பாகிஸ்தானில் உள்ள இந்துக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராம கோபாலன் கோரிக்கை
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மீது கடந்த 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மதமாற்றக் கொடூரம் நெஞ்சைப் பிழிவதாக இருந்து வருகிறது. சில கோடியில் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று பல லட்சம் என்ற அளவில் வந்துவிட்டது. இந்தக் கொடூரத்தின் தாக்கத்தை மக்கள் முன் கொண்டுவந்த பத்திரிகைகளுக்கு மனித சமுதாயம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது. உண்மையை உலகறியச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிகைகளை இந்து முன்னணி பாராட்டுகிறது.
இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பார்கள். ஆனால் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு மனித உயிர்களைக் கொன்று குவிப்பவன் கையில் குரானைத் தான் தூக்கிப் பிடிக்கிறான். அதனை முஸ்லீம் அரசியல்வாதிகளோ, முஸ்லீம் மத குருக்களோ கண்டிப்பதில்லை, அவனுக்கு எதிராக ஃபத்வா வழங்குவதில்லை. ஆனால் முஸ்லீம் அல்லாதவர்கள் தவறுதலாகச் செய்துவிட்டால் மதவெறியைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி வந்துள்ளார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்.
இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று குரானிலிருந்து மேற் கோள்காட்டும் முஸ்லீம் அரசியல்கட்சித் தலைவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தென்காசி, இராமநாதபுரம் பகுதிகளில் ஆசை வார்த்தை காட்டி, அச்சுறுத்தி ஒரு லட்சம் பேரை மதமாற்ற முயன்றபோது கண்டிக்கவில்லை. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் வாரிசுகள்தான் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகள். அந்தச் சூதாட்டத்தை இந்து முன்னணி ஆன்மீக, தேசிய பெரியோர்களின் ஒத்துழைப்பால் தடுத்து நிறுத்தியது. முஸ்லீம்களின் ஆசைக்குப் பலியானவர்கள் இன்றும் துன்பத்தையே அனுபவித்து வருகிறார்கள். இதனை உலகிற்கு உணர்த்திட பல நூல்களும் வெளிவந்துள்ளன. இன்று இவர்கள் வடிப்பது முதலைக் கண்ணீர் என்பதை மக்கள் உணர்வார்கள்.
முஸ்லீம் மதத்தில் கட்டாய மதமாற்றத்தை ஏற்கவில்லை என்பவர்கள் முன்பு கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தபோது ஏன் எதிர்த்தார்கள். இஸ்லாத்தில் இருப்பதை வரவேற்கத்தானே செய்ய வேண்டும். முஸ்லீம் அரசியல் வாதிகளின் சந்தர்ப்பவாத பேச்சை இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.
மதமாற்றத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, அதற்குத் துணை போவதும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.
பாகிஸ்தானில் நடைபெறும் மதவாத பயங்கரம் என்பது மனித உரிமை மீறல். இதனைப் பாரத அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துக்கள் மீது நடத்தப் படுகின்ற வன்முறையையும், இந்துப் பெண்கள் கடத்தப்படுவதையும், இந்துக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாவதையும் தடுக்க உலக நாடுகளின் ஆதரவைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினத்தந்தியில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தை படித்திட இங்கே சொடுக்கவும்

Before I WAS A hindu.Now I am a muslim. I accept. born muslims are very worst. like me so many converts are suffering lot. I am a widow with eight year old girl child. I worked with a muslim organisation unity publc school.kottur Chennai. Last January 20th i took islam. because they washed my brain. Now they sent me out from the school suddenly with out any reason. I need ur help. pls forgive me and save me. they are not giving my certificates back. HELP ME PLS. I WANT TO COME BACK. ASMA
பாகிஸ்தானில் நேர்ந்த அதே கொடுமைதான் காஷ்மீர் மாநிலத்திலும் நடைபெற்றது….முஸ்லிம்களுக்கு இணையான மக்கள் விகிதத்தில் இருந்த காஷ்மீர் பண்டிட்கள் அந்த மாநிலத்தை விட்டே அடித்து விரட்டபட்டனர் அப்பொழுதும் நேரு தலைமையிலான அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது….காங்கிரஸ் என்றுமே நமது இந்துகளுக்கு எதிரான கட்சிதான்…காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்டுவதின் மூலமாகவே நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்..