ஹிந்து சங்க செய்தி

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். செயற்குழு
ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 2.3 & 4 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற இருக்கிறது. சென்னையிலிருந்து 40௦ கி.மீ. தொலைவில் இருக்கும் கேளம்பாக்கம் ஸ்ரீ சிவா சங்கர் பாபா ஆஸ்ரமத்தில் இது நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.தலைர் ஸ்ரீ.மோகன் பகவத் அவர்களுக்கு வரவேற்பு

நாடெங்கிலும் இருந்து சுமார் 400௦௦ க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்வதற்காக வர இருக்கின்றனர். 29 அக்டோபர் அன்று மதியம் சென்னை வந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்களுக்கு நமது பாரம்பரிய முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஸின் அகில பாரத பொறுப்பாளர்கள், அனைத்து மாநிலத் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும்  அமைப்பு செயலாளர்கள் இவர்களுடன் பல்வேறு துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கிற வி.ஹெச்.பி., பி.எம்.எஸ்., ஏ.பி.வி.பி., வித்யா பாரதி,  சேவா பாரதி,  சம்ஸ்க்ருத பாரதி,  பாரதீய கிசான் சங்கம் (B.K.S.), வனவாசி கல்யான் ஆஸ்ரம், ராஷ்டிரா சேவிகா சமிதி, ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் (SJM). பாரதீய ஜனதா கட்சி (BJP) போன்றவற்றின் அமைப்பு செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஸின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உயர்மட்ட அமைப்பு இது. வருடம்தோறும் அக்டோபர் மாதத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இயக்க வளர்ச்சி, செயல்பாடுகள், தேசியப் பிரச்சனைகள் போன்றவற்றை விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும். முக்கியப் பிரச்சனைகளில் தீர்மானங்கள் இயற்றப்படும். எதிர்கால நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்படும்.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.செயற்குழு நடப்பது இதுவே முதல்தடவை. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.

அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்
1947 அக்டோபர் 26 அன்று  பாரதத்துடன் மற்ற சமஸ்தானங்கள் எப்படி இணைந்ததோ அது போன்றே ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானமும் பாரதத்துடன் முழுமையாக இணைந்தது.

மன்னர் ஹரி சிங் பாரதத்துடன் இணைத்த ஜம்மு காஷ்மீர்

பல்வேறு காரணங்களால் நமது நாட்டின் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவில்லை, அச்சமயத்தில் அது நமது நாட்டுடன் இணையாமல் தனியான சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தது. அந்நாட்டினை டோக்ரா பரம்பரையைச் சார்ந்த ஹிந்து மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வாழ்ந்து வந்தனர். டோக்ரா ஹிந்து மன்னர் பரம்பரையினர் மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பெருமதிப்பு வைத்திருந்தனர். நமது நாட்டில் வேறெங்கும் காண முடியாத காட்சி அது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன் அவர்களுக்கு 1947 ஆம் வருடம் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பாரதத்துடன் எவ்வித நிபந்தையும் இன்றி தனது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மற்ற சமஸ்தானங்கள் எப்படி ஒன்றினைந்ததோ அதேபோன்று  தானும் இணைப்பதாக எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவைத்தார். அக்டோபர் 27, 1947 அன்று அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து கைச்சாத்து இட்டதுடன் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் கூட எவரும் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை. மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த பிறகும் கூட அம்முடிவை எந்த ஒரு முஸ்லிமும் எதிர்க்க வில்லை. தனி உரிமைகள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கூட  அவர்கள் கேட்டிடவில்லை.  அப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 எதற்காக உருவாக்கப்பட்டது. தற்காலிகமானது வெறும் 10 வருடங்களுக்கு மட்டுமே இது அமுலில் இருக்கும் பின்னர் அகற்றிக் கொள்ளப்படும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 62 வருடங்கள் சென்ற பிறகும் அந்த அரசியல் சாசன சட்டம் 370 வது பிரிவு நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

1947ஆம் வருடம் மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீர் இன்று நம்முடன் உள்ளதா? ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன? பாரத ராணுவம் வெற்றிகரமாக பாகிஸ்தான் கூலிப்படையினரை விரட்டி அடித்துக் கொண்டிருந்த போது திடீர் என போரை நிறுத்திட வேண்டியதன் காரணம் என்ன? இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் என்றைக்காவது அது நடுநிலையாக நடந்து கொண்டதுண்டா?  பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து முற்றிலுமாக தனது ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் இன்று வரை அதற்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரும் இன்று நம்மிடம் இல்லை.

1947இல் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் நம்முடம் இணையும்போது ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கித் மற்றும் பால்டிஸ்தான் என ஐந்து வகைப் பகுதிகளாக இருந்தது. சுதந்திர பாரதத்துடன் இணைந்த சமஸ்தானங்களிலேயே நிலப்பரப்பில் மிகப் பெரியது ஜம்மு காஷ்மீர். இணையும்போது மொத்தம் 2,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒருபக்கம் பாகிஸ்தானும் மற்றொருபக்கம் சீனாவும் ஆக்கிரமித்துள்ளது. மன்னர் ஹரி சிங் இணைத்த ஜம்மு காஷ்மீரில் தற்போது 45% மட்டுமே இன்று நம் வசம் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை.

ஜம்மு பகுதி 36,315 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் வெறும் 26,000 ச.கி.மீ.மட்டுமே உள்ளது. இதன் தெற்கே பீர்பாஞ்சால் என்கிற எவராலும் எட்ட முடியாத மிக உயர்ந்த மலைத்தொடர் உள்ளது. அங்குதான் தாவி, சீனாப், ரவி, போன்ற  வற்றாத ஜீவா நதிகள் உற்பத்தியாகி ஜம்மு காஷ்மீரை வளப்படுத்துகின்றன. தற்போது நம் வசம் இருக்கின்ற ஜம்மு பகுதியில் 67% சதவிகிதம் பேர் இந்துக்கள். இவர்கள் பேசுகின்ற மொழி டோக்ரா மற்றும் பஹாடி ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மொத்தம் 22,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் இருப்பது வெறும் 16,000 ச.கி.மீ.மட்டுமே. தற்சமயம் இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு காலங்காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள் 4 லக்ஷம் பேர்கள் வெளியேற்றப்பட்டு ஜம்மு உட்பட நாட்டின் பல இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஜீலம் மற்றும் கிஷன் கங்கா நதிகள் பாய்ந்தோடுவதால் அழகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. ஒன்று ஜீலம் பள்ளத்தாக்கு மற்றொன்று லோலாப் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு மக்கள் பேசுகின்ற மொழி கஷ்மீரி. ஆனால் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாபி-பஹாடி மொழி பேசுகின்றனர்.

லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய பகுதியாகும். மொத்தம் 1,64,748 ச.கி.மீ.பரப்பளவு கொண்டது. அதில் மிகக் குறைந்த பரப்பளவே அதாவது வெறும் 59,000 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே இன்று நம்வசம் உள்ளது.

இயற்கை தனது அத்தனை வளங்களையும் இங்கு கொட்டிவிட்டதோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகிய அற்புதமான பகுதி. எண்ணற்ற புத்த மடாலயங்கள், விஹார்கள் உள்ளன. அமைதி தவழும் பகுதியாகும். கார்கில் போன்ற மிக உயரமான மலைத் தொடர்கள் உள்ள பகுதி லடாக். ஆறுகள் எப்போதும் பனி உறைந்தே காணப்படும். வருடத்தில் மிக மிகக் குறைவாக மழை பொழிகின்ற இடம் இதுதான். காரகோரம் நெடுஞ்சாலை இங்குதான் செல்கிறது. லே, மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றம் 4 சட்டமன்றத் தொகுதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

கார்கில் பகுதியில் வாழ்ந்து வருகின்ற “ஷியா” பிரிவு முஸ்லிம்கள் தீவிரமான தேச பக்தர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. லடாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது. லடாக்கினை தெற்கு திபெத் என்று சீனா அழைக்கிறது. லே, சன்ஸ்கார், சங்தங், நுப்ரா, பள்ளத்தாக்குகளில் முழுக்க முழுக்க பௌத்தர்கள் வாழ்கின்றனர். சுரு பள்ளத்தாக்கில்  முஸ்லிம்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் லடாக்கி, பால்ட்டி அல்லது பாலி மொழிகளில் பேசுகின்றனர்.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி முழுவதும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை நாம் இன்று வரை மீட்காமல் இருந்து வருகிறோம். அப்பகுதியை விடுதலை செய்யப்பட்ட அதாவது “ஆசாத் காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்கிறது. நாம் அதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறோம். ஆக்கிரமித்த அப்பகுதிகளை பாகிஸ்தான் தனது முழுமை யான அரசு நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டு, அதை நேரிடையாக நிர்வாகம் செய்து வருகிறது.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி மொத்தம் 63,000 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட தாகும். அதில் கில்கித் மட்டும் 42,000ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பால்டிஸ்தான் 20,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கில்கித் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமான பகுதியாகும். அங்கு சர்வதேச எல்லைக்கோடு உள்ளது. 6 நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்ற மிக முக்கியமான இடமாகும். ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, திபெத் மற்றும்  பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகள் அங்கு சங்கமமாகின்றது. இப்பகுதி யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆசியப் பிராந்தியத்தில் இராணுவரீதியில் மற்றும் பல வகைகளில் ஆதிக்கம் செய்யமுடியும்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்த அமெரிக்கா மற்றும்  சோவியத் ரஷ்யா கூட இப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திட முயன்றன. கில்கித்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக சோவியத் ரஷ்யா அவ்வப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்துள்ளது. தற்போது அங்கு11,000 சீனத் துருப்புகள் இருந்து வருகின்றனர். சீனா ஒரு லக்ஷம் கோடிக்குமேல் அங்கு முதலீடு செய்துள்ளது. மேலும் சீனக் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக பல ஆயிரம் சீனர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், பஞ்சாபி மட்டும் பஹாடி மொழி பேசுகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் சுமார் 10 ௦ லக்ஷத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஹிந்துக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில்  36,500 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேறு தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவற்றிலிருந்து சுமார் 5,500 ச.கி.மீ.பரப்பளவு இடத்தை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. அதில் இப்போது பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் சாலை போடப்பட்டுள்ளது. அங்குதான் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது.

நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994 ஆம் வருடம் நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அம்மாதிரி ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே நாட்டு மக்கள் பலருக்குத் தெரியாது.

மன்னர் ஹரி சிங் 1947 ஆம் வருடம் பாரதத்துடன் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரை என்று காண்போம். நமது  நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிடுவோம். இருக்கின்ற ஜம்மு காஷ்மீரைக் காத்திடுவோம்.

அமெரிக்காவை அழித்துக் கொண்டிருக்கும் வால்மார்ட்
ஒரு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ், மன்மோகன் சிங், சோனியா, மக்கள் விரோத அரசு சில்லறை வணிகத்தில் 51 சதவீத பல்முனை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. ஒரு  கிழக்கிந்திய கம்பனி இந்தியாவை 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தி ஆண்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்தியாவை சூரிய சந்திரர்கள் உள்ளவரை அந்நியர்கள் ஆளத் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மீர்ஜபார்களும் ,ஜெயச்சந்திரன்களும் இன்னும் நம் நாட்டில் காங்கிரஸ் வடிவில் உயிரோடுதான் இருந்து வருகின்றனர்.

வால் மார்ட் நம் நாட்டுக்குள் வந்தால் இங்கு தேனும் பாலும் ஓடும் என்று அமெரிக்க அடிமைகள் ஓலம் இடுகின்றனர். ஆனால் வால்மார்ட் அமெரிக்காவிற்கே என்ன செய்து கொண்டு உள்ளது? அமெரிக்காவை அமெரிக்கர்களை, அமெரிக்க வேலைகளை, திட்டமிட்டு அழித்து வருகிறது. அமெரிக்காவை ஓட்டாண்டியாக்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் வால்மார்ட் இந்தியாவை சொர்க்க புரியாக்குமா? ஆக்கும் என்று சொல்பவர்களை நம்பி நாம் மோசம் போகவேண்டுமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்டைப் பற்றி அமெரிக்க அறிவு ஜீவிகள், அமெரிக்கர்கள், அமெரிக்க  செய்தி தாள்கள் கூறிவருவதைப் பற்றி கீழ்காணும் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகாவது நம் நாட்டில் உள்ள அமெரிக்க அடிமைகள் திருந்துவார்களா?

மொழி பெயர்ப்பாளர்: லா.ரோஹிணி

Is Wal-Mart DestroyingAmerica? Facts About Wal-Mart That Will Absolutely Shock You

வால்மார்ட் அமெரிக்காவை அழித்துக்கொண்டு இருக்கிறதா? வால்மார்டைப் பற்றிய உண்மைகள்! இவை உங்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியைக் கொடுக்கும்.

அமெரிக்கா வால்மார்டை முற்றிலும் நேசிக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் 100 மில்லியன் (10கோடி) வாடிக்கையாளர்கள் வால்மார்ட் கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் வால்மார்ட் அமெரிக்காவுக்கு நல்லதா? நன்மையா? பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்பதில்லை. நம்மில் பெரும்பாலோர் பெரிய, சுத்தமாக உள்ள கடைகளில் பொருட்களை வாங்கவே விரும்புகின்றோம். அந்த கடைகளில் மிக மலிவாக பொருட்கள் கிடைப்பது நமக்கெல்லாம் மிகவும் பிடிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் வால்மார்ட் அமெரிக்காவை பல வழிகளில் நாசமாக்கிக் கொண்டுள்ளது.

வால்மார்ட் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான சிறு வணிகங்களை, எண்ணிக்கையில் அடங்காத வேலை வாய்ப்புகளை கடந்த பல வருடங்களில் அழித்து துடைத்து எறிந்து விட்டது. வால்மார்ட் ஒரு மிகப்பெரிய சிறு வணிக பஸ்மாசுரனாக வளர்ந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள வேறு எந்த சிறு வணிக நிறுவனத்தைக் காட்டிலும் வால்மார்ட் ஐந்து பங்கு அதிக பொருட்களை விற்பனை செய்கிறது. துரதிர்ஷ்டவசமாக வால்மார்ட் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் மிக அதிக சதவீதப் பொருட்கள் “வெளிநாடுகளில் தயாரிக்கப் பட்டவை”. இதன் காரணமாக எவ்வளவு வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களிட மிருந்து பறிக்கப்பட்டுள்ளன, அமெரிக்க பொருளாதாரத்திற்கு  எவ்வளவு ஆயிரம் ஆயிரம் ஆயிரம் கோடிகள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, இவை எல்லாவற்றின் காரணமாகவும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது என்பதை கணக்கிடவே முடியாது. நம்முடைய பொருளாதார நிலைமை எங்கு போய்க் கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வால்மார்ட்டின் உதாரணத்தைப்  பார்த்தாலே போதும். மிகவும் அதிகமாக எல்லா அதிகாரங்களை யும் தங்களிடம் குவித்து வைத்துக் கொண்டுள்ள பகாசுர கம்பனிகள் “நம்முடைய பொருளாதாரத்தை முழுவதுமாக, முற்றிலுமாக ஆட்டிப் படைத்து வருகின்றன. இத்தகைய  கம்பனிகள் எவ்வித இரக்கமும் இன்றி எல்லா விதமான வர்த்தகப் போட்டிகளையும் நசுக்குகின்றன. இந்த கம்பனிகள் செலவைக் குறைப்பதற்காக எதையும் செய்ய, எந்த கீழ்த்தரமான நிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளன. இத்தகைய வகுப்புவாத, பகாசுர கம்பனிகளுக் காகத்தான்  நாம் எல்லோரும் எதிர்காலத்தில் வேலை செய்யப் போகிறோமா? ஒரு மிக சிறிய குழுவிடம் எல்லா பொருளாதார செல்வ வளங்களையும் கொண்டு குவிக்கும் இத்தகைய கம்பனிகளுக்காகதான்  நம்முடைய உழைப்பு செலவாகப் போகிறதா? இம்மாதிரித்தான்  கம்முனிஸ்டு சீனாவில் நடக்கிறது. அமெரிக்காவில் “சுதந்திரப் பொருளாதாரம்” என்று பறைசாற்றப்படுகிறது. அமெரிக்காவை “போட்டிகள் மூலம்” “இணைந்து செயல்படுவதன்  மூலம்” முன்னேற்றப் போவதாக சொல் கின்றனர். ஆனால் வால்மார்ட் இவை அனைத்தையும்தான் அழித்து நாசமாக்கி வருகிறது.

வால் மார்ட் பற்றிய கீழ்காணும் 20 உண்மைகள் உங்களை முற்றிலும் அதிர்ச்சி அடையச் செய்யும்.

1) வால்மார்ட்டில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க குடும்பம் சராசரியாக 4,000 அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறது.

2) 2010௦ ஆம் ஆண்டில் வால்மார்டின் வருமானம் 421பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 170,வெவ்வேறு நாடுகளின் ஒட்டு மொத்த வருமானத்தைக் காட்டிலும் வால்மார்டின் இந்த வருமானம் அதிகம். இந்த 170 நாடுகளில் நார்வே, வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் போன்ற நாடுகளும் அடங்கும்.

3) வால்மார்ட்  ஒரு தேசமாக இருந்தால் அதன் ஒட்டு மொத்த வருமான அடிப்படையில் அது உலக அரங்கில் 23  வது மிகப் பெரிய நாடாக விளங்கும்.

4) அமெரிக்காவில் வேறு எவரைக் காட்டிலும் வால்மார்ட் மிக அதிக அளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு 4 டாலர்களிலும் 1 டாலர் வால் மார்டில் மளிகைப் பொருட்கள் வாங்க செலவிடப்படுகிறது.

5) ஒவ்வொரு வாரத்திலும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் வால்மார்ட்டில் பொருட்களை வாங்குகின்றனர்.

6) 2005 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், வால்மார்ட் 1100 கும் மேற்பட்ட “பிரம்மாண்டமான கடைகளை” துவக்கியுள்ளது.

7) இப்போது வால்மார்ட்டில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.

8) வால்மார்ட்டுக்கு என ஒரு ராணுவம் இருந்தால், சீனாவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய ராணுவம் வால்மார்ட்டிடம்தான் இருக்கும்.

9) அமெரிக்காவில் 25 வெவ்வேறு மாநிலங்களில் வால்மார்ட் தான் மிகப் பெரிய “வேலை கொடுத்துள்ள முதலாளி”.

10) எகனாமிக் பாலிசி இன்ஸ்ட்டிடுட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். 2001 இல் இருந்து 2006 ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால், அமெரிக்காவில் 133000  “உற்பத்தி வேலை வாய்ப்புகள்” பறிபோய்விட்டன. இதை அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

11) வால்மார்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி  ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பது அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒரு வருடத்தில் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம்.

12) வால்மார்ட் கம்பனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் “மருத்துவ வசதி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது மருத்துவ செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது. வால்மார்ட் கம்பனி அல்ல.

13) 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கு இடையில் வால்மார்ட் சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.

14) 96  சதவீத அமெரிக்கர்களுக்கு 20 மையில்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.

15) 1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் ஒட்டு மொத்த “சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கையில்” 60000  சரிந்துவிட்டது.

16) 2011 ம் ஆண்டில் வால்மார்ட் “அரசியல் லாபி” செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. இதை “சென்டர் பார் ரெஸ்பன்சிவ்  பொலிடிக்ஸ்” என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது. இந்தத் தொகையில் பிரசார செலவுகள் சேர்க்கப்படவில்லை.

17)  கஸ்ட்கோ  என்பது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய சிறு வணிகத் துறை நிறுவனம் ஆகும். அதை விட 5  மடங்கு அதிகமாக வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்கிறது.

18) வால்மார்ட் கம்பனியின் வெறும் ஆறு குடும்பங்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30 சதவீத அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்கு சமம்.

அமெரிக்கா முழுவதிலும் சுதந்திரமான சிறு வணிகர்கள் வியாபாரத்தை  இழுத்து மூடி கொண்டுள்ளனர். ஏன் என்றால் வால்மார்ட்டுடன் அவர்களால் போட்டி போட முடியவில்லை. வால் மார்ட் கொண்டு வந்து கொட்டும் மிகக் குறைந்த மலிவான சீனப் பொருட்களுடன் அவர்களால் மோத இயலவில்லை. தங்களுடைய பகுதிகளில் வருவதற்காக வால்மார்ட்டுக்கு சமூகங்கள் நிறைய வரி சலுகைகளை வாரிக் கொடுக்கின்றன. ஆனால் வால்மார்டை அழைத்து வருவதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள சிறு வணிகங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர மறுக்கின்றனர்.

அங்கு ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிறு நகரங்களில் உள்ளூர் வணிகம்  172 என்ற சதவீதத்திலும், கிராமப்புறங்களில் 61.4 என்ற சதவீதத்திலும் சரிந்துவிட்டது. இதன் விளைவாக  கடந்த 13 வருடங்களில் 2.46 அமெரிக்க டாலர்கள் பெறுமான இழப்பு வால்மார்ட்டால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் அடிமை வேலை நடைபெறுகிறது. அங்கு வால்மார்ட் கொடுக்கும் கூலி மிகவும் குறைவு. அவர்கள் தயார் செய்யும் பொருட்களை வால்மார்ட் அமெரிக்கா வுக்கு கொண்டு வந்து விற்கிறது. இதன் விளைவாக நன்கு வருமானம் ஈட்டக் கூடிய அமெரிக்க வேலைகள் நாசமாக்கப்படுகின்றன. அமெரிக்கா ஏழை நாடாக மாறிவருகிறது. இந்த விஷயம் திரும்பத் திரும்ப அமெரிக்க மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்.

மக்கள் அரங்கத்தில் வால்மார்ட் ஒன்று சொல்கிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் அது வேறு ஒன்றை செய்கிறது. அமெரிக்காவில் உற்பத்தி செய்வது சம்பந்தமாக, வேலை வாய்ப்புகளைக்  குறித்து வால்மார்ட் சிறிதும் அக்கறைப்படுவது இல்லை. தங்களுக்கு எவ்வளவு மலிவாக பொருட்கள் கிடைக்குமோ அவ்வளவு மலிவாக பொருட்களை வாங்கத்தான் வால்மார்ட் அக்கறை காட்டுகிறது. இந்த மாதிரி மலிவான பொருட்கள் அனைத்தையும் சீனாவில் இருந்துதான் வால்மார்ட் பெறுகிறது.

81 வயதான துணிகள் உற்பத்தி செய்யும் ஒரு முதலாளியின்  இந்த அனுபவத்தை கேட்டுவிட்டுப் பிறகு நீங்களே முடிவு செய்யலாம். அவர் பின்வருமாறு சொல்கிறார்.

“தென்மேற்கு துணி உற்பத்தியாளர்கள் வணிகர்கள் சங்கத்தின் தலைவராக நான் இருந்தேன். 1985 கும் 1990 கும் மத்தியில் ஒரு கூட்டம் நடந்தது. டல்லஸ் நகரில் எங்கள் சங்கத்திற்கு ஒரு அழகான கட்டடம்  இருந்தது. இப்போது அது தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டது. ஏன் என்றால் அங்கு வந்து கொண்டு இருந்த சுதந்திரமான வர்தகர்கள் இப்போது அங்கு வருவதில்லை. வால்மார்ட் ஆட்கள் எங்கள் ஸ்தாபனத்தை அணுகினர். நான் மேலே குறிப்பிட்ட கட்டடத்தில் எங்களை வந்து சந்திக்க இயலுமா என்று கேட்டேன். வால்மார்ட்டில் இருந்து இருவர் எங்களை சந்தித்தனர். வெளிநாடுகளில் இருந்து தாங்கள் பொருட்களை தருவிக்கப் போவதாக அவர்கள் சொன்னார்கள். நுகர் பொருட்களுக்கு அவர்கள் சொல்லும் விலையைத் தான் வைக்க வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் தயாராகவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். உலகம் முழுவதிலும் இருந்து நாங்கள் பொருட்களை வாங்கப் போகிறோம் என்று அவர்கள் மேலும் சொன்னார்கள். வால்மார்ட் கம்பெனி ஒன்று,மட்டும்தான் முன்வந்து இதை சொன்னது.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நான் அவர்களுக்கு சில பொருட்களை விற்று வந்தேன். வால்மார்ட் ட்ரக்குகளின் பின்னால் “அமெரிக்காவுக்கு திரும்பக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது. வால்மார்ட் கடைகளில் “அமெரிக்காவில் வைத்து இருங்கள்” என்று எழுதப்பட்ட பெரிய பெரிய பேனர்கள் அந்த காலத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும். இதை எல்லாம் வந்தவர்களிடமும், என்னிடம் பொருள் வாங்க வருபவர்களிடமும் நான் நினைவூட்டினேன் இவை எல்லாம் உள்ளூர் அமெரிக்கர்களை கவர்வதற்காக, உண்மையில் உலகம் முழுவதிலும் இருந்து எங்கு பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்குதான் வால்மார்ட் கம்பெனி வாங்கும் என்று அந்த ஆட்கள் சொன்னார்கள்.

சொல்வது ஒன்று. செய்வது வேறு. அதுதான் வால் மார்ட்.

நான் முன்பே எழுதியது போல் 2001 இல் இருந்து வால்மார்ட் கம்பனியால் அமெரிக்காவுக்கு 56000  பொருட்களை உற்பத்தி செய்யும் வசதிகள் பறிபோய் விட்டன.

வால்மார்ட் கம்பனியால் அமெரிக்கா லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறது. அவைகளை திரும்ப மீட்டு எடுக்கவே இயலாது. சீனா 2001 ஆம் ஆண்டில் உலக வர்த்தக ஸ்தாபனத்தில் உறுப்பினரானது. அந்த தருணத்திலிருந்து அமெரிக்கா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50000  பொருட்களை உற்பத்தி செய்யும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது. இதை உங்களால் நம்ப முடியுமா?

சென்ற வருடம் சீனாவுடன் அமெரிக்காவுக்கு இருந்த “வர்தகப் பற்றாக்குறை” போல், உலக சரித்திரத்திலேயே எந்த ஒரு  நாட்டுக்கும் மற்றொரு நாட்டுடன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது இல்லை. இதில் “வால்மார்ட் கம்பெனிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு”.

உண்மையில் வால்மார்ட் கம்பெனி சில அமெரிக்க பொருள் உற்பத்தியாளர்களை  அமெரிக்காவில் கடையை மூடிவிட்டு வெளிநாடுகளில் கடைவிரிக்க பலவந்தப் படுத்தியுள்ளது.அமி ட்ரயுப் என்பவர் சமீபத்தில் கீழ்க்கண்ட கட்டுரையை எழுதி உள்ளார்.

வால்மார்ட்டின் “சந்தை சக்தி” மிகப் பெரியது. வால்மார்ட்டுக்கு பொருட்களை விற்கும் மிகப்பெரிய கம்பெனிகளிடம் கூட இன்னும் குறைந்த விலைக்கு கொடு, இன்னும் குறைந்த விலைக்கு கொடு என்று பிடுங்கும் வால்மார்டின் வற்புறுத் தலை  நிராகரிக்க முடியாது. ஏன் என்றால் பிறகு அவர்களுடைய பொருட்களை அவர்கள் விற்கவே முடியாமல் வால்மார்ட் செய்துவிடும். வால் மார்ட்டின் வலிமை அத்தகையது. அமெரிக்காவில் லெவி கம்பெனி “ஜீன்சுகளை” தயாரிக்கிறது. மாஸ்டர் லாக் கம்பெனி பூட்டுகளைத் தயாரிக்கிறது. இந்த மிகப் பெரிய கம்பனிகளை அமெரிக்க தொழிற்சாலைகளை  மூடிவிட்டு வெளி இடங்களுக்கு சென்று பொருட்களை உற்பத்தி செய்யுமாறு வால்மார்ட் செய்து விட்டது. என்னென்றால் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்னும் வால்மார்டின் நிர்பந்தத்திற்கு இந்த மிகப் பெரிய கம்பனிகள் கூட தலை வணங்க வேண்டியதாயிற்று.

வால்மார்ட் அமெரிக்க சமூகங்களிடம் இருந்து மிகப் பெரிய செல்வ வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க சமூகங்களுக்கு வால்மார்ட் எந்த செல்வ வளத்தையும் திருப்பி தருவதில்லை. கோடி கோடி லாபங்கள் அனைத்தும் வால்மார்ட் அதிபர்களுக்கும், பங்கு தாரர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் கொடுக்கும் விலை குறைந்த பொருட்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால் வால் மார்ட்டுக்கு நாம் கொடுக்கும் பணம் எல்லாம் அமெரிக்க உள்ளூரில், உள்ளூர் சந்தைகளில் மிக மிகக் குறைந்த அளவுக்கு திருப்பி விடப்படுகிறது. திருப்பி கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் மிகவும் துரதிருஷ்டமான  நிகழ்வுகள் ஆகும்.

பண்டைய நாட்களில் நீங்கள் எலெக்ட்ரானிக் பொருட்களையோ அல்லது ஒரு மளிகைக் கடை நடத்தியோ உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம். ஆனால் வால்மார்டில் வேலை செய்து உங்கள் குடும்பத்தை நீங்கள் காப்பாற்றிவிட முடியாது. வால்மார்டில் பெரும்பாலான வேலைகளுக்கு மிக மிகக் குறைந்த ஊதியமே கொடுக்கப்படுகிறது. வால்மார்ட் ஊழியர்கள் பெரும்பாலோர் மிக மிக ஏழைகளாக உள்ளனர். அமெரிக்காவில் வேலை செய்யும் ஏழைகள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் உள்ள அனைத்து வேலைகளிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமான வேலைகள் “குறைந்த சம்பளத்தில்” உள்ளன. அமெரிக்காவில் “மத்திய தர வர்க்கம்” என்பது இப்போது வெகு வேகமாக குறைந்து கொண்டு வருகிறது.

அமெரிக்க வேலைகளையும், அமெரிக்க உற்பத்திகளையும் நாம் ஆதரிக்க வேண்டும். இல்லையென்றால் அவைகள் நம்மை விட்டுப் போய்விடும். அமெரிக்காவில் வேலை இல்லாமல், அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை பன் மடங்கு இன்னும் அதிகமாக அதிகரித்துவிடும்.

வேலைகள் இல்லாமல் அமெரிக்காவில் செழிப்பு ஏற்படாது. ஆனால் துரதிருஷ்ட வசமாக ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் எவ்வாறு வேலை வாய்ப்புகள், வேலைகள் திட்டமிட்ட ரீதியில்  அழிக்கப்படுகின்றன என்பதை பெரும்பாலான அமெரிக்கர்கள் புரிந்து கொள்வது இல்லை.

அமெரிக்கா இன்று சென்று கொண்டு இருக்கும் பாதை முழுமையான, முற்றிலுமான அழிவிற்குதான் இட்டுச் செல்லப்போகிறது. அமெரிக்காவை பணக்கார நாடு என்ற நிலையில் இருந்து ஏழை நாடாக மாற்றிக் கொண்டு உள்ளனர். முடிவில் ஒவ்வொரு சிறிய அறிவு ஜீவி கூட அமெரிக்காவை அதிகாரம் செலுத்த ஆரம்பித்து விடுவார். அமெரிக்காவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று அரசாங்கத்தை சார்ந்து இருப்பார்கள் அல்லது வேலை செய்யும் ஏழைகளாக ஆகி விடுவார்கள்.

அமெரிக்க அமைப்பு வெளிப்படையான நேர்மையான போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதாக  நாம் நினைக்கிறோம். ஆனால் வால்மார்ட் இத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்படும் கம்பனி அல்ல. வால்மார்ட் சிறு வணிகங்களை நசுக்கும் கம்பனி. அமெரிக்காவில் உள்ள உற்பத்தியாளர்களை வால்மார்ட்  நிர்மூலம் ஆக்குகிறது. இப்படி எல்லாம் செய்துதான் சீனாவில் தயாரிக்கப்பட்ட மிக மலிவான பொருட்களை வால்மார்ட் அமெரிக்கர்களான நம்மை வாங்க வைக்கிறது.

http://theeconomiccollapseblog.com/archives/is-wal-mart-destroying-america-20-facts-about-wal-mart-that-will-absolutely-shock-you

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
திரு.கே.எஸ்.சுதர்சன் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

16/09/2012 - இறுதி யாத்திரை - நாக்பூர்

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அவர்கள் 15/09/2012 காலை சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் காலமானார். அங்கு அவரது உடலுக்கு மரியாதை செலுத்திட காலையில் இருந்து மாலை வரை நூற்றுக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு நூற்றுக்கணக்கில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அவரது உடலை நாகபுரிக்கு அனுப்பிவைப்பதற்காக வந்திருந்தனர்.  ராய்ப்பூரில் இருந்து அவரது உடல் சிறப்பு விமானத்தின் வாயிலாக நாகபுரிக்கு நேற்று மாலை வந்தடைந்தது.

ராய்ப்பூர் ஆர்.எஸ்.எஸ்.காரியாலயத்தில்

விமான நிலையத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களின்  அமைதிப் பேரணி முன்னே செல்ல அவரது உடல் டாக்டர் ஹெட்கேவார் நினைவு மண்டபம் இருக்கின்ற ரேஷிம்பாக் ஸ்ம்ருதி மந்திருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக வைக்கப்பட்டது.

பிரார்த்தனா

ஆயிரக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள், பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செய்தனர்.  அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது இரண்டு கண்களும் மாதவ கண்தானக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.பிரமுகர்கள்

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களும் கே.எஸ்.சுதர்சன் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்றிட நாகபுரிக்கு வருகை புரிந்தனர். தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, இணை பொதுச் செயலாளர்களான சுரேஷ் சோனி மற்றும் ஹெச்.தத்தாத்ரேயா, செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், மதன்தாஸ் தேவி, மற்றும் ந.கிருஷ்ணப்பா ஆகியோர் முன்னின்று இறுதி அஞ்சலி செலுத்திட வருபவர்களை வரவேற்றனர்.

எல்.கே அத்வானி & நிதின் கட்கரி

கே.எஸ்.சுதர்சன் அவர்களின் உடலுக்கு குஜராத், மத்திய பிரதேசம்  மற்றும் கர்நாடக முதல்வர்களான நரேந்திர மோதி, சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் ஜகதீஷ் ஷெட்டார், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி, எல்.கே.அத்வானி, அருண் ஜெயிட்லி, திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இராணி உட்பட மேலும் பல  பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் சார்பில் அப்பாஸ் அலி போரா, ராஷ்டிர சேவிகா சமிதியின் அகில பாரத பிரமுக் ருக்மினி அக்கா, மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் எம்.சி.ஜெயதேவ், பீ.வீ.கிருஷ்ண பட், எம்.எல்.சி. ,உட்பட நூற்றுக்கணக் கானவர்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல துறைகளில் உள்ள பிரபலமானவர்கள், கல்வி யாளர்கள், தொழிலதிபர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலர் திரளாக வந்திருந்தனர்.

மறைந்த கே.எஸ்.சுதர்சன் அவர்கள் பல்வேறு மதத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு நட்புடன் பழகி வந்ததால் அவரது உடலுக்கு பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்த பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும்  பௌத்த மதத் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். ஜமாத்தே உலேமா ஹிந்த் தலைவர் மௌலானா ஷோஹிப் கஸ்மி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்  சித்திக் நாகபுரி ரேஷிம்பாக் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்திற்கு வந்து  மலரஞ்சலி செய்துள்ளார்.

திரு. சுதர்சன் அவர்கள் திபெத் மக்களின் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். நமது நாட்டிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற திபெத்திய அரசின் பிரதிநிதி நாகபுரிக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஸ்ரீ.அசோக் சிங்கல், பொதுச் செயலாளர் டாக்டர் பிரவீன்பாய் தொகாடியா மறைந்த சுதர்சன் அவர்களின் உடலுக்கு மரியாதை செய்தனர்.

ஸ்ரீ.அசோக் சிங்கால்

திரைப்படத் தயாரிப்பாளரும் சம்ஸ்கார் பாரதியின் தேசியத் தலைவருமான ராஜ் தத், நாகபுரியைச் சார்ந்த மூத்த ஸ்வயம் சேவகர் மா.கோ. வைத்தய, பாரதீய மஸ்தூர் சங்கத்தைச் சார்ந்த உதய் பட்வர்த்தன், பாரதீய கிசான்  சங்கத்தின் தலைவர் அண்ணாசாஹிப் முர்குடே, ராஷ்ட்ர சேவிகாசமிதியின் பொறுப்பாளர் கள் மற்றும் பல்வேறு சங்கப் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் மறைந்த தலைவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மறைந்த தலைவரது உடல்  ரேஷிம்பாக் காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக  நாகபுரி நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற கங்காபாய் படித்துறைக்கு  அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்  தகனம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தகனம்

இறுதி சடங்குகளை அவரது உடன் பிறந்த சகோதரர் கே.ரமேஷ் அவர்கள் செய்தார்.  வேத மந்திரங்கள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ராஷ்டிரா சேவிகா சமிதியினர்

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடெங்கிலும் ஆங்காங்கே பல இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. புதுதில்லி ஜண்டேவால் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் தலைவர் திருமதி.நஜ்மா ஹப்துல்லா, கிரிக்கெட் வீரர் சேட்டன் சௌஹான், ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர், புதுதில்லியில் இருக்கின்ற 3 மாநாகராட்சிகளின் மேயர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூருவில் நடைபெற்ற நிகச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய ஸ்ரீராமச்சந்திரபுர மடத்தைச் சார்ந்த ஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் தனது உரையில் சுதர்சன்ஜி அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானர், கட்டுப்பாடு மிக்கவர் ஆனால் மிகச் சிறந்த சிந்தனாவாதி, புத்திசாலி எனக் குறிப்பிட்டார்.  சங்கத்தின் வாயிலாக அவர் தனது வாழ்க்கையையே சமுதாயத்திற்காக அர்ப்பணம் செய்து கொண்டவர்.  ஸ்வதேசி சிந்தனைகள் நிரம்பப் பெற்றவர் என மேலும் அவரது பல நற்குணங்களை நினைவு கூர்ந்தார்.

ஸ்ரீ.கு.சி.சுதர்சன் காலமானார்
ஆர்.எஸ்.எஸ்.முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன் காலமானார்.

ஸ்ரீ.கு.சி.சுதர்சன்

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவரும் சங்கத்தின் மூத்த பிரச்சாரகருமான ஸ்ரீ.கு.சி.சுதர்சன் அவர்கள் ராய்ப்பூரில் 15/09/2012 காலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது.81. வழக்கம் போல் காலையில் தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சர் சங்கசாலக் பொறுப்பில் இருந்த போது மங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

மார்ச் 2000 முதல் மார்ச் 2009 வரை 9 வருடங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவர்) இருந்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகி அப்பொறுப்பினை டாக்டர் மோகன் பாகவத் அவர்களிடம் ஒப்படைத்தார்.

1931 ஜூன் 18 ஆம் தேதியன்று ராய்ப்பூரில் பிறந்தவர். மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற சாகர் பலகலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் பி.ஈ.ஹானர்ஸ் (B.E. Honours in Electronics & Communication) பட்டம் பெற்றவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு தேசத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1953 முதல் சங்கப் ப்ரச்சாரக்காக (முழு நேரத் தொண்டர்) தனது பணியைத் துவங்கினார்.

கிறிஸ்துவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது

தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1954 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ப்ரசாரக்காக (முழு நேரத்தொண்டராக) தனது வேலையைத் துவக்கினார். துவக்கத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்கட், சாகர் மாவட்டங்களின் ஜில்லா ப்ரச்சாரக்காக பணிபுரிந்துள்ளார். 1964 ஆம் வருடம் மத்தியபாரதத்தின்  ப்ராந்த ப்ரசாரக்காக பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார்.

1977 முதல் கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சங்கத்தின் ஷாரீரிக் பிரமுகராகவும் (உடற்பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளர்) அதைத் தொடர்ந்து சங்கத்தின் அகில பாரத பௌத்திக் பிரமுக்காகவும் (சிந்தனைக் குழுவின் பொறுப்பாளர்) இருந்துள்ளார். 1990 முதல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத சஹ சர்கார்யவாஹ் ஆக (அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார். இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 5 வது சர் சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உட்பட மேலும் பல  நாடுகளில்  சுற்றுப்பயணம் செய்துள்ளார். சர்சங்க சாலக் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும் கூட நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.

ஈரோடு பூஜாரிகள் மாநாட்டில்

மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார். சாதாரண பிரச்சனையில் இருந்து நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் பற்றி ஆழமான, தெளிந்த கருத்தும் சிந்தனையும் கொண்டவர். நாட்டின் அனைத்துப் பிரச்சனை களுக்கும் ஸ்வதேசி அணுகுமுறை மற்றும் சிந்தனையே தீர்வாகும் எனத் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்தவர்.  மிகத் தீவிரமாக சங்கத்தின் அன்றாட ஷாகா வேளையில் அதிக ஆர்வம் கொண்டவர். அதில் அதிக கவனம் செலுத்தி ஷாகா வருகின்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தவர்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட் என்கிற இடத்தில் இவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். ஆனாலும் இவரது மூதாதையர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஆகும்.

ராய்ப்பூரில் காலமான கே.எஸ்.சுதர்சன் அவர்களின் உடல் மாலையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை இடமாகிய நாக்பூருக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டு பின்னர் 16/09/2012 அன்று மாலை 3 மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. மறைந்த கே.எஸ்.சுதர்சன் அவர்களின்  இளைய சகோதரர் மைசூரில் வசித்து வருகிறார்.

கூடங்குளம் கூத்து
முடியட்டும் கூடன்குளம் கூத்து

கூடன்குளம் அணுமின்நிலையம்

அமெரிக்காவில் 65 அணு மின் நிலையங்கள் உள்ளன. இவற்றுக்காக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு, அணுமின் நிலை யங்களுக்கு பத்து கிலோ மீட்டரை விட அருகில் வசித்து வருகிற மக்களின் எண்ணிக்கை 30௦ லட்சம்.

சரி, அமெரிக்கா என்றாலே நம் நாட்டவருக்கு ஒரு அலர்ஜி: அதனால் அந்நாட்டுக் கணக்கை விடுவோம். உலகிலேயே அதிக அளவில் அணுமின் உற்பத்தியைப் பயன்படுத்துகிற நாடு பிரான்ஸ்: அந்நாட்டின் மின்சாரத் தேவையில் 77 சதவிகிதத்தை அணுமின் நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. பெல்ஜியத்தில் 54 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. ஸ்வீடனில் 40௦ சதவிகிதம்: சுவிட்சர்லாந்தில் 41 சதவிகிதம். இவையெல்லாம் சுற்றுச்சூழல் முதற்கொண்டு, மனித உரிமை வரை பல அடிப்படை விஷயங்களில் மிகவும் அக்கறை செலுத்துகிற நாடுகள். தென் கொரியாவில் 34 சதவிகிதம் அணுமின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி, இவை எல்லாமே மேற்கத்திய நாடுகள்: அதனால் நல்ல எண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக் கொண்டு, நம் நாட்டின் மீது மிகவும் நல்லெண்ணம் கொண்ட சீனாவைப் பார்ப்போம். அங்கே 40 அணுமின் நிலையங்களுக்குத் திட்டமிடப் பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போது 19 அணுமின் உயர்ப்பத்தி நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தானில் 6, மகாராஷ்ட்ராவில் 4, குஜராத்தில் 2, கர்நாடகத்தில் 3, தமிழ் நாட்டில் கல்பாக்கம் 2, உத்திரப் பிரதேசம் 2.

இது தவிர, இந்தியாவில் இப்போது கர்நாடகத்தில் ஒன்றும், ராஜஸ்தானில் இரண்டும், குஜராத்தில் இரண்டும், மகாராஷ்ட்ரத்தில் நான்கும் நிறுவப்பட இருக்கின்றன. இவற்றுடன்  கூடன்குளமும் ஒன்று.

உண்மை நிலைமை இப்படி இருக்க, கூடன்குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ஏன்? கல்பாக்கம் அணுமின் நிலையம் கிட்டத்தட்ட 30௦ ஆண்டுகளாக இயங்கி வருகிறதே? அதனால் மீனோ, மானோ, மனிதனோ பாதிக்கப்படவில்லையே! பல லட்சம் மக்களைக் கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் இருப்பதால், சென்னைக்கு என்ன கேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள் கூட அங்கேயே இருந்து பள்ளிக்குச் செல்கின்றனவே?

அணுஉலையை எதிர்த்துப் போராட்டம்

அங்கு ஏற்படாத ஆபத்து, கூடங்குளத்தில் மட்டும் ஏற்படுமா? இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகவும் திறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடங்குளத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினார்களே?

இப்படியெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றால் – அதற்கு எதோ ஒரு கேட்ட நோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்றுதான் அர்த்தம். பற்பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவதுதான் சத்தியம் என்று சில ஆயிரம் மக்கள் எப்படி ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும்முரமாகிறபோது, மாதா கோவில் மணி ஓயாமல் ஒலிப்பது ஏன்?

கடலில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம்

இதில் எதோ சதி இருக்கிறது. இதை முறியடித்து, அணுமின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஆவன செய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது போலீசார் அராஜகம் பண்ணியதாகக் கூறியிருப்பது பொய். போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் விளையாடுகிறார்கள். விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, பொலிசாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அது ஆர்ப்பாட்டத் தலைமையின் பொறுப்பே தவிர, அரசின் தவறு அல்ல.

‘பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை’ என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய ‘அச்சங்களை’யும் ‘கவலைகளை’யும் போக்குவதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகி விட்டது. பல முயற்சிகளை எடுத்தாகிவிட்டது. இனி அவரும் பொறுமை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

உதயகுமார்

ஆர்ப்பாட்டக்காரர்கள், அணுமின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. நாட்டு வெடி குண்டை வீசினால் கூட பேராபத்து விளையலாம். அதைத்தான் ஆர்ப்பாட்டத் தலைமை விரும்புகிறது. அதன் பிறகு பழியை ‘விஷமிகள்’ மீதோ, ‘அணுமின் நிலைய ஆதரவாளர்கள்’ மீதோ போட்டுவிட்டு, இந்த ஆர்ப்பாட்டத் தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்குப் போய்விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்கு முன், அவர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, அணுமின் நிலையத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடுகிறார்கள். ‘சமுத்திர ஸ்நானம்’ புண்ணியத்தை தரும். ‘ஸாகரம் ஸர்வ பாப ஹரம்’ – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம் செய்யும் – என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த பாப நாசத்தை, அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்.

முடியட்டும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடங்குளம் கூத்து.

மேற்கண்ட கட்டுரை 26/09/2012 தேதியிடப்பட்ட துக்ளக் இதழில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் ஆகும்.

1975 ஜூன் 25-ஐ மறக்க முடியுமா?
இந்த 21 மாதங்களில் பல குடும்பங்களுக்கு மகத்தான நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அதை அவர்கள் நாட்டுக்காக செய்த கைங்கர்யமாக கருதினார்கள். இப்படி ஆகிவிட்டதே என்ற ஏக்கமோ பாதிப்போ அடையவில்லை.

இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். அனால் ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறோம். சேலம் ராம்நாத்தின் வணிகம் கடுமையாக பாதிக்கப் பட்டது. பிரம்மபுரம் குமாரசுவாமியின் சீட்டு நிதித் தொழில் தகர்ந்தது. நாகர்கோவில் சங்கசாலக் முத்துசுவாமி தமது வியாபாரத்தையே கைவிடும்படி நேர்ந்தது. வழக்குரைஞர்களான நெல்லை எஸ்.ஜி.சுப்பிரமணியம், மதுரை கே.விஸ்வநாதன், திருச்சி.டி.என்.ஹரிஹரன், திருச்சியில் வியாபாரம் செய்து வந்த ஸ்ரீ.கங்காதரனுக்கும், ஏற்பட்ட இழப்பு அற்ப சொற்பமல்ல. சென்னை மாவட்ட சங்கசாலக் வழக்கறிஞர் ஸ்ரீ.சம்பத்குமார் ஜூலை 5 ஆம் தேதி கைதானார். அவர் கைதானதும் அவரது குடும்பத்தில் ஒரு துயர நிகழ்ச்சி நடந்தது. அவரது மகள் கடும் நோய்வாய்ப்பட்டார். ஒரு சில நாட்களில் அவர் வெளி வந்ததும் மகள் இறந்தே போனார்.

கோவை ஸ்ரீ.நாராயணன் வேலையை இழந்து மீண்டும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். மதுரை பாலிடெக்னிக்கில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ.கிருஷ்ணா சூர்யாவுக்கு இன்று வரை வேலை திரும்பக் கிடைக்கவில்லை. கும்பகோணம் ரமணி இன்னும் வேலையின்றி வாடுகிறார். அரியலூர் ஸ்ரீ.ஜனார்த்தனத்தின் ஹோட்டல் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது மகம் ஹரிஹரன் காவல் நிலையத்தில் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளானார். பேரணாம்பட்டு பத்மநாபன் இழந்த வேலையை இன்னமும் பெறவில்லை. இதுபோலக் கூறிக் கொண்டே போகலாம். இடமின்மையால் நிறுத்துக் கொள்கிறோம். இவ்வளவு இருப்பினும் இவர்களது உற்ச்சாகமும், ஊக்கமும் கின்றவில்லை. லட்சியப் பிடிப்பு ஒரு சிறிதும் தளரவில்லை.

பத்திரிகை ஆசிரியர்

சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகம்.அதன் ஆசிரியர் தேசபக்தர். அவரது அலுவலகத்தில் ஒரு நாள் ஸ்ரீ.ராமகோபாலன் (அப்போது அவர் தலைமறைவு ஊழியர்) உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆசிரியருக்கு ஏராளமான நண்பர்கள். பல துறைகளில் இருப்பவர்களும் சந்திக்கும் இடமாக, கருத்துப் பரிமாறிக்கொள்ளும் இடமாக அந்த அலுவலகம் அமைந்திருந்தது. மூன்று நான்கு பேர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம். ஆசிரியரின் நண்பர் உள்ளே நுழைந்தார். எனது நண்பர் மத்திய போலீஸ் புலனாய்வுத் துறையில் அதிகாரி. அவர் உங்களைக் காண வந்துள்ளார், அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். ஆசிரியர் அமைதியாக எழுந்து வெளியே சென்றார். காரில் அமர்ந்திருந்த அந்த அதிகாரியைச் சந்தித்தார். உபசார மொழிகளை எல்லாம் பரிமாறிக் கொண்ட பிறகு அந்த அதிகாரியிடம் தெளிவாக ஒன்றைக் கூறினார். நீங்கள் தயவு செய்து உள்ளே வரவேண்டாம். அங்கே ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமறைவு ஊழியர் ஒருவர் உட்கார்ந் திருக்கிறார். “நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் இருவருக்குமே சங்கடமாக இருக்கும். மன்னிக்க வேண்டும். மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தார். அந்த ஆசிரியரின் நேர்மையையும், கள்ளங்கபடமற்ற பாங்கையும் கண்ட அந்த அதிகாரி புன்முறுவலுடன் சென்று விட்டார். “நான் கைது செய்வதானால் உங்கள் இருவரையுமே கைதுசெய்ய வேண்டியிருக்கும். நான் அதை விரும்பவில்லை”  என்று கூறினார். கைது செய்திருந்தால் அவருக்கு வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைத்திருக்கும். அதையும் அவர் இழக்கத் தயாரானார் என்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியாது.

திடீர் செவிடர்.

தலைமறைவு ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்ப்ரசில் நாகர்கோவில் செல்கிறார். வேறு பெயரில் அவருக்குத் தூங்கும் பெட்டியில் ரிசர்வேஷன் ஆகியிருக்கிறது. வண்டி கிளம்பச் சில நிமிடங்களுக்கு முன்னர் அவ்வூழியர் வண்டியில் ஏறித் தமது இடத்தில் அமர்ந்தார். உடனேயே அதே பெட்டியில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் ஏறினர். அவ்வூழியருக்கு நெஞ்சு படபடத்தது. ஆனால் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. வண்டி புறப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ரயில் வண்டியில் நடக்கும் சாதாரணப் பழக்கத்திற்கு ஒப்ப எல்லோரையும் “நீங்கள் எங்கே போகிறீர்கள்”? எந்த ஊர் ? என்ன வேலை? இன்னாரைத் தெரியுமா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் மற்றவர்களை எல்லாம் கேட்டாகிவிட்டது. அடுத்தது தலைமறைவுக்காரரின் முறை. “நீங்கள் எந்த ஊருக்கு? என்று ஒரு அதிகாரி நம்மவரைக் கேட்டார். ‘திருநெல்வேலிக்கு இந்த வண்டி சுமார் எட்டரை மணிக்குப் போகும்’ என்று அசட்டுச் சிரிப்புடன் ஊழியர் பதில் அளித்தார். அதைக் கேட்கவில்லை. நீங்கள் எந்த ஊருக்கு என்று கேட்டேன் என்று அந்த அதிகாரி சற்று உரத்த குரலில் விளக்கினார். ‘சாதரணமாக இந்த வண்டி தாமதமாவதில்லை. எட்டரைக்குப் போய்விடும்’ என்றார் ஊழியர். அதிகாரி மேலும் உரத்த குரலில் ‘ நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுதான் கேட்டேன்’ என்றார். திருநெல்வேலி போனவுடன் நாகர்கோவில் போக உடனேயே பஸ் இருக்கிறது. ‘கஷ்டமே இல்லை’ என்றார் ஊழியர். எதிரில் உட்கார்ந்திருந்த ஒருவர் அடே ஏனய்யா இந்த ஆளோட வம்பு? நல்ல பாறைச் செவிடு போலிருக்கு. இவரோட பேசினா தொண்டைத் தண்ணீர்தான் வற்றும், என்று கூறினார். எல்லோரும் சிரித்தனர். ஊழியரும் ஒன்றும் புரியாதவர் போல எல்லோரது முகத்தையும் பார்த்தார். தானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார். பிறகு தூங்கும் இடத்திற்கு ஏறி புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நிம்மதி அடைந்தார். (இந்தத் தலைமறைவு ஊழியர் வேறு யாருமல்ல ஸ்ரீ.இராம.கோபாலன்தான்.)

“1942 தான் 1976 ம் கூட”

பெரம்பூர் ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார். எண்பது வயது நிரம்பப் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். மீது முகுந்த ஈடுபாடு கொண்டவர். தேசிய வார இதழ் ‘தியாக பூமி’யை வெளியிட்டு வருகிற பாரதியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.

நெருக்கடி அட்டூழியக்காரர்கள் இந்த முதுபெரும் அன்பரையும் விட்டுவைக்க வில்லை. 1976 ஆகஸ்டில் ‘தியாக பூமி’யை மூடிய கையேடு போலீஸ் படை இவரது வீட்டையும் சோதனையிட்டது. “வஜ்ராயுதம்” “போராட்டம்” ஆகிய ரகசிய பிரசுரங்களின் சில இதழ்களை அங்கு கைப்பற்றியது. போலீசார் ஸ்ரீ சிவக்கொழுந்து முதலியாரைச் செம்பியம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதலில் அவரது மனதில் பீதி ஏற்படுத்த ஏற்கெனவே பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருந்தவர்களைக் கடுமையாக அடித்தார்கள். அவர்களது அலறல், அவர்கள் படும் அடி இவற்றை இவர் பார்க்க வேண்டும் எண்பது போலீசின் நோக்கம்.

பிறகு “வஜ்ராயுதம்” “போராட்டம்” இதழ்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?” என்று இவரை வினவினர். ஜனவரி 26 ஆம் தேதி கடற்கரைக்குச் சென்றிருந்தேன், அங்கு சத்யாக்ரகம் செய்தோர் கொடுத்தனர்” என்றார். இதெல்லாம் எங்கே அச்சாகிறது? இந்த விவரத்தை நீங்கள் கூறத்தான் வேண்டும்” என்று போலீசார் கடுமையாகக் கேட்டனர். “எனக்குத் தெரியாது” என்று அவர் உறுதியாக பதிலளித்தார். “நீங்கள் கூறாவிடில், இந்த எமர்ஜென்சியில் உங்களது முதுமைக் காலத்தில் சிறையிடப்படுவீர்கள், கொடுமைக்கு ஆளாவீர்கள் என்று போலீசார் ஆக்ரோஷத்தோடு கூறினார். ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார் மிக அமைதியாக “நான் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ எனக் கூறிச் சிறை சென்றவன். 1976  இலும் சர்வாதிகாரியை வெளியேற்றத் தயங்காமல் சிறைசெல்வேன் என்று கூறினார்.

இரண்டாவது திங்கரா

ஒருநாள் காலை நேரம் 10 மணி இருக்கும். சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடு வதில் 24 மணி நேரமும் ஈடுபட்டிருந்த ஒரு இளைஞர் குழாம், பெரம்பூரில் ஒரு அறையில் கூடியது.

எங்கு பார்த்தாலும் போலீஸ் துரத்துகிறது. திடீர் கைதுகள். காவல் நிலையத்தில் கேள்வி கேட்டுக் கேட்டுக் விஷயங்களை வரவழைக்கச் சித்திரவதைகள், சிறையில் தனிக் கொட்டடியில் அடைத்தல். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீர இளைஞர் களின் மனம் எப்படி மாதலால் திங்கரா தனது கையில் ஆணி குத்தப் பட்ட நேரத்திலும் இமை கொட்டாமல், மனம் நடுங்காமல் நின்று வீர சாவர்க்கரின் சோதனையில் வெற்றி பெற்ற சம்பவம் அனைவருக்கும் நினவு வந்தது.

உடனே வீரராகவன் என்ற பட்டதாரி இளைஞர், “நம்மில்யாரும் அப்படிப்பட்டவர் இருக்கிறாரா”? என்றார். ஒரு வினாடி அமைதி. மறுவினாடி, முருகேசன் என்ற இளைஞர் தன் வலது கையை முன்னே நீட்டினார். “நான் எதற்கும் தயார்” என்று உறுதியாகக் கூறினார். அவரது முகத்தில் ஒரு கயிறு (நாலைந்து காசிக் கயிறு பருமனுக்கு) கட்டியிருந்தார். சட்டென ராஜ்குமார் என்ற மற்றொரு இளைஞர் அதைக் கொளுத்திவிட்டார். 3 நிமிட நேரம் அது எரிந்தது. வலது கை மணிக்கட்டு ரணமாகியது. முருகேசனின் முகத்தில் தொடர்ந்து நிலவிய அதே உறுதியையும் அமைதியையும் கண்டு கூடியிருந்தோர் மனதிலும் முகத்திலும் மிகப் பெரிய உத்வேகமும் வீராவேச உறுதியும் தாண்டவமாடின. இம்முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் எத்தகைய உணர்ச்சிகளால் எத்துனை தூரம் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

காத்திருக்கிறேன்.

கரூர் ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் இனிய சுபாவமுள்ளவர். எல்லோருமே அவருக்கு நண்பர்கள். மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு எதிரில் அவரது ஓட்டல் உள்ளது. ஆகவே நீதிபதிகளும், காவல்துறை அதிகாரிகளும் அனைவருமே அவருக்கு அறிமுகம் ஆனவர்கள். சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் உண்மையான பற்றுள்ள ஒரு உள்ளம். அவை பறிக்கப்பட்டதால் எப்படித் தவிக்கும் என்பதற்கு ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் மிகச் சிறந்த உதாரணம். நெருக்கடி காலம் முழுவதிலும் அவர் போராட்டத்தில் மிகுந்த துணிச்சலோடு ஈடுபட்டார். சுவரில் எழுதுவது, பிரசுரங்களை விநியோகிப்பது போன்ற காரியங்களை அவர் தாமே செய்தார். விற்பனைக்குள்ள பிரசுரங்கள் பலவற்றை அவர் தமது கடையில் மேசைக்கு அடியில் வைத்திருப்பார். சிற்றுண்டி அருந்த வரும் நபர்களில் நாட்டுப் பற்றும் பொதுநல அக்கறையும் உள்ளவர்களுக்கு அவற்றை விற்பார். போலீஸ் கெடுபிடிகள் பயங்கரமாக இருந்த அந்த நேரத்திலும் அவரது போக்கில் சிறிதும் மாறுதல் இல்லை.

1976 பிப்ரவரி 1 ஆம் தேதி அவரைக் கைது செய்ய அவ்வூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசாருடன் வந்தார். ஸ்ரீ.சுப்பிரமணியம் தமது ஓட்டலில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நேரம். அவர்கள் உள்ளே நுழைவதைக் கண்டவுடன் “நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக் கிறேன், வாருங்கள், முதலில் சிற்றுண்டி சாப்பிடுவோம். அதன் பிறகு பேசுவோம்” என்றார். அவர்கள் தயங்கினர். இவர் விடவில்லை.வற்ப்புறுத்தி அவர்களைச் சிற்றுண்டி அருந்தச் செய்தார்.அதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் தாம் வந்த காரியத்தைச் சொல்ல வாயெடுத்த போது ” நீங்கள் சிறிது கூட  கவலைப்பட வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். எத்தனையோ நாட்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். பிறகு எல்லோருமாக ஒரு டாக்சியில் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே அவரது பன்னிரண்டு வயது மகள் “அப்பா, நீங்கள் இன்னும் கைதாகவில்லையா?” என்று கேட்டால். “நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அழைத்திருக் கிறார்கள்” என்று கூறிக்கொண்டே உடைகளை மாற்றிக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.

சோஷலிஸ்ட்களின் பங்கு.

தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் லோக சங்கர்ஷ சமிதியின் சார்பில் ஜனசங்கத்துக்கு அடுத்தபடியாக முழு மனதுடன் தீவிரத்துடன் கலந்து கொண்ட தமிழ் நாடு சோஷலிஸ்ட் கட்சியின் பங்கினை மறக்க முடியாது. அக்கட்சியின் ஊழியர்களும் உறுப்பினர்களும் ரகசியப் பிரசுரங்களை விநியோகிப்பதில் காட்டிய ஆர்வம், தலை மறைவு ஊழியர்களுக்கு அளித்த பாதுகாப்பு, பல்வேறு விதமான உதவிகள், சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட விதம் ஆகியவை மிகுந்த பாராட்டுக்குரியவை ஆகும்.

இந்த செய்திகள் “நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்” என்கிற நூலிலிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1977 ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்ற தலைமறைவு இயக்க வேலைகளையும், துணிச்சல், தைரியம் மிக்க தேச பக்தர்கள் புரிந்த போராட்டத்தினை விவரிக்கும் இந்த நூல் விரைவில் மீண்டும் விஜயபாரதம் பதிப்பகத்தின் சார்பில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

முஸ்லிம்கள் முதலாவது என்னும் கொள்கை!
“சரித்திரம் சொல்லும் பாடத்தை” கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

ஆங்கிலத்தில்: காஞ்சன் குப்தா

தமிழாக்கம்: இல.ரோகிணி

நீதிமன்றம் ஷரியா சட்டத்தை மேற்கோள் காட்டி “மைனர் முஸ்லிம் பெண்ணின்  திருமணத்தை” நியாயப்படுத்துகிறது. சிறுபான்மையோர் கமிஷன் “இஸ்லாமிய வங்கிகளை” விரும்புகிறது.  காங்கிரஸ் கட்சி முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் போலிஸ்காரர்களை நியமிக்க விரும்புகிறது. நாமும், நமது நாடும் எங்கு, எந்த வழியில் போய்க் கொண்டிருக்கிறோம்?

ஒரு பிரசத்திபெற்ற வங்காள நாடகம் அந்த காலத்தில் நடந்தது. அதில் அலெக்ஸாண்டர் தன்னுடைய தளபதி செல்யுகசிடம் இவ்வாறு ஒரு காட்சியில் சொல்வதாக வருகிறது. “செல்யுகஸ், இந்த நாடு எவ்வளவு விசித்திரமாக உள்ளது? இந்த நாட்டின் மக்கள் எவ்வளவு விசித்திரமாக உள்ளனர்?” இதுதான் அலெக்சாண்டர் சொன்னதுதான். பார்த்ததை வைத்துக் கொண்டு உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டு அலெக்சாண்டர் இதை சொன்னாரா என்பது விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கலாம். இந்த நாடகத்தை எழுதியவர் தன்னை சுற்றி உள்ள நிதர்சனத்தை பார்த்தபிறகு தன்னுடைய கற்பனை வளத்தை பயன்படுத்தி அலெக்சாண்டர் வாயில் நாடகத்தில் இந்த வார்த்தைகளை வரவழைத்து இருக்கலாம். இது முற்றிலும் சாத்தியமான ஒன்றே. இந்த நாடகம் அரங்கேறி இன்று பல வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் அலெக்சாண்டர் பார்த்ததற்கும், இன்றுள்ள நிலைமைக்கும் அதிக வித்தியாசம் இல்லை. காலத்திற்கு அப்பாற்பட்ட  இந்தியா அன்று இருந்தமாதிரியே  இன்றும் விசித்திரமாகத்தான் உள்ளது. இந்தியா ஒருபோதும் வியப்பை தரத் தவறுவதே இல்லை.

இந்த வாரம் காலை பத்திரிக்கைகளை படித்துக் கொண்டு இருந்தபோது அலக்சாண்டர் சொன்ன இந்த வார்த்தைகள்தான் என் நினைவுக்கு வந்தன. முதுகெலும்பு அற்ற ஒரு அரசியல் தலைமை, என்ன செய்யவேண்டும் என்று விளங்காத நிர்வாக வர்க்கம், தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் எதிர்க்கட்சி, அரசாங்கம் தொடர்ந்து மரணப் படுக்கையில் இருந்த போதும் அதன் பயங்கர விளைவுகளை சிறிதும் நினைத்துப் பார்க்காமல்  இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கும் மக்கள் இவை அனைத்தும் நம்முடைய ஆச்சர்யமான நாட்டில் வியப்பைத்தான் உண்டாக்கும்.

தள்ளாடிக்கொண்டு இருக்கும் பொருளாதாரம், அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலைமை, ஆட்டம் காணும் சூழ்நிலை இவை அனைத்தும் ஒரு விசனத்துக்கு உரிய நிலையை தெரிவிக்கின்றன. யீட்ஸ் என்னும் ஒரு புகழ் வாய்ந்த கவிஞர் சொன்னது இங்கு நினைத்துப் பார்க்கத்தக்கது. அவர் சொன்னார், “எங்கும் பொருட்கள் சிதறி விழுந்து கொண்டுள்ளன, மத்தியிலோ பிடிப்பு இல்லை. உலகத்தின் மேல் அழிவு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ரத்தவெள்ளம் ஓடுகிறது. எங்கும் ஓடுகிறது. அப்பாவிகளின் நடைமுறைகள் முழுகிப் போகின்றன. மிகச் சிறப்பாக உள்ளவர்களுக்கு எந்த “கொள்கைகளும்” கிடையாது. ஆனால் மிகவும் கீழ்தரமாக இருப்பவர்களோ ‘நினைத்ததை சாதிக்க உச்ச பட்சத்  துடிப்போடு உள்ளனர்”.

நம்மிடையே மிக மோசமானவர்கள் உள்ளனர். அதிலும் நம்மிடையே எந்த பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இன்றி, அதே சமயத்தில் அதிகாரத்தையும், ஆளுமையையும் கொண்டு இருப்பவர்கள் உள்ளனர். அவர்கள் மிகத் துடிப்போடு செயல்படுகின்றனர். விஷயங்கள் சடசடவென்று சரிந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி, மத்தியில் எதையும் தட்டிக் கேட்க இயலாத, எதற்கும் லாயக்கற்ற அரசாங்கம் இருப்பதை சாதகமாக்கி, தங்கள் சுயநல எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள பலர் நம் நாட்டில் செயல்பட்டு வருகின்றனர். இதை மூன்று விஷயங்கள் நன்கு விளக்கிடும்.

டில்லி உயர் நீதி மன்றம் சமீபத்தில் திகைப்புக்கு உரிய அதிர்ச்சி ,அளிக்கும் தீர்ப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது. 15 வயதே ஆன ஒரு முஸ்லிம் பெண்ணின் திருமணம் செல்லுபடியாகும் என்று அது சமீபத்தில் தீர்ப்புக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஒரு மைனர் பெண்ணின் உரிமைகளையும், கௌரவத்தையும் காற்றில் பறக்கவிட ஷரியத் சட்டம் அனுமதிக்கிறது என்று தனது தீர்ப்பை டில்லி உயர் ,நீதிமன்றம் நியாயப்படுத்தியுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அந்த பெண் வயதிற்கு வந்து விட்டால் அவளுக்கு 18 வயது ஆகவில்லை என்றாலும் கூட, அவள் தன் கணவனுடன் குடும்பம் நடத்தலாம், வாழலாம் என்று டில்லி உயர்நீதி மன்றம் ஷரியத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு  தீர்ப்பை தங்கள் அறிவுக்கு ஏற்ப மேதாவித்தனமாக நீதிபதிகள் கொடுத்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் இந்தியாவின் முஸ்லிம்களுக்கு தான்தான் ஒரே பிரதிநிதி என்று பறைசாற்றிக் கொள்கிறது. இவ்வாறு உரிமை கொண்டாட அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் கூட அந்த அமைப்பு இவ்வாறு செயல்படுகிறது. அந்த முஸ்லிம் சட்ட அமைப்பு டில்லி உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எக்களிப்புடன் வரவேற்றுள்ளது. இந்த விஷயம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. அடிமைப்படுத்தும், அடக்கி ஆளும் எந்த ஒரு விஷயத்தையும் முல்லாக்கள், மௌலவிகள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆதரிப்போர் ஆவலுடன் வரவேற்பார்கள்.

தேசிய சிறுபான்மையோர் ஆணையம் (உண்மையில் இது  தேசிய முஸ்லிம்கள் ஆணையம்) இஸ்லாமிய வங்கித் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கேட்டுள்ளது. வாஜஹத் அபிபுல்லாதான் இந்த தேசிய சிறுபான்மையோர் கமிஷனின் தலைவர். அவர் இவ்வாறு சொல்லி உள்ளார்,

“தற்போதுள்ள கோட்பாடுகளின் அடிப்படையில், இஸ்லாமிய வங்கியை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதால் சட்டத்தை திருத்தி வட்டி இல்லாத வகையில் வங்கிகளை இயக்க  வழி காணவேண்டும்”. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இது கொல்லைபுற வழியாக இஸ்லாமிய வங்கியை கொண்டு வர முயல்வதாகும்.

இந்த  அணுகுமுறை கடந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சமீபத்தில் அதாவது மார்ச் 2012இல் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நிதித்துறை துணை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “இப்போது உள்ள சட்டங்கள், விதிமுறைகளின் அடிப்படையில், இந்தியாவில் இயங்கும் வங்கிகள் “இஸ்லாமிய வங்கிகளை, சட்ட பூர்வமாக ஏற்படுத்த முடியாது”. இந்தியாவிலும் இந்திய வங்கிகளால் இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்திய வங்கிகளின் கிளைகளால், அயல் நாடுகளிலும், இஸ்லாமிய வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாது”. இவ்வாறு ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதாக நிதித்துறை துணை அமைச்சர் சொன்னார். ஆனால் இதன் பிறகு நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியிடம் தன்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறும், சட்டங்களை திருத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதிரி கோரிக்கை வைக்கப்படவேண்டும் என்பதற்காகவே   ஜமியத் இ இஸ்லாமி காத்துக் கொண்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி ஹிந்துக்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்த்து “சிறுபான்மை இசத்தை” வளர்ப்பதில் ஊக்குவிப்பதுபோல் ஜமியத் இ இஸ்லாமியும் கருத்து கொண்டுள்ளது. அது இப்போது “இஸ்லாமிய வங்கியின் அமைப்பு வந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி “முஸ்லிம்களுக்கு விளக்க “பயிற்சி வகுப்புகளை” நடத்தி வருகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அது மாதிரி பயிற்சி வகுப்பு ஒன்று அசாம்கர் (உத்திரப் பிரதேசம்) நகரில் நடைபெற்றது. அதில் ஷரியாவை நன்கு அறிந்த மௌலானாக்கள் கலந்து கொண்டு வழி காட்டினர்.

மூன்றாவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பெருக்க அக்கட்சி முயற்சிக்கிறது. அதனால் ஏதாவது செய்வது போன்ற ஒரு தோற்றத்தை, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏதாவது செய்வது போன்ற தோற்றத்தை அக்கட்சி உருவாக்க முயற்சிக்கிறது. இப்படி செய்தால் விரைவில் தேர்தல்கள் வரும்போது கொழுத்த முஸ்லிம் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் கணக்கு போடுகிறது. உண்மையில் சொல்வது என்றால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையோருக்கு அளவற்ற சலுகைகள் உள்ளன. அவர்கள் சிரமத்துக்கு  உள்ளாகி இருக்கிறார்கள் என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், முஸ்லிம் வாக்குகளை பெற மத்திய காங்கிரஸ் அரசு சமீபத்தில் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. என்ன தெரியுமா? முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ்காரர்களை நியமிக்கவேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் மாநிலத் தலைமை செயலாளர்களுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .

முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒரு விதத்தில் இந்த கடிதம் மாநில அரசுகளின் உரிமைகளில் கை வைக்கிறது. ஏன் என்றால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் அத்தகைய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த கவலையும் படவில்லை. கூட்டாச்சி என்பது ஒரு இழிந்த சொல் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு கருதுகிறது. தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வாடிக்கை ஆக்கிக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு பல சமயங்களில் அவ்வாறு செய்து அது தன் முகத்தில் கரியை பூசிக்கொண்டது. இருந்தும் முஸ்லிம் வோட்டுகளுக்காக மீண்டும் ஒருமுறை இவ்வாறு மாநிலங்களின் உரிமைகளில் மூக்கை நுழைக்க மத்திய உள்துறை அமைச்சரகம் முயன்றுள்ளது. இதை எல்லாம் பார்த்தால் “சில பழக்கங்களை கைவிட முடியாது ” என்பது நினைவுக்கு வருகிறது.

முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பவில்லையா? ஹிந்து போலீஸ்காரர்கள் தங்கள் பகுதிகளை காவல் செய்வது முஸ்லிம்களுக்கு சிரமமாக உள்ளதா? இந்த கேள்விகள் எழுகின்றன அல்லவா? அப்படி என்றால் ஹிந்துக்கள் தாங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஹிந்து போலீஸ்காரர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கேட்கலாம் அல்லவா? அல்லது இன்னும் பச்சையாகக் கேட்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் ஹிந்து போலீஸ்காரர்களை நம்பமுடியாது என்றால், ஹிந்துக்கள் மட்டும் எப்படி ஏன் முஸ்லிம் போலீஸ்காரர்களை நம்ப இயலும்?

இந்த இரண்டுமே ஏற்றுக் கொள்ள முடியாத வாதங்களாகும். சமூகங்கள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை விருப்பு வெறுப்பு அற்று நேர்மையாக செய்யும் போலீஸ்காரர்கள் அல்லது பெண் போலீசாரை நம்புகிறார்கள் என்பதுதான் உண்மை. அத்தகைய போலீஸ்காரர்களை எல்லா சமூகங்களும் விருப்பமானவர்களாகவே  பார்க்கின்றனர். ஆனால் வோட்டு வங்கிகளை மனதில் வைத்து செயல்படும் குள்ளநரித்தனமான  அரசியல்வாதிகள்தான் விஷயத்தை வேறு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். அவர்கள்தான் சமூகத் தலைவர்கள் என்று அழைக்கப் படுபவர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு போலீஸ்காரர்களின் சமய அடையாளத்தைப் பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் குற்றங்களை, குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டுகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று உதாரணங்களை வைத்துக் கொண்டு நம்நாடு அபாய வளையத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது என்று சொல்ல முடியாது என்று ஒரு வாதம் வைக்கப் படலாம். இதில் இருந்து மீளமுடியாது என்று சொல்வது தவறு என்றும் வாதிக்கலாம். இந்த மூன்று உதாரணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு உலகத்தின் மேல் அழிவும், நாசமும் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது என்று சொல்ல முடியாதுதான். ரத்த அலைகள் எழும்பிவிட்டன என்றும் சொல்ல முடியாதுதான். எங்கும் அப்பாவிகள் அழிந்து போகின்றனர் என்றும் சொல்ல முடியாதுதான். ஆனால் இவற்றை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று உதறித்தள்ள முயல்வது ஹிமாலய முட்டாள்தனமாகும்.

இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் நாம் விட்டபோதெல்லாம், அவற்றை விட கொடுமையான பல நிகழ்வுகளை நாம் சந்திக்க நேர்ந்துள்ளது. இதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்மாதிரி தாக்குதல்களை தாங்கிக் கொள்ள நம்முடைய குடியரசுக்கு உள்ளார்ந்த வலிமை உள்ளது என்று நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்ட போதெல்லாம், நம்முடைய குடியரசு நாடு பலவீனம் அடைந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இங்கே ஒரு சமாதானம் செய்துகொள்வது, அங்கே ஒரு விட்டுக் கொடுப்பது என்னும் நிலை “பலகீனமான சமரசம் ” செய்து கொள்வதை எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய தாஜா செய்வதால் நாம் என்னவெல்லாம் விலை கொடுக்க நேர்ந்தது, எத்தனை முறை பயங்கர விலைகள் கொடுத்துள்ளோம்  என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

ஆனால் விசித்திரமான நம் நாட்டில் விசித்திரமாக உள்ள மக்களாகிய நாம் “சரித்திரம் சொல்லும் பாடத்தை” கற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

தி பயோனீர் ஆங்கில நாளிதழில் ஜூன் 9 அன்று காஞ்சன் குப்தா அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்திட இங்கே சொடுக்கவும்.

http://www.dailypioneer.com/columnists/item/51770-in-times-of-trouble-it%E2%80%99s-muslims-first-policy.html

ஆழமான நம்பிக்கை
ஆங்கிலத்தில்: டாக்டர் பிரவீன் பாய் தொகாடியா

தமிழாக்கம்: லா.ரோஹிணி

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புண்ணிய ஸ்தலங் களுக்கும் சமீபத்தில் சென்றுவிட்டு வந்தேன். என்னுடைய புனித யாத்திரையில் நான் ஒரு விஷயத்தை நன்கு கவனித்தேன். யுகயுகமாக தொடர்ந்து வரும் சாஸ்வதமான  சமய நம்பிக்கை அற்புதமாக இப்போதும் வெளிப்பட்டது என்பதுதான் நான் கவனித்த அந்த விஷயம். வயோதிகர்களோ அல்லது வாலிபர்களோ, ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, குழந்தைகளோ, ஏழைகளோ, பணக்காரர்களோ அனைவரிடமும் இந்த முழு சமய நம்பிக்கை ஆலமரம் போன்று ஆழமாக வேருன்றி உள்ளது. இந்த முழு நம்பிக்கைதான் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. எலும்பை நடுங்க வைக்கும்  குளிரை வெற்றி கொள்ள ஹிமாலயத்தின் மிகக் கடினமான பகுதிகளைக்   கடக்க இந்த யுக யுகாந்திர நிபந்தனையற்ற சமய நம்பிக்கையே சக்தி கொடுத்தது.

விஷயம் அப்படித்தான் இருக்கவும் வேண்டும். நான் மேலே குறிப்பிட்ட  யாத்திரையோ அல்லது வைஷ்ணவி தேவி, அமர்நாத், அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோயில் என எங்கெல்லாம் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற் கொள்கின்றார்களோ அந்த எல்லா இடங்களிலும் “நம்பிக்கைதான் உச்ச பட்சமாக” உள்ளது. நம்பிக்கை அற்றவர்களோ அல்லது அரசாங்கமோ  நம்பிக்கை உள்ள ஹிந்துக்கள் எப்போது புனித யாத்திரையை மேற்கொள்ளலாம், எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.

அமர்நாத் யாத்திரை என்பது அத்தகைய  இறை நம்பிக்கையின் மையமாக காலம் காலமாக இருந்து வருகிறது.1400  வருடங்களுக்கு  முன்பு “பச்சை பையன்” பிறப்பதற்கு முன்பாகவே யாரோ ஒரு ஆட்டுக்கார  இடையன்தான் அமர்நாத குகையை கண்டு பிடித்தான் என்னும் கதை தோன்றுவதற்கு  முன்பிருந்தே இந்த  உறுதியான நம்பிக்கை இருந்து வருகிறது. பண்டைய ஹர முகுத் (சிவனின்  மணிமுடி) ஹிமாலய  மலைத்  தொடர்ச்சியில், பைரவநாத் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது.17000 அடி உயரத்தில் இந்த அமர்நாத் குகை அமைந்துள்ளது. பண்டைக் காலம் தொட்டே சிவனை  வழிபடும் இடமாக அமர்நாத் இருந்து வருகிறது. அமர்நாத் யாத்திரை  இரண்டு மாதங்கள்  நடந்து வந்தது. இப்போது  காஷ்மீர் ஆளுனரின், காஷ்மீர் பிரிவினைவாதிகளின் தயவில் நடக்கும் யாத்திரையாக ஆகிவிட்டது. ஒருமாதம்தான் அமர்நாத் யாத்திரை நடக்க வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனால் இவ்வாறு யாத்திரையை சுருக்கி கொள்வது எனபது எப்போதுமே வழக்கத்தில் இருந்தது இல்லை. ஹிந்து தர்ம வழக்கப்படி 365 நாளும் 24  மணி நேரமும் யாத்திரையை மேற்கொள்ளலாம். அமர்நாத் யாத்திரையின்  முக்கியத்துவம் அன்றும் இன்றும் “கைலாஷ் யாத்திரை” மாதிரி உள்ளது. உள்ளூரில் இந்த யாத்திரையை “அம்புர்நாத்” என்று அழைக்கின்றனர். கல்ஹனர் எழுதிய “ராஜ தரங்கணியில்” இந்த யாத்திரை “அமரேஷ்வர் யாத்திரை ” என்று வர்ணிக்கப்படுகிறது. (ராஜ்  தரங்கனி 7 -183).

பகவான் சிவன் தேவர்களை என்றும் வாழ்பவர்களாக ஆக்கும் பொருட்டு அவர்களுக்கு “அமிர்தம்” கொடுத்ததாக  சொல்லப்படுகிறது. அதன் பிறகு எல்லா தேவர்களும்  கேட்டுக் கொண்டதால் சிவன் இங்கேயே தங்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த இடம் “அமர்நாத்” (என்றும் உள்ளது) என்றும்  அமரேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜேஷ்ட ,ஆஷாட, ஷ்ரவண மாதங்கள் சிவனை தரிசனம் செய்திட  யாத்திரைக்கு உகந்த மாதங்கள். எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருப்பதுபோல்தான்  அமர்நாத் யாத்திரைக்கும்  இந்த மாதங்கள்தான் உகந்தவை. இந்த மாதங்களில்  அங்கு சிவன் “பனி லிங்க வடிவில்” காட்சி தருகிறார். மற்ற மாதங்களில் அமர்நாத்தில்  “ஸ்தான் பூஜா” (அதாவது இருக்கும் இடத்தை பூஜை செய்வது) நடக்கிறது.

அமர்நாத்துக்கு போகும்  வழியில் ஒரு பெரிய  ஏரி இருந்தது. பார்க்கடல்  போன்று வெண்மை  என்ற பொருளில் அந்த ஏரி “டுக்தாப்தி தவல்” என்று அழைக்கப்பட்டது. சுஷ்ராவஸ் என்னும் நாகர் இந்த ஏரியை உருவாக்கினாராம். இன்று இந்த ஏரியை “சேஷ்நாக் ஏரி” என்று அழைக்கின்றனர் (ராஜ் தரங்கனி 1267). நீல்மத் புராணம் பிரதிபதா (ஹிந்து மாதத்தின் முதல் தேதி) தொடங்கி சிவலிங்கம்  ஒரு சிறிய பனித்துளி போல் காட்சி அளிக்கிறது என்று கூறுகிறது (நீல்மத் 1535). பௌர்ணமி வரும்போது இதே சிவலிங்கம் 6 அடி முதல் 16  அடி வரை உயரமாக   வளர்கிறது. அதன் பிறகு இந்த பனிலிங்கம் சிறியதாக மாறத் தொடங்குகிறது. அமாவாசை அன்று  சிவலிங்கம் மிகவும் சிறியதாக ஆகி விடுகிறது. பண்டைய  இதிகாசங்களில் அமர்நாத் பற்றி பல வர்ணனைகள்  காணப்படுகின்றன. அமர்நாத் போகும் வழியில் உள்ள பல இடங்களையும்  அந்த இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. இதில் அதிசயம் என்ன தெரியுமா? குகைக்கு வெளியே இருக்கும் பனி மிகவும் மென்மையாக  உருகிவிடும் நிலையில் உள்ளது. ஆனால் குகைக்கு உள்ளே இருக்கும் சிவலிங்கம் “கல்லைப் போன்று” அவ்வளவு கெட்டியாக, உறுதியாக உள்ளது.

இந்த சிவலிங்கத்திற்கு வலதுபுறத்தில் பார்வதி மற்றும் பைரவருக்கான  இடங்கள் உள்ளன. இங்கு பார்வதி இருக்கும் இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். சதியின் கழுத்து இங்கே விழுந்தது. இந்த குகைக்கு மேற்கே அமர் கங்கா என்னும் ஒரு சிறிய ஆறு ஓடுகின்றது. அதில் உள்ள மணல் சிவனின் பஸ்மம் (விபூதி) என்று பக்தர்களால்  பூசிக்கொள்ளப்படுகிறது. அந்த மணல் பஸ்மம்  பக்தர்களை குளிரில் இருந்து காப்பாற்றுகிறது. ஷ்ரவண பூர்ணிமாவில் இருந்துதான் இந்த பனிலிங்கம் காட்சி அளிக்கத் தொடங்குகிறது. எனவே ஜேஷ்ட மாதத்தில் இருந்து ஷ்ரவண மாதம் வரை அமர்நாத் யாத்திரை நீடிக்கிறது. பக்தர்கள் நடந்து ஸ்ரீநகர், அவந்திபூர், ப்ரிஜ் விஹார், அனந்த்நாக்,மார்த்தான்ட் (இங்கு ஒரு பக்கம் பெரும் சிவன்கோயில் உள்ளது) பஹல்காம், சந்தன்வாடி, வாவ்ஜன், பஞ்ச்தரணி இன்னும் பல இடங்களை கடந்து செல்கின்றனர்.

காஷ்மீரை “ஆனந்த்” என்ற அரசர் ஆண்டார். அவருடைய மனைவி “சூர்யமதி” என்பவர் அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஏராளமான கிராமங்களையும், நிலங்களையும் கொடுத்தார். (ராஜ் தரங்கிணி 7.185). நம்முடைய  பண்டைய, இடைக்கால  அரசர்கள் வடக்கில் இருந்து தெற்கு, கிழக்கில் இருந்து மேற்கு என எல்லா சாம்ராஜ்ய அரசர்களும் ஹிந்து தர்ம நம்பிக்கைகளை, அதன் முக்கியத்துவத்தை  உணர்ந்திருந்தனர். பகவானை, அவரின் இருப்பிடங்களை அவர்கள் மதித்தனர். எனவே அவர்கள் யாத்ரிகர்களுக்கு, யாத்திரைக்கு பல உதவிகளைச் செய்தனர்.

இன்று பல கோவில்களில் அறக்கட்டளைகள் உள்ளன.12 ஜ்யோதிர் லிங்கங்கள், 51  சக்தி பீடங்கள், நவக்ரஹ ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் உள்ள அறக்கட்டளைகள், பக்தர்கள் திருப்தியாக தரிசனம் செய்ய, வழிபாடு நடத்த, பல வசதிகளை செய்து கொடுத்துள்ளன. சாலைவசதி, தர்மசாலா, தங்குமிடம், உணவுவசதி என பல வசதிகள் இதில் அடங்கும். ஆனால் அமர்நாத்தில் வாக்கு வங்கிகளுக்காக, அரசாங்கங்கள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் முன்பு மண்டி போடுகின்றன. ஹிந்து பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்வதை காஷ்மீர் பிரிவினைவாதிகள்  விரும்புவது இல்லை. அங்கு ஹிந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதை, அந்த பிரிவினைவாதிகள் வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே அமர்நாத்துக்கு  வர உரிமை உள்ளது. காஷ்மீர் பிரிவினை வாதிகளுக்கோ, காஷ்மீர் அரசுக்கோ, அமர்நாத்தில் எந்த உரிமையும் கிடையாது.

ஒவ்வொரு முறையும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் போது அரசாங்கம் ஏதோ ஒரு சாக்குபோக்கு சொல்லி பக்தர்கள் அங்கு வராமல் தடுக்க முயல்கிறது. யாத்திரை காலத்தைக்  குறைக்க முற்படுகிறது. 2008 இல் காஷ்மீர் பிரிவினைவாதிகள் அமர்நாத் நிலத்தை கைப்பற்றிக் கொள்ள மாபெரும் சூழ்சியில் இறங்கினர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் உள்ள விழிப்புள்ள ஹிந்துக்கள்,  பக்தர்கள்  மற்றும் ஒட்டு மொத்த பாரதமும் 60 நாட்கள் தொடர்ந்து போராடி இந்த முயற்சியை முறியடித்தனர். இந்த தர்ம யுத்தத்தில் பல ஹிந்துக்கள் தங்கள் உயிரை பலிதானம் செய்தனர். இந்த முறை அமர்நாத் யாத்திரைக்கான காலஅளவை அரசாங்கம் குறைத்து ஹிந்துக்கள் அமர்நாத்துக்கு யாத்திரை செல்லாமல் இருக்க முயன்று வருகிறது. இதற்காக சமூகத்  தலைவர்கள் என்று அழைக்கப்படும் சில கைக்கூலிகளை வைத்துக் கொண்டு தவறான, பொய்யான, காரணங்களை, வாதங்களை அரசாங்கம் சொல்லி வருகிறது.

ஆனால் ஹிந்துக்கள் முழுமுதற் கடவுளை முற்றிலுமாக நம்புகின்றனர். பகவான் சிவா, பார்வதி தாயார், பைரவர், கணேஷர், சேஷநாக், மார்த்தாண்டு, சூர்யன் ஆகியோரின் பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வரக்கூடாது என்று தடுப்பவர்கள் எவராயினும் அவர்கள் சிவனின் ருத்ர தாண்டவத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். காஷ்மீர் பிரிவினைவாதிகளை தாஜா செய்ய தங்கள் நம்பிக்கையை அடக்கி வைப்பதை ஹிந்துக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், சகித்துக் கொள்ளமாட்டார்கள். அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை நூற்றுக்கணக்கில் ஹிந்துக்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சிறைப்படுத்தி அவர்களை கொடூரமாக அடித்துள்ளது. ஆனால் ஹிந்துக்கள் பகவான் அமர்நாத் சிவனை வழிபட அமர்நாத்துக்கு சென்றே தீருவார்கள். முழுமுதல் நம்பிக்கை சாஸ்வதமானது. அரசாங்கமோ, காஷ்மீர் பிரிவினைவாதிகளோ, ஆளுனரோ யாராயினும் சாஸ்வதமானவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தற்காலிகமனவர்கள்  மட்டுமே,

சரஸ்வதி நதி நாகரீகம்.
ஆங்கிலத்தில்: ராஜேஷ் சிங்

தமிழாக்கம்: லா.ரோஹிணி

சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகத்தை பேணிக்காத்ததில் “சரஸ்வதி நதி” பெரும் பங்கு ஆற்றியுள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட “புதிய ஆய்வில்”  இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“ஹரப்பா நாகரீகத்தின் நீர்வழி கட்டமைப்பு”, என்னும் புதிய ஆய்வு சமீபத்தில் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்தை ஆறுகள்தான் காப்பாற்றி வந்தன. அந்த ஆறுகளை வளப்படுத்தி வந்த “பருவ மழைகள் “கிழக்குத் திசை” நோக்கி இடம் பெயர்ந்ததால் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்துவிட்டது. இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஆறுகள் வற்றிப்போனதால் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனது. 2003 மற்றும் 2008 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ருமானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததற்கு “விதிவசத்தால் நேர்ந்த கொடுமையான “அயல் நாட்டுப் படையெடுப்புதான்” காரணம் என்று இது வரை பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பொய் என நிரூபிக்கின்றன. ஆறுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டதால்தான் சிந்து சமவெளி நாகரீகம் அழிந்தது என்னும் வாதத்தையும்  இந்த கண்டுபிடிப்பு பொய் ஆக்குகிறது. இப்போது சிந்து சமவெளி நாகரீகம் என்று நாம் அழைக்கும் நாகரீகம் சரஸ்வதி நதியின் கரையில் அமைந்து இருந்தது என்னும் கருத்துக்கு இந்த ஆய்வு வலு சேர்க்கிறது.

சரஸ்வதி நதி புராணத்திலும், வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் அடையாளங்களாக இதுவரை பல தொல்பொருள் விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 70 சதவீதத்திற்கும் மேலானவை இந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சரஸ்வதி நதி வறண்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 3000 அகழ்வாராய்ச்சி படிமங்களில் 2000 கும் மேற்பட்டவை சிந்துவெளி எல்லைக்கு அப்பால் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவைகளில் இருந்துதான் சிந்து வெளி நாகரீகம் என்ற பெயரே வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறு வார்தைகளில் சொல்வது என்றால் சிந்துவெளி நாகரீகம் என்று அழைக்கப்படுவது உண்மையில் பெரும்பகுதியில் சரஸ்வதிநதி நாகரீகம்தான். இருந்தும் நமக்கு சொல்லப்பட்டது போல், இந்த நாகரீகத்தை சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமே சம்பந்தப்படுத்தி நாம் பேசுகிறோம். அப்படித்தானே பள்ளிக் கூடங்களிலும் சொல்லிக் கொடுக்கிறோம்? பல வருடங்களாக இடதுசாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள நமது அரசாங்கம், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்ததைக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது உலகின் மிகப்பண்டைய நாகரீகத்தை சரஸ்வதி நதிக்கரை உருவாக்கியது என்னும் உண்மையை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் எச்சூரி சமீப வருடங்களில் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை “தொலைந்து போன சரஸ்வதி நதியை” ஆராய்வதில் நேரத்தையும், பணத்தையும் வீணடித்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றார்.  2006 ஆம் ஆண்டில் சீதாராம் எச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சார பாராளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்தார். அப்போது அவர் பின்வருமாறு கூறி உள்ளார்.

“இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தனக்கு இடப்பட்ட பணியில் இருந்து மாறிப்போகிறது. தொல்பொருள் விஷயமாக ‘விஞ்ஞான  பூர்வ ஆராய்சிகளை மேலேடுத்து செல்வதில் அது தவறி விட்டது. விஞ்ஞான பூர்வ இலாகாவான தொல்பொருள் ஆராய்ச்சி துறை இந்த விஷயத்தில் சரியாக செல்லவில்லை”.

இப்படி திரிக்கப்பட்டாலும் கூட, விஞ்ஞான பூர்வ ஆராய்சிகள் “சரஸ்வதி” ஒரு மாபெரும் நதியாக இருந்ததை சந்தர்பங்கள் நிரூபித்துள்ளன. நிலத்துக்கு அடியில் ஓடிக்கொண்டு இருந்த நீர்வழிகளைக் குறித்து “பல வரைபடங்கள்” இன்றும் காணக் கிடைக்கின்றன. அவைகளை எல்லாம் நன்கு ஆராய்ந்துள்ள நிபுணர்கள் சரஸ்வதி நதி 1500 கிலோமீட்டர் நீளமும், 3 இல் இருந்து 15 கிலோமீட்டர் வரை அகலமும் கொண்டு இருந்தது என்று கண்டு பிடித்துள்ளனர்.

நேஷனல் அகடமி ஆப் சயின்ஸ் நிகழ்வுகள் என்பதில் சரஸ்வதி நதி குறித்த மிக சமீபத்திய கண்டு பிடிப்புகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நதி இருந்தது, இந்த பண்டைய நாகரீகம் செழிக்க சரஸ்வதி நதி காரணமாக இருந்தது என்பது அந்த கண்டு பிடிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி நதி இமயமலையில் இருந்து பருவமழை காரணமாக எப்போதும் பெருக்கடுத்து வரும் தண்ணீரை சார்ந்து இருக்கவில்லை என்று அந்த கண்டுபிடுப்புப் பிரசுரம் கூறுகிறது. சரஸ்வதி நதி உள்பட அந்த நாகரீகப் பிரதேசத்தில் இருந்த நதிகள் அனைத்தும் மிகப் பெரியதாக, மிகவும் ஜீவ நதிகளாகவும்  இருந்தன என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புது கண்டு பிடிப்பால் அரசாங்கத்திற்கு “புதிய சிந்தனை உருவாகுமா”? சிந்து சமவெளி நாகரீகம் என்று இப்போது அழைக்கப்படும் நாகரீகத்தை சரஸ்வதி – சிந்து – நாகரீகம் என்று அதிகாரபூர்வமாக “புதுப் பெயரிட்டு அழைக்கும் வேளை வந்து விட்டதை அரசு ஒப்புக் கொள்ளுமா? ஆனால் இடதுசாரிகள் காலம் காலமாக இதை மறுத்து வந்துள்ளது போல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இந்த உண்மையை பல வருடங்களாக எற்றுக் கொள்ளமல்தான் இருந்து வருகிறது.  அப்போது மத்திய அமைச்சரவையில் கலாச்சார துறை மந்திரியாக் இருந்த ஜெயபால் ரெட்டி, “இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், மண்மூடிப்போன எந்த நதி பற்றியும் கண்டு பிடிக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் சொன்னார். அவருக்கும், அவரது அரசுக்கும், சரஸ்வதி நதி என்பது கற்பனை மனங்களில் உருவானது; அந்த நதி பற்றி புராணங்கள்தான் இன்னும் அதிக கற்பனையோடு பேசுகின்றன என்ற எண்ணம் உள்ளதை ஜெயபால் ரெட்டியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. சரஸ்வதி நதி பாரம்பரிய திட்டம் என்னும் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாக்கி இருந்தது. அதை ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அரசு கலைத்துவிட்டது. செப்டம்பர் 2003 இல் இந்த திட்டத்திற்கு 32 கோடிகள் செலவாகும் என்று தோரயமாக கணக்கிடப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித இரக்கமும் காட்டாமல் கைவிட்டது. இன்று 5 கோடிகளாக குறைத்து. அதாவது சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தொடரவிடாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்து அந்த திட்டத்தையே குழி தோண்டிப் விட்டது புதைத்து.

சரஸ்வதி நதி என்பதே இல்லை என்று கூறிட காங்கிரஸ் கூட்டணி அரசு முழு முயற்சி செய்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் உள்ளன. சரஸ்வதி நதி இருந்தது என்பதற்கும்,  சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கப்படும் நாகரீகம் தழைக்க சரஸ்வதி நதி ஆற்றிய இன்றியமையாத பங்கையும் காங்கிரஸ் கூட்டணி அரசால் ஒதுக்கித்தள்ள இயலாத வகையில் இப்போது உண்மைகள் வெளி வந்துள்ளன. இப்போது கண்ணுக்கு தெரியாமல் உள்ள சரஸ்வதி நதி இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்ற தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை இப்போது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்ற பின்பு முதல் ஐந்து வருடங்களின் மத்தியில், “விஞ்ஞானிகள்  நீர் வழி பாதைகளை கண்டறிந்துள்ளனர். அவை “சந்தேகத்திற்கு இடமின்றி” (இந்த பதம் ஆராய்ந்த விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டது). “வேத கால சரஸ்வதி நதி இருந்ததை நிரூபிக்கின்றது” என்று காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “சரஸ்வதி நதி பூமிக்கு கீழே ஓடுவதை” சாடிலைட் புகைப்படங்கள் நிரூபித்து உள்ளனவா”? அப்படி இருந்தால் அந்த மிகவும் இன்றியமையாத நீர் வழிப் பாதைகளை நம் நாட்டு தேவைக்காக ஏன் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது” என்பதுதான் ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியாகும். காங்கிரஸ் கூட்டணி அரசு சரஸ்வதி நதி இருந்ததை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர் என்னும் உண்மையை அந்த கேள்விக்கு பதில் அளித்து ஒப்புக் கொண்டுள்ளது.

ஜோத்பூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. ராஜஸ்தான் அரசு நிலத்தடி நீர் துறையும், இந்த விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ஆய்வுகளை நடத்தின.அதன் முடிவுகள் “நுண்ணறிவுக்கான இந்திய சமூகத்தின் இதழில்” வெளியிடப்பட்டுள்ளது. அந்த முடிவுகளை மத்திய நீர் வழி அமைச்சரகம் இப்போது “எழுத்து பூர்வமாக” வெளியிட்டுள்ளது. பிற விஷயங்களைத் தவிர பின் வருவனவற்றையும் அந்த ஆராய்சிகளை செய்தவர்கள் கூறியுள்ளனர்.

“ஹரப்பா நாகரீகத்திற்கு முந்தைய, ஹரப்பா நாகரீகத்தை – ஹரப்பா நாகரீகத்திற்குப் பிறகு, என பிரித்து விண்வெளி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த புகைப்படங்கள் மூலம், இந்த நாகரீகத்தின் வடகிழக்குப் பகுதியில், வேதசரஸ்வதி நதியின் வலிமையான, தொடர்ச்சியான, கழிவு நீர்த் திட்டம் இருந்துள்ளது தெரிகிறது. அகழ்வாரய்சிகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை… வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள சரஸ்வதி நதி பற்றிய வர்ணனைகளுடன் இந்த ஆராய்ச்சி முடிவுகளும், விண்வெளி புகைப் படங்களும் மிகச் சரியாக ஒத்துப் போகின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த விஷயம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தேசிய பொருட்காட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. தேசிய பொருட்காட்சி அலுவலகத்தில் “ஹரப்பா நாகரீகம்” என்று ஒரு அரங்கு உள்ளது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிதானமாக, அடுத்தடுத்து இந்த மக்கள் ஒரு நாகரீகத்தை உருவாக்கினர். இந்த நாகரீகம், ஹரப்பா நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், சிந்து – சரஸ்வதி நாகரீகம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சொல்லிவிட்டு சரஸ்வதி நதியின் முக்கியத்துவம் குறித்து அந்த அறிவிப்பு இவ்வாறு மேலும் குறிப்பிடுகிறது. “இப்போது ஒரு விஷயம் மிகவும் தெளிவாகி விட்டது. ஹரப்பா நாகரீகம் என்பது இரண்டு நதிகளின் நன்கொடை ஆகும். சிந்து, சரஸ்வதி என்னும் இரு நதிகளின் நன்கொடைதான் ஹரப்பா நாகரீகம் ஆகும். இது வரை நம்பப்பட்டது போல், ஹரப்பா நாகரீகம் சிந்து நதியின் நன்கொடை மட்டுமே அல்ல “.

சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த புது ஆராய்ச்சிக்கு மற்றொரு பரிமாணமும் உள்ளது. அந்த விரும்பத்தகுந்த விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்த பண்டைய ஹரப்பா நாகரீகம் அழிந்து போக அந்நிய ஆக்ரமிப்புகள், படையெடுப்புகள் காரணமாக இருந்தன என்னும் வாதத்தை  இந்த புதிய கண்டுபிடிப்புகள் முற்றிலும் நிராகரிக்கின்றன. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு பல காலம் முன்பாகவே நவரத்னா ராஜாராம் “சரஸ்வதி நதியும், வேத நாகரீகமும்” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டுபிடிப்பால், ஆர்யர்கள் இந்தியாவை ஆக்ராமித்தனர் என்ற ஆரிய திராவிட இனவாதம் முற்றிலும் பொய் என்று நிருபிக்கப்பட்டுள்ளது, என

நவரத்னா ராஜாராம் குறிப்பிட்டுள்ளார். சரஸ்வதி நதி இருந்தது என்ற கண்டு பிடிப்பு இந்த பொய்க்கு மரண அடி கொடுத்துவிட்டது என்று அவர் சரியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரிய திராவிட இனவாதம் கூறுவது என்ன? ஆரியர்கள் இந்தியாவை ஆக்ரமித்தபோது அங்கு ஹரப்பா நாகரீகம் இருந்தது. அந்த ஹரப்பா நாகரீகம் வேத சம்பந்தம் கொண்டது அல்ல. அந்த நாகரீகத்தை ஆரியர்கள் அழித்துவிட்டு, வேத நாகரீகத்தை ஸ்தாபித்தனர் என்பதுதான்.

ஆனால் சரஸ்வதி நதி குறித்த பல விவரங்கள் வேதத்தில் உள்ளது. வேத காலத்தில் சரஸ்வதி நதி ஓடியுள்ளது. எனவே வேத காலமும், ஹரப்பா நாகரீக காலமும் இணைந்தே இருந்திருக்க வேண்டும், எனவேதான் ராஜாராம் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சரியாக.

“ஹரப்பா நாகரீகம் என்பது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நாகரீகம்தான்” , அப்படி என்றால் பொருள் என்ன? ஹரப்பா நாகரீக மக்கள் வேத நாகரீகத்தை பின்பற்றியவர்கள்.

எனவே ஆரிய திராவிட இனவாதம் எவ்வளவு பெரிய ஹிமாலயப் பொய், பித்தலாட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. நிபுணர்கள் ஹரப்பா நாகரீகம் ஆக்ரமிப்பால் அழிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை, அது ஆரியர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு சுத்தமாக எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுவது மிகச் சரியாகும். ஆரியர்கள் வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்தனர் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஹரப்பா நாகரீகம் சிந்து மற்றும் சரஸ்வதி நதிக் கரைகளில் செழித்த நாகரீகம். அது வேத சம்பந்தம் கொண்டது. அந்த நாகரீகம் அழிந்ததற்கு “சரஸ்வதி நதி” வற்றிப்போனதே முக்கிய “காரணமே தவிர எந்த ஒரு அன்னியப் படையெடுப்பும் அல்ல. இதை ராஜாராமும் மற்ற பலரும் தெளிவாக்கி உள்ளனர்.

சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில் சரஸ்வதி நதியின் உற்பத்தி ஸ்தானம் எது என்பது மட்டும் இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. சரஸ்வதி நதி ஹிமாலய நதி அல்ல என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் பல நிபுணர்கள் சரஸ்வதி நதி கார்வால் (ஹிமாலயாவில் உள்ளது) பகுதியில் உள்ள “ஹர – கி – துன்” வீழ்ச்சியில் இருந்து உற்பத்தி ஆகிப் பெருகி வந்தது என்று குறிப்பிடுகின்றனர். இது விஷயமாக இறுதி வார்த்தை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேற்கண்ட கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படிக்க விரும்பு பவர்களுக்குhttp://www.dailypioneer.com/columnists/item/51748-the-saraswati-civilisation.html