விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்றது. சங்க சீருடை அணிந்த நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்கள் கோஷ் வாத்திய இசையுடன் மங்களூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
விஜயதசமி அன்றுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவக்கப்பட்டதால் அன்றைய தினம் நாடெங்கிலும் ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
