சென்னையில் ஆர்.எஸ்.எஸ். செயற்குழு

ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 2.3 & 4 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற இருக்கிறது. சென்னையிலிருந்து 40௦ கி.மீ. தொலைவில் இருக்கும் கேளம்பாக்கம் ஸ்ரீ சிவா சங்கர் பாபா ஆஸ்ரமத்தில் இது நடக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.தலைர் ஸ்ரீ.மோகன் பகவத் அவர்களுக்கு வரவேற்பு

நாடெங்கிலும் இருந்து சுமார் 400௦௦ க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்வதற்காக வர இருக்கின்றனர். 29 அக்டோபர் அன்று மதியம் சென்னை வந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்களுக்கு நமது பாரம்பரிய முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஸின் அகில பாரத பொறுப்பாளர்கள், அனைத்து மாநிலத் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும்  அமைப்பு செயலாளர்கள் இவர்களுடன் பல்வேறு துறைகளில் வேலை செய்துகொண்டிருக்கிற வி.ஹெச்.பி., பி.எம்.எஸ்., ஏ.பி.வி.பி., வித்யா பாரதி,  சேவா பாரதி,  சம்ஸ்க்ருத பாரதி,  பாரதீய கிசான் சங்கம் (B.K.S.), வனவாசி கல்யான் ஆஸ்ரம், ராஷ்டிரா சேவிகா சமிதி, ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் (SJM). பாரதீய ஜனதா கட்சி (BJP) போன்றவற்றின் அமைப்பு செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 

ஆர்.எஸ்.எஸ். ஸின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் உயர்மட்ட அமைப்பு இது. வருடம்தோறும் அக்டோபர் மாதத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இயக்க வளர்ச்சி, செயல்பாடுகள், தேசியப் பிரச்சனைகள் போன்றவற்றை விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும். முக்கியப் பிரச்சனைகளில் தீர்மானங்கள் இயற்றப்படும். எதிர்கால நிகழ்ச்சிகள் முடிவு செய்யப்படும்.

சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.செயற்குழு நடப்பது இதுவே முதல்தடவை. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.     


3 comments

 1. mathi seelan says:

  welldone barath matha ki jai

 2. karthi says:

  இந்து சேவை அமைப்புகளில் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன், அது பற்றி தெரிந்து கொள்ள உதவுங்கள்

 3. vancheeswaran gopal says:

  செயற்குழு நடக்கும் இடம் “கேளம்பாக்கம்” என்று போடப்பட்டுள்ளது.
  அந்த இடம் சென்னையிலிருந்து 40 கி மீ தூரம்தான், 400 கி மீ தூரம்
  என்று தவறாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை தயவு செய்து
  சரியாகக் குறிப்பிடவும். வணக்கம். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *