ஜம்முவில் ஏ.பி.வி.பி.மாபெரும் வெற்றி.
ஜம்முவில் இருக்கின்ற புகழ்பெற்ற ஜி.ஜி.எம். அறிவியல் கல்லூரி மாணவர் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அனைத்து இடங்களையும் ஏ.பி.வி.பி. கைப்பற்றியது. ஜனநாயகமுறைப்படி அதே நேரத்தில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. முதலில் வகுப்பு வாரியாக மாணவர் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெற்ற பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து கல்லூரிப் பேரவைக்கான தேர்தலில் பங்கேற்று தலைவர் மற்றும் செயலாளர்களைத் தேர்வு செய்தனர். மொத்தமுள்ள 37 வாக்குகளில் 29 வாக்குகள் பெற்ற ராகவ சர்மா பேரவைத் தலைவராகவும், 25 வாக்குகள் பெற்ற ஜெகதீப் சிங் துணைத் தலைவராகவும், 21 வாக்குகள் பெற்ற மோஹித்சிங் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஜம்மு நகர் ஏ.பி.வி.பி.தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவர் பேரவைத் தலைவர்கள் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வெற்றிவிழா பேரணியில் ஏராளமான மாணவர்கள் பங்கு கொண்டனர்.

Santhoshamana seithi. Vazhthukkal
மிக மகிழ்ச்சி ஆனால் இந்த பாரத திருநாட்டில் என்ன நிலை…
jaihind
valthukkal