பகுதி நேர பி.இ., பி.டெக். விண்ணப்பங்கள் வினியோகம்:

தமிழகத்தில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்பிற்கான விண்ணப்பங்கள் 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகிறது. நெல்லை, சேலம், கோவை அரசு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பஙகளை பெற்றுக் கொள்ளலாம். 9 கல்லூரிகளில் பெறலாம்

தமிழகத்தில் டிப்ளமோ பட்டம் பெற்று அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், டிப்ளமோ முடித்து பணியில் இல்லாதவர்கள் உயர் கல்வி பயிலுவதற்காக பகுதி நேர பி.இ., பி.டெக். வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக். பகுதிநேர படிப்பிற்கான விண்ணப்பங்கள் 27 ம் தேதி முதல் வினியோகிக் கப்படுகிறது.

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப நிறுவனம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி உள்பட தமிழகத்தின் 9 பொறியியல் கல்லூரிகளில் அந்தந்த மாவட்டத்துக்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் வேண்டுகோள் கடிதத்துடன் செயலாளர், பகுதி நேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, கோயம்புத்தூர் என்ற பெயரில் ரூ.300 டிடி எடுத்து மேற்கொண்ட இடங்களில் உள்ள 9 கல்லூரிகளில் விண்ணபங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150க்கு டிடி எடுத்தால் போதுமானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க மே 18 கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *