்ட்  ஒரு தேசமாக இருந்தால் அதன் ஒட்டு மொத்த வருமான அடிப்படையில் அது உலக அரங்கில் 23  வது மிகப் பெரிய நாடாக விளங்கும்.

4) அமெரிக்காவில் வேறு எவரைக் காட்டிலும் வால்மார்ட் மிக அதிக அளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 4 டாலர்களிலும் 1 டாலர் வால் மார்டில் மளிகைப் பொருட்கள் வாங்க செலவிடப்படுகிறது.

5) ஒவ்வொரு வாரத்திலும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் வால்மார்ட்டில் பொருட்களை வாங்குகின்றனர்.

6) 2005 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், வால்மார்ட் 1100 கும் மேற்பட்ட “பிரம்மாண்டமான கடைகளை” துவக்கியுள்ளது.

7) இப்போது வால்மார்ட்டில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

8) வால்மார்ட்டுக்கு என ஒரு ராணுவம் இருந்தால், சீனாவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய ராணுவம் வால்மார்ட்டிடம்தான் இருக்கும்.

9) அமெரிக்காவில் 25 வெவ்வேறு மாநிலங்களில் வால்மார்ட் தான் மிகப் பெரிய “வேலை கொடுத்துள்ள முதலாளி”.

10) எகனாமிக் பாலிசி இன்ஸ்ட்டிடுட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். 2001 இல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால், அமெரிக்காவில் 133000  “உற்பத்தி வேலை வாய்ப்புகள்” பறிபோய்விட்டன. இதை அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

11) வால்மார்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி  ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பது அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒரு வருடத்தில் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம்.

12) வால்மார்ட் கம்பனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் “மருத்துவ வசதி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது மருத்துவ செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது. வால்மார்ட் கம்பனி அல்ல.

13) 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் வால்மார்ட் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

14) 96  சதவீத அமெரிக்கர்களுக்கு 20 மையில்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.

15) 1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் ஒட்டு மொத்த “சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கையில்” 60000  சரிந்துவிட்டது.

16) 2011 ம் ஆண்டில் வால்மார்ட் “அரசியல் லாபி” செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. இதை “சென்டர் பார் ரெஸ்பன்சிவ்  பொலிடிக்ஸ்” என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது. இந்தத் தொகையில் பிரசார செலவுகள் சேர்க்கப்படவில்லை.

17)  கஸ்ட்கோ  என்பது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சிறு வணிகத் துறை நிறுவனம் ஆகும். அதை விட 5  மடங்கு அதிகமாக வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்கிறது.

18) வால்மார்ட் கம்பனியின் வெறும் ஆறு குடும்பங்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30 சதவீத அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்கு சமம்.

அமெரிக்கா முழுவதிலும் சுதந்திரமான சிறு வணிகர்கள் வியாபாரத்தை  இழுத்து மூடி கொண்டுள்ளனர். ஏன் என்றால் வால்மார்ட்டுடன் அவர்களால் போட்டி போட முடியவில்லை. வால் மார்ட் கொண்டு வந்து கொட்டும் மிகக் குறைந்த மலிவான சீனப் பொருட்களுடன் அவர்களால் மோத இயலவில்லை. தங்களுடைய பகுதிகளில் வருவதற்காக வால்மார்ட்டுக்கு சமூகங்கள் நிறைய வரி சலுகைகளை வாரிக் கொடுக்கின்றன. ஆனால் வால்மார்டை அழைத்து வருவதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள சிறு வணிகங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர மறுக்கின்றனர்.

அங்கு ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிறு நகரங்களில் உள்ளூர் வணிகம்  172 என்ற சதவீதத்திலும், கிராமப்புறங்களில் 61.4 என்ற சதவீதத்திலும் சரிந்துவிட்டது. இதன் விளைவாக  கடந்த 13 வருடங்களில் 2.46 அமெரிக்க டாலர்கள் பெறுமான இழப்பு வால்மார்ட்டால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் அடிமை வேலை நடைபெறுகிறது. அங்கு வால்மார்ட் கொடுக்கும் கூலி மிகவும் குறைவு. அவர்கள் தயார் செய்யும் பொருட்களை வால்மார்ட் அமெரிக்கா வுக்கு கொண்டு வந்து விற்கிறது. இதன் விளைவாக நன்கு வருமானம் ஈட்டக் கூடிய அமெரிக்க வேலைகள் நாசமாக்கப்படுகின்றன. அமெரிக்கா ஏழை நாடாக மாறிவருகிறது. இந்த விஷயம் திரும்பத் திரும்ப அமெரிக்க மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்.

மக்கள் அரங்கத்தில் வால்மார்ட் ஒன்று சொல்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது வேறு ஒன்றை செய்கிறது. அமெரிக்காவில் உற்பத்தி செய்வது சம்பந்தமாக, வேலை வாய்ப்புகளைக்  குறித்து வால்மார்ட் சிறிதும் அக்கறைப்படுவது இல்லை. தங்களுக்கு எவ்வளவு மலிவாக பொருட்கள் கிடைக்குமோ அவ்வளவு மலிவாக பொருட்களை வாங்கத்தான் வால்மார்ட் அக்கறை காட்டுகிறது. இந்த மாதிரி மலிவான பொருட்கள் அனைத்தையும் சீனாவில் இருந்துதான் வால்மார்ட் பெறுகிறது.

81 வயதான துணிகள் உற்பத்தி செய்யும் ஒரு முதலாளியின்  இந்த அனுபவத்தை கேட்டுவிட்டுப் பிறகு நீங்களே முடிவு செய்யலாம். அவர் பின்வருமாறு சொல்கிறார்.

“தென்மேற்கு துணி உற்பத்தியாளர்கள் வணிகர்கள் சங்கத்தின் தலைவராக நான் இருந்தேன். 1985 கும் 1990 கும் மத்தியில் ஒரு கூட்டம் நடந்தது. டல்லஸ் நகரில் எங்கள் சங்கத்திற்கு ஒரு அழகான கட்டடம்  இருந்தது. இப்போது அது தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டது. ஏன் என்றால் அங்கு வந்து கொண்டு இருந்த சுதந்திரமான வர்தகர்கள் இப்போது அங்கு வருவதில்லை. வால்மார்ட் ஆட்கள் எங்கள் ஸ்தாபனத்தை அணுகினர். நான் மேலே குறிப்பிட்ட கட்டடத்தில் எங்களை வந்து சந்திக்க இயலுமா என்று கேட்டேன். வால்மார்ட்டில் இருந்து இருவர் எங்களை சந்தித்தனர். வெளிநாடுகளில் இருந்து தாங்கள் பொருட்களை தருவிக்கப் போவதாக அவர்கள் சொன்னார்கள். நுகர் பொருட்களுக்கு அவர்கள் சொல்லும் விலையைத் தான் வைக்க வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் தயாராகவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். உலகம் முழுவதிலும் இருந்து நாங்கள் பொருட்களை வாங்கப் போகிறோம் என்று அவர்கள் மேலும் சொன்னார்கள். வால்மார்ட் கம்பெனி ஒன்று,மட்டும்தான் முன்வந்து இதை சொன்னது.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நான் அவர்களுக்கு சில பொருட்களை விற்று வந்தேன். வால்மார்ட் ட்ரக்குகளின் பின்னால் “அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது. வால்மார்ட் கடைகளில் “அமெரிக்காவில் வைத்து இருங்கள்” என்று எழுதப்பட்ட பெரிய பெரிய பேனர்கள் அந்த காலத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும். இதை எல்லாம் வந்தவர்களிடமும், என்னிடம் பொருள் வாங்க வருபவர்களிடமும் நான் நினைவூட்டினேன் இவை எல்லாம் உள்ளூர் அமெரிக்கர்களை கவர்வதற்காக, உண்மையில் உலகம் முழுவதிலும் இருந்து எங்கு பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்குதான் வால்மார்ட் கம்பெனி வாங்கும் என்று அந்த ஆட்கள் சொன்னார்கள்.

சொல்வது ஒன்று. செய்வது வேறு. அதுதான் வால் மார்ட்.

நான் முன்பே எழுதியது போல் 2001 இல் இருந்து வால்மார்ட் கம்பனியால் அமெரிக்காவுக்கு 56000  பொருட்களை உற்பத்தி செய்யும் வசதிகள் பறிபோய் விட்டன.

வால்மார்ட் கம்பனியால் அமெரிக்கா லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறது. அவைகளை திரும்ப மீட்டு எடுக்கவே இயலாது. சீனா 2001 ஆம் ஆண்டில் உலக வர்த்தக ஸ்தாபனத்தில் உறுப்பினரானது. அந்த தருணத்திலிருந்து அமெரிக்கா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50000  பொருட்களை உற்பத்தி செய்யும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது. இதை உங்களால் நம்ப முடியுமா?

சென்ற வருடம் சீனாவுடன் அமெரிக்காவுக்கு இருந்த “வர்தகப் பற்றாக்குறை” போல், உலக சரித்திரத்திலேயே எந்த ஒரு  நாட்டுக்கும் மற்றொரு நாட்டுடன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது இல்லை. இதில் “வால்மார்ட் கம்பெனிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு”.

உண்மையில் வால்மார்ட் கம்பெனி சில அமெரிக்க பொருள் உற்பத்தியாளர்களை  அமெரிக்காவில் கடையை மூடிவிட்டு வெளிநாடுகளில் கடைவிரிக்க பலவந்தப் படுத்தியுள்ளது.அமி ட்ரயுப் என்பவர் சமீபத்தில் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதி உள்ளார்.

வால்மார்ட்டின் “சந்தை சக்தி” மிகப் பெரியது. வால்மார்ட்டுக்கு பொருட்களை விற்கும் மிகப்பெரிய கம்பெனிகளிடம் கூட இன்னும் குறைந்த விலைக்கு கொடு, இன்னும் குறைந்த விலைக்கு கொடு என்று பிடுங்கும் வால்மார்டின் வற்புறுத் தலை  நிராகரிக்க முடியாது. ஏன் என்றால் பிறகு அவர்களுடைய பொருட்களை அவர்கள் விற்கவே முடியாமல் வால்மார்ட் செய்துவிடும். வால் மார்ட்டின் வலிமை அத்தகையது. அமெரிக்காவில் லெவி கம்பெனி “ஜீன்சுகளை” தயாரிக்கிறது. மாஸ்டர் லாக் கம்பெனி பூட்டுகளைத் தயாரிக்கிறது. இந்த மிகப் பெரிய கம்பனிகளை அமெரிக்க தொழிற்சாலைகளை  மூடிவிட்டு வெளி இடங்களுக்கு சென்று பொருட்களை உற்பத்தி செய்யுமாறு வால்மார்ட் செய்து விட்டது. என்னென்றால் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்னும் வால்மார்டின் நிர்பந்தத்திற்கு இந்த மிகப் பெரிய கம்பனிகள் கூட தலை வணங்க வேண்டியதாயிற்று.

வால்மார்ட் அமெரிக்க சமூகங்களிடம் இருந்து மிகப் பெரிய செல்வ வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க சமூகங்களுக்கு வால்மார்ட் எந்த செல்வ வளத்தையும் திருப்பி தருவதில்லை. கோடி கோடி லாபங்கள் அனைத்தும் வால்மார்ட் அதிபர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் கொடுக்கும் விலை குறைந்த பொருட்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வால் மார்ட்டுக்கு நாம் கொடுக்கும் பணம் எல்லாம் அமெரிக்க உள்ளூரில், உள்ளூர் சந்தைகளில் மிக மிகக் குறைந்த அளவுக்கு திருப்பி விடப்படுகிறது. திருப்பி கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் மிகவும் துரதிருஷ்டமான  நிகழ்வுகள் ஆகும்.

பண்டைய நாட்களில் நீங்கள் எலெக்ட்ரானிக் பொருட்களையோ அல்லது ஒரு மளிகைக் கடை நடத்தியோ உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஆனால் வால்மார்டில் வேலை செய்து உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றிவிட முடியாது. வால்மார்டில் பெரும்பாலான வேலைகளுக்கு மிக மிகக் குறைந்த ஊதியமே கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் ஊழியர்கள் பெரும்பாலோர் மிக மிக ஏழைகளாக உள்ளனர். அமெரிக்காவில் வேலை செய்யும் ஏழைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அனைத்து வேலைகளிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகள் “குறைந்த சம்பளத்தில்” உள்ளன. அமெரிக்காவில் “மத்திய தர வர்க்கம்” என்பது இப்போது வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது.

அமெரிக்க வேலைகளையும், அமெரிக்க உற்பத்திகளையும் நாம் ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் அவைகள் நம்மை விட்டுப் போய்விடும். அமெரிக்காவில் வேலை இல்லாமல், அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை பன் மடங்கு இன்னும் அதிகமாக அதிகரித்துவிடும்.

வேலைகள் இல்லாமல் அமெரிக்காவில் செழிப்பு ஏற்படாது. ஆனால் துரதிருஷ்ட வசமாக ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் எவ்வாறு வேலை வாய்ப்புகள், வேலைகள் திட்டமிட்ட ரீதியில்  அழிக்கப்படுகின்றன என்பதை பெரும்பாலான அமெரிக்கர்கள் புரிந்து கொள்வது இல்லை.

அமெரிக்கா இன்று சென்று கொண்டு இருக்கும் பாதை முழுமையான, முற்றிலுமான அழிவிற்குதான் இட்டுச் செல்லப்போகிறது. அமெரிக்காவை பணக்கார நாடு என்ற நிலையில் இருந்து ஏழை நாடாக மாற்றிக் கொண்டு உள்ளனர். முடிவில் ஒவ்வொரு சிறிய அறிவு ஜீவி கூட அமெரிக்காவை அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுவார். அமெரிக்காவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று அரசாங்கத்தை சார்ந்து இருப்பார்கள் அல்லது வேலை செய்யும் ஏழைகளாக ஆகி விடுவார்கள்.

அமெரிக்க அமைப்பு வெளிப்படையான நேர்மையான போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதாக  நாம் நினைக்கிறோம். ஆனால் வால்மார்ட் இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் கம்பனி அல்ல. வால்மார்ட் சிறு வணிகங்களை நசுக்கும் கம்பனி. அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்களை வால்மார்ட்  நிர்மூலம் ஆக்குகிறது. இப்படி எல்லாம் செய்துதான் சீனாவில் தயாரிக்கப்பட்ட மிக மலிவான பொருட்களை வால்மார்ட் அமெரிக்கர்களான நம்மை வாங்க வைக்கிறது.

http://theeconomiccollapseblog.com/archives/is-wal-mart-destroying-america-20-facts-about-wal-mart-that-will-absolutely-shock-you

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமா?

இந்த விஷயத்தில் மெக்ஸிகோ நாடு நமக்கு அளிக்கும் எச்சரிக்கை என்ன?

ஆங்கிலத்தில்:சேகர் சுவாமி ————தமிழாக்கம்:எல்.என்.முர்த்தி

 

வெறும் 2 லக்ஷம்  ஊழியர்களை வைத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனம் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை தன் வசம் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.இதற்க்கு மாறாக இந்திய சில்லறை வணிகம் 4 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவருகிறது.

பாரதத்தில் சில்லறை வியாபாரம்

இந்திய அமைச்சரவை  சில்லறை வணிகத்தில் பலமுனை அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதிப்பது  என்று முடிவெடித்து இருந்தது. இதை மத்திய அரசு கிடப்பில் போட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளே  இந்த முடிவை எதிர்த்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த விஷயத்தில் எங்கே சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு அதை  மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளது. அரசியல் கட்சிகள்  இடையே  பலமுனை சில்லறை வணிகத்தில் கருத்து ஒற்றுமையை உருவாக்க இப்போது காங்கிரஸ் அரசு  முயற்சித்து வருகிறது.

இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஊடகங்களில் அவ்வப்போது  முணு முணுப்புகள் எழுகின்றன.

இந்த சமயத்தில் உலகத்தின் மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனமான  வால்மார்ட்டின் மோசடி வேலைகளைப் பற்றி “நியூயார்க் டைம்ஸ்” நாளிதழில் செய்திக்  கட்டுரையொன்று வெளியாகி உள்ளது. இந்த செய்தி  ஏப்ரல் 22, 2012 தேதியில் பிற பத்திரிக்கைகளிலும்  பிரசுரம் ஆனது. “மிகப் பெரிய மெக்ஸிகோ  ஊழலை பாய்க்கு அடியில் சுருட்டி மறைக்க வால்மார்ட் முயற்சி” என்ற தலைப்பில் அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் அவை. மெக்ஸிகோ நகரில் நடந்துள்ள இந்த ஊழல் நம் நாட்டுக்கு பல முக்கிய படிப்பினைகளைக் கொடுக்கிறது.

மெக்ஸிகோ நாட்டின் பொருளாதார சந்தையில் ஆதிக்கம் செலுத்த வால்மார்ட் பின்னிய ஊழல் வலைகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கை பின்வருமாறு எழுதி உள்ளது, “மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட்டின் துரித வளர்ச்சிக்கு “லஞ்சம்” மிகப்பெரிய பங்கை வகித்துள்ளது”. இதற்கான மிக நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணி செய்தவர் சாப்ட என்பவர். அவர் மூலமாகத்தான் இந்த ஊழல் செய்தி அம்பலம் ஏறியுள்ளது.இவர்  வால்மார்ட் சரக்குகளுக்கு “பர்மிட்டுகள்” வாங்கிக் கொடுக்கும் பணியில் 10  வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். வால்மார்ட் ஊஷல்களைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போன அந்த ஆள் இப்போது அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். இந்த ஊழல் விஷயங்களை எல்லாம் அவர் வால்மார்ட்டின்  அமெரிக்க  தலைமைக்கு  அம்பலப்படுத்தி உள்ளார்.

1991 ஆம் ஆண்டில் வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டுக்குள் நுழைந்தது. வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கில் ஆதிக்கமும் ஏகபோகமும் செலுத்தும் அளவுக்கு வால்மார்ட் வந்துவிட்டது. வால்மார்ட்டுக்கு மெக்ஸிகோ நாட்டில் 2,765 ஸ்டோர்களும், ரெஸ்டாரண்டுகளும் உள்ளன. வால்மார்ட்டின் மிக நெருங்கிய வர்த்தக போட்டியாளர் சொரைன என்னும் கம்பனிக்கும் இந்த அளவுக்கு ஸ்டோர்கள் இருந்தன. வால்மார்ட் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 என்ற எண்ணிகையில் மெக்ஸிகோ நாட்டில் புது ஸ்டோர்களைத் திறந்த வண்ணம் இருந்தது. இம்மாதிரி கடந்த 21 வருடங்களாக மெக்ஸிகோ நாட்டில் வால்மார்ட் ஸ்டோர்களை திறந்து கொண்டு வந்தது. இதன் விளைவாக மெக்ஸிகோ நாட்டில் 209000  ஊழியர்களுடன் வால்மார்ட் நிறுவனம் மிகப்பெரிய தனியார் முதலாளியாக உருவெடுத்தது.

இங்கு இரண்டு விஷயங்களை கவனிப்பது பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடுகளை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க வேண்டும். அப்போது இந்திய சில்லறை வணிகமும், அந்நிய சில்லறை வர்த்தக பெருவணிக நிறுவனங்களும், “சக வாழ்வு” நடத்த முடியும் என்று சிலர் வாதம் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒன்றை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். வெறும் 25 வருடங்களில் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தை வால்மார்ட் கைப்பற்றிவிட்டது. அது மட்டுமல்ல, மெக்ஸிகோ நாட்டின் உள்ளூர் சில்லறை வணிகத்தை வால்மார்ட்  சவக்கிடங்கிற்கு அனுப்பி ஊற்றி  மூடிவிட்டது. உள்ளூர் சில்லறை வணிகர்களை  குழிதோண்டி புதைத்து விட்டது. இந்தியாவின் பலமுனை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை நேரடியாக அனுமதித்தால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் சிலர் வாதிடுகின்றனர். வெறும் 200000 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்திக் கொண்டு வால்மார்ட் மெக்ஸிகோ நாட்டின் சில்லறை வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைப் பறித்துக் கொண்டு விட்டதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தனைக்கும் மெக்ஸிகோவின்  ஜனத்தொகை 112 மில்லியன்கள் ஆகும். இதற்கு மாறாக இந்தியாவின் சில்லறை வணிகம் 40 மில்லியன்கள் அதாவது 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளதையும் இவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

வால்மார்ட் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு  ஆய்வாளர்களை அனுப்பியது. அங்கு போனவர்கள் மிகப் பெரிய அளவில் “லஞ்சம்” கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.120  கோடிகளுக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டு பிடித்தனர். மெக்ஸிகோ நாட்டின் வால்மார்ட் கம்பனியின் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தெரியும் என்பதையும் அமெரிக்காவில் இருந்து சென்றவர்கள் தெரிந்து கொண்டனர். இதற்கான ஆதார ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இந்த லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் தலைமை நிறுவனத்திற்கு தெரியாமல் அவர்கள் மறைத்து விட்டதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல 2003-2005  ஆண்டுகளில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கு “நன்கொடையாகவும்” “காணிக்கையாகவும்” மெக்ஸிகோ வால்மார்ட் நிறுவனம் 80 கோடிகளை “நேரடியாக ” கொடுத்தது. இதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இந்த லஞ்சப் பணம் எல்லாம் “வெளியார் வழக்கறிஞர்கள்” மூலமாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு கேச்டோர்ஸ் என்று பெயர். 2003-2005 இல் மட்டும் இவ்வாறு 441 கேச்டோர்ஸ் மூலமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அதாவது ஒரு வாரத்துக்கு மூன்றுமுறை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டதால் “பெர்மிட்டுகள்” சுலபமாக கிடைத்தன. சுற்றுப்புற சூழ்நிலைகள் கெடுவது காரணமாக எழும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் போயின. இந்த லஞ்சம் காரணமாக உள்ளூர் தலைவர்களின் “ஆதரவு” வால்மார்ட் நிறுவனத்திற்கு  கிடைத்தது. நூற்றுக்கணக்கில் புது புது ஸ்டோர்களை ஒவ்வொரு வாரமும் திறக்க இந்த லஞ்சப்பணம்தான் உதவியாக இருந்தது. இவை எல்லாம் எவ்வளவு வேகத்தில் நடந்தது என்றால் வால்மார்டின் வணிகப்  போட்டியாளர்கள்  இந்த விஷயங்களை குறித்து பேசக் கூட அவகாசம் கிடைக்காத வேகத்தில் நடந்தன. வால்மார்ட் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டின் சட்டங்களை மீறியது. அமெரிக்காவில் அந்நிய ஊழல் நடவடிக்கை சட்டத்தை வால்மார்ட் மீறியது. அமெரிக்க கம்பனிகள் அவற்றின் கிளைகள் அந்நிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை இந்த சட்டம் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.

மெக்ஸிகோ வால்மார்டின் முதன்மை அதிகாரி ரைட் என்பவர் ஆண்டுக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு இவரே காரணகர்த்தா என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  இவருக்கு பெரிய பொறுப்புகள் “அவர் சேவைக்காக” அளிக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இந்த ஆள் அமெரிக்க வால்மார்ட்டின் உதவி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விஷயங்கள் எல்லாம் வால்மார்ட் நிறுவனத்தின் உலக தலைவராக உள்ள லீ ஸ்காட் என்பவருக்கு 2005 இல் தெரிய வந்தது.

இவர் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை ஆய்வை மெக்ஸிகோவிற்கு திரும்ப அனுப்பினார். வால்மார்ட் மெக்ஸிகோவின் எந்த அதிகாரியும் ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியான பிறகு வால்மார்ட் நிறுவனம் வேறு வழிஇன்றி லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயத்தை அமெரிக்க நீதித் துறைக்கு தெரிவித்தது. செச்யூரிடீஸ்  கமிஷனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க சட்டப்படி வெளிநாடுகளில் லஞ்சம் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வால்மார்ட்டுக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கைகள் தொடரும். இதனால்  வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படலாம். வால்மார்ட் மீது பெரும் அபராதத் தொகை விதிக்கப்படலாம். இதன் பிறகே இந்த லஞ்ச வழக்கு முடிவுக்கு வரும்.

ஆனால் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், விவசாயிகள் பொருட்களை வழங்குவோர் மெக்ஸிகோ நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டனர். வால்மார்ட் நிறுவனம் வளர்ந்தது. ஆனால் மெக்ஸிகோ நாட்டு சிறு வணிகர்களின் குடும்பங்கள் இப்போது நடுத்தெருவுக்கு வந்து விட்டன. அவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை என்ன நியாயம் வழங்க முடியும்? அவர்களுக்கு எல்லாம் ஈடு செய்ய இயலாத இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமெரிக்க அரசு என்ன நீதி கொடுக்க முடியும்?

வால்மார்ட் வணிக நிறுவனம்தான் மெக்ஸிகோ நாட்டு மார்க்கெட்டுகளை தன்வசம், தன் கைப்பிடியில் வைத்துள்ளது. அத்யாவசியமான பண்டங்கள் அனைத்துக்கும் மெக்ஸிகோ நாடு தன்னைத்தான் நம்பி இருக்கவேண்டும் என்னும் நிலைமையை வால்மார்ட் உருவாக்கி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் வால்மார்ட்டுக்கு எதிராக மெக்ஸிகோ அரசாங்கம் என்ன கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிட  இயலும்? வால்மார்ட் மெக்ஸிகோவில்  பிரம்ம ராஷசனாக பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது. இனிமேல் மெக்ஸிகோ அரசாங்கத்தால் வால் மார்ட்டை அடக்கமுடியாது, ஒடுக்க இயலாது. மெக்ஸிகோ நாடு இப்போது ஒரு அந்நிய கம்பனியான வால்மார்ட்டை அனைத்துக்கும் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.  தன்னுடைய எல்லைகளுக்கு அப்பால் செயல்படும் ஒரு கம்பனிதான் மெக்ஸிகோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்கிறது.

இம்மாதிரி சூழ்நிலைகள் உருவாகாமல் தடுக்க, இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க, ஒரு சாதாரண  ஒழுங்குபடுத்தும் சட்டம் போதும். ஒரு குற்றப் பின்னணி உள்ள தனிநபர் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போக விசா கொடுக்கப்படுவது இல்லை. இதே மாதிரி  லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட, கடும் குற்றங்கள் இழைத்து உள்ள கம்பனிகளும் இந்தியாவுக்குள்  நுழைய அனுமதிக்கப்படக் கூடாது. இந்தியாவுக்குள் அத்தகைய கம்பனிகள் நுழைவது சட்ட பூர்வமாக தடை செய்யப்படவேண்டும்.

எந்த ஒரு அந்நியக் கம்பனியும் இந்தியாவுக்குள் வந்து கடை திறக்க அனுமதி கோரினால், அவர்களுடைய “வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும்” அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும். உலகம் முழுவதும் அவர்கள் இயங்கும் போது அந்த கம்பனிகள் தண்டனைக்குரிய குற்றங்கள் இழைத்து இருந்தால் அந்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த விஷயங்கள் சம்பந்தமாக சந்தேகமாக செயல்பட்டு இருக்கும் எல்லா கம்பனிகளும் இந்தியாவில் கடை திறக்க அனுமதிக்கப்படக் கூடாது. அவைகள் தடை செய்யப்பட வேண்டும்.

புது விஷயங்கள் தெரிய வரும்போது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் மறு பரீசீலனைக்கு  உட்படுத்தப்பட வேண்டும். இது முற்றிலும் சரியான நடைமுறைதான். இந்திய அரசாங்கம் மெக்ஸிகோவின்  உதாரணத்தைப் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களை அந்நிய கம்பனிகள் பலி கடா ஆக்காமல் தடுக்க முடியும்.

(பின் குறிப்பு:சேகர்சுவாமி அவர்கள் ஆர்.கே.சுவாமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர்.அவர் மே 29 அன்று இக்கட்டுரையை எழுதியுள்ளார்)

 

 

 

 

 

 

 

 

விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை

உணவுப் பாதுகாப்பு மசோதா

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.

உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.  ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன.

இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.  முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும்.

இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது. ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும் கூட புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது.

இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.  மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது.

அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப் போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.

கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.

இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது. மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து.

இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே?

பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?  மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக் கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!

விலை நிலங்கள் வீட்டுமனைகளாக்கி வருகின்ற வேகத்தை பார்த்தால் இந்தியா முழுவதும் விவசாயம் செய்யும் நிலங்களின் மொத்த கணக்கு சரிதானா? என்பது கேள்விக்குரியதாக உள்ளது. தரிசு நிலங்கள் விளை நிலங்களாக்க வேண்டும்.விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை விதிக்க வேண்டும்.இலவசங்களை மறு பரிசீலனை செய்தால்தான் பொருளாதாரம் மேம்படும்.

இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்ச் சேர்ந்துவிடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகை முழுவதையும் உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர். அதாவது இத்திட்டமானது ஏழைகளுக்கு கொடுப்பது போல் கொடுத்து வாக்குகளையும் வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதோடு தொழிலதிபர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு தேர்தல் செலவுக்குப் பணம் வாங்கவே இந்தத்திட்டம்.

இந்தியாவை அமெரிக்காவுக்கே விற்றுவிட

சுதந்திரப் பொருளாதாரத்தில் அடிமையாகும் இந்தியா
ஆர்.எஸ். நாராயணன்

“வளர்ச்சி” “வளர்ச்சி” என்று மூச்சுக்கு மூச்சு கூட்டத்தில் கூடிநின்று கூறும் மன்மோகன் சிங்கும், மதிப்புக்குரிய பிரதமரின் கூட்டாளி அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி கனவான்களும், இந்தியாவை ஒட்டுமொத்தமாக ஒபாமாவுக்கு – அதாவது அமெரிக்காவுக்கே விற்றுவிட முடிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது.

பி.ட்டி விதைகளுக்காகவும் வேறுபல உயிரித் தொழில்நுட்பங்களுக்காகவும் விவசாயத்தை அடகு வைத்தார்கள். அடகு வைத்தால் மீட்கும் வழி தேடலாம். இப்போது விற்பனை தொடங்கப் போகிறது. இந்தியாவில் “”சில்லறை விற்பனை” செய்ய அன்னிய மூலதனத்துக்கு அனுமதி வழங்கப் போகிறார்கள்.

ஆரம்பத்தில் 51 சதம். வால்மார்ட், ஜெனரல் மில், கார்கில் எல்லாம் நுழைந்து இந்திய விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறார்கள். இப்படித்தான் நம்மை மன்மோகன் சமாதானப்படுத்துகிறார். இந்தியாவுக்கு டாலர் முதலீடு வேண்டும்.

கடந்த மூன்றாண்டுகளாக இந்தியாவில் நிகழ்ந்துவந்த பொருளாதார நெருக்கடிகள், அப்படிப்பட்ட பல நெருக்கடிகளுக்கு மத்திய அரசு வழங்கிய சில தீர்வுகள், அப்படி வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவுமே வேலை செய்யாததால் சரி, “”கூப்பிடு வால்மார்ட்டை. போடு கடைகளை, நடத்துங்க ராஜா” என்று உத்தரவு போட்டது சோனியாவா? மன்மோகனா? என்றெல்லாம் ஆராய்வதில் என்ன பயன்?

ஆளும் கூட்டணியின் மெஜாரிட்டி பலம் நிகழ்த்தும் பொம்மலாட்டத்தில் கைதூக்கி, இந்தியர்களை அடிமையாக்கும் எம்.பி.க்களை வாழ்த்துவோம். இந்தியச் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அனுமதிக்குரிய சட்டம் நிறைவேறப்போவதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இப்போதைக்கு ஒத்திவைப்பது ஒரு கண் துடைப்பு.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் விலைவாசி நோய் விஷம் போல் ஏறிக் கொண்டுள்ளது. நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் விலை ஏற்றத்தால் செலவைச் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவதும் வட்டி கட்டுவதும் வாடிக்கையானது.

விலைவாசி ஏறுவது ஏன் என்றால் பணவீக்கம் என்றார்கள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்த வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறினர். வட்டியை உயர்த்தினால் ரூபாய் முதலீடு பிரச்னையாகும். ஆகவே, வட்டியை உயர்த்தக் கூடாது என்று சில நிபுணர்கள் கூறினர். எனினும் ரெப்போ வட்டியைப் பலமுறை உயர்த்தினார்கள்.

ஒவ்வொரு முறையும், அதாவது காலாண்டுக்கு ஒரு தடவை அரைக்கால், கால், அரை, முக்கால், ஒன்று என்று உயர்த்தும்போது இதனால் உற்பத்திக்குப் பங்கம் வராது, முதலீடு பிரச்னை ஆகாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுவதுண்டு. ஆனால், வட்டியை உயர்த்தியதால் ரூபாய் முதலீடு குறைந்து வளர்ச்சி குறைந்து விட்டதாக சமீபத்தில் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டுள்ளதன் பொருள் இப்போது புரிகிறது.

வளர்ச்சிக்கு டாலர் முதலீடு தேவை என்ற எண்ணத்தில் வட்டி உயர்த்தப்பட்டதா? உண்மையில் வட்டி உயர்ந்ததால் பணவீக்கம் குறைந்ததா? இல்லையே. உண்மை புரிந்தது. வளர்ச்சிக்காக நாட்டையே அடகு வைக்கும் மதியூகிகள் குளோபலிசேஷன் என்ற மாயவலைக்குள் சிக்கி ஏற்றுமதி செய்து பணம் திரட்டலாம் என்றனர். அப்படி வரக்கூடிய பணத்தால் உள்ளூரில் உற்பத்தியை உயர்த்தலாம் என்று கருதி, ஏற்றுமதியாளர்களின் நன்மைக்காகப் பணமதிப்பைக் குறைத்தனர்.

பணமதிப்பைக் குறைப்பதன் மறுபெயர் பணவீக்கம். இன்று ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டது. இன்னும் குறையத்தான் போகிறது. பணம் வீங்கத்தான் போகிறது. கடந்த ஆண்டு 47 – 48 ரூபாய்க்கு விற்ற டாலர் இன்று ரூ. 54-க்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு ரூ. 63 – 64 ரூபாய்வரை உயரும். ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் ஏற்றுமதிக்குரிய பொருள் அளவும் கூடும். இப்படிப் பணமதிப்பைக் குறைக்கும்போது டாலர் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் இருக்கும். உள்ளூர் விலைவாசியை ஒருக்காலும் கட்டுப்படுத்த இயலாது.

ஒரு குறிப்பிட்ட பொருளை மலிவாக ஏற்றுமதி செய்து பெறக்கூடிய லாபத்தை வைத்து அப்பொருள் உற்பத்தியை உயர்த்தியதாகவோ, அடக்க விலை குறைந்ததாகவோ இந்திய வரலாறு இல்லை. ஏற்றுமதி மூலம் பெறும் டாலர் அதிக விலையில் இறக்குமதிக்கு உதவுகிறது. ஏற்றுமதி மதிப்பைவிட எப்போதுமே இறக்குமதி மதிப்பு கூடுவதால் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையும் நீடித்த வண்ணம் உள்ளது.

உள்ளூர் உற்பத்தி உயரப் போதிய மூலதனம் இல்லாததால் அரசுக்கடன் பத்திரங்களை விற்க வேண்டியுள்ளது. இதனால் பொது மூலதனம் உயரும். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வாராத கடன் கருதி அமெரிக்க ராஜமுத்திரைக் கடன் பத்திரங்களை “மூடி’ இன்வெஸ்ட்மென்ட் ஏஏஏ+ என்ற நம்பும் நிலையை ஏஏ+ என்று குறைத்தபோது, இந்தியாவில் ஏகப்பட்ட சர்ச்சை. அமெரிக்காவே குடிமுழுகிவிட்டதாக ஊடகங்களும் மிகைப்படுத்தின.

அண்மையில் அதே “மூடி’ இன்வெஸ்டர் ஸ்டேட் வங்கியின் வாராத கடன் அளவு இன்னமும் மோசம் என்று அளந்து ஏ+ ஐக்கூட வழங்கவில்லை. “”இந்திய ரூபாய் வலுவாக உள்ளது. எந்தப் பயமும் வேண்டாம்” என்று அலறிய வங்கி உயர்நிலை அதிகாரிகள் அன்று அமெரிக்கக் கடன் பத்திரங்கள் மதிப்பிழந்து விட்டதாக “மூடி’ மதிப்பிட்டதை ஏற்றார்கள். அதே கருத்தை “மூடி’, ஸ்டேட் வங்கிக்கு வழங்கியபோது மறுத்தார்கள்.

விலைவாசி உயர்வதைக் கட்டுப்படுத்தப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும். பணவீக்கத்தைக் குறைக்க வட்டியை உயர்த்த வேண்டும். வட்டியை உயர்த்தினால் ரூபாய் முதலீடு குறைந்து உற்பத்தி குறையும். ஆகவே, உற்பத்தியை உயர்த்த 51 சதவிகித அன்னிய முதலீடு என்பது உற்பத்தி – மொத்த வியாபாரத் துறைகளில் குளோபலிசேஷன் அறிமுகமான காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது.

உதாரணம்: சுரங்கத் தொழில், உயிரித் தொழில்நுட்பம், மின்சாரம், பொதுச் சேவையில் குடிநீர், வங்கித் தொழில், எஃகு, அலுமினியம், இயந்திரங்கள், கார், லாரி, பல்வேறு மின்சாரச் சாதனங்கள், குளிக்கும் சோப்பு வகையறா உள்பட, விதைகள்.  அப்போதெல்லாம் “”ஆமாம் சாமி” போட்ட எதிர்க்கட்சிகள், இப்போது சில்லறை வர்த்தகத்தில் 51 சத அன்னிய முதலீடு என்றதும் எதிர்ப்பானேன்?

குளோபலிசேஷன் – அதாவது உலக வர்த்தக அமைப்பின் சட்ட-திட்ட விதி ஒழுங்கு முறைகளில் (டங்கல் திட்டம்) இந்தியா கையெழுத்துப் போட்டபோது சில்லறை வர்த்தகத்தில் 51 சதம் விட்டுப் போனதால் இன்று சட்டமோ. யாருக்குத் தெரியும்?

சமையல் கூடத்தையே விட்டுக் கொடுத்து விட்டோம். பரிமாறுவதற்கு ஏன் தடை என்று பிரணாப் முகர்ஜி கேட்பது நியாயந்தானே? மம்தாவின் எதிர்ப்பு ஓயும் வரை ஒத்தி வைக்கலாம். அலைகள் ஓய்ந்த பின்னர் சட்டம் ஒப்புதலாகும் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

டிசம்பர் 4-ம் தேதி செய்தியில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை விவசாயிகள் ஆதரிப்பதாக மத்திய அமைச்சர்களும் மன்மோகனும் கூறினார்கள். மறுநாள் டி.வி.யில் ஆரஞ்சு டர்பனுடன் குர்தா – தோத்தி அணிந்த கூட்டம் தங்களை விவசாயிகள் என்று கூறிக் கொண்டு அன்னிய முதலீட்டைத் தாங்கள் ஆதரிப்பதாகப் பிரதமரிடம் தெரிவித்த காட்சி… நாடகத்தில் சிவாஜியே தோற்றுவிடுவார்! வெள்ளை வெளேரென்று உடை அணிந்த கிளீன் விவசாயிகளை பார்த்ததே இல்லை. இப்போது அரசுக்கு உணவு மானியம் மிகவும் சுமையாக உள்ளது.

விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்குக் குறைந்த விலையில் வழங்கவா அன்னிய முதலீடு வருகிறது? நஷ்டத்துக்கு வியாபாரம் செய்ய அவனுக்கென்ன பைத்தியமா? 1970-களில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் அங்காடி லாபம் பற்றி அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது.  நுகர்வோர் வழங்கும் விலை 1 டாலர் என்றால் அதில் 70 சென்ட் விவசாயிகளின் பங்கு என்று அமெரிக்கப் புள்ளிவிவரம் கூறியது. பரவாயில்லை.  இன்னமும்கூட இந்தியாவில் விவசாயிக்கு நுகர்வோர் விலையில் சராசரி 50 முதல் 65 சதவிகிதமாவது இன்று கிட்டுகிறது. சரக்கு – சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீடு – அதாவது அமெரிக்காவில் நிகழ்ந்த அதே உணவுச்சங்கிலி வரும்போது பழைய இடைத்தரகர்கள் வேலை இழப்பார்கள்.

வால்மார்ட் – டெஸ்கோ – கார்கில் இடைத்தரகர்கள் சூட்டுக் கோட்டுப் போட்ட நவநாகரிகம் படைத்தவர்களாயிருப்பார்கள். தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் என்று அழைத்துக்கொண்டு விளைபொருள்களைக் கசக்கிப் பிழிந்து சோதிப்பார்கள். பின்னர் வழங்கப்படும் விலையைப் பார்த்து, “நம்மூர் இடைத்தரகரே தேவலாம்” என்ற முடிவுக்கு விவசாயிகள் வருவார்கள். உணவுச்சங்கிலி வால்மார்ட் கடை வந்தது. “எல்லாம் கொள்ளை மலிவு” என்ற விளம்பரத்துடன் தொடங்கும். மெல்ல மெல்ல பாரம்பரிய வணிகர்கள் போட்டி போட முடியாமல் அழிவர்.

இனி வாங்க ஆளில்லை என்ற நிலைக்கு வந்ததும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலை குறைந்து, நஷ்டம் தாங்க முடியாமல் விவசாயிகள் நிலத்தை விற்ற பிறகு, கார்ப்பரேட்டு விவசாயம் சக்கை போடு போடும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

1947 ஆகஸ்டு 15-ல் நாம் பெற்ற சுதந்திரத்தை காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெறவில்லை என்று கூறியதை, மன்மோகன் – சோனியா தவறாகப் புரிந்துகொண்டு குளோபலிசேஷன் என்ற சுதந்திரப் பொருளாதாரத்தையும், டாலர் மூலதனங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்த டாலர் சமபங்கில் வேண்டும். அப்படிப்பட்ட டாலர் சுதந்திரத்தில் அடிமையாகக் கட்டுண்டு வாழ்வதில் என்ன தவறு? 1947-க்கு முன் நாம் வாழ்ந்த வரலாறு புத்துருவம் பெற்றுத் திரும்புகிறது. மலர் தூவி வரவேற்பதா? கல்லை எறிவதா? முடிவு உங்கள் கையில்.

தகவல் திரட்டு : இக்கட்டுரை தினமணி நாளிதழில் 2011 டிசம்பர் 13 அன்று பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=521297&SectionID=133&MainSectionID

சந்தைப் பொருளாதாரமா? அல்லது சந்தை சமூகமா?

உறவுக்கு இணக்கமான சந்தை பொருளாதாரம் வேண்டுமா? 

அல்லது உறவற்ற சந்தை சமூகம் வேண்டுமா?

நன்றி.விஜயபாரதம்

ஆங்கிலத்தில்: எஸ். குருமூர்த்தி 

தமிழில்: நிகரியவாதி 

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர்பாக நடைபெற்று வரும் விவாதம் மிகமிக மேலோட்டமாக உள்ளது. ஓர் ஆழமான, பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடைய விவாதத்திற்கு இருதரப்பு சார்ந்த அடிப்படையான ஆழமான கண்ணோட்டங்களை புரிந்துகொள்வது இன்றியமையாததாகும். பாரம்பரியமாக நம் நாட்டில் நடத்தப்பட்டுவரும் சில்லறை வர்த்தகம் தொடர்பான சில அடிப்படை உண்மைகளைக் காண்போம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் சில்லறை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் இவற்றை நடத்தி வருகிறார்கள். விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே நல்ல அறிமுகம் உள்ளது. அண்டை அயலார் சார்ந்த பரிவர்த்தனையாக இது உள்ளது. உறவு சார்ந்த வர்த்தக செயல்பாடாக இது உள்ளது. 

கிராமச் சந்தைகளில் பெண்கள்

நம் நாட்டில் சுமார் 1.5 கோடி சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடைபாதைகளில் விற்பவர்கள், தள்ளுவண்டிகளில் விற்பவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். உலகிலேயே சில்லறை வியாபாரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இங்குதான் உள்ளனர். 8 இந்தியர்களில் ஒருவர் சில்லறை வியாபாரியாக உள்ளார். ஆனால் இந்தியாவை விட அதிக ஜனத்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் இந்த அளவுக்கு சில்லறை வியாபாரிகள் இல்லை. அங்கு வெறும் 13 லட்சம் சில்லறை வியாபாரிகள்தான் உள்ளனர். சீனாவில் 100 பேரில் ஒருவர்தான் சில்லறை வியாபாரியாக உள்ளார். ஒரு சில்லறை வியாபாரியால் நுகர்வோருக்குத் தேவையான எல்லா பொருட்களையும் இருப்பு வைக்க முடியாது. இதனால்தான் நிறைய சில்லறை வியாபாரிகள் உள்ளனர். நடைபாதை வியாபாரிகள், தெருத் தெருவாக நடந்து சென்று விற்பவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தெருக்களில் சின்னஞ்சிறு கடை வைத்திருப்பவர்கள், மளிகைக்   கடைகள் போன்றயாவும் சில்லறை வர்த்தகத்தின் கீழ் வருகின்றன. இவர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோரின் தேவைகளைப்  பூர்த்தி செய்கின்றனர். இந்திய சில்லறை வியாபாரத்தின் மதிப்பு சற்றேறக் குறைய 40 ஆயிரம் கோடி டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு வெறும் 5% மட்டுமே. எஞ்சிய 95% சிறு வியாபாரிகள் வசமே உள்ளது. நம் நாட்டில் சில்லறை வியாபாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இதே முறைப்படித்தான் நடைபெற்று வந்துள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், வேளாண்மை மற்றும் உணவு பொருள் வியாபாரத்தின் பங்கு மொத்த சில்லறை வியாபாரத்தில் 63% ஆகும். 7.4 கோடி சிறு வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகள், குறு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் கூட்டு செயல்பாடு இங்கு உள்ளது. இது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களிடையே நெருக்கமான உறவு உள்ளது. 

சந்தைக் காட்சி

இந்தியாவில் உள்ள 6.8 லட்சம் கிராமங்களில் 5.88 கோடி குறு மற்றும் சிறு விவசாயிகள் உள்ளனர். அவர்கள் 47 ஆயிரம் சந்தைகளில் உள்ள ஒன்றரை கோடி மொத்த வியாபாரிகள்  மற்றும் சிறு வியாபாரிகளிடம் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். உலகிலேயே மிகவும் பரவலாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வியாபாரம் இதுதான். இருப்பினும் 40% விளை பொருள்தான் இவ்வாறு வியாபாரம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 60% பண்டமாற்று முறையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த 60% பகிர்வு மற்றும் 40% விற்பனைதான் கிராமிய இந்தியாவை உயிர்த்துடிப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

வியாபாரிகளின் எதிர்ப்பு

சில்லறை விற்பனையில் நேரடி அந்நிய முதலீடு குறித்து ஆய்வு நடத்திய நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில் (ஜூன் 2009) பாரம்பரியமாக உள்ள சில்லறை விற்பனையில் 4 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் நடத்தும் சிறு வியாபாரத்தில் 20 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் தவறானது என்பதையும் நிலைகுழு சுட்டிக் காட்டியுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது சரிதான். உலகம் முழுவதும் 42,200 கோடி வியாபாரம் நடத்துகின்ற வால்மார்ட் நிறுவனத்தில் 21 லட்சம் பேரே பணியாற்றி வருகின்றனர். 

மொத்த வியாபாரிகள்

இந்தியாவில் சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 5%த்திற்கும் குறைவானவர்களுக்கே கார்ப்பரேட் நிறுவனங்களால் வேலைவாய்ப்பை வழங்கமுடியும். எனவே நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட சிறுவணிகத்தில்,  ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களில் 20ல் ஒருவருக்குத்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஒரு கோடி பேருக்கு சில்லறை வியாபாரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற புள்ளிவிவரத்தை வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா எங்கிருந்து பெற்றார்? அவர் எவ்வாறு கணக்குப் போட்டு இதை தெரிவித்தார்? சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் நான்கு காரணங்களை அடுக்குகிறார்கள். 

1) சில்லறை வியாபாரம் நிறுவன ரீதியாக கட்டமைக்கப்படுமானால் இப்போது வீணாகக்கூடிய ரூ.50,௦௦௦ கோடி மதிப்புள்ள வேளாண் பொருட்கள் செம்மையான முறையில் பாதுகாக்கப்படும். சேதாரம் தவிற்கப்படும். 

2)இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள். விவசாயிகளின் விலைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

3)  வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் வேளாண் விளைபொருட்களை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். சீனாவில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சில்லறை வியாபாரிகளால் இவ்வாறு கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.

4) வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.முதலாவதாக வேலை வாய்ப்பு குறித்து கூறப்படுவது அபத்தமானது, அடிப்படையற்றது. உலகில் வேறு எந்த நாட்டிலும் வால்மார்ட்டோ அல்லது டெஸ்கோவோ இந்த அளவுக்கு வேலைவாய்ப்பை உயர்த்தவில்லை. எனவே இங்கும் வேலைவாய்ப்பு உயர வாய்ப்பில்லை.

இரண்டாவதாக சீனாவில் செய்து வருவதைப் போல வால்மார்ட்டும் டெஸ்கோவும் பொருட்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் என்பதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்தியப் பொருளாதரமும் சீனப் பொருதாரமும் வெவ்வேறானவை. சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகர்வு 35% மட்டுமே. எனவே அங்கு ஏற்றுமதிக்காக உள்ள உபரியின் அளவு 65% ஆகும். இது பல பத்தாண்டுகளாக மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58% உள்நாட்டு நுகர்வுக்குச் சென்றுவிடுகிறது. ஏற்றுமதி உபரி என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு இல்லை. எனவே வால்மார்ட் இங்கு கால்பதித்தால் சீனாவிலிருந்து குறைந்த விலையில் பொருட்களை கொண்டுவந்து குவிக்கும். 

ஏற்கனவே சீனப் பொருட்கள் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு தற்போது 2000 கோடி டாலராக உள்ளது. 2014ல் இது 27850 கோடி டாலராக உயர்ந்துவிடும். இந்தியா வளர்ச்சியடையாது. மாறாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் இந்தியாவின் தரித்திரத்தை விஸ்வரூபப்படுத்திவிடும். 

இடைத்தரகர்களை ஒழித்துவிடும். விவசாயிகளின் செழிப்பை அதிகரிக்கும் என்று வால்மார்ட் குறித்தும் டெஸ்கோ குறித்தும் கூறப்படுகிறது. இங்கிலாந்திலேயே பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் டெஸ்கோதான். அது என்ன செய்கிறது. இங்கிலாந்தில் உள்ள சிறு விவசாயிகளை சுரண்டுகிறது.  உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளை அது இவ்வாறு சுரண்டிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்கள் விருப்பம்போல சாகுபடி செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் சொல்கின்றவற்றைத்தான் சாகுபடி செய்யமுடியும். இது வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துவிடும். உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப விவசாயிகள் பயிரிடுவது முடிவுக்கு வந்துவிடும். 

சிறு விவசாயிகள் நேரடியாக உள்ளூர் சந்தைக்கு தங்கள் விளை பொருளை கொண்டு செல்ல முடியாது. அவர்கள் பல்வேறு இடைத்தரகர்களை பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சூப்பர் மார்க்கெட்டின் தரத்திற்கு ஏற்ப அளவு மற்றும் தரம் சீரானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட நேரிடும். தரம் சரியானதாக இல்லையென்றால் பொருள் நிராகரிக்கப்பட்டுவிடும். கார்ப்பரேட் சிறு வணிக நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இணக்கமானவை என்பது முற்றிலும் தவறானதாகும். அவை விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை. 

வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் சேமிப்பு வசதிகளையும் மற்றவற்றையும் அதிகரிக்கும். இதனால் சேதாரம் இல்லாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2% மட்டுமே. ஆனால் 40% சாலைப்போக்குவரத்தை இந்த தேசிய நெடுஞ்சாலைகள் கையாள்கின்றன. மற்ற சாலைகளில் 20 அடிக்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும். உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமே இந்த சாலைகளின் மூலம் பொருட்களை கொண்டுவர முடியும். 

வால்மார்ட் களும், டெஸ்கோக்களும் சாலைகளைப் போடாது. சாலைகளைப் போடவேண்டியது அரசின் பணிதான். இதற்கு வால்மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் தேவையில்லை. 

அடுத்தபடியாக சேமிப்பு குறித்து பார்ப்போம். சமீபத்தில் எம்.ஐ.டி. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்திய கிராமங்களில் காணப்படும் நிலவரங்கள் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழிருந்து மேலே செல்வதின் வாயிலாகத்தான் சேமிப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். விளை பொருட்களை சேதம் இன்றி பாதுகாக்க வேண்டுமானால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக குளிர் சாதன வசதி உடைய சேமிப்பகங்களைக் கட்டலாம். இதுதான் பயனுள்ளதாக இருக்கும். இதுதான் கிழிருந்து மேலே செல்லும் முறையாகும். மாறாக வால்மார்ட்டுகளும், டெஸ்கோக்களும் மேலே இருந்து கீழே இறங்கி வந்து சேமிப்பு வசதிகளை செய்து தரும் என்பது சரியானதல்ல. இந்த ஆய்வறிக்கை வால்மார்ட்டுகளின் முகமுடியை கிழித்தெறிந்துள்ளது. 

இறுதியாக இந்திய சில்லறை வியாபாரம் தொடர்பான முக்கிய அம்சத்தை மேலோட்டமான விவாதம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய சில்லறை வர்த்தகம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரமே உறவுகளின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறதே தவிர. ஒப்பந்தங்களின் அடிப்படையில் இல்லை. இதனால்தான் 60% வேளாண் பொருட்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. உறவுகளின் அடிப்படையில்தான் இந்த பகிர்வு நடைபெறுகிறது. உறவுகளுக்கு பதிலாக ஒப்பந்தங்கள் மேலாதிக்கம் செலுத்த முற்படுமானால் சந்தைப் பொருளாதாரம் என்பது சந்தை சமூகமாக மாறிவிடும். குடும்பங்கள் கூட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடும்.

“இங்கிலாந்தில் சமூகம் என எதுவும் இல்லை. தனி நபர்கள் இருக்கிறார்கள். குடும்பங்கள் இருக்கின்றன. அவ்வளவுதான்” என்று மார்க்கரெட் தாட்சர் ஒருமுறை கூறினார். அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் பாரம்பரிய சமூகத்தின் இயக்கம் இன்றி பாரம்பரிய ரீதியாக குடும்பங்கள் உயிர்த்திருக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக மெய்ப்பித்து காட்டிவிட்டன. 1970களில் அமெரிக்க பொருளாதார ஆய்வு மையம் குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளை கூட கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. வரைமுறையற்ற சந்தை, முதலில் உறவு அடிப்படையிலான சமூகத்தை நிர்மூலமாக்குகிறது. அது குடும்பத்தை சீர்குலைக்கிறது. கடைசியாக ஒப்பந்தம் அடிப்படையிலான சந்தை சமூகத்தை உருவாக்குகிறது. 

உறவு அற்ற சில்லறை வியாபாரத்தின் முன்னோடிகளாக வால்மார்ட்டும் டெஸ்கோவும் உள்ளன. இது ஒப்பந்தம் சார்ந்த அமெரிக்க மற்றும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். மேலை நாடுகளில் கூட சந்தைப் பொருளாதாரமா? சந்தை சமூகமா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. சந்தை சமூகம் ஆங்கிலோ சாக்ஸன் அம்சத்தைக் கொண்டது என்று மற்றவர்கள் சாட தொடங்கியுள்ளனர்.

முத்தாய்ப்பு: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது உண்மையான பிரச்சினை அல்ல. இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும், மேட்டுக் குடியினரும் இந்தியா இறுதியில் என்னவாகவேண்டும் என நினைக்கிறார்கள் என்பதுதான் அடிப்படைப் பிரச்சினையாகும். உறவுக்கு இணக்கமான சந்தை பொருளாதாரம் வேண்டுமா? அல்லது உறவற்ற சந்தை சமூகம் வேண்டுமா? என்பதுதான் பிரதான கேள்வியாகும். 

இக்கட்டுரை தி நீயூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் டிசம்பர் 7 அன்று வெளியானது. அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழே சொடுக்கவும்.

http://expressbuzz.com/opinion/columnists/market-economy-or-market-society/340201.html 

சில்லறை வியாபாரம் “இந்தியா” தோற்றுவிட்டது

மொத்தமாய் விலைபேசப்படும் சில்லறை வியாபாரம்! 

எஸ். குருமூர்த்தி 

இப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று “புலிவருது புலி’ பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.

கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.

உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த “மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த” நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக “பாடுபட்ட சக்திகள்” வென்றுவிட்டன. ஆனால், “இந்தியா” தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.

பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு – வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.

அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.

இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் “”கொள்முதல் பாணி” இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.

வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் “கொள்முதல் பாணி’ ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: “”சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம்.அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்”.

இதைவிட முக்கியம், சிறு – குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.

கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.

இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.

இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, “”நகர்ப்புற விலை நிர்ணயம்” கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.

நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?

அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.

இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.

கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.

சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!

இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.

கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.

வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.

ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.

மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.

மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.

இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர். இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.

கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக் கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.

அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.

விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு. கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.

அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.

எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.

இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் “எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது” என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.

பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்.

நன்றி தினமணி 

இக்கட்டுரை தினமணி நாளிதழில் நவம்பர் 26 அன்று பிரசுரம் செய்யப்பட்டது.