தூரத்துச் சொந்தத்தின் துயர் துடைப்போம்.
செப்டெம்பர் 18 ஆம் தேதியன்று சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 120 க்கும் மேல். இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநிலத்தில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிக்கிமை ஒட்டி இருக்கின்ற மேற்கு வங்கம் பீகார் நேபாளம் திபெத் போன்ற இடங்களிலும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சிக்கிமில் 15000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். சுமார் 1 லக்ஷம் கோடி ரூபாய் அளவிற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் துயர்துடைக்கும் பணியில் சேவா பாரதி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பிற்கு ஆளாகியுள்ள சிக்கிம் மாநில மக்களின் துயர் துடைக்க உதவிக் கரம் நீட்டிடுவோம்.
நிவாரண நிதி தர விருப்பம் உள்ளவர்கள் கீழ் காணும் பெயரில் நன்கொடைகளை அனுப்பி வைக்கலாம். உங்கள் நன்கொடைகளை காசோலையாகவோ (Cheque) வரைவோலையாகவோ (DD) BASTUHARA SAHAYATA SAMITI என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். BASTUHARA SAHAYATA SAMITI 27/1B-BIDAHAN SARANI, KOLKATTA – 700006 Phone: 033-22410603 அல்லது BASTUHARA SAHAYATA SAMITI என்கிற பெயரில் Union Bank of India, Branch – SEVOKE Road, AC.No. 548002010005529 என்ற வங்கிக் கணக்கில் செலுத்தலாம். நீங்கள் நன்கொடை செலுத்திய விவரத்தை தபால் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.
