Archive for வாழ்வியல்

அப்சல்கானின் கதை முடித்த சிவாஜி

கேதார் நாத் கோமல்

சத்ரபதி சிவாஜியின் மனதிற்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மாற்றம் என்பது வாழ்வின் மறுபெயர் என அவர் எண்ணிக்கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுவிட்டது? 1659 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள் அவரது மனைவி சயிபாய் காலமானார். துக்கம் ஆழ்ந்த நிலைமை. அரசவையாளர்கள் அனைவரின் உள்ளங்களும் துக்கத்தால் கனத்திருந்தன. மகாராஜா துக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார் என்று அவர்கள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் சிவாஜியோ தனது பணியில் முனைந்திருந்தார். ஒருவேளை அவர் தன்மனதில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கக்கூடும், சகோதரா மரணம் என்பது அனைவரது வாழ்விலும் நிகழ்கின்ற இயற்கையான நிச்சயமான நிகழ்வு. அதற்கு இவ்வளவு ஏன் கவலைப்பட வேண்டும். அவள் என் அன்பு மனைவி என்பது உண்மைதான். அழுவதால் மட்டும் என் மனைவி திரும்பக் கிடைப்பாளா? அழுவதற்கு எனக்கு நேரம் எங்கே இருக்கிறது? இங்கே உயிரினும் மேலான கடமை உணர்வு என்னை உந்துகிறது. தேச, தர்ம காரியங்கள் காத்துக் கிடக்கின்றன.

சிவாஜி காட்டிய மன அமைதியும் தீர்மானமான உள்ளமும் மனித வாழ்வின் கோடானுகோடி உன்னத சித்தாந்தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. சிவாஜி ஒருவேளை தூகிக் கொண்டிருக்கலாம் அல்லது விழித்துக் கொண்டிருக்கலாம், கடந்த கால நினைவுகள் ஒவ்வொன்றாக அவர் எதிரில் தோன்றின.

1659ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் அப்சல்கானின் பீஜாப்பூர் மீது படையெடுப்பு. 12 ஆயிரம் குதிரைப்படை வீரர்கள், 10௦ ஆயிரம் காலாட்படை வீரர்கள், 75 பெரிய துப்பாக்கிகள், 400௦௦ சிறிய துப்பாக்கிகள்.

துல்ஜாபூரின் தேவியின் புராதனக் கோயில். ஆம், அந்த தேவிக்கு என்னிடம் தனிப்பட்ட கருணை இருக்கிறது. அவள் எனக்கு காட்சியும் தந்திருக்கிறாள். என் உள்ளத்தில் எல்லையற்ற வலிமையைப் பரவச் செய்திருக்கிறாள். அடடா அத்தகைய ஆலயத்தை அப்சல்கான் சின்னாபின்னமாக்கி இருக்கிறான். சிலையை உடைத்து விட்டான். இந்துக்களின் தர்மம், கௌரவம், பக்தி ஆகியவை எல்லாம் அழிந்து விட்டனவா என்ன? மனம் சஞ்சலப்பட்டது.

ராஜ்கட்டை விட்டு நாம் பிரதாப்கர் சென்றோம். ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் அப்சல்கான் சிரித்தவாறு சொன்னான், “பார், இந்த எலி இப்போதிருந்தே ஓட ஆரம்பித்து விட்டது”. அப்சல்கான் தயாரானான். அவன் பண்டர்பூரை அடைந்தான். வழியில் இருந்த கிராமங்கள், கோயில்களை சின்னா பின்னமாக்கினான். பல்டன் எனும் இடம் – எனது மைத்துனன் சயிபாயின் சொந்த சகோதரன் பஜாஜி நிம்பால்கர். அப்சல்கான் அவனைப் பிடித்துவிட்டான். சித்திரவதை செய்தான். அவமானப்படுத்தினான். முஸ்லீமாக மதம் மாற்றினான். இவ்வளவு செய்தும் அவன் திருப்தி அடையவில்லை. அவனுக்கு மரண தண்டனை தர விரும்பினான். அவனுக்கு இவன் என்ன கெடுதல் செய்தான்? கான் என்னை சீண்டிப் பார்க்க நினைக்கிறான் போலும். அவன் பிராந்திய, தார்மீக, குடும்ப அநியாயங்களைச் செய்வதில் முனைந்திருந்தான். அப்சல்கான் படையில் எனது நண்பன் நாயிகஜி ராஜே. அவன் தக்க சமயத்தில் உதவவில்லை என்றால் பஜாஜி நிம்பால்கர் எப்போதோ மாண்டிருப்பான்.

கானின் படையில் இந்துக்களும், மராத்தியர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், அவனுக்கு அடிமைப்பட்ட காரணத்தினால் அவர்கள் மனதில் இறந்து விட்டனர். எல்லாக் கெட்ட காரியங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன என்று அவர்கள் உள்ளுக்குள்ளேயே உணர்ந்திருந்தனர். ஆனால், அப்சல்கானுக்கு அறுபதாயிரம் தங்கக் காசுகளை அபராதம் கொடுக்க வேண்டி வந்தது. இதற்கு மேலும் நிம்பால்கர் தனது தேசத் தலைமை அதிகாரத்தை அடகு வைத்தான். அப்சல்கான் மல்பரியில் கொள்ளையடித்தும் சூறையாடியும் வாயியை அடைந்தான்.

மழைக்காலத்து அடைமழை, அடர்ந்த காடு, நான்கு புறங்களிலும் அழகிய மலைகள், ஓய்வு, மழையின் ஆனந்தம். உற்சாகம் கொண்டாட்டம், இல்லை.

நான் போர் நடக்க விடமாட்டேன். அப்படியென்றால் நான் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும். வெற்றி நூறு சதவிகிதம் வெற்றி. காரணமில்லாமல் பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படக்கூடாது. செல்வம் உயிர், படையின் வீரர்கள். நமது நாட்டுடன் தொடர்புடையவைகள், செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒற்றர்கள் எத்தனை சாமர்த்திய சாலிகள். அப்சல்கானின் செய்தி கிடைத்து எல்லோரும் ராஜ்கருக்கு அழைக்கப்பட்டார்கள். கோமாஜி, நாயிக் பான் சம்பல், கிருஷ்ணாஜி நாயிக், மோரே பந்த் பிங்களே, நிலோ பந்த் சோன்தேவ், அண்ணாஜி தத்தோ, சோனோ பந்த், உபீர், கங்காஜி மங்காஜி, பால்கர், ரகுநாத் பந்த் அத்ரே, பிரபாகர் பட ராஜோபாத்யாயே, தானாஜி மாலுகரே, யேசாஜி கங் முதலானோர். எல்லோரும் சண்டையிட உற்சாகமாயிருந்தனர். சரி, நீ என்ன சொல்கிறாயோ ஒப்புக்கொள்கிறோம்.

போர் செய்வோம், அப்சல்கானைக் கொள்வோம். வெற்றி பெற்றால் நானே இருப்பேன். ஆனால், எனது உயிர் சேதமடைந்தாலோ எனது மகன், சிறுவன் சாம்பாஜியை நீங்கள் சிம்மாசனத்தில் அமர்த்துங்கள்”. எனது மரணத்தைக் கற்பனை செய்யவே அவர்கள் அஞ்சினர்.

இல்லை.இல்லை.போருக்கு அவசியம் இல்லை. எனது பேச்சு எடுபட்டது. ராணி ஜீஜாபாயும், எனது பாலகச் சிறுவன் சம்பாஜியும் ராஜ்கரில் இருப்பார்கள். நான் பிரதாப்கரில் இருப்பேன் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அங்கிருந்து நான் யுத்தத்தை நடத்துவேன். ஜீஜாபாய் சொன்னாள் – போர் செய், ஆனால் எக்காரணம் கொண்டும் கானை சந்திக்க செல்லாதே. அவன் நய வஞ்சகன். அவன் உன்னை உயிரோடு விடமாட்டான்”. நான் பதிலளித்தேன். “அன்னையே, எனக்கு இவ்வளவு வயதாகி விட்டது”. எப்போதாவது எந்த முஸ்லிம் தலைவனையோ அல்லது ராஜாவையோ சந்திக்கச் சென்றிருக்கிறேனா என்ன? ஆனால், இந்த முறை…இறுதி முறையாக இருக்கலாம். எனக்கு அப்படி செய்ய வேண்டும்.

கோயில்களை சின்னாபின்னப் படுத்தியவாறு அப்சல்கான் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பாடம் கற்பித்தே ஆகவேண்டும். எனவே, நீங்கள் அவனை சந்திக்க அனுமதி கொடுங்கள். நான் போயே ஆக வேண்டும்”.

ஜீஜாபாய் ஒரே மகனின் தாய். அவள் சொன்னாள், அப்சல் கான் ஒரு பெரிய அரக்கன். அவன் சீண்டி சீண்டியே எனது கணவரைக் கைது செய்து, கை கால்களில் சங்கிலிகளைப் பிணைத்து எல்லா விதத்திலும் அவமானப் படுத்தினான். பீஜாபூர் வீதிகளை வளம் வரச் செய்தான்… பார்க்கப்போனால் நான் ஆறு மகன்களை ஈன்றேன். ஆனால், நான்கு குழந்தைப் பருவத்திலேயே மாண்டு விட்டன. இரண்டு தங்கின. சாம்பாஜி, நீ, சிவாஜி…. நான்கு வருடங்களுக்கு முன் கணக்கிரி போரில் அந்த அப்சல்கான் எனது செல்வம் சாம்பாஜியை ஏமாற்றிக் கொன்றுவிட்டான்.

சாம்பாஜி

இப்பொழுது தனியே நீ, சிவாஜி….எனது ஒரே புதல்வன் வீட்டிலிருக்கும் போதே நம்மிடம் அப்சல்கான் வந்து கொண்டிருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், பசுக்களை வதைத்துக் கொண்டு, கோயில்களை இடித்துத் தள்ளிக் கொண்டு, பாவச்சுமை களை சுமந்து கொண்டு வருகிறான். வாளின் முனையில் இந்துக்களை  முஸ்லீம்களாக மாற்றுகிறான். அவன் நமது நாட்டின் வீட்டின் எதிரி. ஜன்ம ஜன்மமாக விரோதி. எவ்விதத்திலும் அவனைக் கொள்வது தர்மம்தான். இத்தகைய வாய்ப்பு திரும்பத் திரும்பக் கிடைக்காது.

இதோ பார் மகனே, அப்சல்கான் உயிரோடு திரும்பிப் போகக் கூடாது…”  அவளுடைய சகோதரன் பஜாஜியை அப்சல்கான் விடுவித்து விட்டான் என்றதும் எனது மனைவி சிப்பாய் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாள். – எப்படி அவள் தனது நோயை மறந்தாலோ அந்த வீரப் பெண், வீரமனைவி, வீரத்தை எல்லாவற்றையும் சிரித்து சிரித்தே சகித்துக் கொண்டாள்.

அங்கு அப்சல்கானின் படை வாயியில், மழயில் பெருக்கெடுத்து ஓடும் நதியைப் போல் இருந்தது. பீஜாபூரின் பல சிறிய பெரிய சிற்றரசர்கள் அவனுடன் சேர்ந்து விட்டனர். அப்சல்கானின் சுற்றறிக்கை எல்லா நாட்டுத் தலைவர்கள் பெயரிலும் அனுப்பப்பட்டது. பவீனர்கள் கீழ்படிந்தனர். எதிரிகள் மனதிற்குள்ளேயே குமுற ஆரம்பித்தனர். இடைப்பட்டோர் சிந்தனையில் மூழ்கினர். சுற்றறிக்கை கான்ஹோஜி ஜோகேக்குக் கிட்டியது. “யோசையின்றியும், அறியாமையினாலும் சிவாஜி நிஜாம் அரசின் கொங்கன் பிரதேசத்து முஸ்லீம்களுக்குத் தொல்லைகள் கொடுத்திருக்கிறான். அவர்களை கொள்ளையடித்துள்ளான். பேரரசு பிரதேசத்தி லிருந்து எவ்வளவோ கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆகவே, அவனை அடக்கும் விதமாக அப்சல்கான் முகமத்ஷாஹியை, அந்தப் பிரதேசத்தின் சுபேதாராக நியமித்து அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம் என்னவென்றால் கான் சாகேப்பை மகிழ்வுறச் செய்து அவர் எப்படி சொல்கிறாரோ, அப்படி செய்வதுதான். மேலும், சிவாஜியைத் தோற்கடித்து அவனை வேரோடு பிடுங்கி எரிந்து இந்த அதிஷா சிற்றரசுக்கு நன்மை பயப்பீராக. அப்சல்கான் உங்களைப் புகழ்வார்.  அப்பொழுதே உங்களுக்கு உயர்வு தரப்படும். மேலும் தங்களுக்கு உரிய அன்பளிப்பு அளிக்கப்படும். இதை உணர்ந்து இந்த அரசாங்கக் கட்டளையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள். தேதி ஹிஜரி 1069, சபால் 5 ஆயிரம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கான்ஹோஜி என்னிடம் வந்தார். நானோ முதலிலேயே வில்வைலையை எடுத்து அப்சல்கான் எதிரில் தலை குனிய மாட்டேன் என்று சபதம் செய்தேன். கான்ஹோஜி தனது தேசத் தலைமைச் சின்னம் பரி போவதைப் பற்றிக் கவலைப் படாமல் எனக்கு உதவினார். மேலும், இப்போது சயிபாயும் மரணமடைந்து விட்டாள்.

சிவாஜி சோகத்தின் சசப்பை விழுங்கியவாறு நின்று விட்டார். காரியத்திலேயே கண்ணாயிருந்தார். தசரா வந்தது. ஆயுத பூஜை நடந்தது. ஆயுதங்கள் சொல்லலாயின.” ஏன் இவ்வளவு தாமதம், எங்களுக்கு மிகவும் பசிக்கிறது.”

படைவீரர்கள் சொன்னார்கள், “கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்”.

தெற்கில் நாலாபுறமும் அப்சல்கானின் படையெடுப்பு பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தது. சிவாஜி இப்பொழுது நசுக்கப்படப் போகிறார் என தில்லி வரை செய்தி சென்றது. ஒவுரங்கசிப், குதுப்ஷா, ஆங்கிலேயர்கள் , பறங்கியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், சிந்தி அனைவரும் மனதிற்குள் இதைத்தான் விரும்பினர்.

வாயி, அப்சல்கானுக்கு அரசிடமிருந்து கிடைத்த இடம். கொட்டும் மழையில் கேளிக்கை, கொண்டாட்டங்கள் வெகுவாக நடந்தன. இந்த சாக்கில் படைக்கும் ஓய்வு கிடைத்தது. தசராவை முன்னிட்டு அப்சல்கான் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியிடம் விரிவான கடிதம், வாய்மொழி ஆணை கொடுத்து பிரதாப்கருக்கு அனுப்பினான். குல்கர்னிக்கு சிவாஜியின் அரசவையில் வரவேற்பு கிடைத்தது. உபசார பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, குல்கர்னி வினயத்துடன் கூறினார், “ராஜாவே மதிப்பிற்குரிய அப்சல்கான் முகமத்ஷாஹி உங்கள் தந்தையின் பெரும் நண்பர். உங்கள் குடும்பத்துடன் அவருக்கு உள்ளார்ந்த தொடர்பு இருக்கிறது. அவரைச் சந்திக்க நீங்கள் வாயிக்கு வர வேண்டுமென்பதே அவரது விருப்பம். தங்களுக்காக அவர் இந்தக் கடிதத்தை கொடுத்திருக்கிறார்.”

அக்கடிதம் இவ்விதம் இருந்தது. “உனது பணிவின்மையை பேரரசர் ஆதில்ஷாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய இதயத்தில் இது முள்ளைப் போல் குத்துகிறது. நட்பு மூலம் முஹலாயர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிசாம் ஷாவின் எல்லா துர்க் பிரதேசம் முழுவதும் உனது அதிகாரத்திலேயே கொடுத்து விட்டார். தண்டராஜ்புரி சிந்திகளும் உனிடம் கோபம் கொண்டுள்ளனர். சந்த்ரா ராய் மோரேயை நீ முழுவதும் சூரையாடிவிட்டாய். கல்யாண் பிவாண்டியிலோ நீ மசூதிகளை இடித்து இருக்கிறாய். மேலும், காஜி முல்லாக்களை சிறையிலிட்டிருக்கிறாய். நீ அரச இலட்சினையை எடுத்துக் கொள்கிறாய், நியாயம் வழங்குகிறாய், மேலும் தங்க அரியாசனத்தில் அமருகிறாய். மேலும், மதிப்பிற்குரிய பாதுஷாவிற்கு எதிரில்கூட தலை குனிவது கிடையாது. இந்த எல்லா பணிவற்ற காரியங்களை இப்போது சகித்துக் கொள்ள முடியாது. இன்றுவரை உனது நடவடிக்கைக்கு தீர்வு காணவென பலர் அனுப்பி வைக்கப்பட்டும் நீ ஒருவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் முதன்மை வீரரான ஆதில்ஷா மூலமாக உன்னை வழிக்குக் கொண்டு வர திட்டத்தைத் தீட்டியுள்ளேன்.எனது பாதுஷா ஆறு வகையான படையைக் கொடுத்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் போர் செயத் துடிக்கின்றனர். முசெகான், பிரதாப்ராவ் மோரே போன்றோர் பலமுறை உத்தம் செய்ய தூண்டியிருக்கின்றனர். ஆனால் …. சிங்ஹ்கட் லோகஹட் முதலிய பிரபல் தூர்க், நீரா, பீமா நதிகளின் இடைப்பட்ட பிரதேசங்களை மிக பலசாலியான தில்லி அதிபதியின் அதிகாரத்தில் ஒப்படைத்து விடு. மேலும் சந்த் எராவ் மோரேயிடமிருந்து பலவந்தமாக பறித்துக் கொல்லப்பட்ட ஜாவலியை ஆதில்ஷா உன்னிடமிருந்து திரும்பக் கேட்கிறார். இவையெல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதிலேயே உனக்கு நன்மை இருக்கிறது. என்னிடம் நம்பிக்கை வை. நான் எப்போதும் உனக்கு நஷ்டம் வர விடமாட்டேன். எனவே, என்னைச் சந்திப்பதற்கென விரைவில் வாயிக்கு வந்து சேர்.”

நள்ளிரவில் சிவாஜிக்கு குல்கர்னியுடன் மனம் திறந்து பேச்சு நடந்தது. இறுதியில் பிரதாப்கர் அருகில் சந்திக்க அப்சல்கானை சம்மதிக்க வைக்குமாறு சிவாஜி கூறினார். குல்கர்னிக்கு விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் பரிசளிக்கப் பட்டன. மேலும் அப்சல் கானிற்காகவும் விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் கொடுத்தனுப்பப்பட்டன. சிவாஜி அப்சல்கானுக்கு எழுதிய கடிதம் பின் வருமாறு –

“கர்நாடகாவின் பல அரசர்களை யார் எளிதில் சின்னாபின்னமாக்கினாரோ அவரின் வீரம் உண்மையில் அக்கினி தேவதைக்கு ஒப்பானது. யார் பூமியின் அழகை இருமடங்காக ஆக்கியுள்ளாரோ, மேலும் பழகுவதற்கு இனிமையானவரோ, அவருடன் பழகுவது எனக்கு எல்லாவற்றிக்கும் மேலான ஆனந்தம் அளிக்கும் விஷயம். ஆனால், எனது வேண்டுகோள் என்னவென்றால், தாங்கள் இயற்கையிலேயே அழகான ஜாவலி வருவதே சரியானதாகும். நான் அச்சமின்றி உங்களை சந்திக்க முடியும். ஆதில்ஷாஜியின் படை முழுவதிலும், அல்லது முகலாயப் படையிலும் தங்களுக்கு இணையான சாமர்த்தியமான மனிதர் வேறு யார் இருக்கிறார்? தங்களை ஏறிட்டும் பார்க்கக் கூட பெரிய பெரிய ஆட்களுக்குத் தைரியம் வருவதில்லை. நானும் என்னை தங்களுக்கு முன் எந்த அருகதையும் உடையவனாக கருதவில்லை. இங்கே வந்து தங்கள் என்னை மகிழ்வித்தால் தாங்கள் எந்த கோட்டைகள், பிரதேசங்களைக் கேட்கிறீர்களோ, அதைக் கொடுத்து என்னுடைய வாளைக்கூட தங்கள் முன் சமர்ப்பிப்பேன். தங்கள் இங்கு வாருங்கள், பாருங்கள், இங்குள்ள கானகத்தில் உலாவ உங்களுக்கும், உங்கள் படைக்கும் பாதாள உலகின் ஆனதம் கிட்டும்.”

கடிதத்திப் படித்து விட்டு அப்சல்கான் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினான். அவன் சிவாஜியின் வார்த்தையை ஒப்புக் கொண்டான். அதே சமயம் அவனது சேனாதிபதி இதில் எதோ சூழ்ச்சி இருக்கலாம் என மனத்திற்குள்ளேயே நடுங்கினான். பிரதாப் மோரே போன்ற தலைவர்கள் கூறினார்கள். “சிவாஜியிடம் அற்புதமான சாமர்த்தியம் இருக்கிறது. அவன் கோட்டையின் மேலே பாய்ந்து ஏறுகிறான். கருடனைப் போல் எதிரி மீது விரைவாகப் பாய்கிறான். பின் திடீரென காணாமல் போகிறான் … துளஜா தேவிக்கு அவன் மேல் ஒரு தனி ஆனந்தம். அவள் தானாக அவனுக்கு உதவி செய்கிறாள்..” இதைக் கேட்டு அப்சல்கானின் கண்கள் தீப்பிழம்புகள் போலாயின. அவன் சொன்னான், “எனது வீரத்தை நீங்கள் இப்போது அறியவில்லை, ஆகவே, சிவாவை நீங்கள் இவ்வளவு புகழ்கிறீர்கள். இன்னொரு விஷயம், நீங்கள் கோழைகளாக இருக்கலாம்.”

அப்சல் கானிடமிருந்து சம்மதம் பெற்று சிவாஜி அவனைச் சந்திக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார்.

பிரதாப்கர் கோட்டை

அங்கு, அப்சல்கான் தனது சிறிய படை, கஜானா, மற்றும் குடும்ப உறுப்பினர்களை வாயியில் விட்டு விட்டு பெரும் படையுடன் ஜாவலிக்குக் கிளம்பினான். மூன்று மைல் வரை மேடான பாதை பிறகு 10 மைல் வரை பாம்பு வளைவு, மலைச் சரிவுகளினின்றும் கீழே இறங்குதல், இந்த வகையான பாதை அது. யானைகள் குதிரைகள் ஒட்டகங்கள் பீரங்கிகள் சாமான்கள் நிரம்பிய மாட்டு வண்டிகள் இவை அனைத்தும் அந்த பாதை வழியே முன்னேறிக் கொண்டிருந்தன. ஏறி, ஏறி எத்தனயோ யானைகளின் மூட்டுகள் உடைந்தன. தங்களது தும்பிக்கைகளால் மரங்களின் உதவி கொண்டு அப்படி இப்படியாக யானைகள் முன்னேற முடிந்தது. குதிரைகள், ஒட்டகங்களை ஏற்றுவது மிகவும் கடினமாகிக் கொண்டிருந்தது. எவ்வளவோ ஆபரணங்கள் பள்ளங்களில் வீழ்ந்து சுக்கு நூறாகின. மேலும் பல பாம்புகள், தேள்கள் மற்ற விஷப் பிராணிகள் கடித்ததால் இறந்தன. சிப்பாய்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. ஜாவலி அடைவதற்குள் படைக்கு ஏற்பட்ட மோசமான நிலையை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாது.

அப்சல்கான் படை ஜாவலியில் குமுதவதி ஆற்றங்கரையில் முகாமிட்டது. வைரக்கல் வியாபாரியை அனுப்பி வைக்கும் படியும், அப்போதுதான் அவனிடமிருந்து வைரம், முத்து வாங்கி அவருக்கு அன்பளிப்பாக தர முடியும் என சிவாஜி அப்சல்கானுக்கு செய்தி அனுப்பினார்.

அப்சல்கான் பெரும் உடல்வாகு படைத்த மனிதன். ஆறு அடி உயரம் நல்ல பருமன். எந்தக் குதியையும் அவனுடைய எடையைத் தாங்க முடியாது சீக்கிரமே இறந்துவிடும் என்று கூறுவார். அதனால்தான் அவன் பெரும்பாலும் யானையில் உட்காருவான். பத்து மனிதர்களின் உணவை அவன் ஒருவனே சாப்பிடுவான். சுபாவத்தில் குரூரமும், வஞ்சகமும் நிறைந்தவன். அவன் தீவிர முஸ்லிம். மேலும் தன்னை சிலைகளை உடைப்பவன் எனச் சொல்லிக் கொள்வதில் அவன் பெருமிதம் அடைந்தான். ஷாஜியை அவன் மிகவும் வெறுத்தான். முஸ்தபா கான் பாசி கோர்பாடேயுடன் அவன் நெருக்கமாயிருந்ததே அதன் காரணமாயிருக்கலாம். அவன் ஷாஜியை கைது செய்வித்து அவமானம் செய்யும் பொருட்டு பூஜாப்பூருக்குக் கொணர்ந்தான். கானக்கிரி போரில் அவன்தான் ஷாஜியின் பெரிய புதல்வன் சம்பாஜியை ஏமாற்றிக் கொன்றான். கர்நாடகாவில் அவன் அதிகக் கொடூரம் காட்டினான்.

எல்லா விதத்திலும் சிவாஜி அவனுடைய பிடியில் வந்து விட்டான். இப்போது அவன் எங்கும் போக முடியாது என்று அப்சல்கான் மனத்திற்குள் சந்தோஷப் பட்டான்.பரிசளிப்பின் பொது மறைத்து வைத்திருக்கும் குறுவாளை பயன்படுத்தி சிவாஜியின் உயிரைப் பறிக்க விரும்பினான். பின்னர் அவனுடைய பிரதாப்கரில் கட்டப்பட்டுள்ள பவானி தேவியின் சிலையையும் நாசம் செய்ய விரும்பினான்.

அப்சல்கான் தனது முகாமிலிருந்து புறப்பட்ட பொது அவனுடன் கூட பன்னிரண்டாயிரம் வீரர்கள் இருந்தனர். சிவாஜிக்கு இந்த விஷயம் கிடைத்த பொது குல்கர்னியின் மூலமே அப்சல்கானின் மெய்காப்பாளர்களில் எவரையும் முன்னே செல்ல விடவில்லை. அலங்கரிக்கப்பட்ட கொட்டகையில் சிவாஜியும் அப்சல்கானும் மட்டும் சந்திப்பதற்காகச் செல்ல வேண்டும்..

அப்சல் கானின் கதையை முடிக்கும் சிவாஜி

சிவாஜி பந்தலில் நுழைந்தார். கான் முன்னேறினான். அவன் தனது வாளை கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் கொடுத்து விட்டு பின் அகலக் கால் வைத்தவாறு முன்னே விரைந்தான். அவன் சொன்னான், ” வா சிவாஜி ராஜா. நீ மிகவும் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறாய். நான் உன்னை சரியான வழியில் கொண்டு வருவேன். நீ வஜீர்பூர் செல்ல வேண்டும். பாதுஷாவிடமிருந்து உனக்கு மிகப் பெரிய ஜாகீர், மேலும் அன்பளிப்பு வாங்கித் தருவேன். வா. பயப்படாதே.”

கட்டித் தழுவிக் கொள்ளவென முன்னேறினான் கான். சிவாஜியும் முன்னேர்நான். கான் மிக உயரமானவன். சிவாஜி குள்ளமானவன். தழுவிக்கொள்ளும் சமயத்தில் சிவாஜியின் கழுத்தை அவன் இடது பக்கம் அழுத்தினான். மற்றொரு கையால் அவன் குறுவாளை உருவி அதை சிவாஜியின் வயிற்றில் குத்தினான். ஆனால், சிவாஜி உள்ளே இரும்புக் கவசம் அணிந்திருந்தான். அதில் அது உரசியது. சிவாஜி மல்யுத்தத்தில் வல்லவன். அவன் உடனே தனது கழுத்தை விடுவித்துக் கொண்டு சிங்கம் போன்று கர்ஜித்தவாறு குறுவாளையும் கூறிய புலி நகங்களையும் கானின் வயிற்றில் செருகிக் குடலை வெளியே உருவினான். கானின் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது. அதை ஒரு கையால் சமாளித்தவாறு கான் ஓடுவதற்கு முயற்சி செய்தான். “சூழ்ச்சி, சூழ்ச்சி, எதிரியைக் கொள்ளுங்கள்” என்று காத்த ஆரம்பித்தான். அதற்குள் சிவாஜி உரையிலிருந்து வாளை உருவி கானின் கழுத்தைத் துண்டித்தான்.

இரண்டு படைகளுக்கும் இடையே பயங்கர சண்டை நிகழ்ந்தது. இறுதியில் சிவாஜிக்கு வெற்றி கிட்டியது.

ஆதாரம்: சுவைமிகு சரித்திரக் கதைகள் நூலிலிருந்து. 


இந்தியாவின் அடி ஆழத்தில் அமைதி குடிகொண்டிருக்கிறது.

“இந்தியாவுக்கு மீண்டும்  வருவேன்” -  ஓப்ரா வின்பிரே 

கருப்பான களையான முகம் கொண்ட ஓப்ரா வின்பிரேயை உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி பார்வையாளர்கள் நன்கு அறிவார்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்களுடன் அவர் நிகழ்த்தியுள்ள ‘நேருக்கு நேர்’ நிகழ்வுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

நீக்ரோவான அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிசிசிப்பியில் உள்ள ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்த அவரால் சரியாக உண்ண முடியாத நிலை காணப்பட்டது. நல்ல உடைகளும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் கஷ்டப்பட்டு படித்தார். அறிவை ஏணியாக்கி உயர்ந்த அவரை இன்று அகிலமே பாராட்டிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் அவர் கலந்து கொண்டார். ஊடகவியலாளர் ஃபர்கா தத் அவருடன் கலந்துரையாடினார். ‘ஓ, ஓப்ரா இன் ஜெய்ப்பூர்’ என்ற இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. ஒருமணிநேரம் நீடித்த இந்தக் கலந்துரையாடல் மிகவும் அருமையாக அமைந்திருந்த்து.

இந்தியாவைப் பற்றிய மூன்று விஷயங்கள் என்னை வியக்க வைத்துள்ளன என்று ஓப்ரா கூறினார். அவர் கூறியதாவது: “ இந்தியா குழப்பம் நிறைந்த நாடாகத் தோன்றுகிறது. எனக்கும் முதலில் இந்த எண்ணம் தான் ஏற்பட்டது. ஆனால் இது மேலோட்டமான பார்வை ஆகும். இதன் அடி ஆழத்தில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இரண்டாவதாக, இந்தியர்களிடையே ‘கர்மா’ உணர்வு காணப்படுகிறது. இந்தியர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஆன்மீக செயல்பாடு பொதிந்துள்ளது. இந்தியர்கள் மதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதுடன் நின்று விடவில்லை. அவர்களின் வாழ்க்கையே மத அடிப்படையிலானது தான். அவர்களது வாழ்க்கையிலிருந்து மதத்தைப் பிரித்து பார்க்கவே முடியாது.”

இந்தியர்களின் குடும்ப வாழ்க்கையும் ஓப்ராவை வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து அவர் கூறியதாவது: “அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யாவும் எனது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ‘நீங்கள் உங்கள் பெற்றோருடன் சேர்ந்து வசித்து வருகிறீர்களே?’ என்று அபிஷேக் பச்சனிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தியாவின் பாரம்பரியமே கூட்டுக் குடும்பம் தான். ஒருவரை ஒருவர் சார்ந்து நெருங்கி ஒரே குடும்பமாக வாழ்வது தான் இந்தியப் பாரம்பரியமாகும்’ என்று பதிலளித்தார். இது என்னை நெகிழச் செய்து விட்ட்து.”

மும்பையிலுள்ள சேரிப்பகுதிக்கும் ஓப்ரா சென்றார். அங்குள்ள குடிசை வாசிகளிடம் நெருங்கிப் பழகினார். அவர் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்யத் தவறவில்லை. அரண்மனைக்கும் சென்றார், ஆசிரமத்துக்கும் சென்றார். பிருந்தாவனத்திலுள்ள விதவைகளோடும் அவர் கலந்துரையாடினார். ”சேரிப் பகுதியில் 11 வயது சிறுமி ஒருத்தி அவளது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அவளது குடிசையைப் பார்த்து நான் திகைத்துப் போய் விட்டேன். ஏழ்மை நிலையிலும் என்னிடம் அவர்கள் பாசமாக நடந்து கொண்டனர். குடும்பத்தினர் அனைவரும் என்னை உபசரித்தனர். அந்த சிறுமி படுசுட்டி, வகுப்பிலேயே அவள் தான் முதல் மாணவி. வருங்காலத்தில் ஆசிரியை ஆவேன் என்று அவள் என்னிடம் கூறினாள். அவளது  நினைவுகள் என் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று ஓப்ரா கூறினார்.

இந்திய அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது: ”நான் இங்கு திறந்த மனத்துடன் வந்தேன். இப்போது எனது உள்ளம் மிகவும் விசாலமாகிவிட்ட்து. இங்கு நான் பெற்ற வாழ்வு சார்ந்த அனுபவங்கள் மிகவும் செழுமையானவை. இந்தியாவின் தான் மனித நேயம் மிகச் சிறப்பாக உள்ளது. மனித நேயத்தின் மையம் இந்தியா தான் என்றால் மிகையல்ல.

இந்திய மக்கள் காட்டும் கனிவும் கரிசனமும் நெஞ்சை நெகிழ வைத்து விட்டன. இந்திய நிகழ்வுகள் சார்ந்த படங்களை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன். ஓபமா அமெரிக்க அதிபரானதை மறக்க முடியாத நிகழ்வாக நான் கருதுகிறேன். இது தொடர்பான பதிவுகளை பத்திரமாக வைத்துள்ளேன். ஒட்டகத்தின் மீது ஏறி அமர்ந்துள்ள இந்தியப் பெண்ணின் படமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அந்த பட்த்தில் ‘இந்தியாவுக்கு வாருங்கள்’ என்ற வாசகம் பளிச்சிடுகிறது.

ஓப்ரா பல்வேறு பிரச்சனைகளுக்காக தனது நிகழ்ச்சியின் வாயிலாக குரல் கொடுத்துள்ளார். அநீதிக்கு எதிராகப் போராடியுள்ளார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற பாலியியல் முறைகேட்டுக்கு எதிராக அவர் உரத்த குரல் எழுப்பினார். நீதி கிடைக்க வழிவகை செய்தார். பல அறப்பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

“உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்குச் செய்யுங்கள். இந்தப் பகிர்தல் தான் உங்களை உண்மையிலேயே செழுமைப்படுத்தக் கூடியது. பகிர்வு தான் உங்களது உயிர்ப்புக்கு அர்த்தமளிக்கிறது” என்பது ஓப்ராவின் திடநம்பிக்கை ஆகும்.

“எனது நிகழ்ச்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் தான் எனக்கு இங்கு அமோக வரவேற்பு கிடைத்தது என்பதை நான் உணர்ந்துள்ளேன். நான் மீண்டும் மீண்டும் இந்த புனித பூமியான இந்தியாவுக்கு வருவேன்” என்று முத்தாய்ப்பாக ஓப்ரா கூறினார்.

இராமபிரான் வரவேற்ற குடியரசு

பண்டைய பாரதக் குடியரசு வைசாலியின் லிச்சவி
-க. ஜெயராமன்

உலகில் பல்வேறு பகுதிகளில் மன்னராட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, கூட்டாட்சி என்ற மாறுபட்ட அனுபவங்களை கடந்த மனித குலம் மக்கள் அனைவரையும் அனைத்துச் செல்லும் மக்களாட்சியே தலைசிறந்தது. மனித  மாண்புக்கேற்றது என்ற முடிவுக்கு வந்தது.

மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் மக்களுடைய ஆட்சியே குடியரசு என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தனது கெட்டிஸ்பர்க் பேருரையில் தெளிவாக்கினார்.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று இந்தியா தனக்கென்று வகுத்துக் கொண்ட அரசியல் சாசன சட்டப்படி தன்னை ஒரு சுதந்திர மத சார்பற்ற சம்தர்ம ஜனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்து கொண்டது.

1776ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திரப் போரின் முடிவில் உலகில் முதன்முறையாக அரசியல் சட்டத்தை வகுத்த பெருமையை பெற்றது அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனப்படும் வல்லரசு. அந்த சுதந்திர தீயின் தாக்கத்தில் வெந்த பிரெஞ்சு ஏகாதிபத்யம் அணைந்து முதல் குடியரசு எனப்பெயர் பெற்றது.

பிரான்சிடமிருந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் நாம் குடியரசுக் கோட்பாட்டைக் கற்று பின்பற்றுகிறோம் என்று இன்றும் ஏராளமானோர் அறியாமை இருளில் உள்ளனர்.

உலகத்திற்கே குடியரசுத் தத்துவத்தை முதன் முதலில் போதித்தது மட்டுமின்றி ஒரு முன் உதாரணமாகவும் திகழ்ந்த வைசாலி என்ற இந்தியப் பகுதிதான் குடியரசுகளின் பிறப்பிடம். அது பீகார் மாநிலத்தில் பாடலிபுத்திரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சதுர்புஜ தர்ம தீப பூமி என்ற கௌரவம் பெற்று விளங்குகிறது.

இது சரித்திரத்தில் மட்டுமின்றி புராணத்திலும் இடம் பெற்றுள்ள மிகப் புராதன பூமியாகும். ரீஜ் டேவிட்ஸ் என்பவர் கபில வஸ்துவில் சாக்கியம் (Sakhyam) புலீயில் (Buli) அல்லகம் (Allagam) ராமகாம் என்ற இடத்தில் கோலியே (Koliya) பாவாவைச் (parva) சேர்ந்த மல்ல (Malla) மிதிலையின் விதேஹம், கோலபுத்ரத்தில் (Kalam) கலாம் மற்றும் வைசாலியின் லிச்சவி (lichavi) குடியரசுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

வைசாலியின் லிச்சவி குடியரசு அந்தக் காலத்து சர்வ வல்லமை மிக்க உலகிற்கே எடுத்துக்காட்டான ஒரே குடியாட்சியாக விளங்கியது. வஜ்ஜீ (Vajji) சங்கம் முழுவதற்கும் தலைநகராக இருந்தது வைசாலி. புத்த கோஷரின் அஷ்ட கதையின் பிரகாரம் வைசாலியில் வசித்து வந்த வஜ்ஜீ சங்கத்தைச் சேர்ந்த 1,68,000 மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனால் வைசாலி ஆளப்பட்டது.

குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுப் பிரதிநிதி ஒவ்வொருவரும் சபதம் ஏற்கும் விழாவின் போது அபிஷேக – மங்களப் புஷ்கரிணியின் அனுஷ்டான ஸ்நானம் செய்து சங்கத்தின் (குடியரசின்) சட்ட திட்டங்களையும் நியமங்களையும் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். அந்தப் புஷ்கரிணியில் ஸ்நானம் செய்யும் உரிமை வாழ்நாளில் ஒருமுறை தான் ஒரு லிச்சவிக்குக் கிடைக்கும். இன்றும் இந்த புஷ்கரிணி (குளம்) பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.

கங்கையும் கண்டகியும் சங்கமம் ஆகும் இடத்தில் தொடங்கி நீண்ட சமவெளியில் பரந்து கிடக்கும் வைசாலியின் புனித பூமி நமது தழைத்தோங்கிய ஆன்மீக, அரசியல் மற்றும் கலாச்சார பரம்பரைகளுக்குக் கட்டியம் கூறி நிற்கிறது. குடியரசுக்கெல்லாம் அன்னை என்ற பெருமையுடன் அரசியல்  மேடையில் உலகிற்கே வழிகாட்டியாகவும், இந்தியக் கலாச்சாரத்தின் கலைச்செல்வத்திற்கே வாரிசாகவும் வைசாலி கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

விஷ்ணு புராணத்திலும், பாகவத புராணத்திலும் வைசாலியின் பெருமை இடம் பெற்றுள்ளது. வால்மீகி ராமாயணம் ஆதிகாண்டத்தில் 47வது சர்க்கத்தின் 11-12ஆம் ஸ்லோகங்களில் வைசாலியைப் பற்றிய குறிப்பு வருகிறது. பகவான் ராமரும் லட்சுமணரும் விஸ்வாமித்ர முனிவருடன் ஜனக்புரி செல்லும் வழியில் வைசாலியின் அரசன் சுமதி வைசாலியில் அவர்களை வரவேற்று உபசரித்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சரணடைய வந்த விபீஷணனை தன் அணியில் சேர்ப்பதா என்ற விவாதத்தின் போதும், சீதா குற்றமற்றவள் என்பதை லங்காபுரியில் நிரூபிக்க வேண்டிய தருணத்திலும், வண்ணான் இழிச் சொல்லால் சீதாதேவியைப் பற்றி குறை சொன்னபோதும் ராமன் எடுத்த முடிவுகளில் குடியாட்சியின் சுவடுகள் பதிந்திருப்பதைக் காணலாம்.

இந்த வைசாலியின் புனித மண்ணில் தான் கி.மு. 599ல் சித்திரை மாத சுக்ல திரயோதசி அன்று திங்கட்கிழமை சித்தார்த்தர் என்ற அரசருக்கும் த்ரிசாலா என்ற அரசிக்கும் பகவான் மஹாவீரர் மகனாக அவதரித்தார் என்பது வரலாறு கூறும் உண்மை. தனது இருபதாவது வயதில் மனிதகுலம் உய்வதற்காக 12 ஆண்டுகள் கடும்தவம் மேற்கொண்ட மகான் பகவான் மஹாவீரர், 32 வயதில் சந்யாசியாக ஆனார். ஜைன மதத்தை உய்வித்த தீர்த்தங்கரரான மஹாவீரர் அஹிம்சை, சத்யம், சமத்வம் ஆகிய கொள்கைகளை பின்பற்றினார். வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை நிலவும் நிலைதான் தர்மம் அனைவருக்கும் அனைத்துயிர்களுக்கும் நன்மை பயப்பது தான் தர்மம் என்பதே அவரது உபதேச சாரம்.

கி.மு.562ல் கபிலவஸ்துவில் சாக்கியமுனி சுத்தோதனரின் செல்வனாக அவதரித்த கௌதமபுத்தர் பிறந்த ஏழுநாட்களுக்குப் பிறகு தாயை இழந்து சிற்றன்னை ப்ரஜாவதியால் வளர்க்கப்பட்டு யசோதையை மணந்து ராகுலன் என்ற மகனைப் பெற்று குடியரசான கபிலவஸ்துவில் போர் தொடுப்பதற்கான சங்கக் கட்டளையை ஏற்க மனமின்றி தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்ளும் வகையில் வனவாசம் சென்றார். அந்த புத்தரின் கர்மபூமியாகும் பேற்றை வைசாலி பெற்றது.

வைசாலீயின் பெருமைக்கு மகுடம் சூட்டிய பெண் ஆம்ரபாலியை அறியாதவர் இவர். குழந்தையாக இருந்த போது ஒரு மாமரத்தின் அடியில் வீசி எறியப்பட்டவள் வளர்ந்து வைசாலியின் எழில் கொஞ்சும் வனிதையாக வைசாலியின் நகர நர்த்தகியாக ஆனாள் ஆம்ரபாலி. அவளுக்கு விமல் கௌண்டேயன் என்ற மகனும் உண்டு. பகவான் புத்தரையே தனது மாமரப் பூங்காவில் வரவழைத்த பெருமை ஆம்ரபாலிக்கு உண்டு. உடனிருந்தவர்கள் மாற்றுக் கருத்துக்களை கூறியபோதும் ஆம்ரபாலியின் அழைப்பை ஏற்று அவளை புத்தர் சந்தித்தது பௌத்த மத வரலாற்றில் ஒரு திருப்பு முனையையே ஏற்படுத்தியது. ஆம்ரபாலி தொடுத்த வாதங்கள் அனைத்தையும் கேட்டு அவற்றிற்குத் தலைவணங்கி புத்தர் தனது மதத்தில் முதல்முதலாக மகளிரும் சேருவதற்கு அனுமதி தந்தது இந்த வைசாலியில் தான்.

வைசாலியின் மீது அஜாத சத்ரு என்ற மன்னன் படை எடுத்த போது தாய்நாட்டின் பற்றினை வெளிப்படுத்த ஆம்ரபால் போரில் குதித்தாள். தீய எண்ணத்துடன் அஜாத சத்ரு அவளை சந்திக்க சென்றபோது யானை தந்தத்தில் பொறிக்கப்பட்ட அஜாத சத்ருவின் தந்தை பிம்பிசாரனின் படத்தைக் காட்டியதும் அஜாத சத்ரு வெட்கத்தால் தலைகுனிந்து ஆம்ரபாலிக்கு தாய்க்குரிய மரியாதையை தந்தான்.

1995 சதுர கிலோமீட்டர் பரப்பில், 27,12,389 மக்கள் தொகை கொண்ட வைசாலி இன்றும் குடியரசுகளின் அன்னையாக இந்தியக் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக, பெண்மையின் பெருமைகாத்த புனித பூமியாக ராமபிரான், புத்தர், மகாவீரர் திருப்பாதங்கள் பதித்த புண்யஷேத்ரமாக ஒளி வீசி நிற்கிறது.


 

சிலப்பதிகாரத்தில் தேசிய ஒருமைப்பாடு

புலவர் கவிக்கோ ஞானச் செல்வன்

சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம், மூலக்காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனத் தொடரும் பல சிறப்புகளைக் கொண்டது. 

இவற்றோடு, சிலப்பதிகாரம் தேசியத் தமிழ்க் காப்பியமாகவும், தமிழ்த் தேசியக் காப்பியமாகவும் திகழும் பெருமை வாய்ந்தது. இரண்டும் எப்படி ஒன்றினையும்? சிலம்பில் இணைந்துள்ளனவே! விளக்கச் சுருக்கம் காண்போமா!

குமரிவரை இமயம் வரை விரிந்து பரந்துள்ள பரத கண்டத்தின் பண்பாட்டில், உணர்வுகளில், ஆன்மீகத்தில் அடங்கியுள்ள ஒருமைப் பாட்டினைச் சிலப்பதிகாரம் அழகாகச் சித்தரிக்கிறது. காபியத் தொடக்கம் திங்களையும், ஞாயிற்றையும், மழையையும், புகார் நகரையும் போற்றுவதாகச் சோழ மன்னனின் பெருமை பாடுகிறது. இந்த மங்கல வாழ்த்துப்பாடல் புகார் நகரச் சிறப்பைப் பேசும்போது,

“பொதியிலாயினும் இமய மாயினும்

பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய

பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்

நடுக்கின்றி நிலைஇய என்ப …

ஏ.வி.இளங்கோ என்கிற ஓவியர் வரைந்துள்ள "புகார் நகரம்"

பொதிகை மலையும், இமயமலையும், தம்மூரை விட்டுப் பிழைப்பதற்காக வெளியூர் புகாத மக்களையுடைய புகார் நகரமும் என்றும் நிலையானவை, அழிவற்றவை. (ஒடுக்கம் கூறார்)

இவ்வாறு தொடக்கமே பொதிகை, இமயம் இரண்டையும் இணைத்துத் தெற்கும் வடக்கும் திசைகள் வேறாயினும் ஒரே உணர்வில் ஒன்றியன எனப் புலப்படுத்துகிறார் இளங்கோவடிகள்.

‘குணவாயிற் கோட்டத்து அரசு துறந்து வீற்றிருந்த’ என்னும் தொடர் கொண்டு, அடிகளைச் சமணர் என்றுரைப்பர்; இது தவறு. கந்த கோட்டம், குமரக் கோட்டம், இந்திரக் கோட்டம் என இந்துக் கோவில்களிலும் கோட்டம் எனப்படுதல் உண்டு. ஆயிச்சியர் குரவையில் நாராயணனைப் பாடியுள்ள பாட்டுக்களையும் குன்றக்குரவையுள் முருகப் பெருமானைப் பாடியுள்ள பாட்டுகளையும் படிப்போர் இவரெப்படிச் சமணராக இருக்க முடியும்? என்ற முடிவுக்கு வருவர் (விரிக்கின் பெருகும்).

தமிழிலக்கியங்களில் வைதிகத் திருமணம் சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலாகக் காட்டப்படுகிறது.

“நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்

வானூர் மதியம் சகடனைய வானத்துச்

சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்

தீவலம் செய்வது காண்பர்கண் நோன்பென்னே!”

கண்ணகி, சாலி – அருந்ததிக்கு ஒப்பானவள் என்பதும், வானத்துச் சந்திரன் உரோகிணியைச் சேரும் நாள் என்பதுவும், மாமுது பார்ப்பான் வேதநெறிப்படி வேள்வி வளர்த்து மணச் சடங்காற்றினான் என்பதுவும், கோவலன் கண்ணகி கரம்பிடித்துத் தீவலம் செய்த காட்சியைக் கண்டவர் கண்கள் என்ன தவம் செய்தனவோ என்பதும் தெற்கு – வடக்கு வேறுபாட்டையா வளர்க்கும்?

இமயம் வரை தமிழரசர் செலவு (பயணம்)  எப்போதும் நிகழ்ந்துள்ளது என்பதும் வெள்ளிடைமலை.

"இப்பால் இமயத்து, இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு, உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி யாழி உருட்டுவோன் எனவே"

என்று செம்பியனின் (சோழன்) இமய வெற்றியும், வேங்கை (புலி) பொறித்ததும் ஆய நிகழ்ச்சிகள் புகழ்பாடுகின்றன.

சேரன் செங்குட்டுவனைப் பற்றிச் சொல்லும்போது இளங்கோவடிகள், “குமரியோடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்” என்று அறிமுகப்படுத்துகிறார். செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை (சோழன் மகள்) என்பது கருதத்தக்கது.

கண்ணகியின் தோழி தேவந்தி எனும் பார்ப்பனப்பெண். மாடல மறைவன் சேரன் செங்குட்டுவனுக்கு அறம் உரைக்கிறான்; ‘மறக்கள வேள்வி (போர்) போதும், இனி அறக்கள வேள்வி செய்வாயாக” என்று மாதவியின் இரண்டாவது மடல் கொண்டு போய்க் கோவலன்பால் சேர்த்தவன் கோசிகமணி எனும் அந்தணன்.

கீரியைக் கொன்ற பாவத்திற்க்காக, மனைவியைக் கைவிட்டு தலயாத்திரை புறப்பட்ட அந்தணன், வடமொழி வாசகம் எழுதிய ஓலையைத் தந்து அதன் பொருள் உணர்ந்து பொருள் செலவு செய்து பரிகாரங்கள் செய்வாராயின், மீண்டும் நான் வருவேன் எனச் சென்றான். கோவலன் (வணிகக்குடி) அவ்வோலையை வாங்கிப் படித்து அதில் குறித்தபடி தான தருமங்கள் செய்தான் எனில் வடமொழி (மந்திர வாசகம்) தென்னாட்டிலும் பிற குடியினரும் அறிந்திருந்தனர் என்பது பாரத ஒருமையன்றோ?

சோழ மன்னன் திருமாவளவனுக்கு வடதிசை வேந்தர் எவையெல்லாம் பரிசாக அளித்தார் தெரியுமா? வச்சிர நாட்டு மன்னன் தந்தான் கொற்றப்பந்தல், மகத மன்னர் வழங்கினான் பட்டி மண்டபம், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்தான் தோரணவாயில், சேரன் செங்குட்டுவன், வடதிசை இமயம் செல்லக் கங்கையாற்றைக் கடப்பதற்குச் சேனை முழுவதுக்கும் படகுகளைத் தந்தவர் நூற்றுவர் கன்னர் என்பவர். சேரன் திரும்பும் வழியில் இனிய பாசறை அமைத்து உதவிகளும்- உபசாரங்களும் செய்தவர் அவரே.

‘கனக விசயர் தலையிலே கல்லேற்றி வந்தான்’ என்பது கொண்டு தெற்கு, வடக்கு பிளவு, பகைமை வளர்த்தல் பேதைமை. அவர்கள் காவா நாவில் கனக விசயர் என்று இளங்கோவடிகளால் குறிக்கப்படுகிறார்கள். யாராயினும் (யா காவாராயினும்) நா காக்கா விட்டால் துன்பப்படுவர் (சோகாப்பர்) என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா?  உருள்கின்ற சக்கரத்தை ஒரு கோல்கொண்டு சுழற்றினால் மிக விரைந்து உருளும். அதுபோல் கண்ணகிப் படிமம் செய்திட இமயத்தில் கல்கொண்டு, கங்கையில் நீராட்டி வரவேண்டும் என்று நினைத்திருந்த சேரன் மனச்சக்கரத்தை, வடபுல மன்னர் கனகவிசயர் தம் நகையாடல் பேச்சு என்னும் கோல் விரைவாக உருட்டியது. ‘உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்’ (சிலம்பு) கண்ணகி தேவிக்கான கல்லைச் சுமந்து வந்து கனகவிசயர் பேறு பெற்றனர் எனலாம்.

தற்போது சிதைந்து காணப்படும் கண்ணகி கோவில்

கண்ணகிக்குக் கோவில் எடுத்து, தேவியை எழுந்தருளச் செய்த நன்னாளில் சேரன் கனகவிசயர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து, புதிதாக அழகாக அமைக்கப்பட்ட திருமாளிகை ஒன்றில் தங்கவைத்து, இனிய உபசாரங்கள் செய்து, பரிசுப் பொருள்கள் வழங்கினான் என்பதை நோக்குங்கால் நமது பண்பாடு புலப்படும்.

அந்தப் புனிதநாளில் வடதிசை மன்னர்களும், குயடகுனாடுக் கொங்கரும், மாளுவ தேசத்து மன்னனும் (மாளுவம்-மராட்டியம்) கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், வணங்கி வரம் பெற்றனர்.

நீர்ப்படைக் காதையில் மாடல மறையோன் வருகை கதையின் பல நிகழ்வுகளைத் தெரிவிக்கிறது. கோவலன் கொலைக்குப் பின் அவனது பெற்றோர், கண்ணகியின் பெற்றோர், மாதரி எனும் இடைக்கலப் பெண் கவுந்திய மகள், மாதவி நல்லாள் முடிவு பற்றியெல்லாம் மாடல மறைவன் பேசுகிறான். அன்றியும் நம் பாரதநாட்டுப் பண்பாடு ஒன்று – புனிதத் தலங்களில் நீராடுதல் (தீர்த்த யாத்திரை) உணர்த்தபடுகிறது. மாடலன் சொல்கிறான்; “பொதிகை மலையை வளம் செய்து, குமரிப் பெருந்துறையில் நீராடி, மதுரை சென்று உற்றவை அறிந்து சோழநாடு சென்று காவிரியில் நீராடி, அங்குற்றவை அறிந்து ஈண்டு (கங்கை நீராட) வந்தேன்” என்று சொல்லும் செய்தி நோக்குக.

மாங்காட்டு மறையவன் என்று ஒரு பாத்திரம் இப்படிப் பல கதை மாந்தர்களை குமரி முதல் இமயம் வரை உலவ விட்டு, இது ஒரே நாடு, உணர்வுகள் ஒருமைப்பாடு கொண்டவை என்பதைச் சிலப்பதிகாரம் நன்றாகவே புலப்படுத்துகிறது.

சேர, சோழ, பாண்டியர் தமிழ் மூவேந்தர். ஒரு நாளும் ஒற்றுமையாய் இருந்ததில்லை, சேரனுக்கும் பாண்டியனுக்கும் போர், சோழனுக்கும் சேரனுக்கும் போர் என்று இப்படியே பலகாலம் ஆட்சி செய்தனர். சிலப்பதிகாரம் வாயிலாக இளங்கோவடிகள் தமிழ் மூவேந்தர் ஒற்றுமையைப் பெரிதும் வலியுறுத்துகிறார். தமிழ்த் தேசியம் மலர வேண்டும் எனக் குரல் கொடுக்கிறார். தமிழ்நாடு ஒரே நாடாக ஒன்றுபட வேண்டும் என்பது அவரின் உள்ளக்கிடக்கை.

சோழநாட்டிலே கோவலன் கண்ணகி திருமணத்தில் கதை தொடங்குகிறது; கோவலன் கொலை செய்யப்பட்டதும், கண்ணகி வழக்காடி வென்று மதுரை அழிந்ததும் ஆகிய உச்சக்கட்டக்  காட்சிகள் (மதுரை)  பாண்டிய நாட்டில் நிகழ்கின்றன. கண்ணகி செங்குன்றம் அடைந்து வானவர் உலகம் சேர்வதும், கண்ணகி திருக்கோவில் எழுப்பப்பட்டதும் ஆன வரலாறு (முடிவுக்காட்சிகள்) சேர நாட்டில் நிகழுகின்றன. அதனால்தான் “முடியுடை வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” என்று சாத்தனார் இளங்கோவடிகளுக்கு உரைத்தார்.

சேரன் செங்குட்டுவனின் வெற்றியை கனகவிசயர் தலையில் கல்லேற்றி வந்த செயலை முதலில் சோழரும், பாண்டியரும் இகழ்ந்து பேசினார். ஆயினும், வாழ்த்துக் கதையில் தமிழ் மூவேந்தரும் ஒன்றுபட்டு இருப்பது போன்ற ஓர் உணர்வை இளங்கோவடிகள் ஏற்படுத்தியுள்ளார்.

அம்மானைவரி, கந்துகவரி, ஊசல் வரிப் பாடல்களால் சோழனையும், பாண்டியனையும், சேரனையும் வாழ்த்தும் பகுதிகளை ஊன்றிப் படிப்பவர்க்கு உண்மை முழங்கும். ஈண்டு விரித்தெழுத இடமில்லை.

கண்ணகி தெய்வமாக வானில் தோன்றி ‘தென்னவன் தீதிலன் யானவன் தன்மகள் வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்” என்று கூறிப் பாண்டிய மன்னனின் மகளாகத் தன்னைக் குறிப்பிடுதல் காப்பியத்தின் உச்சம்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

என்பன மூன்று நீதிகள். தமிழகத்துக்கு மட்டுமா சொந்தம்? இது நம் பாரதப் பண்பாட்டின் வெளிப்பாடு.

கவிக்கோ ஞானச் செல்வன்.

சங்கப் பலகை எனும் அமைப்பு மாதந்தோறும் நடத்திவரும் இலக்கிய ஆய்வுக் கூட்டத்தில் சிலப்பதிகாரம் எனும் தலைப்பில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது.

இக்கட்டுரை 2011, டிசம்பர் மாத கலைமகள் இதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்திய விஞ்ஞானி மறைவு.

நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி ஹர்கோபிந்த குரானா மறைவு. 

அமெரிக்காவில் இருக்கின்ற மச்சசுசெட்டஸ்  இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பயாலாஜி மற்றும் கெமிஸ்ட்ரி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பயோ கெமிஸ்ட்ரியில் முன்னணி ஆராய்ச்சியாளரான இவருக்கு 1968 ஆம் வருடம் மருத்துவத்துறைக்காக நோபல் பரிசு கிடைத்தது. அறிய கண்டுபிடிப்புகளுக்காக மருத்துவத்துறையில் அவ்வருடம் மூன்று பேருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அதில் இவரும் ஒருவர்.

தற்போது பாக் பகுதியில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் உள்ள சிறிய கிராமமான ராய்பூரில் 1922 வருடம் பிறந்தவர். இவரது பெற்றோருக்கு இவர் 5 வதாகப் பிறந்தவர். இவரது தந்தை கிராமத்தின் கணக்குப்பிள்ளை ஆவார். அச்சமயத்தில் இவரது கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 100 கும் குறைவு.

பாகிஸ்தானில் இருக்கின்ற முல்தானில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் 1943 இல் தனது பட்டப்படிப்பையும் 1945 இல் பட்ட மேற் படிப்பையும் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரியில் முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அவரது மேற்படிப்பிற்காக நிதி உதவி செய்து அவரை இங்கிலாந்தில் இருக்கின்ற லிவெர்பூல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் தனது ஆராய்ச்சிக்காக 1948 வருடம் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு சுவிட்சர்லாந்த் சென்ற அவர் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் மேலும் தனது  ஆராய்ச்சிப் படிப்பினைத் தொடர்ந்தார். அச்சமயத்தில் அங்கே சந்தித்த எஸ்தர் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

தனது ஆராய்ச்சியை மேற்கொண்ட குரானா 1952 ஆம் வருடம் அங்கிருந்து கனடா நாட்டில் வான்கூவரில் இருக்கின்ற பிரிட்டிஷ் கொலம்பியா ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினார். 8 வருடங்கள் ஆராய்ச்சிகளை மேற் கொண்டு வந்த அவர் அங்கிருந்து 1960 ஆம் வருடம் அமெரிக்காவில் இருக்கின்ற விஸ்கான்சின் பல்கலைக் கழகத்திற்கு சென்றார்.

அங்கு அவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மரபணு சம்பந்தப்பட்ட ஆராச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டதற்காக 1968 ஆம் வருடம் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவர் 1970 ஆம் வருடம் மச்சசுசெட்டஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது இடைவிடாத ஆராய்ச்சியால் பல அறிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியுள்ள குரானா அவர்கள் 2007 ஆம் வருடம் பணியிலிருந்து ஓய்வு பெரும் வரை அந்த நிறுவனத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.

எண்ணற்ற இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அவர்களது ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டி வந்துள்ளார். ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவருக்கு பேராசிரியராக இருந்து பல மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதுதான் மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட அவரைத்தேடி மாணவர்கள் வந்து கொண்டே இருந்தனர். அவர் மாணவர்கள் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தார் மாணவர்களும் அவர் மீது பெரும் மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர்.

தோன்றிப் புகழோடு தோன்றுக என்கிற வள்ளுவரின் வாக்கினுக்கு ஏற்ப வாழ்ந்துவிட்டு சென்றுள்ள பாரதத் தாயின் புதல்வர் ஹர்கோபிந்த குரானாவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திடுவோம்.89 வயதில் காலமாகியுள்ள  ஹர்கோபிந்த குரானவிற்கு மனைவி மற்றும் மகள் ஜூலியா மகன் தவே ஆகியோர் உள்ளனர்.

தனது அயராத ஆராய்ச்சியினால் மனித குலத்திற்கு மாபெரும் தொண்டு செய்துவிட்டுச் சென்றுள்ள குரானாவின் மறைவு பற்றிய செய்திகளைக் நமது ஊடகங்களில் காணமுடியவில்லை.

பயங்கரவாதி கள்ளக் கடத்தல்காரன் மாபியா கும்பலின் தலைவன் தாவுத் இப்ராஹீம் மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்றும் அவன் இறந்த பிறகு அவனது உடல் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று அவன் தனது விருப்பத்தினை கூறியுள்ளான் என்று செய்திகளை போட்டு வருகின்றனர்.

நாட்டில் எத்தனையோ பெண்களுக்கு அன்றாடம் குழந்தை பிறந்து கொண்டேதான் இருக்கின்றது.  ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு என்ன குழந்தை எப்போது பிறக்கப் போகிறது என்பதிலேயே கடந்த ஒரு வாரகாலமாக பொறுப்பான நமது ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

ஆனால் மனித குலத்திற்கு உண்மையான தொண்டினை செய்து விட்டுச் சென்றுள்ள விஞ்ஞானி ஹர்கோபிந்த குரானாவை மறந்து விட்டனர். தேசபக்தர்கள் மனதில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளத்தில் என்றென்றும் அவரது நினைவு இருந்துகொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடைந்திட பிரார்த்தனை செய்திடுவோம்.

ஹர்கோபிந்த குரானா பெற்றுள்ள நோபல் பரிசு குறித்து விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

மருந்தா-மந்திரமா

பாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்

ஆங்கிலத்தில்: ஷாலினி சக்சேனா

தமிழில்: நிகரியவாதி

இந்த நவீன காலத்திலும் கூட மந்திரங்களின் வாயிலாக பாம்புக் கடியையும் தேள் கடியையும் குணப்படுத்த முடியும். மொபைல் போன் வாயிலாக மாந்திரத்தை உச்சரித்தால் கூட குணம் அளிக்க முடியும் என்பதை நம்புவது சற்று கடினமானதுதான். ஆனால் அதுதான் உண்மை. மந்திரவாதிகள் சிலர் பாம்புக் கடியையும் தேள் கடியையும் சில நொடிகளிலேயே குணப்படுத்திவிடுகிறார்கள். டாக்டர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்டவர்களைக் கூட மந்திரவாதிகள் குணமாக்கியுள்ளனர் என்பதுதான் விசேஷமான அம்சமாகும். 

மந்திரவாதி.

1960ஆம் ஆண்டு மத்திய பிரதசேத்தில் உள்ள சாகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு மனிதர் தனது வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போது ராஜநாகம் ஒன்று எதிர்பட்டது. அது புல் நிறைந்த பகுதியாகும். மழைக்காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். பாம்பை அடிப்பதற்கு தடி கொண்டு வாருங்கள் என்று அவர் அலறினார். அங்கு கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இவரது அலறலைக் கேட்டு தடியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் அந்த மனிதரை ராஜநாகம் கடித்துவிட்டது. ராஜநாகத்தால் கடிபட்டவர் தலைமைப்  பொறியாளரின் உதவியாளர்  ஆவார். அவரை அரசு மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு சென்றனர். விஷ முறிவு மருந்தை டாக்டர்கள் செலுத்தினார்கள். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

தலைமைப்  பொறியாளரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடிவிட்டனர். ராஜநாகத்தால் கடிபட்டவரின் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் அந்த கூடத்திலிருந்த ஒருவர் பாம்புக் கடியை குணப்படுத்தக்கூடிய மந்திரவாதி ஒருவரை தனக்குத் தெரியும் என்று கூறினார். ஆனால் தலைமை பொறியாளருக்கோ அல்லது பாம்புக் கடிபட்டவரின் குடும்பத்தினருக்கோ ஜார்புங்கா வாலா (பாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதி) குறித்து நம்பிக்கை ஏற்படவில்லை. இருப்பினும் இக்கட்டான சூழலில் அதையும்தான் செய்து பார்ப்போமே என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். 

மந்திரவாதி உடனடியாக மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார். பாம்புக் கடி பட்டவரை மருத்துவமனைக்கு வெளியே கொண்டு வாருங்கள். தோட்டத்தில் கிடத்துங்கள் என்று மந்திரவாதி கூறினார். அவர் சில மந்திரந்தங்களைத் தொடர்ந்து உச்சரித்தார். அதன் பிறகு நடந்ததுதான் அதிசயம். பாம்புக் கடி பட்டவரின் உடல் பாம்பைப் போல முறுக்கிக் கொண்டது. பாம்புக் கடிபட்டவரின் தலையில் தண்ணீர் பாத்திரம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த பாத்திரம் அங்கு நிற்கவில்லை. பாம்புக் கடிபட்டவரின் கை அதை தட்டிவிட்டது. 20 நிமிடங்களுக்குப் பிறகே தண்ணீர் பாத்திரம் அவரது தலையில் நின்றது. 

ராஜ நாகம்

பாம்புக் கடிபட்டவரின் உடலில் பாம்பு குடி புகுந்திருந்தது. இந்த மனிதரை நீ ஏன் கடித்தாய் என்று பாம்பிடம் மந்திரவாதி கேட்டார். “நான் புல் தரையில் சென்று கொண்டிருந்தேன். இந்த மனிதர் என்னைக் கொல்வதற்காக முயற்சி செய்தார். தடியைக் கொண்டு வாருங்கள் என்று மற்றவர்களிடம் கூறினார். இதனால்தான் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தால்தான் இவரைக் கடித்தேன்.” என்று பாம்பு குரல் கொடுத்தது. “இவரின் உடலிலிருந்து  உடனடியாக நீ வெளியேறிவிடு” என்று அரூபமாக உள்ள பாம்பிடம் மந்திரவாதி கூறினார். ஆனால் பாம்பு சுலபமாக வெளியேற சம்மதிக்கவில்லை. மந்திரவாதி நீண்டநேரம் கெஞ்சிக் கூத்தாடினார். கடைசியில் ஒரு நிபந்தனையின் பேரில் அம்மனிதரின் உடலிலிருந்து வெளியேற பாம்பு சம்மதித்தது. 

அவர் ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி என்னை வழிபடவேண்டும் என்பதுதான் பாம்பு விதித்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனை  ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த மனிதரின் உடல் மறுபடியும் பாம்பைப் போல் முறுக்கிக் கொண்டது. படிப்படியாக நீல நிறம் மாறத் தொடங்கியது. கால் மணி நேரத்திற்குள் இந்த மனிதர் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டார். இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த தலைமைப்  பொறியாளர் அதிர்ச்சியில் உறைந்தே போனார். இதைப் போல ஊரூக்கு ஊர் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் இவைகளைக் கட்டுக் கதைகள் என்றே கருதி ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். 

எல்லா வித பிரச்சினைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு இல்லை. மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்டும் பல தீர்வுகள் உள்ளன. எல்லாவற்றையும் மருத்துவத்தால் தீர்க்கமுடியும் என்றால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று மருத்துவர்கள் கூறுவது ஏன்? என பண்டிட் ரமேஷ் போஜ்ராஜ் துவிவேதி கேள்வி எழுப்புகிறார். துவிவேதி மந்திரங்கள் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். 

சாகரில் நடைபெற்றதைப் போன்ற நிகழ்வுகள் வேறு பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன. பலர் இவற்றைக் கண்டுள்ளனர். பாம்புக் கடியை குணமாக்கும் மந்திரவாதிகள் நாலா பக்கங்களிலும் நாணயங்களை தூக்கி எறிவது வழக்கம். அப்போது நாணயத்தை தலையில் ஏந்தியபடி அங்கு பாம்பு வந்துவிடும். மீண்டும் சில மந்திரங்களைக் கூறிய பிறகு பாம்புக் கடிபட்டவர் குணமாகிவிடுவார். மருத்துவர்கள் பலர் இதை நம்புவது கிடையாது. இது வெறும் கண்கட்டி வித்தை என்று கூறுகிறார்கள். 

பிரதிப் குமார் சிங் என்ற ஜார்புங்கா வாலா கட்டாக்கில் (ஓடிஸா) உள்ள வனத்துறையில் அதிகாரியாக உள்ளார். எனது தந்தையும் வனத்துறையில் அதிகாரியாக இருந்தவர்தான் என்று அவர் கூறுகிறார். தனது தந்தையிடம் இருந்து பாம்புக்டியை குணப்படுத்தும் மந்திரத்தை கற்றுக் கொண்டதாக அவர் தெரிவிக்கிறார். நான் விஞ்ஞானம் படித்தவன்தான். ஆனால் விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டது கடவுள் சக்தி. இந்த மந்திரம் கடவுள் சக்தியைச் சார்ந்ததுதான் என்று பிரதாப் குமார் சிங் கூறுகிறார். 

1983  ஆம் ஆண்டு பிரதாப் குமார் சிங்கிற்கு 18 வயது நடந்து கொண்டிருந்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக பாம்புக் கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை தாம் குணப்படுத்தியதாக பிரதாப் குமார் சிங் நினைவு கூறுகிறார். இதுவரை எத்தனை பேரை குணப்படுத்தியிருப்பேன் என்பதற்கு கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று அவர் சொல்கிறார். நேரில் மட்டும்தான் மந்திரம் சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்பது கிடையாது. மொபைல் போன் வாயிலாகவும் மந்திரம் சொல்லி பாம்புக்கடி பாதிப்பை விலக்க முடியும் என்று அவர் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார். 

பாம்புக் கடிபட்டவரின் பெயர், தனக்கு தெரிவிக்கப்படவேண்டும். அவருக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றனவோ அத்தனையும் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டப் பெயர்கள் கேலிப் பெயர்கள் இருந்தால் அவைகளையும் தெரிவிக்க வேண்டும். அந்த நபர் குணமாக வேண்டும் என்று கூறி நான் மந்திரம் சொல்லத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடலில் மாறுதல் தெரியத்   தொடங்கிவிடும் என்று பிரதாப் குமார் சிங் கூறுகிறார். மருத்துவ மனைகளிலிருந்துதான் தனக்கு அதிக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார். 

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படாத நபரை, பாம்புக் கடியை குணப்படுத்திய பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்து விஷம் நீங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நான்  கூறுவது வழக்கம் என்று அவர் தெரிவிக்கிறார். நான் செய்வது ஏமாற்று வேலை அல்ல. உண்மையானதுதான் என்பதை நிலைட்டவே இதைச் செய்கிறேன் என்று தனது செயல்பாட்டுக்கான காரணத்தையும் அவர் கூறுகிறார். 

தினந்தோறும் தனக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது வரும் என்று அவர் கூறுகிறார். மொபைல் போனில் 5 நிமிடங்கள் மந்திரம் சொன்னாலே போதும். மொபைல் போனை பாம்புக் கடிபட்டவரின் காதில் பொறுத்தியிருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பாம்புக் கடிபட்டவருக்கு சுவாசம் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மட்டுமே இவர் வலியுறுத்திக்  கூறுகிறார். தொலைதூர இடங்களிலிருந்துகூட அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று இவர் கூறுகிறார். 

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் கூட அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நண்பர்கள் மூலமாக இது பரவுகிறது. நண்பர்களின் நண்பர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். கோமா நிலையில் உள்ளவர்களைக் கூட தன்னால் குணப்படுத்த முடியும் என்று பிரதிப்குமார் சிங் உறுதிப்பட உரைக்கிறார். எனது குடும்பத்திலும் மருத்துவர்கள் உள்ளார்கள். மந்திரத்தின் மகத்தான சக்தியால் பாம்புக்கடி தேள் கடி ஆகியவற்றுக்கு வைத்தியம் பார்க்க முடியும் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

இனி மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம். “நான் கேட்டரிங் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். எனது ஊழியர் ஒருவரை நாகப்பாம்பு ஒன்று கடித்து விட்டது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கே போதுமான மருந்து இருப்பில் இல்லை என்ற காரணத்தால் அவரை புவனேஸ்வரத்துக்கு கொண்டு சென்றார்கள். அப்போது சிங்கின் மொபைல் போன் எண் எனக்கு நினைவுக்கு வந்தது. புவனேஸ்வருக்கு எனது தொழிலாளியை கொண்டு செல்லும் வழியிலேயே சிங்குடன் நான் பேசினேன். பாம்புக் கடிபட்டவரின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று சிங் கேட்டார். அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்று நான் பதில் அளித்தேன். என்ன ஆச்சரியம் புவனேஸ்வரத்துக்கு கொண்டு செல்லும் வழியிலேயே எனது ஊழியர் எழுந்து உட்காரத் தொடங்கினார். ஆனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சோதனை செய்து பாருங்கள் என்று சிங் வற்புறுத்தினார். புவனேஸ்வரம் மருத்துவமனையில் டாக்டர்கள் சோதனை செய்தனர். பாம்பு கடித்தது என்பதற்கு எந்தத்  தடயமும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.  எதற்கும் முன்னெச்சரிக்கையாக மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே நான்கு நாட்கள் அவரை வைத்திருந்தோம். 20 வயதான எனது ஊழியர் பூரண நலமுடன் வீட்டுக்குத் திரும்பினார்” என்று அக்ஷைகுமார் படசாணி கூறுகிறார். 

இதுபோன்றே மற்றொருவரும் சிங்கின் மந்திர சக்திக்கு சான்றுரைக்கிறார். அவர் முக்தி காந்த் பாரி ஆவார். பாரியின் வயதான தாயாருக்கு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடைபெற்றது. தாயாருடன் பாரி தங்கியிருந்தார். அப்போது பாம்பால் கடிக்கப்பட்ட 10 வயது சிறுவனை அங்கு கொண்டு வந்தார்கள். விஷப் பாம்பினால் கடிப்பட்ட சிறுவனின் உடலில் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தில் இருந்த ஒருவர் சிங்கின் பெயரைக் கூறினார். மொபைல் போன் வாயிலாகவே மந்திரம் கூறி சிறுவனை பிழைக்க வைக்க சிங்கால் முடியும் என்று கூறியதை தான் முதலில் நம்பவில்லை என்று பாரி கூறுகிறார். ஆனால் சில நிமிடங்களிலேயே அதிசயம் நிகழ்ந்தது. மொபைல் போன் வழியாக மந்திரத்தைக் கூறி சிறுவனை சிங் பிழைக்க வைத்து விட்டார் என்று பாரி கூறுகிறார். மந்திரத்தால் சிறுவனுக்கு குணம் கிடைத்ததோ அல்லது மருத்துவர்களின் சிகிச்சையால் குணம் கிடைத்ததோ  எப்படியோ சிறுவன் குணம் அடைந்துவிட்டான் என்று பாரி கூறுகிறார். சிலர் மந்திரத்தை முழுமையாக நம்புகிறார்கள். மற்றவர்கள் அறைகுறையாக நம்புகிறார்கள். அவநம்பிக்கைவாதிகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் சான்றிதழ் வேண்டியிருக்கிறது. நிரூபணம் வேண்டியிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் நிரூபணம் அளிப்பது சாத்தியமல்ல. சில விஷயங்கள் அறிவியலுக்கும் அப்பாற்பட்டவை. இவற்றை நம்பிக்கையின் வாயிலாகத்தான் உணர்ந்து கொள்ள முடியும். நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள் நம்பிக்கையாளர்களாக மாறிவிடுகிறார்கள். சில நிருபர்கள் சிங் மீது சந்தேகப் பார்வையை வீசியதுண்டு. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளைக் கூட பாம்புக்கடியிலிருந்து மீட்டுள்ளதாக சிங் தெரிவிக்கிறார். 

“எனது உறவினர் ஒருவரை 2007 ஆம் வருடம் விஷப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது. அப்பெண்ணின் உடல் நீலம் பாரிக்கத் தொடங்கியது. அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் அங்கே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இதையடுத்து சற்று தொலைவில் இருந்த பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். கொண்டு செல்லும் வழியிலேயே சிங்கைத் தொடர்பு கொண்டோம். பாம்புக் கடிபட்டவரை பெயரை அவர் கேட்டார். அதை அவருக்கு தெரியப்படுத்தினோம். சில நிமிடங்களிலேயே பாம்புக் கடி பட்டவர் எழுந்து உட்கார்ந்து விட்டார்.” என்று ராஜேந்தர் லெங்கா கூறுகிறார். அவர் அரசியல்வாதியாவார். அதுமட்டுமல்லாமல் அரசின் வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்தும் செய்து வருகிறார். 

இனி மற்றொரு மந்திரவாதியைப் பற்றிப் பார்ப்போம். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷாஹாதத் என்பவர் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவர் பாம்புக்கடியை குணப்படுத்தும் விதம் சிங்கின் வழிமுறையிலிருந்து சற்று மாறுபட்டது. 

ஷாஹாதத் பாம்பு கடிபட்டவரின் பெயரை மட்டுமல்லாமல் அவரது தாயாரின் பெயர், கிராமம் மற்றும் தாலுகா, மாவட்டத்தின் பெயரையும் கேட்கிறார். ஏனெனில் ஒரே பெயரில் பலர் இருக்கக்கூடும் என அவர் அதற்கு காரணம் கூறுகிறார். 250 மில்லி பாலை கொதிக்க வைக்க வேண்டும். அது வெதுவெதுப்பாக இருக்கவேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஷாஹாதத் மந்திரம் சொல்லிக் கொண்டே  இருப்பார். ஸ்பூனில் பாலை பாம்புக் கடிபட்டவருக்கு உறவினர்கள் புகட்ட வேண்டும். பாலை எளிதில் புகட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து புகட்ட முயற்சிக்க வேண்டும். பாலை பாம்புக் கடிபட்டவர் உட்கொண்டுவிட்டால் விஷம் முறிந்துவிடும். பாலை அவர் குடித்து முடிக்கும் வரை தொடர்ந்து புகட்டிக் கொண்டே  இருக்க வேண்டும் என்று ஷாஹாதத் கூறுகிறார். 15 நிமிடங்களுக்குள் பாம்புக் கடிபட்டவர் தானாகவே  எழுந்து உட்கார முடியும், வேலைகளைச் செய்ய முடியும். இருப்பினும் தொடர்ந்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றும்,  பூஜை நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் ஷாஹாதத். 

“இயற்கையில் நான் குறுக்கிட வேண்டியிருக்கிறது. மன்னிப்புக் கேட்டு நான் மன்றாட வேண்டியிருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நான் படிப்பறிவில்லாத முட்டாள். எனக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. எனக்கு உருது மட்டுமே பேசத் தெரியும். வேறு மொழியில் யாராவது பேசினால் என்னால் புரிந்து கொள்ள கூட முடியாது. எனக்கு இந்த மந்திரங்களைக் கற்றுக் கொடுத்தவர் எனது குரு பண்டிட் யஷ்வந்த் மராட்டா ஆவார். 

இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது பரிபூரண தூய்மையுடன் இருக்க வேண்டும். அழுக்கான உடலோடோ அல்லது அழுக்கான மனத்தோடோ மந்திரத்தை உச்சரிக்கக் கூடாது. மந்திரத்தை காசுக்காக உச்சரிக்கக் கூடாது. காசு வாங்கிக் கொண்டு மந்திரத்தை உச்சரித்தால் அது பலிக்காது. நான் விவசாயியாக இருக்கிறேன். விவசாயம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் சோறு போடுகிறது. நான் ஏழைதான். ஆனாலும் இலவசமாக பாம்புக்கடி மந்திரத்தை உச்சரித்து வருகிறேன். எனது கஷ்டத்தைப் பார்த்து எனது மொபைலை எனது கிராமத்தினர்  அவ்வப்போது ரிசார்ச் செய்து தருகிறார்கள்” என்று 63 வயதான ஷாஹாதத் கூறுகிறார். 

தொடர்ந்து அவர் கூறியதாவது, “எனக்கு 40 வயது நடந்துகொண்டிருந்த போது மனத்தில் குழப்பம் ஏற்பட்டது. நான் எனது கிராமத்தை விட்டு வெளியேறினேன். அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன். வழிபாட்டுத்  தலங்களுக்குச் சென்றேன். சாதுக்களிடம் அடைக்கலம் அடைந்தேன். அவர்கள் ஒரு குருவிடம் கொண்டு என்னைச் சேர்த்தார்கள். குரு பண்டிட் யஸ்வந்த் மராட்டா எனக்கு மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. 

இந்த 23 ஆண்டுகளில் நான் ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். இதற்கு நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் தினந்தோறும் 10 பேரையாவது காப்பாற்றி வருகிறேன். இப்போது நான் இது தொடர்பாக கணக்கும் வைத்துக் கொள்ளத்  தொடங்கியுள்ளேன். ஏனென்றால் பலர் நிரூபணம் கேட்கிறார்கள். அதற்காகத்தான் இதை நினைவில் வைத்துள்ளேன். எனக்கு 16 குழந்தைகள் உள்ளனர். எதற்கும் உதவாதவனாக என்னைப்பற்றி நான் தாழ்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது எனது வாழ்க்கை சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது”. 

மந்திரங்கள் அனைத்தும் வேத காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றன. நோயை குணமாக்க, வறுமையைப் போக்க, எண்ணியதை நிறைவேற்ற என பல்வேறு விஷயங்களுக்காக மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. மந்திரங்களை உச்சரிக்கும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உச்சரிப்பில் சிறு பிசிறுகூட ஏற்படக் கூடாது. பிசிறு ஏற்பட்டால் விபரீதமான விளைவுகள்  ஏற்பட்டுவிடும் என்று பண்டிட் போஜிராஜ் துவிவேதி கூறுகிறார். மந்திரங்களை நேரில்தான் சொல்ல வேண்டுமே தவிர மொபைல் போனில் சொல்லக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். ஆனால் காலமாறுதலுக்கு ஏற்ப மொபைல் போனிலும் மந்திரங்களைச் சொல்லலாம் என்று மந்திரங்கள் வாயிலாக பாம்புக்கடியை குணப்படுத்திவரும் மந்திரவாதிகள் கூறுகிறார்கள்.

http://www.dailypioneer.com/sunday-edition/agenda/cover-story/16429-magicians-of-anti-venom.html